Tuesday, March 2, 2021

COMMUNICATION

 


   காலத்திற்கேற்ற  மொழி   --   நங்கநல்லூர்  J K  SIVAN 


 

நாம்  பேசுவது என்ன மொழி?   தமிழா?  இப்படி தான் எப்போதும் தமிழர்கள் பேசினார்களா  அல்லது பேசுகிறார்களா?  இல்லை என்று தான் புரிகிறது.  நமது தமிழில் கலக்காத பாஷையே இல்லையே?. சுத்தமான தமிழ் தமிழனுக்கு புரிந்தால்  நக்கீரரின் திருமுருகாற்றுப்படை,  சங்கநூல்கள்  நன்றாக புரியுமே, திருவிக  போல் பேசுவானே.  ''நிதி''  சேர்ந்த தமிழர்கள்  தமிழைக் கட்டி காக்க பிறந்தவர்கள் பேசுவது தோலுரித்த சுத்த தமிழாக இல்லையே.  வீட்டில் ஒன்று வெளியில் ஒன்று எதற்கு? 


ஏதோ சில விஷயம்  சொல்லவேண்டும்    தோன்றியது.  ஏனோ  மறந்து விட்டது.  வயது  அடிக்கடி  இந்த மாதிரி  சில் மிஷம்  பண்ணுகிறதே.


வீட்டுக்கு  பாங்கிலிருந்து   பணம்  வாங்கிக்கொண்டு  திரும்பி  வந்தபோது திடீ ரென்று என் வீடு  எப்படி புதிதாக  மாறிவிட்டது என்று ஆச்சர்யம்.  பேங்க் போகும்போது  இல்லை  இப்போது  வாசலில் ரெண்டு மரம், மொட்டை மாடியில் பால்கனி பூச்செடி. எப்படி அதற்கு இதெல்லாம்?  ஓ  நான் யார் வீட்டுக்கு   முன்போ அல்லவா  என் ஸ்கூட்டரிலிருந்து இறங்கிக் கொண்டிருக்கிறேன்.  என் வீடு  எனக்கு சட்டென்று  எப்படி மறந்து போய்விட்டது?. வேறு ஏதோ  தெருவில் இருக்கிறேனே.  ஞாபக மறதி   இது தானோ?


ஒருநாள்  இப்படித்தான்  சிவன் கோவில் வாசலில் என் ஸ்கூட்டர்  சாவியை  வேறு யோர்  ஸ்கூட்டரிலோ  போட்டு ஸ்டார்ட்  செய்ய முயன்றதை பார்த்து  அதன் சொந்தக்காரி ஒரு பெண் சிரித்தாள்.   --  பச்சைப்  புடவை  கட்டினவள் எல்லாம் உன்  மனைவியா  என்று  ஒரு வசனம் சொல்வோமே    அது போல்  கருப்பான  அந்த ஸ்கூட்டர் என்னுடையது  என்ற எண்ணம் கொடுத்து என்னை  ஒரு  கணம் ஏமாற்றி இருக்கிறது.  

அடிக்கடி  திடீரென்று  ஒரு  அத்யந்த  நண்பர் பேர் மறந்து விடும். உறவினர் பேர்  மறந்து விடும்.   ''எங்க  வீட்டு மனுஷாள் என்றால்  உங்களுக்கு  ஏனோ மறந்து போய் விடும்'' என்று என் மனைவி யின்  குரலை  பரிதாபமாக  கேட்டு  விழிப்பேன்.  அடிக்கடி  பாடும்  பாட்டின்  வரிகள்  மறந்துவிடும். '' தன்ன  தன்ன தானனா''   என்று  அந்த இடத்தை ரொப்பிக்  கொண்டே இருக்கும்போது  ஒரு  நாள் குளித்து  சோப்பு  முகத்தில்  தேய்த்து  கண்ணை மூடிக்கொண்டிருக்கும்போது  அந்த  வரிகள் எங்கிருந்தோ திடீரென்று  ஞாபகம்  வரும்.  நேற்று என்னை சந்தித்த  சில  வாசக நண்பர்கள்  நீங்கள் அடிக்கடி  பாடுவீர்களே  ஒரு  ரங்கநாதன், பாடுவீர்களே அதை பாடுங்கள் என்கிறார். அவருக்கு மட்டுமல்ல எனக்கும் எந்த பாட்டு  என்று நினைவில் இல்லை.  ராத்திரி  தான் திடீரென்று  ஓஹோ  ''என் நெஞ்சில் பள்ளி கொண்டவன் ''  பாட்டை சொன்னாரோ? என்று ஞாபகம் வந்தது.    ஞாபகத்துக்கும்  மொழிக்கும்  நிறைய  சொந்தம் இருக்கிறது.  மொழி பரிச்சயமாக  ஆன பிறகு தான்  பேச்சு  துவங்குகிறது. மொழி மனதில் படித்தவுடன் தான் பேச்சு வரும்.

