Saturday, February 29, 2020

LALITHA SAHASRANAMAM



         
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - .(838 -850)       J.K. SIVAN

முகும்தா, முக்தி னிலயா, மூலவிக்ரஹ ரூபிணீ |
பாவஜ்ஞா, பவரோகக்னீ பவசக்ர ப்ரவர்தினீ || 157 ||

சம்தஸ்ஸாரா, ஶாஸ்த்ரஸாரா, மம்த்ரஸாரா, தலோதரீ |
உதாரகீர்தி, ருத்தாமவைபவா, வர்ணரூபிணீ || 158 ||

              லலிதா ஸஹஸ்ரநாமம் - (838-850)   அர்த்தம்

*838*  முகுந்தா,
    मुकुन्दा   பிரபஞ்சத்தில் அனைத்து ஜீவர்களுக்கு முக்தி அளிப்பவள் அம்பாள் ஸ்ரீ லலிதை.  மஹாவிஷ்ணுவிற்கும் அவளுக்கும் ஒரே பெயர் தான்.  முக்தி கொடுப்பது யாராயிருந்தாலும் முகுந்தா  தான்.


முக்தி மூன்று வகை.  க்ரம முக்தி.  அதாவது ஒரு கிரமமாக  தொடர்ந்து முன்னேறி  அடைவது ஒருவித முக்தி. விதேக முக்தி என்பது  உடலை, தேகத்தை,  துறந்து,  கர்மபந்தங்களிலிருந்து விடுபட்டு, சுதந்திரமாக  என்றும் முக்தி நிலையில் இருப்பது,   மூன்றாவது முக்திக்கு சாத்ய முக்தி என்று பெயர்.  நினைத்த உடனே பெறுவது. மிகப்பெரிய ஞானிகளுக்கு அது எளிது.   எல்லா துன்பங்களிலிருந்ர்ஹும் விடுதலை பெறுவது தான் முக்தி. பிரம்மத்தில் திளைப்பது. 

*839*  முக்திநிலயா,  मुक्ति-निलया    முக்தி என்றால் அது அம்பாளையே குறிக்கும். முக்தி என்பதே அம்பாள் தான்.  அவளிடம் இருப்பதை ஒரு தாய் போல் பக்தர்களோடு பரிமாறிக் கொள்கி றாள்.   முக்தி என்றால் என்ன?  எந்த நிலையில்  ஆத்மா புத்தியிலிருந்து தனித்து விடுபடுகிறதோ அந்த நிலை.  உலகிலிருந்து எதிலும் இணையாமல், ப்ரக்ரிதியிலிருந்து   தனித்து ஆத்மா இயங்குவது தான். மனது, விஷயங்கள் அனைத்திலிருந்தும் ஆத்மா தன்னை பிரித்துக்கொண்டு இருப்பது. 

*840*  மூலவிக்ரஹ ரூபிணீ | मूल-विग्रह-रूपिणी     எல்லா சக்திகளுக்கும்  ஆதார சக்தி லலிதாம்பிகை. விகிரஹம் என்றால் ரூபம். உருவம்.  மூலம்  என்றால்  ஆதாரம்.  அம்பாள்  ஸ்ரீமாதா. அவள் தான் முழு முதல் ஆரம்பத்தில் இருந்தவள்.  அவளை ப்ரம்மம் எனலாம்.  அவரிலிருந்து தோன்றியவர்கள் ப்ரம்மா  விஷ்ணு ருத்ரன்.  மஹா திரிபுரசுந்தரி. 

 *841*  பாவஜ்ஞா, भावज्ञा   பாவம் (bhaavam ) என்பதற்கு எத்தனையோ அர்த்தங்கள் உண்டு.  ஒன்றாக ஆகிவிடுவது,  மாறுவது, தொடர்ந்து அதே நிலையில் இருப்பது, குணம், முடிவாக நிலைப்பது, ஞானி, பிரபஞ்சன், இதை உணர்வான். 

*842*  பவரோகக்னீ  भव-रोगघ्नी -   பவம் ( bha) இங்கு  சம்சாரம் எனப்படும் உலக வாழ்க்கையை குறிக்கும். நோய் நொடி, வியாதி, நரை, திரை  துக்கம் அனைத்தும் தருவது.  அம்பாள் இதிலிருந்து விடுவிக்கிறாள்.  பவா  என்றால் சிவனையும் குறிக்கும். சக்தி சிவனும் ரெண்டும் ஒன்று தானே.

*843*  பவசக்ர ப்ரவர்தினீ भव-चक्र-प्रवर्तिनी   சம்சாரத்தை ஒரு சக்ரமாக உருவாக்கப்படுத்திக் கொள்வோம். அதை சுழற்றுவது அம்பாள் ஸ்ரீ லலிதை.  வாழ்க்கை சக்ரம் பிறப்பு இறப்பு ஆகியவற்றில் உழல்வது. சுழல்வது.  ஆரம்பமே முடிவு. முடிவே ஆரம்பம். 

*844*  சந்தஸ்ஸாரா   छन्दः सारा (844)   சந்தஸ் என்பது ஒரு ஸ்வரத்தோடு நீட்டி குறுக்கி காலப்ரமாணத்தில் சீராக உச்சரிப்பது.   மீட்டர் என்பது.  முண்டக உபநிஷத்  (I.i.5) ''சந்தஸ் என்பது  அபர ஞானம். ஆத்ம ஞானம்  பர வித்யை  என்கிறது.  ஸாரம்  என்றால் சாறு, பிழிந்தெடுத்தது.  ஒரு வஸ்த்துவில், விஷயத்தில் முக்யமானதை சாறு எஸ்ஸென்ஸ் essence  என்கிறோம். 

சந்தஸ்  அக்ஷரங்களால் தொடுக்கப்பட்டது.  வேதங்களை உச்சரிக்கும் சப்தம்.  உபநிஷதங்கள் சாரம் அம்பாள் என்கிறது இந்த நாமம்.

