Monday, March 22, 2021

GEETHANJALI

 

கீதாஞ்சலி  -`

தாகூர்  
    
    
38.  காரிருளில் சிறு கைவிளக்கு - -   நங்கநல்லூர்  J  K  SIVAN --

38 That I want thee, only thee---let my heart repeat without end.
All desires that distract me, day and night, are false and empty to the core.
As the night keeps hidden in its gloom the petition for light,
even thus in the depth of my unconsciousness rings the cry--
`I want thee, only thee'.
As the storm still seeks its end in peace when it strikes against peace
with all its might, even thus my rebellion strikes against
 thy love and still its cry is---`I want thee, only thee'.


ரபீந்திரநாத்  தாகூர்  ஒரு ப்ரம்மசமாஜ தலைவர்.   சமாஜத்தில்  ஹிந்து மதத்தின்  எல்லா  கொள்கைகளும்  அப்படியே  ஏற்றுக் கொள்ளாதவர்கள் .  மேற்கத்திய பண்பாட்டில்  பல வருஷங்கள்  ஊற்றினாலும்  அதிலும் ஒட்டாதவர்.    கீதாஞ்சலியில் கிருஷ்ணன் இருக்க வழியில்லை.  எனக்கென்னவோ  ஒரு  சுமங்கலி நெற்றியில் திலகம் இல்லாதது போல் கீதாஞ்சலி கிருஷ்ணன் இல்லாமல் இருப்பதாக தோன்றியதால்  கீதாஞ்சலியை ஒட்டி  கிருஷ்ணனை சேர்த்து பரிமாறுகிறேன்.  ஆத்ம திருப்தி தான் காரணம். தாகூர் மேல் குறை இல்லை, சொல்ல யோக்கியதையும் இல்லை. 

''கிருஷ்ணா,  இன்றோ நேற்றோ அல்ல, பல காலமாகவே, ''நீ வேண்டும் நீ வேண்டும்'' என்று என் இதயத்தில் ஒரு அயராத  முடிவில்லாத, துடிப்பு. மூச்சு துடிப்பு  உன்னைத் தேடிக்கொண்டே இருக்கிறது.  விஞ்ஞானிகள்
அந்த துடிப்பை  ''லப்  டப்''    SYSTOLIC   DIASTOLIC  என்று சொல்லட்டுமே, எனக்கு அது  '' கிட்டா  கிட்டா ''  என்று துடிப்பது தான் தெரியும்.

என்னை  இரவும் பகலும்  வாட்டி வதைக்கும், சித்ரவதை செய்யும்  எண்ணங்கள், ஆசைகள்  எல்லாம்  வெறும் பொய்,  அல்பம், பிரயோஜனம் இல்லாத   திசை  தெரியாமல்  காற்றடித்த  பக்கம்  பறக்கும் பஞ்சு போல  என்று புரிந்துவிட்டது.

''எனக்கு  உன் வெளிச்சம் வேண்டும், ஒளியைத்   தா '' என்று எனது  மெல்லிய  உள்ளுணர்வின் வேண்டு
கோளை ,  என்  மனது தனது  ஆசை, பாசம், விருப்பம்,  எனும் அந்தகாரத்தில் அழுத்திவிட்டது.    காரிருள் எப்படி  ஒரு சிறு  அகல் விளக்கின் ஒளியை பரவாமல்  மூடி மறைக்குமோ அது போல் இதுவரை அமுக்கியே  பாதாளச்சிறையில் அடைத்து விட்டிருந்தது. காத்திருந்தேன். 
 
 பொழுது விடிய, சூரியன் வர, அது வரை தேடிய ஒளி, தேவையான  வெளிச்சம்,  பளிச்சென்று தானாகவே    கிடைக்குமே,   அதே போல் தான் என்னுடைய இதயத்திலும், என்னென்னவோ குழப்பங்களின்  இடையில்  அந்த ஒரு தேடல், உன்னைக்  காணும் வேட்கை இருந்து கொண்டே இருக்கிறது. அது  தான்  மேலே சொன்ன  வேண்டுதல்  'நீ வேண்டும் எனக்கு நீ வேண்டும், நீ மட்டுமே வேண்டும்''  என்ற  கதறல்.   

 கௌரவ சேனையின் நடுவே  தன்னந் தனியனாக வீரத்துடன் போரிட்ட  அபிமன்யு போல் என் உள்ளுணர்வு மனதின்   அஞ்ஞான  அந்தகாரத்தை  எதிர்த்து  குரல் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது.    ''கண்ணா  வா  கண்ணா நீ  வேண்டும் '' என  விடாமல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

ஒரு அருமையான உதாரணம் சொல்லட்டுமா? புயல் சீற்றத்தோடு மரங்களை எல்லாம் சாய்த்தவாறு ஒரு அமைதியான கிராமத்தை உருக்குலைக்கிறது.கடைசியில் என்ன ஆயிற்று? தனது பலம் குறைந்த காற்று இருந்த இடம் தெரியாமல் அந்த கிராமத்தின்  அமைதியோடு  அமைதியாகக்  கலந்து, உரு மாறி,  காணாமல் போனது.  
கொரோனாவும் அப்படித்தான் வலுவிழந்து ஒருநாள் காணாமல் போகும்.

சீற்றம் எதில் முடிந்தது.? புயலுக்குப் பின்னே  உருவான அமைதி  ஏற்கனவே இருந்த அமைதி தானே. நடுவில் தானே புயல் அதன் சீற்றம். அமைதியான ஊர் அதை ஏற்றுக்கொண்டு   புயல் அகன்ற பின்னர் தானே மட்டும் எப்போதும் இருந்தது போல்  இருக்கிறது.   நடுவே  வந்தது தான்  போய்விட்டதே. 

என் மனத்தில் பெரும் போராட்டம். நினைவுக்கு அப்பால்,  எண்ணற்ற எண்ணங்களின் இடையே, என் உள்ளுணர்வு,  வேகமான, சக்தியான மனதின் இதர உணர்ச்சிகளால் பாதிக்கப்பட்டாலும், அடிநாதமாக எப்போதும் ஆரம்பம் முதல் இப்போது வரை இருப்பது ஒரு மெல்லிய ஏக்க ஸ்வரம் தான்  '' 
''கிருஷ்ணா நீ வா,  கண்ணா நீ வேண்டும்.. எப்போதும் ,என்றுமே வேண்டும்.''  கிளிப்பிள்ளை மாதிரி என் இதயம்  இப்படியே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கட்டும். என் மனதில் அலை அலையாக எத்தனையோ எண்ணங்கள்,என்னைத்   திசை திருப்ப துடிக்கின்றன. நாள் முழுதும், இரவும் பகலுமாக இதே அவஸ்தை எனக்கு. அவை அத்தனையுமே  பொய்யானவை, விஷயம் ஒன்றுமில்லாதவை. பிரயோஜனம் அற்றவை. 

காரிருள் மெல்ல மெல்ல சகலத்தையும்  மூடுகிறது. என் வெளிச்சம் தேவை என்ற கோரிக்கையும் அதில் மறைகிறது. இருந்தும்  என்  ஆழ் மனதில் நான் விடாமல் அழுது கொண்டே கேட்கும்  குரல் என்ன சொல்லி அழுகிறது தெரியுமா? 
'' கிருஷ்ணா  நீ எனக்கு வேண்டும், நீமட்டுமே வேண்டும்''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...