Monday, March 1, 2021

A CHETTIYAR STYLE WEDDING

 

ஒரு செட்டியார்  வீட்டு கல்யாணம்  6 ---      J K  SIVAN

செப்டம்பர்  12,  1943.    

கல்யாணத்துக்கு முதல் நாள்  9ம் தேதி மெட்ராஸ் பட்டினத்திலிருந்து  வந்தவர்கள்  இன்று மாலை  திரும்ப  உத்தேசம்.  இந்த  நான்கு நாட்களில்  ஒரு  ஸ்வர்கவாசம்  அனுபவித்தோம்.  யார் சொன்னது ஸ்வர்க போகம் அனுபவிக்க  நிறைய தவம் எல்லாம் செயதிருக்க வேண்டும். அப்போது தான் வானத்தில் எங்கோ உயரத்தில் இருக்கும்  வைகுண்டமோ, கைலாசமோ, அல்லது அதை ஒட்டி ஸ்வர்கலோகமோ  அங்கே செல்லமுடியும் என்று சொன்னது?  ஸ்வர்கம் இங்கேயே  செட்டிநாட்டில் இருக்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும்.  எனக்கு நிச்சயம் தெரிந்துவிட்டது.   நாலு நாள்  அனுபவித்தவன் அல்லவா?

  கண்டனூர் வைரவன் செட்டியார்  மாளிகையில்  தூங்கியபோது   நேற்று ராத்திரி  ஆடிய  பானுமதி அம்மா மீண்டும் மீண்டும் கனவில் ஆடினாள்.  சில  தெலுங்கு  கீர்த்தனைகளை  அபிநயித்துக் காட்டினாலும்  சாருகேசி, தன்யாசி,  சங்கராபரணம்,  சில துக்கடா  ராகமாலிகை  வர்ணங்கள் அற்புதமாக  சுவாரஸ்யமாக இருந்தது. கொன்னக்கோல் வாசித்தவர்,   பாடல் பாடியவர் குரல்  இனிமையாக இருந்தது.  தாளக்கட்டு புரிந்தது.   பானுமதி நிறைய உழைத்திருக்கிறார் என்பது  அதற்கான  பரிசாக  கிடைத்த  ரசிகர்களின்  ஏகோபித்த கை தட்டல்,   ஹா ஹா,  ஹுஹு காரங்களில்   வெளிப்பட்டது.

இன்று காலை  கொஞ்சம்  அதிக நேரம் தூங்கிவிட்டு  காலை  ஆறுமணிக்குள்  ஆற்றில் குளிக்க போய்விட்டோம்.  சிவன்கோவில் தரிசனம்,  பிறகு  கோட்டையூரில்  போலவே  நிறைய  வித விதமான  சிற்றுண்டிகளுடன் காலை  உணவு.

இன்று காலை  9.30 மணிக்கு   சங்கீத கலாநிதி சித்தூர்  சுப்ரமணிய பிள்ளை கச்சேரி.   கனகையா  என்று பேர் இருந்தாலும்  தனது குரு  சுப்பிரமணியம் பேரை  சுவீகரித்தவர்.  ஐந்து வயதிலிருந்தே  சிக்ஷை.  சங்கீத உபன்யாசத்தில் தேர்ச்சி. 14 வருஷம்  சுப்ரமணியத்திடம்  குருகுலவாசம்.  காஞ்சிபுரம்  பாணி  சங்கீதத்தில் வல்லுநர்.   அரை நூற்றாண்டு அனுபவ சங்கீத வித்வான்.  இவருடைய  சிஷ்யன் தான் மதுரை சோமு
மதுரை விஸ்வநாத சர்மா   பிடில்.  குற்றாலம் சிவவடிவேல் பிள்ளை  மிருதங்கம்.   புதுக்கோட்டை சுவாமிநாத பிள்ளை கஞ்சிரா.  மன்னார்குடி  வைத்தியலிங்கம் பிள்ளை கொன்னக்கோல்  ஏற்பாடு செயதிருந்தார்கள். மோர்சிங்குக்கு  பதிலாக.    சித்தூர் சுப்ரமணிய பிள்ளை  கணீரென்ற குரல்  கொண்டவர். ஸம்ப்ரதாயமாக  கல்பனா ஸ்வரங்களை அதிகம் நீட்டாமல் குறைக்காமல் பாடுபவர்.  ஜனரஞ்சக வித்வான்.

பகல்  ஒருமணிக்கு  கச்சேரி முடிந்தபின் தான் அனைவரும்  சாப்பாட்டுக்கு எழுந்தோம். நடுவே  அவ்வப்போது  நீர் மோர்,   ஐஸ் கட்டி போட்டு   சாத்துக்குடி,  எலுமிச்சம்பழ சர்பத் கொண்டு கொடுத்தார்கள்.  

சாப்பிட்டு விட்டு சிலர்  சீட்டுக்கச்சேரி  ஆரம்பித்தார்கள். நான்  ஜமுக்காளத்தில்  சுகமாக ஒரு குட்டி தூக்கம் போட்டேன்.  மாலை மூன்று மணிக்கு  ஒரு நிகழ்ச்சிகள் நிறைவாக  ஸ்ரீமதி N  C  வசந்தகோகிலம்  பார்ட்டியினரின்  இன்னிசை.   ஆறுமணி வரை  பொரிந்து தள்ளிவிட்டார் போங்கள் .  சில  சினிமா பாடல்களும்  அதில் உண்டு. எல்லோரும் ஒன்ஸ் மோர் கேட்டது   ''தந்தை தாய் இருந்தால்''... ஷண்முகப்ரியா பாடல்...