சந்தஸ் கலீல் முக்கியமானது காயத்ரி சந்தஸ்.    வரிவஸ்யா  ரஹஸ்யம்  (I. 6, 7) :  ''அம்பாளை  14 வித்யைகள் மூலம் அறியலாம் .அதிலும்  வேதங்கள்,  அவற்றில் காயத்ரி தான் பிரதானம்.  ரெண்டு விதமாக அவள் தோன்றுவாள்.  வேதங்கள் மூலம் அறியும் ஸ்ரீ வித்யா,  மற்றொன்று மனோபாவத்தில் புரிவது'' 

*845*  , ஶாஸ்த்ரஸாரா,  शास्त्र-सारा       சகல சாஸ்திரங்களின் சாரம்  அம்பாள் ஒருவளே . ப்ரம்ம சூத்ரம் அதனால் தான் அவளை (I.i.3) ஸாஸ்த்ர யோனித்வத்  என்கிறது.  ப்ரஹ்ம ஸ்வரூபம்.  வேத சாஸ்திரங்களில் உற்பத்தி ஸ்தானம்.  சர்வஞான ஆதாரம்.

*846*  மந்த்ரஸாரா, मन्त्र-सारा  -  எல்லா  மந்திரங்களையும் பிடித்து சாறு  பிழிந்தால் கிடைப்பது தான் அம்பாள்.பீஜங்களின்  சேர்க்கை தான் மந்திரம் என்பது.  அம்பாள் அதனால் தான்  ஸப்த  (sabdha . ஏழு என்னும்  சப்த அல்ல)  ப்ரம்மம்.  

*847*  தலோதரீ |   तलोदरी     மெல்லிடையாள் .  இல்லாதது போல் தோன்றும் இடையுடையவள்.  அதல லோகம் எட்டாவது உலகம்.

*848*   உதாரகீர்தி,   उदार-कीर्तिः    அவளுடைய  பிரதாபமும், தயை நிறைந்த கருணை உள்ள   கீர்த்தியும் எங்கும் நிறைந்தவை.   பக்தர்களுக்கு எல்லையில்லா அன்போடு வாரி வழங்குபவள்.  அவர்களுக்கு பெருமை தருபவள்.   மௌனத்தில் மோக்ஷ மார்க்கம் காட்டுபவள் . ப்ரம்மச்சர்யத்தில் கட்டுக்கடங்காத சக்தி  தருபவள். 

*849*  உருத்தாமவைபவா,  उद्धाम-वैभवा (849)   அம்பாளின் பெருமை மஹோன்னதம்  வார்த்தைகளுக்  கப்பாற் பட்டது. தாம: என்றால் கயிறு. பொருள்களை கட்டுவது. அம்பாள் எல்லாவற்றையும் தனது கட்டுக்குள் கொண்டாலும் அவள் எல்லையற்றவள். 

 *850*   வர்ணரூபிணீ    वर्ण-रूपिणी    அக்ஷரங்கள், எழுத்துக்களின் கூட்டு அமைப்பு தான் அம்பாள்.  அறுபத்து நான்கு எழுத்துக்கள், அக்ஷரங்கள் கொண்டு தான் வேதங்கள் படைக்கப்பட்டவை.  அந்த அறுபத்து நான்கும் அம்பாளின் வடிவங்களே. 
 


 சக்தி  பீடம்   

                                                              
                      பித்தாபுரம் புரூஹுதிகா தேவி 
                           
நான் கப்பல் நிர்வாக தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது விதி என்னை எங்கெங்கெல்லாமோ இட்டு சென்றது.  ஆந்திராவில்  காக்கிநாடா துறைமுகம் அடிக்கடி செல்ல வேண்டிய  சந்தர்ப்பத்தில்  தெலுங்கு அதிகம் தெரியாமல், அவர்கள் பேசும் ஆங்கில தெலுங்கில்  விஷயம் சொல்லி புரிந்துகொண்டு காலம் தள்ளும்போது ஒய்வு நேரத்தில் மனம்  ஆலயங்களை தேடியது. அப்படி சென்றது தான் காகிநாடா  அருகே  பித்தாபுரம்  புரூஹுதிகா தேவி ஆலயம்.  20  கி.மீ.தூரம்.   51 சக்தி பீடங்களில் ஒன்று.  சதியின்  உடலிலிருந்து இடது கை  பூமியில் விழுந்த இடம் என்கிறார்கள்.  51 சக்தி பீடங்களில் 18 ரொம்ப மகத்தானது. இந்த அஷ்டதச சக்தி பீடங்களில் பித்தா புறம் புரூ ஹு திகா தேவி ஆலயம் ஒன்று.  இந்த ஆலயத்தில் சிவன் பெயர்  குக்குடேஸ்வர சுவாமி. அம்பாளுக்கு ராஜராஜேஸ்வரி தேவி என்றும் பெயர்.  தனி சந்நிதி.  சக்தி தேவி வடக்கு பார்த்து நிற்கிறாள். கருப்பு  க்ரானைட்கல்லில் செதுக்கிய சிலா ரூபம்.  4  அடி  உயரம். நிற்கிறாள்.   கருப்பு நிறத்துக்கு கண்ணை பறிக்கும் தங்க ஆபரணங்கள், ஒளிரும் வண்ண பட்டு ஆடைகள்.

பித்தாபுரம் மிகப் பழைமையான  ஊர்.  புராதன ஆலயம்.  அம்பாள் பெயரில் புரூஹு திகா புரம்  நாளடைவில் தேய்ந்து சுருங்கி பித்தாபுரம்.  தெலுங்கர்கள்  ஆனாலும்  சுந்தரரை ஞாபகம் வைத்துக்கொண்டு  பித்தா என்று சிவனை அழைத்தார்களோ? அவன் இருக்கும் புரம். இந்த தேய்மானம் ஒப்புக்கொள்ளும்படி இருக்கிறதே.  சிவனை குக்குடலிங்கம் என்றும் அழைக்கிறார்கள். காயா சூரன் என்றவன் சிவ பக்தன். தனது மார்பை பிளந்து யாகத்திற்கு அளித்து மோக்ஷம் பெற்று  ஆலயம் அருகே ஓடும் நதிக்கும் காயாசுரன்  பாதங்களின் பெயரால் பாதகாயா  என பெயர் பெற்றது.  வியாசர், ஆதி சங்கரர் ஆகியோர்  விஜயம் செய்து தரிசித்த புராதன ஆலயம். 

