Friday, March 5, 2021

pesum deivam

 

பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN

மஹா பெரியவா சொன்ன விஷயங்கள்

உடம்பு பூரா வலி. அடி படவில்லை. அசதி யால் வரும் வலி. நாள் முழுக்க நின்றால் , ஓடினால் , வருமே அந்த மாதிரி வலி. வெந்நீ ரில் சூடாக ஒத்தடம் கொடுத்துக் கொண்டேன். கொதிக்க கொதிக்க அரைமணிநேரம் வெந்நீரில் ஊறி குளித்தேன். சூடாக மிளகு ஜீரக ரஸம் கரைத்து கொடுத்த மனைவி தொட்டுக்கொள்ள கிரிஸ் பாக crisp ஒரு சுட்டப்பளம். இது தான் தேவாம் ருதம் என்பதோ?

சற்று நேரம் தனிமையில் படுத்தேன். எதிரே இந்த வருஷம் நாங்கள் பிரிண்ட் பண்ணி நிறைய பேருக்கு கொடுத்த அபய ஹஸ்த காவி வஸ்திர மஹா பெரியவா. கண்கள் என்னை ஊடுருவி என் மனதை பார்த்தன.

''என்ன பெரியவா பார்க்கிறேள் ?''
''நீ என்னை அடிக்கடி பார்க்கிறீயே, ஏண்டா ?''
''பெரியவா, உங்க கிட்டே இருந்து நமக்கு கிடைக்கற வார்த்தைகள் முத்துக்கள். அபரி மிதமாக முத்துக்கள் தோன்றும் கடல். பெரியவா, நீங்க பேசினது, சொன்னது எல்லாத்தையும் ஒருத்தராலும் ''இவ்வளவு தான்'' என்று எடுத்து காட்ட முடியாது. ஏதோ அங்கே ஒண்ணு இங்கே ஒண்ணு என்று தேடித் தேடி பிடிச்சு சொல்றதப் பார்த்தே நண்பர்கள் ரொம்ப அசந்து போறாளே. எல்லாவற்றையும் உணர்ந்து புரிந்து கொண்டு சொல்ல முடியுமா, எழுத முடியுமான்னு தெரியலே என் வாழ்நாள் போறாது பெரியவா. நான் லேட் ஸ்டார்டர். starter . சாத்தியம் இல்லை என்று தோண றது. உங்களோடு எத்தனை லக்ஷம் பேர் கூடவே இருந்து முடிந்தவரை அதெல்லாம் அனுபவிச் சிருப்பா, எந்தரோ மகானுபாவுலு, அந்தரிகி வந்தனமு' என்று தான் இரு கரம் சிரம் மேல் தூக்கி அடி மனசிலிருந்து ஆழமாக சொல்ல வைக்கிறது.''
ஓஹோ அப்புறம்?
''பெரியவா உங்ககிட்டே சில கேள்விகள் கேட்கட்டுமா. நீங்க சொல்ற பதில் அற்புதமா இருக்கும் நானும் அதை அனுபவிச்சு, மத்த வாளுக்கும் முடிஞ்சவரை சொல்லணும் னு ஒரு ஆசை. ''
''கேளுடா சீக்கிரமா? நிறைய வேலை இருக்கு நேக்கு?''
''எனக்கு நீங்க தான் பகவான். எல்லோரும் சொல்ற .பகவான் எங்கே இருக்கார் என்று தெரிஞ்சுக்க முடியுமா, தப்பு பண்ணாம இருக் க முடியுமா?.''
