Saturday, February 29, 2020

LALITHA SAHASRANAMAM



         
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - .(838 -850)       J.K. SIVAN

முகும்தா, முக்தி னிலயா, மூலவிக்ரஹ ரூபிணீ |
பாவஜ்ஞா, பவரோகக்னீ பவசக்ர ப்ரவர்தினீ || 157 ||

சம்தஸ்ஸாரா, ஶாஸ்த்ரஸாரா, மம்த்ரஸாரா, தலோதரீ |
உதாரகீர்தி, ருத்தாமவைபவா, வர்ணரூபிணீ || 158 ||

              லலிதா ஸஹஸ்ரநாமம் - (838-850)   அர்த்தம்

*838*  முகுந்தா,
    मुकुन्दा   பிரபஞ்சத்தில் அனைத்து ஜீவர்களுக்கு முக்தி அளிப்பவள் அம்பாள் ஸ்ரீ லலிதை.  மஹாவிஷ்ணுவிற்கும் அவளுக்கும் ஒரே பெயர் தான்.  முக்தி கொடுப்பது யாராயிருந்தாலும் முகுந்தா  தான்.


முக்தி மூன்று வகை.  க்ரம முக்தி.  அதாவது ஒரு கிரமமாக  தொடர்ந்து முன்னேறி  அடைவது ஒருவித முக்தி. விதேக முக்தி என்பது  உடலை, தேகத்தை,  துறந்து,  கர்மபந்தங்களிலிருந்து விடுபட்டு, சுதந்திரமாக  என்றும் முக்தி நிலையில் இருப்பது,   மூன்றாவது முக்திக்கு சாத்ய முக்தி என்று பெயர்.  நினைத்த உடனே பெறுவது. மிகப்பெரிய ஞானிகளுக்கு அது எளிது.   எல்லா துன்பங்களிலிருந்ர்ஹும் விடுதலை பெறுவது தான் முக்தி. பிரம்மத்தில் திளைப்பது. 

*839*  முக்திநிலயா,  मुक्ति-निलया    முக்தி என்றால் அது அம்பாளையே குறிக்கும். முக்தி என்பதே அம்பாள் தான்.  அவளிடம் இருப்பதை ஒரு தாய் போல் பக்தர்களோடு பரிமாறிக் கொள்கி றாள்.   முக்தி என்றால் என்ன?  எந்த நிலையில்  ஆத்மா புத்தியிலிருந்து தனித்து விடுபடுகிறதோ அந்த நிலை.  உலகிலிருந்து எதிலும் இணையாமல், ப்ரக்ரிதியிலிருந்து   தனித்து ஆத்மா இயங்குவது தான். மனது, விஷயங்கள் அனைத்திலிருந்தும் ஆத்மா தன்னை பிரித்துக்கொண்டு இருப்பது. 

*840*  மூலவிக்ரஹ ரூபிணீ | मूल-विग्रह-रूपिणी     எல்லா சக்திகளுக்கும்  ஆதார சக்தி லலிதாம்பிகை. விகிரஹம் என்றால் ரூபம். உருவம்.  மூலம்  என்றால்  ஆதாரம்.  அம்பாள்  ஸ்ரீமாதா. அவள் தான் முழு முதல் ஆரம்பத்தில் இருந்தவள்.  அவளை ப்ரம்மம் எனலாம்.  அவரிலிருந்து தோன்றியவர்கள் ப்ரம்மா  விஷ்ணு ருத்ரன்.  மஹா திரிபுரசுந்தரி. 

 *841*  பாவஜ்ஞா, भावज्ञा   பாவம் (bhaavam ) என்பதற்கு எத்தனையோ அர்த்தங்கள் உண்டு.  ஒன்றாக ஆகிவிடுவது,  மாறுவது, தொடர்ந்து அதே நிலையில் இருப்பது, குணம், முடிவாக நிலைப்பது, ஞானி, பிரபஞ்சன், இதை உணர்வான். 

*842*  பவரோகக்னீ  भव-रोगघ्नी -   பவம் ( bha) இங்கு  சம்சாரம் எனப்படும் உலக வாழ்க்கையை குறிக்கும். நோய் நொடி, வியாதி, நரை, திரை  துக்கம் அனைத்தும் தருவது.  அம்பாள் இதிலிருந்து விடுவிக்கிறாள்.  பவா  என்றால் சிவனையும் குறிக்கும். சக்தி சிவனும் ரெண்டும் ஒன்று தானே.