தேவிக்கு  சதுர்புஜங்கள்.  ஒரு கையில் ஒரு பைநிறைய  பீஜங்கள், விதைகள், கொட்டைகள்.  ஒன்றில்  பரசு, (கோடாலி.), ஒன்றில்  தாமரை, கமலம், அம்ருத பாத்திரம். 

ரெண்டு வித பக்தர்கள் வருவது உண்டு. ஒரு சாரார்  அம்பாளை புரூஹுதிகா லக்ஷ்மியாக கமலம் மது பாத்திரத்தோடு தோன்றும் ஹஸ்தங்களை வழிபடுவார்கள்.  மற்றொரு  சாரார் ஸ்மார்த்தர்கள், அவர்களுக்கு அம்பாள் புரூஹுதிகாம்பா . பரசு, பீஜ ஹஸ்தங்கள்  வாமாசார  சம்பிரதாய வழிபாடு. புராதனமான புரூஹுதிகா அம்பாள் சிலை ஆலயத்துக்கு அடியில் புதைக்கப்பட்டிருக்கிறது என்று நம்புகிறார்கள்.

அம்பாள்  இந்திரனால் உபாசிக்க






ப்பட்டவள்.   வடக்கு நோக்கி நிற்பவள்.
 தத்தாத்ரேயரின்  அம்சமான  ஜகதகுரு ஸ்ரீபாத வல்லபர் பித்தாபுரத்தில் ஜனித்தவர். புறூஹுதிகா அம்பாளை வழிபட்டவர்.
த்வஜ ஸ்தம்பம் அருகே   ஏக சிலா நந்தி -  ஒரே கல்லில் அழகாக வடிக்கப்பட்ட  நந்தியின் உருவம்.  லேபக்ஷியில் இருக்கும்  பசவேஸ்வரர்  நந்திக்கு பிறகு பெரிய நந்தி இது தான்.  
பித்தாபுரத்தை   திரி கயா க்ஷேத்ரங்களில் ஒன்று என்பார்கள்.   குக்குடேஸ்வரர் ஸ்வயம்பு. ஸ்படிகலிங்கம்.வெள்ளை  சலவைக்கல் மாதிரி. ரெண்டடி  உயர லிங்கம்.  அசப்பில்  சேவல் மாதிரி என்கிறார்கள். அப்படியா?  நான் சென்றபோது கவனிக்கவில்லையே.  மீண்டும் எப்போது போவேனோ?

KAALABAIRAVASHTAKAM





கால பைரவாஷ்டகம். 4

ஆதி சங்கரர்                                        J.K. SIVAN

கீழே 64 பைரவர்கள் பட்டியல் கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு பைரவரைப் பற்றியும் சொன்னாலே  
ஒரு புத்தகம் போட்டுவிடலாம். ரெடிமேட் தலைகாணி தயாராகிவிடும்.  ஹிந்துக்களின் வடக்கேயும்  தெற்கேயும் பைரவ பக்தர்கள் அதிகம்.  ப்ரத்யக்ஷ தெய்வம் என்று போற்றப்படுபவர்  பைரவர்.  பயம் போக்கிடுபவர். 

நீலகண்ட பைரவர்
விசாலாக்ஷ பைரவர்
மார்த்தாண்ட பைரவர்
முண்டனப்பிரபு பைரவர்
ஸ்வஸ்சந்த பைரவர்
அதிசந்துஷ்ட பைரவர்
கேர பைரவர்
ஸம்ஹார பைரவர்
விஸ்வரூப பைரவர்
நானாரூப பைரவர்
பரம பைரவர்
தண்டகர்ண பைரவர்
ஸ்தாபாத்ர பைரவர்
சீரீட பைரவர்
உன்மத்த பைரவர்
மேகநாத பைரவர்
மனோவேக பைரவர்
க்ஷத்ர பாலக பைரவர்
விருபாக்ஷ பைரவர்
கராள பைரவர்
நிர்பய பைரவர்
ஆகர்ஷண பைரவர்
ப்ரேக்ஷத பைரவர்
லோகபால பைரவர்
கதாதர பைரவர்
வஞ்ரஹஸ்த பைரவர்
மகாகால பைரவர்
பிரகண்ட பைரவர்
ப்ரளய பைரவர்
அந்தக பைரவர்
பூமிகர்ப்ப பைரவர்
பீஷ்ண பைரவர்
ஸம்ஹார பைரவர்
குலபால பைரவர்
ருண்டமாலா பைரவர்
ரத்தாங்க பைரவர்
பிங்களேஷ்ண பைரவர்
அப்ரரூப பைரவர்
தாரபாலன பைரவர்
ப்ரஜா பாலன பைரவர்
குல பைரவர்
மந்திர நாயக பைரவர்
ருத்ர பைரவர்
பிதாமஹ பைரவர்
விஷ்ணு பைரவர்
வடுகநாத பைரவர்
கபால பைரவர்
பூதவேதாள பைரவர்
த்ரிநேத்ர பைரவர்
திரிபுராந்தக பைரவர்
வரத பைரவர்
பர்வத வாகன பைரவர்
சசிவாகன பைரவர்
கபால பூஷண பைரவர்
ஸர்வவேத பைரவர்
ஈசான பைரவர்
ஸர்வபூத பைரவர்
ஸர்வபூத பைரவர்
கோரநாத பைரவர்
பயங்க பைரவர்
புத்திமுக்தி பயப்த பைரவர்
காலாக்னி பைரவர்
மகாரௌத்ர பைரவர்
தக்ஷிணா பிஸ்திதி பைரவர்

சுவர்ண கால பைரவர் , திருவண்ணாமலையில் தரிசனம் தருகிறார். செல்வத்திற்கு அதிபதியான பைரவர் என்பதால் சொர்ண ஆகர்ஷண பைரவர்.  இடது கையில் கபாலம் காணோம். ஆனால் அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தருபவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்வது வழக்கம். இவரை வணங்கினால் வீட்டில் செல்வம் பெருகும். இரண்டு நாய் வாகனங்கள்.