''பகவானை தான் ஸ்வாமி என்கிறோம். அவர் எங்கும் இருக்கிறார். அப்போ எதுக்கு அவரை ஒரு கல்லில் வடிச்சு கோவில்லே வைக்கணும் னு கேக்கறியா? எங்கேயும் இருக்கார்னு சொன்னா யார் மனசிலேயும் பதிய மாட்டேன் கிறதே. இதோ பார் இங்கே ன்னு நிறைய கோவில்களில் எங்கு பார்த்தாலும் சுவாமி உருவம் கல் சிலையா இருந்தால் கொஞ்சம் நேரமாவது ஸ்வாமிமேலே மனசு படியாதா ன்னு ஒரு ஆதங்கம். சுவாமி எங்கேயும் இருக்கார் நாம் செய்யறதெல்லாம் பார்த்துண்டு தான் இருக்கார்னு தெரிஞ்சா ஒருத்தன் பொய் சொல்லுவானா? கெட்ட காரியம் செய்வானா? சொல்லு?சுவாமி எங்கும் இருப்பது உண்மையே, அவர் இருக்கிறதை மட்டும் தெரிஞ்சுண்டா நமக்குப் போதாது. அவருடைய அருளைப் பெற வழி தேட வேண்டும்.
''பெரியவா அதற்காகத்தான் அந்த காலத்திலே அவ்வளவு கோயில்கள் கட்டினாளா?''
'சூர்ய கிரணம் இருக்கிறது. ஒவ்வொரு கிரணமும் நெருப்பே. ஆனால் ஒரு துணியை வெய்யிலில் காட்டினால் அதில் தீப்பற்றிக் கொள்ளவில்லை. லென்ஸ் என்ற பூதக் கண்ணாடியை வெய்யிலில் காட்டி அதன் கீழ் ஒரு துணியைப் பிடித்தால் தானே அதில் தீப்பற்றிக் கொள்கிறது. பூதக் கண்ணாடி அனேக கிரணங்களை ஒருமிக்கக் குவிக்கிறது. அப்படியே எங்குமுள்ள ஈச்வரனு டைய அருள் நமக்குக் கிடைக்கும்படிச் செய்ய ஆலயம் நமக்கெல்லாம் அவசியமாக இருக் கிறது.
''பெரியவா, எல்லோரும் இதை புரிந்து கொண்டு பூரணத்வம் பெற முடியுமா?''
''ஏண்டா உனக்கு கோணல் புத்தி? கோடிக் கோடி ஜனங்கள் வீணாகப்போனாலும் ஒருவன் பூர்ணத் வம் அடைந்து விட்டால் அதுதான் நம்முடைய மதத்தின் ப்ரயோஜனம். அவன் ஒருவன் அனுக்ர ஹ த்தாலேயே உலகம் க்ஷேமமடையும். அப்படிப்பட்ட ஒருவன் உண்டாவதற்காகத் தான் நாம் பிரசாரங் களைச் செய்கிறோம். இது புரியற மாதிரி தான் ''நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை'' ன்னு சொன்னது.
''பெரியவா ஒரு சந்தேகம். நாங்கள் பாபம் பண்ணாம இருக்க முடியாதா?''
'ரொம்ப நல்ல கேள்வி கேட்டே? உலகத்தில் பாவம் பண்ணாமல் இருக்கிறவன் யாராவது உண்டா என்றால் குழந்தை அல்லது பைத்தியக்காரன் தான். ஞானிகளின் உயர்ந்த நிலைக்கு உதார ணம் ‘பாலோன்மத்தவத்’ என்று சொல்லுவார்கள். பாலன் என்றால் குழந்தை. உன்மத்தன் என்றால் பைத்தியம். உன்மாதம் என்றால் தலைக்கு மேலே ஏறிப்போகிற பித்தம். உன்மாதத்தை உடையவன் உன்மத்தன். ஈசுவரனுக்கு உன்மத்தசேகரன் என்று பெயர். உன்மத்தம் என்றால் ஊமத்தம் பூ. சம்ஸ்க்ருதத்தில் ஊமத்தைக்கு உன்மத்தம் என்று பெயர். ஊமத்தம் பூவை அவன் தரித்துக் கொண்டிருக் கிறான். அதில் சிவனுக்கு அதிகப் பிரியம். உன்மத்தசேகரன் என்பதற்கு இரண்டா வது அர்த்தம் பைத்தியத்துக்குள் தலைவன் என்பது.(பைரவர்களில் கூட உன்மத்த பைரவர் ஒருவர் உண்டு)
''பெரியவா நீங்க சிவஸ்வரூபம் பற்றி சொல்லணும் .''
