Monday, February 24, 2020

THIRUKOLOOR PEN PILLAI




திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள் 
J K SIVAN

   46  வழி அடிமை செய்தேனோ லக்ஷ்மணனைப் போலே


லக்ஷ்மணன் யார்?  என்று கேட்டேன்.  பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி  ஒரு பள்ளியில் என்னிடம் ''கிருஷ்ணனின் தம்பி'' என்றாள் . மயங்கி விழவில்லை.  ஏன் என்றால் எல்லா குழந்தைகளுக்கும் தெரிந்தது அவ்வளவு தான் என்று புரிந்தது.  ஆசிரியை, தலைமை  ஆசிரியர் எல்லோரிடத்திலும்  முடிந்தபோது  குழதைகளுக்கு நமது பாரம்பரிய கதைகள் எல்லாம் சொல்லுங்கள்.  வகுப்பு பாடங்கள் உதவுவதை விட நமது இதிகாசங்கள், புராணங்கள், இலக்கியங்கள், நிறைய நல்ல விஷயங்களை  போதிக்க கூடியவை என்று சொல்லி விடைபெற்றேன்.  சென்னை திரும்பும்  வழியில் எல்லாம் யோசித்தபோது அந்த பெண் குழந்தை  ஒருவேளை லக்ஷ்மணன் கிருஷ்ணன் சகோதரன்  பலராமன் தானே என்று எனக்கு உணர்த்தியதோ? லக்ஷ்மணன், பலராமன் இருவருமே  ஆதிசேஷன் அவதாரம் தானே என்று சமாதானம் செய்து கொண்டேன்.

ராமாயணத்தில் ஒரு காட்சி.   அயோத்தி ராஜா  தசரதனுக்கு  வெகுகாலம் குழந்தைகள் இல்லாமல் இறைவன் அருளால்  புத்ர காமேஷ்டி யாகம் செய்த பின்  நாலு பிள்ளைகள்.  இராமர், லக்ஷ்மணன்,
பரதன்,  சத்துருக்னன்.  வசிஷ்டர் அவர்களுக்கு குரு.  லக்ஷ்மணன்  ராமனின் நிழல்.  எல்லையற்ற  பாசம், அன்பு, மரியாதை.  ஒரு நாள்  விஸ்வாமித்ர ரிஷி அரண்மனைக்கு வந்து   ''தசரதா ,  உன் பிள்ளை ராமனை  என்னோடு காட்டுக்கு அனுப்பு. அங்கே  நான் ஒரு பெரிய யாகம் செய்யப்போகிறேன். அநேக  ராக்ஷஸர்கள் அங்கே வந்து தடை செய்கிறார்கள். அவர்களை  தடுத்து, அழிக்க ராமன் சரியானவன்.''  ராமனுக்கு 16 வயது நிரம்பவில்லை.  தசரதன் எவ்வளவோ முயன்றும்  தயங்கினாலும் வசிஷ்டர் ஒப்புதலுக்கு பிறகு ராமனை அனுப்பு கிறான். லக்ஷ்மணனும் உடன் செல்கிறான்.

தனக்கு பிறகு அடுத்த  அயோத்தி ராஜ்ய ராஜாவாக  ராமனுக்கு முடிசூட்ட  தசரதன் ஏற்பாடுகள் செய்கிறான். வசிஷ்டர் நாள் குறித்து விட்டார். 

மந்தரையின்  சூழ்ச்சியால் மனம் மாறிய  கைகேயி  மண்தரையில்  வீழ்ந்து அலறி அதை  தடுத்து தான் ஏற்கனவே பெற்ற வரத்தின் மூலம்  ராமனை 14 வருஷம் காட்டுக்கு அனுப்பி பரதனை ராஜாவாக்க முடிவாகியது. சோகத்தில் தசரதனும்  இறக்கிறான். சீதை ராமனோடு கிளம்புகிறாள்.  லக்ஷ்மணனும் தானும் ராமனோடு காட்டுக்கு சென்றுவிட்டான். 

''உன்னை யாரும் காட்டுக்கு போக சொல்ல வில்லையே. நீ இங்கேயே இரு'' என்ற ராமனுக்கு  “ தண்ணீர் இல்லாமல்  மீன்  உயிர் வாழாது . நீர்  தான் எ
னக்கு நீர்  என்று சொல்லிவிட்டான் லக்ஷ்மணன். 

14 வருஷமும்  ஒரு நாள், ஒரு இரவு கூட  தூக்கமில் லாமல்  ராமனை உண்மையாகவே  இரவு பகலாக காவல் காத்தவன் லக்ஷ்மணன், பணிவிடைகள் செய்தவன் . 

சீதாதேவியை இராவணன் அபகரிக்கிறான். பிறகு அவளை தேடி கண்டுபிடித்து ராம ராவண யுத்தம் நடக்கிறது.  ராவணன் மாண்டபின்   சீதையை மீட்டு  ராமன் அயோத்தி திரும்பி முடி சூட்டிக் கொள்கிறார்.  லக்ஷ்மணன் யுத்தத்தில் பெரும் பங்கு கொண்டு ராக்ஷஸர்களை அழிக்கிறான். 

 அண்ணனை தெய்வமாக  போற்றி  அவன் சொல் தட்டாது  பணிவிடை செய்தவன் லக்ஷ்மணன். 


திருக்கோளூர் அம்மாள் நம்மை விட  லக்ஷ்மணனை நன்றாக புரிந்து கொண்டவள் என்பதால் ராமாநு ஜரிடம்  ஐயா என்னை ஏன் இந்த திருக்கோளூரை விட்டு செல்கிறாய் என்கிறீர்களே,  நான் என்ன லக்ஷ்மணனா?  அவனைப்போல் தன்னை முழுவதும் ராமனுக்கு அர்ப்பணித்து, சரணடைந்து விட்டவளா,  அவரின் நிழலா?  ஏதாவது ஒரு காரியம் அவனைப் போல் செய்தவளா?  நான் எந்த விதத்தில் இந்த புண்யபூமி  திருக்கோளூரில்  வசிக்க அருகதை உடையவள்?  '' என்கிறாள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...