Sunday, March 7, 2021

GEETHANJALI



கீதாஞ்சலி  ---       நங்கநல்லூர்  J K  SIVAN 

தாகூர்  

  32 உன்னை விட மாட்டேன்.

32. By all means they try to hold me secure, who love me in this world.
but it is otherwise with thy love which is greater than theirs, and thou keepest me free.
Lest I forget them they never venture to leave me alone.
But day passes by after day and thou art not seen.
If I call not thee in my prayers,
if I keep not thee in my heart, thy love for me still waits for my love.

தாகூரின் எழுத்து ஆங்கிலத்திலேயே இப்படி வியக்க வைக்கிறதே, அவரது தாய் மொழியில் அவர் படைத்த கீதாஞ்சலி பாடல்களின் உணர்ச்சிகள்  எப்படி அசத்தும்?   அதை எப்படி விவரிப்பது? சும்மாவா வெள்ளைக்காரன் நோபல் பரிசு கொடுப்பான்?. அது என்ன வேறே மாதிரி காசு கொடுத்து மாட்டிக்கிற  டாக்டர் பட்டமா?   கோவில்ல  சும்மா  கொடுக்கிற  சந்தனமா எவன் வேண்டுமானாலும் எடுத்து அப்பிக்கொள்ள?  தாகூர்  ஒரு வேதாந்தி. தனிமை விரும்பி. ஞானி. தன்னுள்ளே யே ஆயிரக்கணக்கான  மைல்கள்  பிரயாணம் செய்பவர். அதி அற்புதமான எண்ணற்ற வளமான கற்பனைகள், உணர்வுகளில் தன்னை மறந்து லயிப்பவர். அவர் சொல்லும் கருத்துகள் இலை மறைவு  காய் மறைவாக மூடி மறைக்கப் பட்டாலும் உன்னிப்பாக கவனித்தால் அவர் சொல்ல வரும் உயர்ந்த பக்தியும் சரணாகதியும்  பளிங்கு  தெரியும். அவர் எழுத்து சக்தி வாய்ந்தது. அவர் உணர்வுகளை அப்பட்டமாக   அப்படியே  வெளிப்படுத்துவது. நிதானமாக படிக்கவேண்டும். என் வார்த்தைகள் வெறும் தமிழாக்கம் இல்லை. தாகூரின் கருத்துகளை ரசிப்பதின் வெளிப்பாடு. அவ்வளவே. நான் அங்கங்கே கிருஷ்ணனை உள்ளே புகுத்தி இன்னும் மெருகூட்டி என் வந்தனத்தை தாகூருக்கு அளித்து உங்களுக்கு சமர்ப்பித்து மகிழ்பவன் -- ஜே .கே. சிவன்.
 

இனி 32வது கீதாஞ்சலி:

''கிருஷ்ணா, உன்னை  நினைக்கும்போது  நான் எவ்வளவு உனக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று தெரிகிறது. இந்த உலகத்தில் எல்லாவிதத்திலும் என்னை சேர்ந்தவர்கள், என் மீது பந்தம், பாசம், நேசம் எல்லாம் கொண்டவர்கள், என்னென்ன காரணத்துக் காகவோ என்னை விரும்பியவர்கள்,   என்னை தங்கள் பக்கம் கெட்டியாக இழுத்துக் கொள்ளத்  துடிக்கிறார்கள். பிடித்து வைத்துக் கொள்ள  பிரியத்தோடு அலைகிறார்கள். ஆனால் உன்னால் நான் பிழைத்தேன். நான் செய்த புண்யம் உனக்கு என் மீது அன்பு இருந்ததால் நான் பிழைத்தேன். நீ என்னிடம் காட்டும் பந்தம், பரிவு, பாசம், அவர்கள் அத்தனைபேரின் மொத்த பாசத்தை, பந்தத்தை விட அதிகம், சக்தி வாய்ந்தது என்பதால் என்னை அற்புதமாக உன் பக்கம் இழுத்துக் கொண்டு விட்டாய். அதனால் மற்ற பந்தங்கள், தொடர்புகளிலிருந்து விடுபட்டுவிட்டேன். என்னை சுதந்திரனாக உலவ வைத்து விட்டாய். ஆம் இது நீ என்னிடம் வைத்துள்ள பாசம், நேசம் மற்றவர்கள் என் மேல் வைத்ததைவிட எத்தனையோ மடங்கு பெரியது. அதிகம்  என்ற ஒரே காரணத்தால் தான்.  ஆம் . அது ஒன்றாலேயே தான்.

கண்ணாடியில் பிம்பம் போல் நீ.     நான் எவ்வளவுக்கெவ்வளவு உன் மீது பக்தியும் அன்பும் காட்டுகிறேனோ அதை விட அதிக மாகவே நீ என் மேல் அன்பை பொழிபவன். நான் மேலே சொன்ன அத்தனை உலக உறவுகளும் பந்தங்களும் என்னை தனியாக விடுவதாகவே இல்லை. எங்கே நான் அவர்களை விட்டு பிரிந்துவிடுவேனோ என்று என்னைப் பிடித்து வைத்துக் கொள்ளமுயற்சி.

காலம் நகர நகர உன்னை என்னால் காண முடியாவிட்டாலும் நான் உன்னை பிரார்த்திக்காவிட்டாலும், உன்னை என் மனதில் நிலையாக நிறுத்திக் கொள்ளாவிட்டாலும் கூட,   நீ எவ்வளவு பொறுமையாக ஒருநாள் நான் உன் மேல் பக்தியும் அன்பும் கொள்வேன் என்று காத்திருக்கிறாய்!!! எவ்வளவு பொருத்தமாக உனக்கு  ''காக்கும்'' கடவுள் என்று பெயர்? நீ காத்திடும் கடவுள் மட்டுமா,   என்னைப் பொறுத்தவரை நீ காத்திடும் கடவுள் மட்டும் அல்ல,  எனக்காகக்  காத்திருக்கும் கடவுளும் தான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...