Friday, February 28, 2020

JAYADEVAR ASHTAPADHI



ஜெயதேவர் அஷ்டபதி    J K  SIVAN 
                                                                                                                                                                                                                                 ஒரு  பிருந்தாவன  மாலை வேளை .
                                                                                                                                                                  sañcarad-adhara-sudhā-madhura-dhvani-mukharita-mohana-vaṃśam |
calita-dṛg-añcala-cañcala-mauli-kapola-vilola-vataṃsam |
rāse harim iha vihita-vilāsaṃ
smarati mano mama kṛta-parihāsam |1||

candraka-cāru-mayūra-śikhaṇḍaka-maṇḍala-valayita-keśam |
pracura-purandara-dhanur-anurañjita-medura-mudira-suveśam ||2||

vipula-pulaka-bhuja-pallava-valayita-ballava-yuvati-sahasram |
kara-caraṇorasi maṇi-gaṇa-bhūṣaṇa-kiraṇa-vibhinna-tamisram ||4||

śrī-jayadeva-bhaṇitam atisundara-mohana-madhu-ripu-rūpam |
hari-caraṇa-smaraṇaṃ prati samprati puṇyavatām anurūpam ||8|

sancharadadhara sudhAmadhura dhvani mukharita mOhana vamSam
chalita druganchala chanchala mouLi kapOla vilOla vatamsam
rAsE harimiha vihita vilAsam
smarati manO mama kruta parihAsam ||
                                                                                                                                                                    மாலை  நேரம். கருமேகங்கள் மேலே  ஒன்று கூடி  எப்போது மழை பெய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கின்றன.  பசுக்களும், கன்றுகளும், மயில்களும் பறவைகளும் சந்தோஷமாக  யமுனையின் குளிர்ச்சியை  காற்றில் ஸ்வாசித்துக் கொண்டிருக்கின்றன.  எங்கும் மரங்கள், செடிகொடிகள் வண்ண வண்ண  பூக்களை தாங்கி காற்றில் நறுமணத்தை கலந்து தருகின்றன.  அதோ அந்த பெரிய  மரத்தின் அடியில் அதன் வேரில் சிம்மாசனம் போல் இயற்கையாகவே அமைந்திருக்கிறதே அதில் தான் கண்ணன் அமர்ந்து ஆனந்தமாக கண்களை அரை திறந்து பாதியை மூடி யவாறு தன்னை மறந்து புல்லாங்குழல் வாசிக்கிறான். என்னென்னவோ  இன்ப நாதங்கள் எழுந்து அலை யலையாக காற்றில் சுருண்டு எங்கும் நிறைகிறது.   செவி படைத்த எல்லாமே  அதன் ஆனந்த மயக்கத்தில் தள்ளாடுகிறது. அம்ருத  பிரவாஹம் கங்கு கரை இன்ற எங்கும்  பரவுகிறது.
                                                                                                                                                                    அவன் இசைக்கேற்ப  அவனது சிரத்தில் மயிலிறகு ஆடுகிறது.  தாளம்  போடுவது போல் மகர குண்டலங்கள் ஒலியெழுப்பி அவன் காதுகளில் நடனமிடுகின்றன.  ஆடாத கால்கள் இல்லை, அசையாத கரங்களும் சிரங்களும் அங்கே இல்லை.  இது தான் ராஸ  லீலையோ?                                       

  ராதையின் நெஞ்சம்  கண்ணனுக்கு சொந்தம் அல்லவா. அவள் மனம் கண்ணனை நினைத்து ஏங்குகிறதை சொல்கிறது இந்த அஷ்டபதி.                                                                                                                                                                                                                          
  ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா  ராகமாலிகையில் அழகாக மெட்டமைத்து பாடியதை கேட்டு இந்த வான்கோழிக்கும்  ஒரே குஷி. தானும்  பாட துணிந்துவிட்டது. இத்துடன் இணைத்திருக்கிறது. https://youtu.be/a4QykDj2Q6M
                                                                                                                                                                   பாடலின் சாராம்சம்:  தோழி என் கண்ணன் இசை என்னை மயக்குகிறதடி. அவனது சுருண்ட கேசங்களை  அணைத்து  இழுத்து  சிரத்தில் கொண்டையாக கட்டி வைத்தாலும் அவை சுதந்திரமாக ஆடுகிறது. அவற்றை பிணைத்து கட்டியிருக்கும் நவரத்ன  மணிமாலைகள் வானவில்லின் நிறம்போலே ஒளி வீசுகிறது.  கேட்போர் காண்போர் நெஞ்சம் கொள்ளை கொள்ளும் சுக சங்கீத, சுந்தர வதனம். 

எண்ணற்ற கோபிகள் தினமும் எண்ணிக்கையில் பெருகுகிறார்கள். அவன் புன்னகையில் உள்ளம் கொள்ளை போகிறது.  அவனுக்கு என்னை லக்ஷியம் இல்லாமல் இருக்கலாம்.  ஆனால்  அவனே என் இறைவன். 

அவனுக்கு எல்லோரும் ஒன்று தான். அனைவரையும் அன்போடு பாசத்தோடு இழுத்து அணை த்துக் கொள்கிறான்.  எல்லோரும் தன்வயமிழந்து அவனில் கலந்தவர்கள். அவன் உடலில் அணிந்த ஆபரணங்களின் ஒளியில் தம்மை  இழக்கிறார்கள்.  அவன் நெற்றி யில் ஒரு சின்ன சந்தன பொட்டு மாதிரி   மினுக்குகிறது.  இரும்பு மார்பகம் எண்ணற்றோர்  ஆலிங்கனம் செய்து  காய்த்து போயிருக்கிறதா? அவனை என்னால் மறக்க இயலாது. அவன் என்னை மறந்தாலும் என் மனதில் குடிகொண்டவன். அவன் கருநிற உடலுக்கேற்ற  அழகிய மஞ்சள் நிற மிருதுவான மெல்லிய பீதாம்பர வஸ்த்ரம். ...அடடா அதன் அழகில் தான் எத்தனை யோகிகள், மஹரிஷிகள், மஹான்கள்... பீஷ்ம நாரத ப்ரஹ்லாத இந்திராதி தேவர்கள் மயங்கி வணங்குபவர்கள்.  என் மனதை அவன் ஆக்கிரமிப்பதில் என்ன ஆச்சர்யம்.

அவன் அமர்ந்திருக்கும் பெரிய  கடம்ப விருக்ஷம் அவனால் எவ்வளவு பெருமையும் கர்வமும் கொண்டு உயர்ந்து நிற்கிறது.  கலியுக அக்கிரமங்கள் இனி அழிவது நிச்சயம்.  அவன் அன்பை பாசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. என் மனம் நிறைந்து காண்கிறான் 

 இந்த கவிஞன் ஜெயதேவன் இந்த தெய்வத்தின் அருமை பெருமையெல்லாம் அற்புத அழகன் கிருஷ்ணனை போற்றி பாடுகிறேன். மேலும் மேலும் அவன் மேல் பாசமும் நேசமும் பெருகுகிறதே.   அவனது ராஸ லீலையின்  இணையற்ற  ஆனந்த சுகத்தில்  திளைக்கிறது. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...