*843*  பவசக்ர ப்ரவர்தினீ भव-चक्र-प्रवर्तिनी   சம்சாரத்தை ஒரு சக்ரமாக உருவாக்கப்படுத்திக் கொள்வோம். அதை சுழற்றுவது அம்பாள் ஸ்ரீ லலிதை.  வாழ்க்கை சக்ரம் பிறப்பு இறப்பு ஆகியவற்றில் உழல்வது. சுழல்வது.  ஆரம்பமே முடிவு. முடிவே ஆரம்பம். 

*844*  சந்தஸ்ஸாரா   छन्दः सारा (844)   சந்தஸ் என்பது ஒரு ஸ்வரத்தோடு நீட்டி குறுக்கி காலப்ரமாணத்தில் சீராக உச்சரிப்பது.   மீட்டர் என்பது.  முண்டக உபநிஷத்  (I.i.5) ''சந்தஸ் என்பது  அபர ஞானம். ஆத்ம ஞானம்  பர வித்யை  என்கிறது.  ஸாரம்  என்றால் சாறு, பிழிந்தெடுத்தது.  ஒரு வஸ்த்துவில், விஷயத்தில் முக்யமானதை சாறு எஸ்ஸென்ஸ் essence  என்கிறோம். 

சந்தஸ்  அக்ஷரங்களால் தொடுக்கப்பட்டது.  வேதங்களை உச்சரிக்கும் சப்தம்.  உபநிஷதங்கள் சாரம் அம்பாள் என்கிறது இந்த நாமம்.

சந்தஸ் கலீல் முக்கியமானது காயத்ரி சந்தஸ்.    வரிவஸ்யா  ரஹஸ்யம்  (I. 6, 7) :  ''அம்பாளை  14 வித்யைகள் மூலம் அறியலாம் .அதிலும்  வேதங்கள்,  அவற்றில் காயத்ரி தான் பிரதானம்.  ரெண்டு விதமாக அவள் தோன்றுவாள்.  வேதங்கள் மூலம் அறியும் ஸ்ரீ வித்யா,  மற்றொன்று மனோபாவத்தில் புரிவது'' 

*845*  , ஶாஸ்த்ரஸாரா,  शास्त्र-सारा       சகல சாஸ்திரங்களின் சாரம்  அம்பாள் ஒருவளே . ப்ரம்ம சூத்ரம் அதனால் தான் அவளை (I.i.3) ஸாஸ்த்ர யோனித்வத்  என்கிறது.  ப்ரஹ்ம ஸ்வரூபம்.  வேத சாஸ்திரங்களில் உற்பத்தி ஸ்தானம்.  சர்வஞான ஆதாரம்.

*846*  மந்த்ரஸாரா, मन्त्र-सारा  -  எல்லா  மந்திரங்களையும் பிடித்து சாறு  பிழிந்தால் கிடைப்பது தான் அம்பாள்.பீஜங்களின்  சேர்க்கை தான் மந்திரம் என்பது.  அம்பாள் அதனால் தான்  ஸப்த  (sabdha . ஏழு என்னும்  சப்த அல்ல)  ப்ரம்மம்.  

*847*  தலோதரீ |   तलोदरी     மெல்லிடையாள் .  இல்லாதது போல் தோன்றும் இடையுடையவள்.  அதல லோகம் எட்டாவது உலகம்.

*848*   உதாரகீர்தி,   उदार-कीर्तिः    அவளுடைய  பிரதாபமும், தயை நிறைந்த கருணை உள்ள   கீர்த்தியும் எங்கும் நிறைந்தவை.   பக்தர்களுக்கு எல்லையில்லா அன்போடு வாரி வழங்குபவள்.  அவர்களுக்கு பெருமை தருபவள்.   மௌனத்தில் மோக்ஷ மார்க்கம் காட்டுபவள் . ப்ரம்மச்சர்யத்தில் கட்டுக்கடங்காத சக்தி  தருபவள். 

*849*  உருத்தாமவைபவா,  उद्धाम-वैभवा (849)   அம்பாளின் பெருமை மஹோன்னதம்  வார்த்தைகளுக்  கப்பாற் பட்டது. தாம: என்றால் கயிறு. பொருள்களை கட்டுவது. அம்பாள் எல்லாவற்றையும் தனது கட்டுக்குள் கொண்டாலும் அவள் எல்லையற்றவள். 

 *850*   வர்ணரூபிணீ    वर्ण-रूपिणी    அக்ஷரங்கள், எழுத்துக்களின் கூட்டு அமைப்பு தான் அம்பாள்.  அறுபத்து நான்கு எழுத்துக்கள், அக்ஷரங்கள் கொண்டு தான் வேதங்கள் படைக்கப்பட்டவை.  அந்த அறுபத்து நான்கும் அம்பாளின் வடிவங்களே. 
 


