Saturday, February 22, 2020

RAMANA MAHARSHI




மஹரிஷியின் அந்திம  நேரம்...... 1 
J K SIVAN

பகவான் ரமண மஹரிஷி  தனது  இடது முழங்கையை தேய்த்துக்கொண்டு ஒருநாள்  1948 கடைசியிலோ 1949  ஆரம்பத்திலோ  தனது  தேகத்தை விட்டு  விலகுவது பற்றி குறிப்பிட் டிருக்கிறார்.  அவர் இடது முழங்கை பகுதியில் ஒரு வேர்க்கடலை அளவு ஒரு கட்டி , கொப்புளமாக இருந்த காலம் அது.  கொஞ்சம் கொஞ்சமாக அது வளர்ந்தது. வலியும்  அதோடு கூடியது.   ரமண ரிஷி வெளியே இருந்து எந்த  டாக்டரையும் கூப்பிட வில்லை.  ஆஸ்ரமத்திலிருந்த, தனக்கு அடிக்கடி மருத்துவம் செய்யும் ஒரு டாக்டரிடம் ''இதை வெட்டிவிடுங்களேன்'' என்று சொல்லியிருக்கிறார். 


ஒருநாள் காலை அவர்  உணவு உட்கொள்ளும்முன்  குளியறையில் அந்த கட்டியை டாக்டர் வெட்டி எடுத்தார்.  கையில் கட்டு போட்டால்  பக்தர்கள் மனது சங்கடப்படுமே என்று  ஒரு துணியை அதன் மேல் சுற்றி இருந்தார். 

'' சுவாமி  கையில் என்ன  துணி சுற்றி இருக்கிறீர்கள் ''என்று அனைவரும் கேட்க ஆரம்பிக்க சிரித்துக் கொண்டே

  ''இதுவா, அது ஒரு  கங்கணம்.  என் முழங்கையில் ஒரு சிவலிங்கம் ஸ்வயம்புவாக வளர்ந்து வருகிறதே'' என்பார்.  சில  மாதங்களில்  அந்த  முழங்கை கட்டி  ரத்தக்கட்டி  tumour  என்று உறுதியானது.  அதை ஆபரேஷன் செய்ததும் காயம்  ரணம்   ஆச்சர்யமாக  சில  வாரங்களில் குணமாகியது.   பக்தர்கள் மனம் மகிழ்ந்தது.  ரமணரை பொறுத்தவரை  கட்டியோ, அதன் வலியோ  மனதில் பதியவில்லை. 


ஒரு மாதகாலம்  சென்றபின்  மீண்டும் கட்டி தலை தூக்கியது.  மறுபடியும்  ஆபரேஷன் செய்தவர்கள்.  அதை சோதனை செய்தபோது அது புற்றுநோய் கட்டி என்று தெரிந்தது.  ரேடியம் சிகிச்சை துவங்கி னார்கள்.  ரணம் இந்த முறை  ஆறுவதாக இல்லை.  அவரது கையை  துண்டிக்கவேண்டும் என்ற நிலை வந்தது. 

''அதெல்லாம் எதற்கு?  இந்த உடம்பே ஒரு வியாதி பிண்டம்.  அதுவாக இருக்கும வரை இருந்து விட்டு போகட்டுமே'' அதை எதற்காக துண்டிக்க வேண்டும்.?  அந்த இடத்தை  சுத்தம் செயது கட்டுப்போட்டு வையுங்கள்  அது போதும் என்றார்.  கட்டியை ஆபரேஷன் செய்து  மருந்து வைத்து கட்டுப்போட்டார்கள். அவர் கட்டியையோ அதன் வலியையோ அறியவில்லை.

சூரிய வெளிச்சம் கொஞ்சம் உதவும் என்று டாக்டர்கள் சொல்ல  ரமணர் தினமும்  கோசாலை யில் மாட்டுக்கொட்டில் பின்னால் கட்டவிழ்த்து  காயம் சூரிய ஒளியில் பட உட்கார்வார்.   ரத்த கட்டியை பார்த்து 

''ஆஹா  என் உடலில் விலையுயர்ந்த  பவழமும்  இருக்கிறதே.   சூரிய ஒளியில் எப்படி தகதக வென்று ஜொலிக்கிறது''   என்று கேலியாக சொல்லி சிரிப்பார். எனக்கு இப்படி ஒரு விலையுயர்ந்த ஆபரணமா?''  என்பார்.


புற்றுநோய்  தனது வேலையை அதிவேகமாக தொடங்கிற்று. அவரது உடலின் ரத்தக்குழாய்களில் பரவ ஆரம்பித்தது.  ஆபரேஷன் பண்ண பண்ண  மீண்டும் மீண்டும்  ராவணனாக தலை முளைத்தது. 
மூன்றாவது ஆப்பரேஷன் ஆயிற்று. அது முடிந்த சில மணி நேரங்களில் மகரிஷி  ஏராளமான  பக்தர்க ளின்  விருப்பத்துக்கிணங்கி  தரிசனம் கொடுத்தார். 
மறுநாள்  டாக்டர்கள்  திரும்பினார்கள் .  ரமண மஹரிஷி தரிசன மண்டபத்துக்கு வந்தார். யாரை யும் காக்க வைக்க விரும்பவில்லை. 

1949 டிசம்பர்  இன்னொரு  ஆபரேஷன் நடந்தது.   அதனால் குணமடைவதற்கு பதிலாக  புற்றுநோய் வலுவடைந்தது. 

ஆங்கில வைத்தியம் தவிர   ஹோமியோபதி, ஆயுர்வேத   சிகிச்சை முறைகளும் பின்பற்றி னார்கள்.   தினமும்  சாயந்திர வேளையில்  நடை உ ண்டு.   அப்படி ஒருநாள்  நடக்கும்போது  ஜுரத்தில் உடல் நடுக்கம் கண்டது.  நடக்க முடியவில்லை.  அவரது  சாய்மானமான ஆசனத்தில்  அமர்ந்து விட்டார். உடம்பில் நடக்க சக்தி இல்லை.  பக்தர்கள் வருந்தினார்கள். 


உடல்நிலையை பற்றி யாராவது கேட்டால் ''அதற்கு என்ன? அதற்கு தேவை உள்ளே இருக்கும் உயிர்.  அதான் உயிர் இருக்கிறதே. அது எல்லோருக்கும் திருப்தி தானே?  இன்று கொஞ்சம்  நடராஜா  டான்ஸ்  ஆடுகிறது.  எப்போதும் உள்ளேயே  ஆடுவது இன்று தாண்டவ தரிசனம்  கொஞ்சம் வெளியேயும் தெரிகிறது. அதெல்லாம் பற்றி துளியும் கவலை படாதீர்கள்'' என்கிறார்.

தொடரும்....




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...