தஞ்சைமாவட்டம்,திருவிடைமருதூர் வட்டம் கதிராமங்கலம் அருகில் காவேரி வடக்கு நோக்கி ஓடி வடகாவேரி என அதற்கு பெயர். காவேரிக்கு மேற்கு கரையில் வினாயகர்.காசிவிஸ்வநாதர் கோவில்கள் உண்டு. இந்த ரெண்டு கோவில்கள் நடுவே மிக பழமையான இரட்டை கால பைரவர் கோவில் ஒன்று இருக்கிறது. . தற்போது தேய்பிறை அஷ்டமி திதியில் சிறப்பு பூஜைகள். இங்கு வழிபட்டால்  திருமண தடை நீங்கி வரைவில்திருமணம் நடை பெறும் என்பது ஐதீகம்.

காசியில் காவல் தெய்வம், ரட்சிக்கும் தெய்வம் காலபைரவர். முதலில் கால பைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும். காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக காலபைரவரையும் வழிபட்டால்தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும்.

"அமர்தகர்" (அகங்காரத்தை அழிப்பவர்) , "பாப க்ஷணர்"(பாபங்களை போக்குபவர்) என்று கூட பைரவருக்கு பெயர் உண்டு. .

தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை பைரவருக்கு அணிவிக்கும் புஷ்பங்கள். வாசனைப் பூக்களில் மல்லிகைப்பூ போடுவதில்லை. மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சார்த்தலாம்.

இன்னும் பைரவர் பற்றி நிறையவே வரும்.



Friday, February 28, 2020

JAYADEVAR ASHTAPADHI



ஜெயதேவர் அஷ்டபதி    J K  SIVAN 
                                                                                                                                                                                                                                 ஒரு  பிருந்தாவன  மாலை வேளை .
                                                                                                                                                                  sañcarad-adhara-sudhā-madhura-dhvani-mukharita-mohana-vaṃśam |
calita-dṛg-añcala-cañcala-mauli-kapola-vilola-vataṃsam |
rāse harim iha vihita-vilāsaṃ
smarati mano mama kṛta-parihāsam |1||

candraka-cāru-mayūra-śikhaṇḍaka-maṇḍala-valayita-keśam |
pracura-purandara-dhanur-anurañjita-medura-mudira-suveśam ||2||

vipula-pulaka-bhuja-pallava-valayita-ballava-yuvati-sahasram |
kara-caraṇorasi maṇi-gaṇa-bhūṣaṇa-kiraṇa-vibhinna-tamisram ||4||

śrī-jayadeva-bhaṇitam atisundara-mohana-madhu-ripu-rūpam |
hari-caraṇa-smaraṇaṃ prati samprati puṇyavatām anurūpam ||8|

sancharadadhara sudhAmadhura dhvani mukharita mOhana vamSam
chalita druganchala chanchala mouLi kapOla vilOla vatamsam
rAsE harimiha vihita vilAsam
smarati manO mama kruta parihAsam ||
                                                                                                                                                                    மாலை  நேரம். கருமேகங்கள் மேலே  ஒன்று கூடி  எப்போது மழை பெய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கின்றன.  பசுக்களும், கன்றுகளும், மயில்களும் பறவைகளும் சந்தோஷமாக  யமுனையின் குளிர்ச்சியை  காற்றில் ஸ்வாசித்துக் கொண்டிருக்கின்றன.  எங்கும் மரங்கள், செடிகொடிகள் வண்ண வண்ண  பூக்களை தாங்கி காற்றில் நறுமணத்தை கலந்து தருகின்றன.  அதோ அந்த பெரிய  மரத்தின் அடியில் அதன் வேரில் சிம்மாசனம் போல் இயற்கையாகவே அமைந்திருக்கிறதே அதில் தான் கண்ணன் அமர்ந்து ஆனந்தமாக கண்களை அரை திறந்து பாதியை மூடி யவாறு தன்னை மறந்து புல்லாங்குழல் வாசிக்கிறான். என்னென்னவோ  இன்ப நாதங்கள் எழுந்து அலை யலையாக காற்றில் சுருண்டு எங்கும் நிறைகிறது.   செவி படைத்த எல்லாமே  அதன் ஆனந்த மயக்கத்தில் தள்ளாடுகிறது. அம்ருத  பிரவாஹம் கங்கு கரை இன்ற எங்கும்  பரவுகிறது.
                                                                                                                                                                    அவன் இசைக்கேற்ப  அவனது சிரத்தில் மயிலிறகு ஆடுகிறது.  தாளம்  போடுவது போல் மகர குண்டலங்கள் ஒலியெழுப்பி அவன் காதுகளில் நடனமிடுகின்றன.  ஆடாத கால்கள் இல்லை, அசையாத கரங்களும் சிரங்களும் அங்கே இல்லை.  இது தான் ராஸ  லீலையோ?                                       

  ராதையின் நெஞ்சம்  கண்ணனுக்கு சொந்தம் அல்லவா. அவள் மனம் கண்ணனை நினைத்து ஏங்குகிறதை சொல்கிறது இந்த அஷ்டபதி.                                                                                                                                                                                                                          
  ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா  ராகமாலிகையில் அழகாக மெட்டமைத்து பாடியதை கேட்டு இந்த வான்கோழிக்கும்  ஒரே குஷி. தானும்  பாட துணிந்துவிட்டது. இத்துடன் இணைத்திருக்கிறது. https://youtu.be/a4QykDj2Q6M
                                                                                                                                                                   பாடலின் சாராம்சம்:  தோழி என் கண்ணன் இசை என்னை மயக்குகிறதடி. அவனது சுருண்ட கேசங்களை  அணைத்து  இழுத்து  சிரத்தில் கொண்டையாக கட்டி வைத்தாலும் அவை சுதந்திரமாக ஆடுகிறது. அவற்றை பிணைத்து கட்டியிருக்கும் நவரத்ன  மணிமாலைகள் வானவில்லின் நிறம்போலே ஒளி வீசுகிறது.  கேட்போர் காண்போர் நெஞ்சம் கொள்ளை கொள்ளும் சுக சங்கீத, சுந்தர வதனம். 

எண்ணற்ற கோபிகள் தினமும் எண்ணிக்கையில் பெருகுகிறார்கள். அவன் புன்னகையில் உள்ளம் கொள்ளை போகிறது.  அவனுக்கு என்னை லக்ஷியம் இல்லாமல் இருக்கலாம்.  ஆனால்  அவனே என் இறைவன். 