ஆறரை மணிக்கு  காரைக்குடி  ரயில் நிலையம் வில்வண்டியில் சென்றோம். ஒவ்வொருவர் கையிலும்  ஒரு பக்கெட் ( பாக்கெட் அல்ல,)  பக்ஷணங்கள்,  வேஷ்டி மேல்துண்டு, கையில்  ரயிலடி சாப்பிட  தயிர் சாதம் மோர்மிளகாய். சிலருக்கு உப்புமா  தேங்காய் துவையல் பொட்டலங்கள்.  

நண்பர்களே  இதுவரை நான்  கல்யாண பெண்  உமையாள் ஆச்சியின்  தந்தை   பத்ம பூஷன்   RM .அழகப்ப செட்டியாரை அறிமுகப்படுத்தவில்லை என்பதற்கு காரணம் அவர்  உலகம் அறிந்தவர்.  6.4.1909  அன்று கோட்டையூரில் பிறந்து  சரியாக  48 வயதில் 5.4.1957ல் மறைந்த  வள்ளல். வணிக உலகில் ஜாம்பவான். அவர் தொடாத   தொழில் துறை  கிடையாது.  அனைத்திலும்  லட்சுமி கடாக்ஷம்.  நாட்டுக்கோட்டை  நகரத்தார்
குடும்பங்களில்  முதல் M.A  பட்டதாரி.  லண்டனில் சட்டம்  நீதி துறையில் பார்-  அட்-  லா பட்டதாரி.  தமிழ் வளர்ச்சிக்கு  அக்காலத்திலேயே ஒரு லக்ஷம்  ரூபாய் நன்கொடை அளித்தவர். 300  ஏக்கர் நிலமும் 15 லக்ஷம் ரூபாயும் கொடுத்து காரைக்குடியில் ஒரு பெரிய  மின் வேதியல் ஆராய்ச்சி நிறுவனத்தை   மத்திய  அரசாங்கம் நிறுவ  வழி செய்தவர்.   கோட்டையூர் மாளிகையை ஒரு பெண்கள் கல்லூரிக்காக தானமாக அளித்தவர்.  அவரால் நிறுவப்பட்ட  ஸ்தாபனங்களில் சிலவும் அவர் அளித்த  தான தர்மங்களும்.: 

Alagappa Chettiar College of Technology,(Now known as Alagappa College of Technology Campus- Anna University Chennai)
Alagappa Chettiar Government College of Engineering & Technology (ACCET) at Karaikudi, Tamil Nadu. (Now an autonomous government institution)
Alagappa Matriculation Higher Secondary School, Chennai, Tamil Nadu
Alagappa Arts College, Karaikudi, Tamil Nadu
Alagappa College of Polytechnic, Karaikudi, Tamil Nadu
Alagappa Physical Education College, Karaikudi, Tamil Nadu
Alagappa Primary School, Karaikudi, Tamil Nadu
Alagappa Montessori School, Karaikudi, Tamil Nadu
Alagappa Preparatory School, Karaikudi, Tamil Nadu (this is a private school managed by his daughter founded after him)
Alagappa Matriculation School, Karaikudi, Tamil Nadu (this is a private school managed by his daughter founded after him)
Alagappa Model Higher Secondary School at his birthplace, Karaikudi, Tamil Nadu
A ladies' hostel at Vepery, Chennai
A gift for the development of the township infrastructure of Kottaiyur
A gift for the Meenakshi club at Kandanur, Tamil Nadu
A donation for the H.M.I.S Fund
Foundation of an engineering college at Annamalai University, Chidambaram, Tamil Nadu
Foundation of a college of technology at Madras University, subsequently named Alagappa Chettiar College of Technology, Guindy, Chennai
A donation to establish higher education in Malaysia
A donation to establish the South Indian Educational Society at New Delhi in 1948
A donation to the Lady Doak College at Madurai
A donation for constructing "Alagappa Mandapam" at Thakkar Baba Vidyalaya in 1946 – the Foundation Stone was laid by M.K.Gandhi
A donation for publishing Tamil Kalangiyam
A donation to the Cochin Cyclone Relief fund
A donation for geological research by the Travancore government
A donation for establishing a maternity hospital and childcare centre in Cochin
A donation for indigenous medicine research by Ernakulam Maharaja College
A donation to fund students from Cochin to study abroad
Funding the morning food scheme for Cochin children
Establishing the South Indian chamber of commerce in Cochin

அழகப்ப செட்டியார் தனது  மகள் உமையாளுக்கு  இதுவரை எவரும்  செய்யாத  அதிசயமாக  நான்கு நாட்களில் அன்றைய  இசை உலகம் அறிந்த அத்தனை கலைஞர்களையும் வரவழைத்து  அற்புத நிகழ்ச்சிகளை கொடுத்து  சிறப்பாக  ஒரு சாதனை புரிந்தபோது  எனக்கு  நான்கு வயது.  எங்கிருந்தோ எனக்கு   கிடைத்த   இந்த  விசேஷ  கல்யாண அழைப்பிதழை கண்டதும்   என் கற்பனையில் நான் காரைக்குடிக்கு  பின்னோக்கிச்  சென்று இந்த கல்யாண வைபவத்தில் கலந்து கொண்டு உங்களையும்   அந்த  அற்புத அனுபவத்தில்  பங்கேற்க செய்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.   





No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...