Wednesday, February 5, 2020

HSS FAIR 2020





தேவலோகத்தில் ஒரு வாரம் J K SIVAN


ஒரு வார காலம் சென்னையில் நான் இல்லை. திடீரென்று தேவலோகம் ஒரு வார காலம் வாசம் செய்ய சென்று விட்டேன். அங்கே இரவு பகல் நேரம்போவதே தெரியவில்லை. எந்நேரமும் தெய்வீகம், எங்கு நோக்கினும் ஹிந்து சமய கலாச்சார விஷயங்கள், வாத்தியங்கள், விகிரஹங்கள், படங்கள், சாரி சாரியாக பல பள்ளி சிறுவர் சிறுமிகள், தியானம், யோக பயிற்சி நிறுவனங்கள், ஆலய திருப்பணி களங்கள், ஆலய நிர்வாகங்கள், மடங்களின் பிரதிநிதிகள் என்று சொல்லமுடியாத அளவு வாரி வாரி ஆன்மீக விஷயங்களை அள்ளி வீசும் தமிழகத்தின் எத்தனையோ தொண்டு நிறுவனங்கள், பிரசங்கங்கள், சங்கீதம், நாட்யம், பழங்கால குடிமக்களின் கைவண்ண, கைவினைப் பொருள்கள் நிறைந்த அங்காடி, பலவித சைவ உணவு விற்பனை பகுதி, குடிநீர் வசதி, சுத்தம் செய்துகொண்டே இருக்கும் பணியாளர்கள், சொல்லி மாளாதபடி என்னென்னவோ அங்கே மக்கள் கவனத்தை கவர்ந்து ஒருவரையும் நகரவிடாமல் கட்டிப்போட்டுக் கொண்டே இருந்தது. வருவோரும் போவோருமாக அந்த கால ஆறு நாள் கல்யாண விழா தான். உணவுக்கு பஞ்சமே இல்லை.

யாரோ ஒருவர் வாய் ஓயாமல் நகைகள், கைப்பைகள் ஜாக்கிரதை. ''இதோ யாருடைய மணி பர்ஸ் கிடைத்திருக்கிறது அடை யாளம் காட்டி பெறவும், குழந்தைகள் ஜாக்கிரதை, ரெண்டு குழந்தைகள் இங்கே அழுதுகொண்டு நிற்கிறது வந்து பெற்றோர் கூட்டி செல்லவும். கைபேசியை கீழே வைத்துவிட்டு பறிகொடுக்காதீர்கள்'' போன்ற அறிவிப்புகள் ஒலிபெருக்கியில் எங்கும் எதிரொலித்துக் கொண்டே இருந்தார்.

ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி 11வருஷமாக குருநானக் தெருவில், வேளச்சேரியில், குருநானக் கல்லூரி மைதானத்தில் லக்ஷக்கணக்கானவர்களை 28.1.2020 அன்று துவங்கியது முதல் 3.2.20 இரவு 9.30மணிக்கு நிறைவு பெற்றது வரையில் நடந்ததை தான் சொன்னேன்.

எங்கள் ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் நிறுவனத்துக்கு U 9 என்ற பத்துக்கு பத்து சதுர அடி இடம் கடோசியில் கொடுத்து அதில் ரெண்டு மேஜை, ரெண்டு நாற்காலி, மின்சார விளக்கு, FAN வசதியோடு இலவசமாக வழங்கியதால் எங்கள் தொண்டு நிறுவனத்தின் இலவச ஆன்மீக புத்தகங்களை மக்களுக்கு அறிமுகம் செய்தோம். நிறைய தெரிந்த முகங்கள், நண்பர்கள் தவிர எண்ணற்ற புதுமுகங்களை கண்டேன் . அனைவரது ஆர்வமும் எங்கள் பணியில் மேலும் சிறப்பாக ஈடுபட உதவும் என்பதில் சந்தேகமில்லை.

நிறைவு நாள் 3.2.20 அன்று தமிழக அரசு அமைச்சர் திரு பாண்டியராஜன் அவர்கள் வந்திருந்து என்னை எனது ஸ்டாலில் கண்டு என்னிடமிருந்து ''ஐந்தாம் வேதம் '' இரு பாகங்கள் புத்தகம் பெற்றது ரொம்ப மகிழ்ச்சி அளித்தது. அதேபோல் HSSF, இந்த கண்காட்சி நிறுவனத்தின் ட்ரஸ்டீ ஆடிட்டர் குருமூர்த்தி என்று பிரபலமாக எல்லோரும் அறியும் துக்ளக் ஆசிரியர் எங்கள் ஸ்டாலுக்கு வந்து கௌரவித்து ''ஐந்தாம் வேதம்'' இரு பாகங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது இன்னொரு மறக்கமுடியாத சம்பவம்.

ஆன்மீக செம்மல்கள் ஸ்ரீ கோபாலவல்லி தாசர், ஸ்ரீ பம்மல் பாலாஜி, யோகபீட ஆஞ்சநேயர் கோவில் நிறுவனர் மாருதி தாசர், சாந்தானந்த ஸ்வாமிகள் நிறுவனம், சிவநேயப்பேரவை, காரைக்குடியிலிருந்து வந்த நளினா ஸ்ரீனிவாசன் தம்பதியர், வள்ளலார் திருச்சபை நிறுவனம், சென்னையின் பல பகுதிகளிலிருந்து என்னை தெரிந்த, நேரில் சந்தித்திராதவர்கள் ஆர்வமாக என்னை காண வந்தார்கள்.

என்னைவிட வயதில் மூத்தவர் 84+ வயதான முகநூல் நண்பர் ஸ்ரீ ஜம்புநாதன் ராதாகிருஷ்ணன், சித்ரா சந்திரசேகரன், ''மத்யமர்'' குழு நண்பர்கள், இன்னும் பல எத்தனையோ உள்ளங்கள் என்னை சந்தித்து வாழ்த்தியது எனக்கு மேலும் எழுத ஊக்கம் தருகிறது. அடுத்த கண்காட்சியின் போது நிச்சயம் மற்ற நண்பர்களையும் சந்திப்போம் என்று உள்ளே ஒரு பக்ஷி அழுத்திச் சொல்கிறது.
78
People Reached
12
Engagements



7

1 Share

Like
Comment


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...