அவனுக்கு எல்லோரும் ஒன்று தான். அனைவரையும் அன்போடு பாசத்தோடு இழுத்து அணை த்துக் கொள்கிறான்.  எல்லோரும் தன்வயமிழந்து அவனில் கலந்தவர்கள். அவன் உடலில் அணிந்த ஆபரணங்களின் ஒளியில் தம்மை  இழக்கிறார்கள்.  அவன் நெற்றி யில் ஒரு சின்ன சந்தன பொட்டு மாதிரி   மினுக்குகிறது.  இரும்பு மார்பகம் எண்ணற்றோர்  ஆலிங்கனம் செய்து  காய்த்து போயிருக்கிறதா? அவனை என்னால் மறக்க இயலாது. அவன் என்னை மறந்தாலும் என் மனதில் குடிகொண்டவன். அவன் கருநிற உடலுக்கேற்ற  அழகிய மஞ்சள் நிற மிருதுவான மெல்லிய பீதாம்பர வஸ்த்ரம். ...அடடா அதன் அழகில் தான் எத்தனை யோகிகள், மஹரிஷிகள், மஹான்கள்... பீஷ்ம நாரத ப்ரஹ்லாத இந்திராதி தேவர்கள் மயங்கி வணங்குபவர்கள்.  என் மனதை அவன் ஆக்கிரமிப்பதில் என்ன ஆச்சர்யம்.

அவன் அமர்ந்திருக்கும் பெரிய  கடம்ப விருக்ஷம் அவனால் எவ்வளவு பெருமையும் கர்வமும் கொண்டு உயர்ந்து நிற்கிறது.  கலியுக அக்கிரமங்கள் இனி அழிவது நிச்சயம்.  அவன் அன்பை பாசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. என் மனம் நிறைந்து காண்கிறான் 

 இந்த கவிஞன் ஜெயதேவன் இந்த தெய்வத்தின் அருமை பெருமையெல்லாம் அற்புத அழகன் கிருஷ்ணனை போற்றி பாடுகிறேன். மேலும் மேலும் அவன் மேல் பாசமும் நேசமும் பெருகுகிறதே.   அவனது ராஸ லீலையின்  இணையற்ற  ஆனந்த சுகத்தில்  திளைக்கிறது. 

AATHMAN




மனிதனின் ஆன்மா  மரணமெய்தாது. J K SIVAN
மனிதர்கள் எல்லோரும் பயப்படும் ஒரு வார்த்தை  ''மரணம்''.  எப்போது, என்று, எங்கே, எப்படி நேருமென்று தெரியாத ப்ரம்ம ரஹஸ்யம் என்பதால் தான் இந்த பயம்.  அதிலிருந்து தப்ப முடியாது என்று தெரிந்தும் விடா முயற்சிகள்.  அதை பற்றி பேசினால் ஓடிவிடுகிறார்கள்.  தைரியமாக  உட்கார்ந்து கொஞ்சம் யோசிப்போமா?

மரணம் என்பது எப்போது உடல் செயலிழக்கிறதோ அந்த நேரம்.  உள்ளே  ஆன்மா என்று ஒன்று நம் எல்லோருக்கும் இருக்கிறது. பலர் அது இருப்பதை யே தெரியாமல் வாழ்ந்து முடிகிறார்கள். ஆன்மா அடிக்கடி வேறு வீடு தேடும். நம் உடல் ஒரு வீடு. கொஞ்சகாலத்துக்கு. அது இந்த வீட்டை காலி செய்வது தான் மரணம்.வாழ்க்கையை புரிந்து கொண்டால் மரணத்தை புரிந்து கொண்ட மாதிரி.  ஆன்மாவுக்கு பிறப்போ இறப்போ கிடையாது அது இடம் மாறுகிறது.  உடல் தான் ஆன்மா நுழைந்தது பிறந்ததாகவும், அது போகும்போது இறந்ததாகவும் அறியப்படுகிறது.  உடலே ஆத்மா என்று நினைப் பவர்கள் கோடிக் கணக்கானவர்கள்.
ஒரு மனிதன் நல்லவனாக, அன்புள்ளவனாக, கருணை கொண்டவனாக எல்லோராலும் விரும்பப்படுபவனாக சுயநலமற்று இருப்பது அவனுள்ளே இருக்கும் ஆன்மாவின்  வெளிப்பாடு. 

ஸயன்ஸ்  என்ன சொல்கிறது. எதுவும் மறைவதில்லை, உருமாறுகிறது. அவ்வளவு தான். விதை செடியாகி, மரமாகி, வெட்டப்பட்டு கிளையாகி, விறகாகி, வீடுகட்ட ஜன்னலாகி, கதவாகி, மேஜை, நாற்காலியாகி, ஊஞ்சலாகி, எல்லாமே ஒன்றின் மாற்றுருவம் தானே. 

குப்புசாமி இதற்குமுன் எங்கோ ஒரு கோபாலசாமி, இனிமேல் கருப்புசாமி, கிருஷ்ணசாமி ஒருவரை மற்றொருவர் அறியாமலே  எல்லாம் ஒருவர்.   மனிதனின்  மாற்றம் ஒன்றிலிருந்து இன்னும் உயர்ந்த ஒன்றாக இருக்கவேண்டும் என்பது அவசியம். அதற்கு தான் நாம் முயற்சிக்க வேண்டும். 

வியாதி, உபாதைகள், அவஸ்தைகள், துன்பம் இன்பம் எல்லாம் இந்த உடம்புக்கு தான். ஆன்மா எதிலும் ஒட்டாதது. பேசாமல் பார்த்துக் கொண்டே இருப்பது.  நல்லதையே செய், நினை, என்று  அடிக்கடி மெல்லிய குரலில் நமக்கு உபதேசிப்பது.  அது சொல்வது  எதையும் நாம் கேட்பதில்லை. அது நமது செயல்கள், சொல், எண்ணம் எல்லாவற் றுக்கும் சாக்ஷியாக இருக்கிறது. மனசாக்ஷி. 

