Sunday, February 16, 2020

MY WEALTH OF FRIENDS. 5



நான்  பெற்ற  செல்வங்கள்  5   J K  SIVAN 

          வேண்டியதை தந்திடும் வேங்கடவன் துணை 

நான்  காகித செல்வத்தை தேடி உழைத்த காலத்தில்  நான் நிழலைத்தேடி பிடிக்க ஓடுகிறேன் என்று  உணராமலில்லை, அது அப்போதைக்கு தேவையான ஒரு வேலையாக, வாழ வழியாக  தோன்றியது.  வாழ்க்கையின் பூரண பரிமாணம் பிடிபடவில்லை அப்போது. கடமையாக கருதி உழைத்தது மட்டும் தெரிந்தது. கடமை என்பது நாமே வரையறுத்துக்  கொள்ளும் செயல்பாடு, அது மாறும் தகைமை கொண்டது என்றும் சரியாக  புரிபடவில்லை. கோபுரத்தை பொம்மை  தாங்குவதாக நினைப்பு.

என்னை நான் உணர எனக்கு கைகொடுத்தது ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா சங்க ஈடுபாடுகள். அருகிலேயே இருந்த அவனை நான் காணாமல் எங்கோ முகம் திருப்பி எதையோ தேடினேன். அவனை அடையாளம் காட்ட இந்த சேவாசங்கம் எனக்கு பெரிதும் உதவியது, உதவுகிறது. 

கிருஷ்ணனை  உணர்ந்ததும் அடடா குடம் குடமாக  அம்ரிதம் அருகில் இருந்தும் லோட்டா தண்ணீருக்காக எங்கெல்லாமோ ஒடினேனே  என்று புரிந்து எனக்கே என் செயல் மீது சிரிப்பு வந்தது.   கிருஷ்ணார்ப்பண ஈடுபாடு முதலில் ஒரு சில நண்பர்கள் மூலம் மட்டுமே மின் அஞ்சல் பரிமாறலாக தோன்றி, வளர்ந்து புத்தகங்களாக வெளிவந்து பலரை  உலகளவில் அடைந்ததற்கு  சில காரணர்களை  கிருஷ்ணனே அடையாளம் காட்டினான்.  அவன் பெயர் கொண்ட க்ரிஷ்ணன்கள் மூவரை காட்டுமுன்பு வெங்கடாச்சலமாக, வெங்கடேஸ்வரனாக  வரப்ரசாதியாக தன்னை முதலில் காட்டிக்கொண்டான். தன்னை  ஸ்ரீ  கே. ஜி. வெங்கட் என்ற மானிட உருவில் அடைய செய்தான்.  ஜீவநதி உபநதிகளை காட்டியது.   எஸ்.ஜி .கிருஷ்ணன்  எஸ்.ஆர். க்ரிஷ்ணன், சங்கர்மணி கிருஷ்ணன்கள்  கை தூக்கி விட்டார்கள்.   எழுத்தில் கிருஷ்ணன் உருவாகி உலகம் இன்றும் சுற்றுகிறான்.

எதற்கும் தூண்டுதல் என்று ஒன்று உண்டு.  தீபம் பிரகாசமாக ஒளி வீச  திரியை  தூண்டிவிட வேண்டும். அப்படி தூண்டிவிட உதவியது நான் ஏற்கனவே  நன்றியோடு  நினைவு கூர்ந்த   அம்ருத வர்ஷிணி  வாசுதேவன் (ஆனந்த் ) தான்.  அம்ருத வர்ஷிணி மூலம்  வெங்கட் அறிமுகமாகி   என் எண்ணங்கள்  தட்டச்சு எழுத்திலிருந்து இயந்தித்தால் காகிதத்தில்  அச்சாகி  எங்கள் முதல்  வெளியீடாக,  ''விஸ்வரூபனின்   வாமன கதை'' களில்,  கிருஷ்ணன் புத்தகமாகி பிரயாணித்தான்.  

ஸ்ரீ KGV   விளம்பர பிரியர் அல்லர். புகைப்படம் கூட வெளியிட விரும்பாதவர்.  அமைதி விரும்பி.  இன்றும் அவர் உதவிக்கரம் எங்கள் சேவைக்கு உறுதுணையாக  ஒரு தாயின் அணைப்பில்  வளர்கிறது.  துபாய், அமெரிக்கா, இந்தியா என்று பல தேசங்களில்  தனது சேவையை தொடர்ந்து வரும் வெங்கட்  உலகளவில்   ஒரு   காப்பக , இன்சூரன்ஸ் நிபுணர்.  அவர் இந்த நல்லியக்கத்த்தை   பாதுகாப்பதில் என்ன ஆச்சர்யம்?   எவ்வளவோ 


வேலைகளுக்கும் இடையே  நேரம் ஒதுக்கி ஆன்மீக சேவை செய்பவர்.  தமிழில் எழுதியதை படித்துவிட்டு தானே உதவ ஓடிவந்தார்.  வருஷம்  ஏழு ஆகப்போகிறது. இன்னும் அவரை நாங்கள் பார்த்ததில்லை. 

அவரை நன்றியோடு நினைவு கூர்ந்து நான்  பெற்ற செல்வமாக போற்றி வணங்குவதில் பெருமைப் படுகிறேன். வாழ்க KGV   வளர்க அவர் தொண்டு. 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...