'' பரமசிவனுக்கு உரிய ஐந்து அடையாளங் களில் பஸ்மமாகிய விபூதி ஒன்று; அவனுக்குப் பிரிய மான மற்றோர் அடையாளம் ருத்ரா க்ஷம். வில்வம் மற்றொன்று. பஸ்மம் சத்ய ஸ்வரூபமானது. அதை சாக்ஷாத் பரம சிவனுடைய ஸ்வரூபமே என்று சொல்ல வேண்டும். ப்ரபஞ்சமெல்லாம் நசித்தா லும் தான் அழியாமல் இருப்பவன் பரமசிவன். உலகத்திலுள்ள பொருள்கள் எல்லாம் எரிந்து போனால் பஸ்பமாகி விடுகிறது. அதை எரித்தால் அது அழிவதில்லை. சிவ ஸ்வரூபமும் அத்தகை யதே.
'' பெரியவா நீங்கள் தலையிலே, கழுத்திலே, கையிலே எல்லாம் ருத்ராக்ஷம் அணிந்து கொண்டு இருப்பவர். ருத்ராக்ஷத்துக்கு விசேஷ பெருமை எதனால்?''
'ருத்ராக்ஷத்தின் பெருமை ரொம்ப ஜாஸ்தி. ருத்ராக்ஷத்தைச் சிவபெருமானுடைய அடையாளமாகப் பெரியவர்கள் சொல்லு கிறார்கள். ருத்ரனுடைய நேத்திரம் அது. அதைத் தமிழில் ‘திருக்கண்மணி’ என்று சொல்லுவார்கள். மற்ற விருக்ஷங்களுடைய விதைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த ருத்ராக்ஷத்திற்கு உண்டு. இயற்கையில் துளையோடு உண்டாவது ருத்ரா க்ஷம் ஒன்றுதான். இந்த ருத்ராக்ஷம் பாரத தேசத்தில் நேபாளத்தில் இருக்கிறது.
''நமசிவாய என்பது சக்தி வாய்ந்த பஞ்சாட் சரம் அல்லவா? அது பத்தி......''
'' அறுபத்தி நான்கு கலைகள், பதினான்கு வித்தைகள், இவற்றில் நான்கு வேதங்கள் பிரதானமானவை. நான்கு வேதங்களுள் மூன்று வேதங்கள் பிரதானமானவை. மூன்று வேதங்களுள் யஜுர்வேதம் பிரதானமானது. யஜுர் வேதத்திலும் மத்திய காண்டம் பிரதானமானது. மத்திய காண்டத்திலும் ஸ்ரீருத்ரம் பிரதானமானது. ஸ்ரீருத்ரத்திலும் பஞ்சாக்ஷரம் பிரதானமானது. பஞ்சாக்ஷரத் திலும் ‘சிவ’ என்ற இரண்டு எழுத்துக்கள் பிரதானமானவை, வேதத்துக்கு ஜீவாம்சமாக இருப்பவை ‘சிவ’ என்னும் இரண்டு அக்ஷரங் கள். பஞ்சாக்ஷர உபதேசம் நாவுக்கு ஆபரண மாக இருப்பது.
''ஹோமாக்னி ரொம்ப விசேஷமானது ன்னு அடிக்கடி சொல்வேளே . அது ஏன் ?''
''உலகத்திலுள்ள எல்லாருமே பரமேஸ்வ ரனுடைய பிரஜைகள். சிவன் மஹாபிதா. நாம் எல்லோரும் யக்ஞம் செய்கிறோம். அக்னி காரியம் இல்லாமல் வைதிக மதமே இல்லை. உலகம் முழுவதுமே வேதம் பரவியிருந்த காலத்தில் எல்லோருமே அக்னி காரியம் செய்தார்கள். அக்னி காரியத்தின் கடைசியில் பஸ்ம தாரணம் என்று உண்டு. வைஷ்ண வர்களாக இருந்தால் பாஞ்சராத்ர ஆகமத் திலுங் கூட ஹோமங்களுக்குப் பிறகு ஹோம பஸ்மத் தை எடுத்துத் தரித்துக் கொள்வார்கள். சப்த த்வீபங்களிலும் வேதமே பரவியிருந்த காலத்தில் உலகம் முழுதும் பஸ்மதாரணம் உண்டு. நாம் செய்த அபசாரங்களால் இன்றைக்கு இந்த தேசத்தை தவிர இதர