மற்றவர்களுக்கு அன்பும், கருணையும், வாழ்வும் தரும் ஆன்மா அன்பின் கருணையின் உயிரின் வடிவமாக இருக்கிறது.
உலக பற்றுக்கள், அதற்கான பணம், பொருள்கள் தேடி அலைபவன் மரணத்தை அடையும்போது அவனது பற்றுதல்கள் அனைத்திலிருந்தும் பிரிக்கப்படுகிறான்.  அது தான் அவனுக்கு மரணத்தை கண்டால் பிடிக்கவில்லை.  பயம்.  பொதுநல காரியங்கள்,  இறை சிந்தனை, பரோபகாரம், எண்ணத்தில் நிறைந்தவன் வாழ்வு கடைசி நிமிஷம் வரை ஆனந்தமாக அமைந்து இந்த உலகில் கடைசி நிமிஷம் வரை அவன் ஸ்வர்கத்தில் வாழ்கிறான். மரண  அச்சம் அவனை நெருங்காது.
இப்படி தனக்கென வாழா  பிறர்க்குறியாளன் மறைந்தபின் அவன் சேவைகளை அவனைச் சார்ந்தோர் பின்பற்றி வந்தால்  அவன் என்றும் வாழ்கிறான். மரணம் அவனை நினைவிலிருந்து மறைக்காது. அப்படிப்பட்டவர்களைத் தான்  அமரர்கள் என்கிறோம்.  ஆன்மா  நினைவில் இருக்கும்போது  உடல் மறந்துபோகிறது .

U VE SA




'இடையன் எறிந்த மரம்' J K SIVAN

தமிழ் தாத்தாவுக்கும் எனக்கும்   ரொம்ப தூரம்.   உறவில் கூட.   நான் பிறப்பதற்கு ரெண்டு வருஷம் முன்பே  அவர் 1937ல்  திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தில் வருஷந்தோறும் நடைபெறும் ஸ்ரீ ஆதி குமரகுருபர ஸ்வாமிகள் தின வைபவத்துக்கு சென்றபோது ஒரு சம்பவம்.  இன்று படித்தேன். 


 ஒருநாள்  திருப்பனந்தாள் மடத்தில் மாடுகளைப் பார்த்துக்கொள்ளும் , பராமரிக்கும்  60 வயதுக்கு மேற்பட்ட   ஒரு  இடையரோடு  உ.வே. சா. பேசினார்.  இடையர்  அனுபவசாலி. மாடுகளைப் பற்றிய அபூர்வ விஷயங்கள் தெரிந்தவர். 

''சாமி,   எனக்கு இந்த மடத்தில் ஒரு குறைவு மில்லை.  மாடுங்களை பார்த்துக்கறேன்.  சந்தோசமாக இருக்கிறேன். ''

பேச்சுவாக்கில்  எத்தனை வகை  மாடுகள்,  முரட்டு,  கொண்டி மாடுகளை எப்படி மடக்கிப் பிடிப்பது,  தேவையான கயிறு கொம்பு வகையறா,  கயிற்றில் சுருக்கு போடும் விதங்கள், மாட்டை பார்த்து  போடவேண்டிய சத்தம்  எல்லாமே  மூச்சு விடாமல் விவரித்தார்.   தோளில்  போட்டிருந்த
கயிற்றில் சில சுருக்கு விதங்களை சட்டென்று போட்டு காட்டினார். நல்லவேளை உவேசா கழுத்தில் போட்டு இழுக்கவில்லை. 

தமிழ்த்தாத்தாவுக்கு இதெல்லாம் புதுசு, ஆச்சர்யமான விஷயங்கள். அவர் எங்கே
  மாடுகளோடு பழகுபவர், வீட்டில் பசுவே வைத்துக்கொள்ளாதவர்.  இலக்கியத்தில் பசுக்களை, கோனாரை, இடையர்களை  நன்றாக தெரியும்.   இடையர் வகுப்பில் பேசும் சில பழமொழிகளை கூறினார் அந்த வயதானவர்.

"எங்கள் ஜாதியிலே வாழ்த்துச் சொல்லும் போது, 'நல்லெருமை நாகு, (நாகு என்றால் பெண் எருமை.  நாகம்மாள்,  நாகலக்ஷ்மிகள் என்னை கோபிக்க கூடாது) . நற்பசு சேங்கன்று, ஆடு கிடாய், அடியாள் பெண்பெற' என்று சொல்வோம்.  எருமை கிடாரிக் கன்றையும், பசு காளைக்கன்றையும், ஆடு கிடாய்க் குட்டியையும், மனைவி பெண் குழந்தையையும் பெற வேண்டுமென்று  பெண்களை வாழ்த்து வார்கள்.

ஆட்டிடையர்கள்  வேறு விதத்தில் அனுபவசாலிகள்.  பையன்கள்  ஆடுகளை  மேய்ப்பது துரத்துவது எப்படி என்று நடித்துக் காட்டினார். 

"ஆடுமாடுகளை நாங்கள் காட்டுப் புறங்களுக்கு ஓட்டிக்கொண்டு போவோம். அங்கே மரங்களின் கிளைகளை எங்கள் வாளால்  முழுதும் மரத்திலிருந்து வெட்டாமல்  ஒடித்து  வெட்டிச்   சாய்ப்போம்.  து கிளை முதுவதும் துண்டித்து விழாமல் முறிந்து தொங்கும். ஆடுகள் அதில் முன்னங்காலை வைத்துக்கொண்டு தழை களைத் தின்னும். அந்தக் கிளை அடியோடு அறாமலும், மற்றக் கிளைகளைப்போல மரத்தோடு முழுவதும் சேராமலும் இருக்கும்" 

'இடையர்கள் ஆடு மாடுகளுக்கு உணவு அளிப்பதற்காக மரக்கிளைகளை வெட்டிச் சாய்ப்பார்கள்'   என இடையர் சொன்னபோது  உ.வே. சா.  வுக்கு  ப் பழந்தமிழ் நூல்களிலுள்ள செய்யுட்கள் ஞாபகத்திற்கு வந்தன. ஒரு காட்சி மனதில் தோன்றியது. 

நம் மை  நன்றாக அறிந்து பழகினவர்  ஒருவர் நம்மிடம்  கடனாக  பணம்  கேட்கிறார்.  கட்டாயம் தருவோம் என எதிர்பார்க்கிறார்;.  நட்பை உத்தே சித்து,  நாம்  அவருக்கு உதவ முயற்சிப்பதாக  தலையாட்டு கிறோம்.  ஆனால், அவர் கேட்கும் அளவு பணம் நம்மிடம் இல்லை என்று தெரியும்.  தாக்ஷண்யம் அவர் மனம் கோணக்கூடாதே என்று  வாக்குக் கொடுத்து விட்டோம்; அவருக்கு ஒரு நம்பிக்கையை உண்டாகி விட்டோம். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கிறோம். "முடியாது" என்று கடைசியில் சொல்வது நியாயமா? 

