Wednesday, March 31, 2021

SURDAS

 


ஸூர்தாஸ்   --    நங்கநல்லூர்   J K  SIVAN 

31.  நான் உன்னை முதல் முதலாக பார்த்த போது .......

சூரியன் வெகு மும்முரமாக கண்ணில் பட்டதை எல்லாம் தங்க நிறமாக்கிக் கொண்டிருந்தான். ஆகவே அது பொன்  மாலை வேளை. தங்க  ரஸவாத  வித்தை  எதிலும்  காணப்பட்டது.    
காற்று சுகமாக வீசியது. பிருந்தாவன சிறுவர்கள் குதூகலமாக தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் ஆடை எல்லாம் வியர்வை. தெருப்புழுதி.   அவர்கள் நடுவிலே  அதோ பாருங்கள்   கண்ணனை.  அவன் இடுப்பில் மஞ்சள் வஸ்திரம். பொன் வெயிலில் அவனது மஞ்சள் ஆடை பளபளக்கிறது.புத்தி விளையாட்டில் இருப்பதால் புல்லாங்குழலுக்கு  ஒய்வு.  இடுப்பில் தலையை நீட்டிக்கொண்டு ஆடையில் செருகப்பட்டு இருக்கிறது. ஒரு கூட்டம் அவனைச் சுற்றி  எப்போதும் உண்டே.

ஓஹோ, கையில் சாட்டை எனும் கயிற்றால் பம்பரத்தை சுற்றி வேகமாக அதை சுழல வைக்கிறார்கள். பம்பர விளையாட்டா?

அவன் தலையில் அழகிய ஒரு மயில் பீலி இறகு , பல வண்ணங்களோடு கண்ணைப்பறிக்கிறது. அவன் குனிந்து நிமிர்ந்து ஓடி ஆடும்போது அவன் காதுகளில் அணிந்துள்ள குண்டலங்கள் ஆடுகின்றன. சூரிய ஒளியில் பல சூரியன்களாக மின்னுகிறது.

ஏதேதோ சிரிப்பாக பேசுகிறான் போல் இருக்கிறது.    கூட இருக்கும் அத்தனை பையன்கள் முகங்களும் பிரகாசித்து ஆனந்த மயமாக காட்சி அளிக்கிறதே. கிருஷ்ணன் வாய் கொள்ளாமல் சிரிக்கும்போது அவன் முத்துப் பல் வரிசையின் அழகை எந்த வார்த்தையை உபயோகித்து என்னால் எழுத முடியும்?  உங்கள் மனத்தில் நீங்களே கற்பனை பண்ணி பார்த்துக் கொள்ளுங்கள். நிறைய சந்திரன்களை பூரண ஒளியோடு வாயில் வைத்துக்  கொண்டிருக்கிறானோ? உடம்பு பூரா கமகமக்கும் சந்தன பூச்சு.

விளையாடிக்கொண்டிருந்த கிருஷ்ணனின் பார்வை யதேச்சையாக சற்று தூரத்தில் இருந்த யமுனா நதிக்கரை மேல் சென்றது. யார் யாரோ அங்கே நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் ...... அது யார் ?

நெற்றியில் மஞ்சள் திலகம்... தொள தோளவென அவளை சுற்றிக்கொண்டு இருந்த ஆடை. விரிந்த பல கொசுவங்கள் கொண்ட நீண்ட பாவாடை இடையில் பாந்தமாக அணிந்திருக்கிறாள். அதற்கு ஏற்றாற்போல் நீல நிறத்தில், அவனுக்கு பிடித்த வண்ணத்தில், மேலே உடலை மறைத்த சட்டை. நீண்ட அலை அலையாக கூந்தல் பின்னல் கருநாகம் போல் அவள் நடைக்கேற்ப நெளிகின்றதே . அடேயப்பா, இவ்வளவு அழகா? அழகிய மற்ற பால்காரி களுக்கிடையே அவள் தனித்து தென்படுகிறாளே. வெண்மேக கூட்டத்திடையே தங்க நிலா போல அல்லவோ இருக்கிறாள்.

கிருஷ்ணனின் ஊடுருவிய பார்வை அந்த பெண்ணின் பார்வையை சந்தித்தது. கடல் போன்ற அன்பும் ப்ரேமையும் கொண்டு அவள் பார்வையை கிரஹித்தது. அவள் பார்வையிலிருந்து அது உள்ளே இறங்கி அவள் மனதை நிரப்பியது. அதே வேகத்தில் திரும்பி அவள் மனத்தை தூக்கிக் கொண்டு வந்து அவன் மனதோடு இணைத்தது. என்ன அதிசயம் இவ்வளவு சீக்கிரம் நடந்திருக்கிறது! கண்ணன் அவளைப் பார்த்துக்க்க்க்க்க்க்க்க் கொண்டே இருந்தான்.

சூர்தாஸ் கிருஷ்ணன் ராதையை முதல் முதலாக பார்த்ததை வர்ணிக்கிறார்.

Krishna went playing in the lanes of Braj,
a yellow silk garment round his waist,
holding a top and a string to spin it with,
a crown of peacock-feathers adorning his head
his ears with charming ear-rings decked,
his teeth flashing brighter than the sun's rays,
his limbs anointed with sandalwood-

On the Yamuna bank he chanced to see Radha;
a tika mark of turmeric on her brow,
dressed in a flowing skirt and blue blouse,
her lovely long wreathed hair dangling behind,
a stripling, fair, of beauty unsurpassed
with he a bevy of fair milkmaids:

Krishna's eyes met her's;
love woke in his heart,
says Suradasa, bewitched by her,
he gazed and gazed.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...