ஒரே மொழியை  ஒவ்வொருவர் பேசுவதும்  வேறு வேறு மாதிரியாகவே இருக்கிறது.  கற்றுணர்ந்த  ஞானிகள் பேசுவதும்,  அறியாப் பருவ குழந்தைகள் பேசுவதும்  எப்படி வேறு படாமல் காண்கிறது.?  

 மொழி ஒன்று தான்.  அதன் ஆழம், அடர்த்தி, அர்த்தம்  வேறு . மனிதர்க்கு மனிதர்  அதன் வெளிப்பாடே தனி.   ஒரு காலத்தில்  சரியானது, இலக்கண சுத்தமானது,  பல நூற்றாண்டுகளில் வேறு பட்டு விடுகிறதே.  தவறென்று   சொல்லமுடியா விட்டாலும்  நடை முறையில்  தவிர்க்கப் பட்டு விட்டதே.  ஒரு விஷயத்தைப் பற்றி  அப்போது சொன்னதும் இப்போது சொல்வதும்  மலைக்கும் மடுவுக்குமான  வித்தியாசமாக அல்லவா தோன்றுகிறது.  உண்மை ஒன்றே. அதை வெளிப்படுத்தும் விதம்  மட்டும் தான்  வேறு ஆகி விட்டது.

புரியாததை  தூர வைத்து விடுகிறோம்.  பூடகமாக  சொல்வதாக  அவற்றை தவிர்த்து விடுகிறோம்.  யாரோ  முனைந்து, கஷ்டப்பட்டு  எளிமையாக  நமக்கு  புரியும்  மாதிரி  சொன்னால் கொஞ்சம்  நாட்டம்  அதில்  உண்டாகிறது.

 மோஸஸ்  இதை சொன்னார்,  புத்தர் அதைச் சொன்னார்,  கிருஷ்ணனும்  கிறிஸ்துவும்  இவ்வாறு சொன் னார்கள் என்று எவரேனும் பேசினால்  அங்கு  கூட்டம்  மெதுவாக  கலைகிறதே,  கரைகிறதே. ஏன்?   பொழுது போகாதவன் பேசுகிறான்,   வேலையில்லாதவன்  கேட்கிறான்  என்று காது பட  சிலர்  சொல்லும் போது  இன்னும்  சற்று வேதனையாகவும்   இருக்கிறதே.

 ஒன்று புரிகிறது.  நவீன  கால மனிதன் துருப்பிடித்து  போய் விட்டான். தரத்தில் குறைந்து போய்  விட்டான்.  தானும்  தனது சக்தியும் தான்  வெற்றிக்கு காரணம் என்று அகம்பாவம்  மெதுவாக  உள்ளே நுழைந்து உச்சந்தலைக்கு  போய்  விட்டது.  

தன்னையும் மீறிய சக்தி ஒன்று  இருகிறது. அதை நமது  பாட்டன் பூட்டன் எல்லோரும்  அறிந்திருந்தனர். அதை வழிபட்டு உயர்ந்தனர் என்பதே   மறந்து போய்விட்டது.  அதை பலமுறை  பலவிதங்களில் எடுத்துச் சொல்லி யும்  யார் காதில் வாங்குகிறார்கள்.?  கருத்தில் கொள்கிறார்கள்?

மறக்கக் கூடாது  என்பதற்காகவே  சிறுவதில்  நிறைய  பாடல்களை  ஆசிரியர்கள்  மனப்பாடம்  செய்ய  சொல்லி  வற்புறுத்தினார்கள்.  மனப்பாடம் என்பது  கம்பல்ஸரியாக  இருந்து ஒவ்வொவுனாலும் ஒப்பிக்கவில்லையென்றால் முட்டியில்  அடி .   நிறைய  வாங்கி இருக்கிறேன்.  மனத்தில் பாடம்  ஆகிவிட்டால் கடைசி வரை மறக்காது.  நிறைய  வேதங்கள் இவ்வாறு தான் கர்ண பரம்பரையாக  நமக்கு  கிடைத்தவை.

ரிஷிகள் முனிவர்கள்  எல்லோருமே  ஆல்ஸிமேர்,   பார்கின்சன்,   டெ மன்ஷியாவால் எல்லாம்  அவஸ்தைப் பட்டதாக  சுவடு  எதுவும்  தென் படவில்லை.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...