இந்த மாதிரியான தர்ம சங்கட நிலையை  புலவர்  விளக்குகிறார் தெரியுமா/   'இடையன் எறிந்த மரம் போல' என்கிறார்.  உபகாரத்தை மறுப்பதற்கும் இல்லை; செய்வதற்கும் இல்லை. இடையர் மரத்தை முழுதும் வெட்டவுமில்லை, வெட்டாமலும் இல்லை.   பதினெண்கீழ்கணக்கு நூலில்  பழமொழி என்பதிலுள்ள ஒரு செய்யுள் என்ன சொல்கிறது தெரியுமா: 

*"அடையப் பயின்றாசொல் ஆற்றுவராக் கேட்டால்
உடையதொன் றில்லாமை யொட்டின்-படைபெற்
றடைய அமாத்தகட் பைந்தொடி அகஃதால்
இடைய  னெரிந்த மரம்."

-- வேண்டியதை கொடுக்க வழியில்லாமல் திரிசங்கு சொர்க்கமாக, இல்லை என்றும் சொல்லாமல், கொடுக்கவும் முடியாமல் உள்ள நிலையை  இடையர் அரைகுறையாக வெட்டிய மரக் கிளை போல்'' என்கிறார். 

''முழுசாகவே  கிளையை வெட்டினால் என்ன?'' எதற்கு பாதி வெட்டியும் வெட்டாமலும் ஒடிக்க வேண்டும்? என்று இடையூறை  உ.வே. சா கேட்காமலா இருப்பார் ?

"அப்படி வெட்டினால் அந்த கிளை அப்பால் உபயோகமில்லாமற் போய்விடும். நாங்கள் வெட்டும் கிளையோ, மரத்தோடு ஒட்டிக்கொண் டிருப்பதால் மறுபடியும் தழைக்கும்." 

அவர் மனதில்  சீவக சிந்தாமணியில் ஒரு அடி  நினைவுக்கு வந்தது: 

 " இடைமகன் கொன்றவின்னா மரத்தினேன்"(1914) அந்த காட்சி இதோ:''சீவகன் தன்னுடைய தாயைப் பார்த்துத் தன் நிலையை, "நான் என் தந்தை மரணமடையப் பின் பிறந்தேன்; அன்றியும் நீ துன்பத்தில் தங்கவும் நட்புடையவர்கள் மனம் வருந்தவும் இடைமகன் கொன்ற இன்னா மரம் போல இருந்தேன்" என்னும் சொற்களால் விளக்குகிறான். நச்சினார்க்கினி யர் அந்த உவமையை விரித்து, 'உயிருடன் இருந் தேனாய்ப் பகையை வென்றேனுமல்லேன், உயிரை நீத்தேனுமல்லே னென்று கருதி மரத்தினேனென் றான்' என்று விசேஷவுரை எழுதுகின்றார். அவ் வுரை இடையன் கொன்ற மரத்தின் தன்மையை நன்கு விளக்குகிறது. 

இப்படி இடையர்கள் செய்வதைத்தான்  . இலக் கியங்களில் இடையர்களைப்பற்றி வருணிக்கும் இடங்களில், 'ஒடியெறிதல்' என  வரும். 'ஒடிய எறிதல்' என்பதே அவ்வாறு விகாரப்பட்டு வந்தது. இடையர்கள் ஒடிய எறிவார்களே அன்றி அற்று            விழும்படியாக  எறியார் என்பதை  அறிவுறுத்தியது. 

''அவ்வளவு ஜாக்கிரதையாக வெட்டுவது கஷ்டமல்லவா?    -    உ. வே. சா.

"அது கைப்பழக்
கம். இல்லாவிட்டால் பழ மொழி வருமா?" என்றார்  இடையர். 

"பழமொழியா? என்ன அது?"
"'இடையன் வெட்டு அறாவெட்டு'       ''  மரத்தை விட்டு கிளை அறுந்து விழாமல் வெட்டும் வெட்டு.  அது எங்கள் கைப்பழக்கம்  பற்றி சொல்கிறது. இந்த பழமொழி யாருக்கு தெரியும். எவ்வளவு சுலபமா கவும் சுருக்கமாகவும் இடையரது  கைத்திறமை யையும், மற்றவர்கள் வெட்டும் வெட்டிற்கும்  இடையர்  வெட்டிற்கும் உள்ள வித்தியாசம்  வேற்றுமையையும்  காட்டுகிறது. 

ஆழ்வார்களும்  இடையர் மரம் வெட்டும் அழகு பற்றி  சொல்லாமல் விடவில்லை. பெரிய திருமொழியில் ஒரு பாசுரம்.

*"படைநின்ற பைந்தா மரையோ டணிநீலம்
மடைநின் றலரும் வயலாலி மணாளா
இடைய னெறிந்த மரமேயொத் திராமே
அடைய வருளா யெனக்குன்ற ன‌ருளே"   
 (பெரிய திருமொழி)

ஆழ்வார்  திருவாலி யில் நீலோத்பல மலரணிந்த  பெருமாள்  திருவ‌ருளைப் பெறவில்லையே என்ற ஏக்கத்தால் மனம் வாடியும்,  அவன் அருள்  பெறுவோமென்ற நம்பிக்கையால் உயிர் வைத்துக்கொண்டும் நிற்கும், இருவித  நிலையை   ''இடையன் எறிந்த மரத்தை' ப்போல  என்று உவமையாக்கி  மேலே கண்ட பாசுரத்தில் பாடுகிறார்.

