Saturday, February 8, 2020

SECRET OF BIRTH




துளியூண்டு  ரகசியம்   J K SIVAN

ஆனந்தமாக வாழ  அவசியமானது நம் எண்ணங்கள்.
எது   நிஜம்,  எது  நிழல் என்று    நம்மால்  அறிந்து கொள்ள முடியும்போது  இது எளிது.  சுகமானது. ஒன்றை விட்டால்  தான் இன்னொன்றை  பிடிக்க முடியும்.   சுயநலத்தில்  கிடைக்கும் திருப்தி மகிழ்ச்சிய  தன்னலமற்ற  எண்ணங்களால்  செயல்களால்  நாம்  அடையும்   திருப்தியும்   சந்தோஷமும்   ஈடற்றது.   தேஹாத்ம  புத்தி  எனும்     உடல்  பற்றிய    எண்ணம்  விருப்பு  வெறுப்பு   குறைவதால்  .அந்த  காலி இடத்தில்  ஆனந்தம்  உள்ளே புகும். 

 நமது  எல்லா   செயல்களும் எண்ணத்.தின்  வெளிப்பாடு.  எண்ணமே  இல்லாமல்  இருப்பதும் ஒரு செயல் தான்.  இதை தான்   ரமணர்  போன்றோர்  மனோநாசம்   destruction of  mind   என்பார்கள்.  நமது செயலுக்கு  ஏற்ப தான் நமது இன்ப   துன்பங்கள்.அதுவே  கர்மவினை. . எப்போதோ அல்ல.   அப்பப்போவும்  கூட  நேர்வது.  எண்ணத்தை  அறிவது, அதனால் அழ விளையும்  பலனை உணர்வது  அதை கட்டுப்பாட்டில்  வைத்துக் கொள்வது தான் ஞானம்.

பொய்   ஆனந்தத்தை தராது.    யாராவது கண்டு பிடித்து  விடுவார்களோ.வெளியே வந்துவி டுமோ என்ற  பயத்தை தான் தரும்.   ஞானம்  உள் நோக்கி ப்ரயாணம். உண்மைக்கு  அருகில்  செல்வது.   அஞ்ஞானம்  நமது வெளிப்  பிரயாணம்.   உண்மையிலிருந்து வெகுதூரம் விலகிப்போவது.   இரண்டுமே  எண்ணத்தின்   விளைவு.  செயல்பாடு.  எண்ணத்தை  கட்டுப்பாட்டில்   வைப்பதற்கு பெயர்   மனோபலம்,   சங்கல்பம். உண்மை சத்யம்  என்பதுபோல்   சிலது  தோன்றும்.  அதை  நம்பக்கூடாது.  அதை  சிந்தித்து முடிவு செய்யவேண்டும்.  இதற்கு உதவுவது நமது ஆன்மீக   நூல்கள்.  பெரியோர் வாக்கு.  ஞானிகளின் உபதேசம். 

எண்ணம்  உணர்ச்சிகளை   தூண்டும்.   அதன் விளைவாக நமது  உடலில் ஒவ்வொரு எண்ணமும் ஒரு வகையான நரம்புச் செல்களை  உசுப்பி  விடும்.   மனம்  சலனப்படுவதால் மாற்றங்கள் தொடங்கும் .  சுரப்பி  இயங்கும். இதயத்துடிப்பில் வேறுபாடு.   மேலும் மேலும்  .இதை தொடரும்.     தீய பழக்கங்கள்   இன்னும் அதிகமாகும். இதற்கு  நேர் மாறாக நல்ல பழக்கங்கள்  உடல் உள்ள  ஆரோக்கியத்தை  வளர்க்கும். ஆகவே
நமது எண்ணம்  ஒன்றே    நாம்  நல்லவர்களா  தீயவர்களா என்பதை   தீர்மானிக்கிறது.   இது  இயற்கையையும் பாதிக்கிறது.   மனிதன்  இயற்கையோடு   ஒன்றியவன்.    நல்ல   எண்ணங்கள் நல்ல சூழ்நிலையை  தருகிறது.