தேசங்களில் மதாந்த ரங்கள் வந்து விட்டன. அதற்கு நாமே காரணம். நாம் மறுபடியும் நம்முடைய அனுஷ்டானங்களை எல்லாம் சரிவர மேற்கொள்ள வேண்டும். வைதிக மதம் முன்போலவே எல்லா இடங்களிலும் வர வேண்டும். இதற்கு நம்மிடத்தில் அனுஷ்டானம் வரவேண்டும். பஸ்மதாரணம் அவசியம். பஸ்மம் சிவஸ்வரூபம். கலி யுகத்தில் எல்லாவிதமான பாபங்களையும் போக்கு வதற்கு பஸ்மதாரணம், ருத்ராக்ஷதாரணம், சுத்த ஸ்படிக ஸ்வரூப த்யானம், வில்வ அர்ச்சனை இவைமிக அவசியம்.
''பெரியவா இப்போதெல்லாம் நெற்றிக்கு இட்டுக்கொள்வது மறைந்து வருகிறது. சின்னங் கள் வாழ்க்கைக்கு அவசியமான்னு நீங்க தான் சொல்லணும்?''
''பெரியவர்கள், தங்களுடைய அனுபவத்தின் மூலமே வெளியே சில காரியங்களைச் செய்து, உள்ளே அதற்கு ஏற்ற விளைவுகளை உண்டாக் கிக் கொள்ளலாம் என்று எழுதி வைத்திருக் கிறார்கள். அதனால் தான் மிலிட்டரிக்காரன் யூனிபாஃரம் போட்டால் வீரத்தன்மை வருகிறது என்று சொல்லுகிறான். போலீஸ்காரனை விட அவன் உடைக்கு மரியாதை ஜாஸ்தி. அப்படித் தான் பக்தி வரவேண்டும், சாந்தம் வர வேண்டும், சத்தியம் வர வேண்டும் என்றால் ‘சிவ’ சின்னங்கள் தரித்துக் கொள்ள வேண்டும் என்று பெரிய வர்கள் சொன்னார்கள். வெளியில் நாம் செய்கின்ற சில சம்ஸ்காரங்களினாலே உள்ளே சில நன்மைகள் ஏற்படுகின்றன. இவை எல்லாம் வெளிவேஷம் என்று நினைத்தால் வெறும் வேஷமாகவே போய்விடும்.
ஒவ்வொருவனும் ஆத்மார்த்தமாக என் ஜீவனை பரிசுத்தம் செய்து கொள்வதற்காகச் சின்னங் களை அணிகிறேன் என்று நினைத்தால் சத்திய மாக உள்ளே பரிசுத்தம் ஏற்படும். புறத்திலே தரிக்கும் சின்னங்கள் ஆத்மாவுக்கு உபயோகப் படுகின்றன.
''அன்னதாதா என்று பரமேஸ்வரனை பாடுவதின் அர்த்தம் என்ன சொல்லுங்கோ ?''
'' நாம் எத்தனையோ அபசாரம் பண்ணிக் கொண்டிருந்தாலும் நமக்கெல்லாம் அனுக்ரஹம் பண்ணிக்கொண்டு பரமேச்வரன் சகல புவனங்களையும் ரக்ஷித்துக் கொண்டி ருக் கிறார். நாம் செய்கிற அக்கிரமத்தைப் பார்த்தோ மானால் நமக்கு ஒருவேளை அன்னம் கூட கிடைக்க வழியில்லை. அப்படி இருக்கிறபோது நம்மைப் போன்ற சகல ஜீவராசிகளுக்கும் ஒவ்வொரு வேளையும் அன்னம் கிடைத்துக் கொண்டிருக்கும் படியாக நம்மிடமிருந்து ஒருவித பிரயோஜ னத்தையும் எதிர்பார்க்காமல் சர்வேச் வரன் அனுக்ரஹம் செய்து கொண்டிருக்கிறார்.. அவரை அன்னதாதான்னு சொல்லாமல் வேறு யாரைச் சொல்லணும் என்கிறாய்?
பெரியவாளிடம் கிடைத்த என் கேள்விக்கான மற்ற பதில்களையும் தருகிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...