Thursday, February 27, 2020

PESUM DEIVAM




பேசும் தெய்வம் 3ம் பாகம் J K SIVAN

மஹா பெரியவா தமிழ் ஆர்வம்

வெள்ளைக்காரன் அழையாத விருந்தாளியாக இங்கே வந்து அமர்ந்து கொண்டு கூடாரத்தில் ஒட்டகம் புகுந்த கதையாக கொஞ்சம் கொஞ்சமாக இடத்தை ஆக்கிரமித்து, அதிகாரம் கைக்குள் கொண்டு வந்து நம்மையே அடிமைகளாக ஆட்டிவைத்தபோது நாம் பட்ட நஷ்டங்கள் இன்னும் ஈடு செய்யப்படாதவை.

நமது தமிழ் மொழியில் பல நூற்றாண்டுகளாக சில அளவுகள் வழக்கத்தில் இருந்தது. அது ஒரு தமிழ் பாட்டை படித்து கொஞ்சம் அறிவோம். மஹா பெரியவா அளித்த விளக்கம் மூலம்.

மஹா பெரியவா எதையும் விட்டு வைப்பதில்லை. அவருடைய சாஸ்திர விஷய ஞானத்துக்கு அளவே இல்லை. மஹா சமுத்திரம் அவர். அவருக்கு இந்த தமிழ் பாட்டும் நன்றாக தெரிந்து அர்த்தம் தெரியும்.
காஞ்சி மடத்திலேயோ அல்லது வேறு எங்கேயோ தமிழ் பேரறிஞரும் , தமிழ் தாத்தா உ.வே. சாமி நாதையர் சிஷ்யனுமான ஸ்ரீ கி.வா. ஜெகநாதன் மகா பெரியவாளை சந்திக்கிறார். தமிழ் பற்றி பேச்சு செல்கிறது.

' கி. வா. ஜ. அது சரி தமிழ் என்றால் என்ன?" என்று பெரியவா கேட்கிறார்.

கி. வா. ஜ . ஒரு வினாடி அமைதியாக கையை கட்டிக்கொண்டு பெரியவாளை பார்க்கிறார். பெரியவா தொடர்கிறார்.

"சமஸ்கிருதம் என்றால், செம்மையான, அழகாக , பண்பட்ட, பண்ணப்பட்ட, மொழி என்று அர்த்தம். தமிழ் என்று எப்படி அந்த மொழிக்கு பெயர் வந்தது என்று உங்களுக்கு தெரியுமா. தெரிந்தால் சொல்லுங்களேன் ?'' என்கிறார் பெரியவா.

''பெரியவாளே சொன்னால் புரிந்து கொள்கி றேன், தெரிந்து கொள்கிறேன்!"

'' எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து 'ழ' இந்த சிறப்பான '' ழ'' சம்பந்த பட்ட எந்த வார்த்தையும் அழகானது, இனிமையானது.
அழகு,இனிமை அவற்றைக் குறிப்பதாகவே அவை இருக்கும். உதாரணமாக மழலை, குழல், அழகு , குழந்தை, கழல், நிழல், பழம், யாழ் இப்படி 'ழ' வருகிற எல்லாமே எவ்வளவு அற்புதமான வார்த்தைகள். நமக்கு பிடித்த சமாச்சாரங்கள் . ஆகவே இனிமையான 'ழ'வைத் ''தம்மிடத்தில்'' வைத்துக் கொண்டது தமிழ். ''தம்+ ழ்'' -- இப்படி சொல்லலாமில்லையா? என்று குழந்தை போல் கேட்டார் பெரியவா.

"பெரியவா, யாராலும் இதைவிடப் பொருத்தமாக சொல்ல முடியாது. இனி எல்லா மேடைகளிலும் நான் இதை எடுத்துச் சொல்லுவேன்!" -- கி. வா. ஜ.

சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும் ஒரு பாடல் "யாமா மாநீ யாமா மா" என்ற மாற்றுமாலைப் பதிகம் . பல்லை உடைக்கும் சொல் கட்டு. அர்த்தம் மிகவும் கடினம். அவற்றுள் ஒன்றைப் பெரியவா எடுத்து, மிகவும் கடினமான அந்தப் பதிகத்தைப் பதம் பிரித்துப் பிரித்து மிக எளிமைப்படுத்தி அர்த்தம் சொன்னபோது கி.வா. ஜ. சிலையாக நின்றார். கூடியிருந்த அநேக வித்வான்கள் பெரியவா விளக்கத்தை கேட்டதும் பிரமித்துப் போனார்கள்.

பெரியவா உற்சாகமாக தொடர்ந்து பேசினார்:

''இது மாதிரி
காளமேகம் என்கிற ஒரு புலவர் கூட பாடி இருக்கிறார் தெரியுமா?

'' முக்கால், அரை,கால், அரைக்கால், இருமா ,மாகாணி,ஒருமா,கீழரை என்று குறைந்து கொண்டே வரும் அளவுகளை வைத்து எழுதினது. உங்களுக்கு யாருக்காவது தெரியுமா?" என்று கேட்டு விட்டு சுற்று முற்றும் பார்க்கிறார். எல்லோரும் பேசாமல் இருக்க பெரியவா தானாகவே அதை ஒப்பிக்கிறார்:

''முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்
அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்
விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்
கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது....''

இதுக்கு அர்த்தம் : "முக்கால்னா மூன்று கால்கள். வயதான பின் இரண்டு காலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூணாவது காலாகப் பயன்படுத்துகிறோமே.....அந்த நிலை வருவதற்குள், '''' முன்னரையில் வீழாமுன்: ...நரை வருவதற்கு முன்னாலேயே '' விக்கலும் இருமலும் வருவதற்கு முன்..''.யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன்.....
'' ஊருக்கு வெளியிலுள்ள மாகாணி என்ற சுடுகாட்டுக்குப் போகும் முன்...காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் உள்ள ஏகாம்பரேசுவரரை இன்றைக்கே துதிப்பாய்!"

எவ்வளவு அழகா காளமேகம் எழுதி இருக்கார் பார்த்தேளா! ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற எண்ணுக்குக் கீழேயே கொண்டுவந்து கீழரை வரை எட்டு அளவுகளையும் கோத்து ஒரு அற்புதமான ஸ்துதி பண்ணி இருக்காரே'' என்று சொல்லி மகிழ்ந்தார்.

எதையுமே இப்படி விளக்கமாகப் பொழிந்து தள்ளுவார் மஹா பெரியவா. அவர் சொல்லி காதாலே கேட்டவர்கள் பாக்யசாலிகள்.

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...