இவ்வளவும்  சொன்னால்  தான்  நாம் .ஆன்மா  என்று  புரியும் .
 ஒரு உடலை   பிரிந்த   ஆத்மா மற்றொரு உடல்-  அதன் மனதிற்குள் சென்று தன் பயணத்தை  மேற்கொண்டு  தொடர்கிறது.   நினைவலைகள் மூளையுடன் சம்பந்தப் பட்டிருப்பதால் ஆத்மாவின்  புதிய உடல்-  பழைய    நினைவு கள்  இல்லாமல் புதிய   மூளையில்   உதிக்கும்  புதிய மன மாற்றத்தை  கண்டும்   காணாமல் விட்டுவிடுகிறது.    ஆத்மா  தன்னிடம்  ஏற்கனவே உள்ள
 சம்ஸ்காரங்களை,  கர்ம  பலனை  கொண்டு செல்கிறது.   ஒரு விஷயம் .  ஆத்மாவின் இத்தகைய  பிரயாணத்திற்கு ஏற்றாற்போல இறைவன் அதற்கு புதிய  உடலை/மனத்தை   அளிக்கிறான்.

கிருஷ்ணன்  ரொம்ப நல்லவன்.  கருணா மூர்த்தி. ஆகையால்  நமக்கு  நல்ல வழிகளை காட்டுகிறான். நம்மை அவனிடம்  அழைத்து ஆனந்தம்  அடைய  வழிகாட்டினாலும்  நாம்   முகத்தை திருப்பிக்கொண்டு வேறு வழி  செல்கிறோம். அதற்கு அவன் என்ன  பண்ணுவான்.    பள்ளம்,  முள்,   இருள், கொடிய   விலங்குகள் என்று சொல்லியும்   பக்கம் போய்   அப்புறம்  அவனை வேண்டுகிறோம்.. கண் கெட்ட பின்  சூரிய  நமஸ்காரம்.   ன் நமது  முட்டாள் தனமான செயல்கள்   அதற்கு   ஜோடியான   முட்டாள் தனமான  விளைவுகள் தான்    தரும்.பனைமரம் மாம்பழம் தருமா?  

ஒரு வித்தியாசம்  என்ன தெரியுமா?  மனிதனால்  மட்டுமே தனது மனோபலத்தால்  செயலாற்ற முடியும். மற்றவை  எது நடக்கிறதோ  அதன்  விளைவை  கர்ம பலனை  ஏற்றுக்கொள்வதைவிட  வேறு  வழியில்லை.  ஆத்மாவின்  சம்ஸ்காரங்கள்  நல்லதற்றதாக  இருந்தால்  ஆத்மாவுக்கு  அதற்கேற்ப  மிருகங்களாகவும்   மற்ற பல உயிரினங்களாகவும் உடல்  கிடைக்கிறது.   மேலே  முன்னேற உழைக்க வேண்டும். இப்போது  புரிகிறதா? அரிது அரிது  மானிடராகப்பிறத்தல் அரிது என்பதன் அர்த்தம்..  ஆகவே  தான்  நாம்  எப்போதும் நல்ல  எண்ணங்களையே மனதில் நிரப்பிக்கொள்ளவேண்டும்.  பிறவிகள்   எடுப்பதே ஸம்ஸ்காரங்களை   முழுதும் கழிக்க.   நிறைய பேர்  தெரிந்தோ   தெரியாமலோ ''சுப்பண்ணா  அமோகமாக   இருக்கான் அவன் தம்பி  ரெங்குடு பார்  படாத கஷ்டம் படறான். மேலே மேலே  சரிக்கிண்டே போறதப்பார்த்தால்  எல்லாம்  அவா அவா  பூர்வ  ஜென்ம பலன் ''    என்கிறோம்.இப்படியாக  பல  வினோதமான  சிருஷ்டி  பரிணாமங்கள்    உலகில் எண்ணங்களுக்கேற்ப விளையும் விளைவுகள்  என்பது புலப்படுகிறது. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...