Friday, March 26, 2021

PANCHANGAM

 

பாம்பு பஞ்சாங்கம்  --  நங்கநல்லூர்  J K  SIVAN --

அநேக பஞ்சாங்கங்கள் வருஷா வருஷம்  புத்தகமாகவும்  யூட்யூப்,  வாட்ஸாப்ப், முகநூலில் இப்போது  வர ஆரம்பித்து விட்டது.  அதே சமயம்  பஞ்சாங்கத்தை  பார்க்கக் கூட தெரியாதவர்கள் இன்னும் வளர்ந்து கொண்டு வருகிறார்கள் என்பது நாம்  எவ்வளவு ''முன்னேறி''  வருகிறோம் என்று  புரிய வைக்கும்.  
ஒவ்வொரு வீட்டிலும்  பஞ்சாங்கம் இருந்த காலம் ஒன்று உண்டு.  பூஜை அறையில் தான்  இடம் பெற்றிருக்கும்.  காலண்டர்கள் அதிகம் கிடையாது. தினசரி பத்திரிகைகள், வாராந் திரங்கள்  அதிகம் புழக்கத்தில்  இல்லை.    பல வீடுகளில்  பஞ்சாங்கத்திற்கு மேலே ஒரு அட்டை போட்டு  கயிறு கட்டி  ஆணியில் தொங்கும்.  ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு தடவையாவது அதை புரட்டிப் பார்க்கும் பழக்கம் இருந்தது.   பிரயாணத்தின் பொது கையோடு எடுத்துக் கொண்டு போவது வழக்கம்.  சில வீடுகளில் நூறு வருஷ  பஞ்சாங்கம் இருந்து பார்த்திருக்கிறேன். 
அதற்கும் முந்தி கிராம வாழ்க்கை தான் நகர வாழ்க்கையும்.  நகரங்கள் பெரிதாக உருவாக வில்லை. பஞ்சாங்க பிராமணர்  மாசத்துக்கு ஓரிருமுறை  வந்து ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்வார்.  அண்டை அசல் வீடுகள்  அவர் வரவைத் தெரிந்து கொண்டு  அவரவர் வீடுகளில் என்றைக்கு  பித்ரு திதி, அமாவாசை, சுப நாட்கள் போன்ற விஷயங்களைக்  கேட் பார்கள். அவரிடம் பஞ்சாங்கம் வைத்தி ருப்பார்  அதைப் பார்த்துச்   சொல்லிவிட்டு  அரிசி, காய்கறிகள் அவருடைய  பீஸ் FEES ஆக வாங்கிக் கொண்டு போவார்.  சில  வீடுகளில் வேஷ்டி தூண்டும் கூட  போனஸ்.    அவர் சொன்னதை சுவற்றில் கரித்துண்டில் எழுதி வைத்துக்கொள்வார்கள்.   சுவர் தான் டயரி.

எனக்குத் தெரிந்து எங்கள் வீட்டில்  மஞ்சள் கலரில்  பாம்பு பஞ்சங்கம் தான்  ரொம்ப வருஷமாக இருந்து வருகிறது. இப்போதும் அதன் அட்டை அவ்வளவாக மாறவில்லை  என்பது  சந்தோஷமான ஒரு விஷயம்.   அதன் கெட் அப் GET UP  மாறவில்லை.  அதே  அளவு, டிசைன்.   நடுவில் ஒரு உழவன்,  ரெண்டு பக்கத்திலும்  வீணை மாதிரி ஏதோ வாசிக்கும்  நாரதர் கொண்டை போட்ட  ரெக்கை உள்ள   கந்தர்வர்கள்.  மூணு வளைவுகள் கொண்ட மூன்று ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு  மூன்று பாம்புகள். அதில் சில வாசகங்கள் வேடிக்கையாக இருக்கும்.   

இதைக்கூட  டூப்ளிகேட்  பண்ணி சிலர்  பிழைக்கிறார்களோ என்று  எண்ண  வைக்கும்  ''அசல்  28  நெ ..... உ. அ .... நெ . மநோன்மணி  விலாச  கொ .லோ. பாரியாள் ''

 யார்  இந்த கொ.லோ.பார்யாள்  என்று தெரிந்து கொள்வதற்காக கொட்டையாக  கீழே  ''இது  கொண்ணூர் மாணிக்க முதலியார்  சுவீகார குமாரர்  கொ .லோகநாத முதலியார்  பார்யாள்  கொ .செல்வரங் கம்மாள்''   என்று விளக்கம்.  
அவரது வம்சம் இந்த பஞ்சாங்கத்தை விடாமல்   கொண்டித் தொப்பிலிருந்து வருஷா வருஷம் வெளிக்கொண்டு வருகிறது ஒரு நல்ல விஷ யம்.பஞ்சாங்கம் விஷயங்களை அப்படியே  தந்தாலும் விலை  மாறிக் கொண்டே, ஏறிக்கொண்டே போய்  இன்று  66 ரூபாய். 
இந்த பஞ்சாங்கத்தில் என்ன தெரிந்து கொள்ள லாம்.  முதலில் பஞ்சபட்சி சாஸ்திரம், பட்சி பார்க்கும் விதத்தில்  ஆரம்பித்து அநேக  சுவாரஸ்ய விஷயங்கள். 
இந்த பஞ்சாங்கத்தின்  சுத்த வாக்கியம்  எப்படி என்பதற்கும் ஒரு விளம்பரம் கொட்டை  எழுத்தில் வருஷா வருஷம் பார்க்கிறேன். 

''இது. கம்ஸ புரம் என்கிற அப்பனையங்கார் குமாரர்  அண்ணாவையங்காருக்குப் பிறகும்  சாஸ்த்ரோக்தமாய்க்  கணிக்கப்பட்டது''

இந்த பஞ்சாங்க விஷயங்களை பற்றி ஒரு புத்தகமே  எழுதலாம் போல் அவ்வளவு  சுவாரஸ்யமான சமாச்சாரங்கள் இதில் அடக்கம்.   சித்திரையில் வரப்போகும் புது வருஷத்துக்கு  ''பிலவ''  என்று பெயர். அதைப் பற்றி இந்த பஞ்சாங்கம் சொல்லும் விஷயங்கள் தருகிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...