 சக்தி  பீடம்   

                                                              
                      பித்தாபுரம் புரூஹுதிகா தேவி 
                           
நான் கப்பல் நிர்வாக தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது விதி என்னை எங்கெங்கெல்லாமோ இட்டு சென்றது.  ஆந்திராவில்  காக்கிநாடா துறைமுகம் அடிக்கடி செல்ல வேண்டிய  சந்தர்ப்பத்தில்  தெலுங்கு அதிகம் தெரியாமல், அவர்கள் பேசும் ஆங்கில தெலுங்கில்  விஷயம் சொல்லி புரிந்துகொண்டு காலம் தள்ளும்போது ஒய்வு நேரத்தில் மனம்  ஆலயங்களை தேடியது. அப்படி சென்றது தான் காகிநாடா  அருகே  பித்தாபுரம்  புரூஹுதிகா தேவி ஆலயம்.  20  கி.மீ.தூரம்.   51 சக்தி பீடங்களில் ஒன்று.  சதியின்  உடலிலிருந்து இடது கை  பூமியில் விழுந்த இடம் என்கிறார்கள்.  51 சக்தி பீடங்களில் 18 ரொம்ப மகத்தானது. இந்த அஷ்டதச சக்தி பீடங்களில் பித்தா புறம் புரூ ஹு திகா தேவி ஆலயம் ஒன்று.  இந்த ஆலயத்தில் சிவன் பெயர்  குக்குடேஸ்வர சுவாமி. அம்பாளுக்கு ராஜராஜேஸ்வரி தேவி என்றும் பெயர்.  தனி சந்நிதி.  சக்தி தேவி வடக்கு பார்த்து நிற்கிறாள். கருப்பு  க்ரானைட்கல்லில் செதுக்கிய சிலா ரூபம்.  4  அடி  உயரம். நிற்கிறாள்.   கருப்பு நிறத்துக்கு கண்ணை பறிக்கும் தங்க ஆபரணங்கள், ஒளிரும் வண்ண பட்டு ஆடைகள்.

பித்தாபுரம் மிகப் பழைமையான  ஊர்.  புராதன ஆலயம்.  அம்பாள் பெயரில் புரூஹு திகா புரம்  நாளடைவில் தேய்ந்து சுருங்கி பித்தாபுரம்.  தெலுங்கர்கள்  ஆனாலும்  சுந்தரரை ஞாபகம் வைத்துக்கொண்டு  பித்தா என்று சிவனை அழைத்தார்களோ? அவன் இருக்கும் புரம். இந்த தேய்மானம் ஒப்புக்கொள்ளும்படி இருக்கிறதே.  சிவனை குக்குடலிங்கம் என்றும் அழைக்கிறார்கள். காயா சூரன் என்றவன் சிவ பக்தன். தனது மார்பை பிளந்து யாகத்திற்கு அளித்து மோக்ஷம் பெற்று  ஆலயம் அருகே ஓடும் நதிக்கும் காயாசுரன்  பாதங்களின் பெயரால் பாதகாயா  என பெயர் பெற்றது.  வியாசர், ஆதி சங்கரர் ஆகியோர்  விஜயம் செய்து தரிசித்த புராதன ஆலயம். 

தேவிக்கு  சதுர்புஜங்கள்.  ஒரு கையில் ஒரு பைநிறைய  பீஜங்கள், விதைகள், கொட்டைகள்.  ஒன்றில்  பரசு, (கோடாலி.), ஒன்றில்  தாமரை, கமலம், அம்ருத பாத்திரம். 

ரெண்டு வித பக்தர்கள் வருவது உண்டு. ஒரு சாரார்  அம்பாளை புரூஹுதிகா லக்ஷ்மியாக கமலம் மது பாத்திரத்தோடு தோன்றும் ஹஸ்தங்களை வழிபடுவார்கள்.  மற்றொரு  சாரார் ஸ்மார்த்தர்கள், அவர்களுக்கு அம்பாள் புரூஹுதிகாம்பா . பரசு, பீஜ ஹஸ்தங்கள்  வாமாசார  சம்பிரதாய வழிபாடு. புராதனமான புரூஹுதிகா அம்பாள் சிலை ஆலயத்துக்கு அடியில் புதைக்கப்பட்டிருக்கிறது என்று நம்புகிறார்கள்.

அம்பாள்  இந்திரனால் உபாசிக்க






ப்பட்டவள்.   வடக்கு நோக்கி நிற்பவள்.
 தத்தாத்ரேயரின்  அம்சமான  ஜகதகுரு ஸ்ரீபாத வல்லபர் பித்தாபுரத்தில் ஜனித்தவர். புறூஹுதிகா அம்பாளை வழிபட்டவர்.
த்வஜ ஸ்தம்பம் அருகே   ஏக சிலா நந்தி -  ஒரே கல்லில் அழகாக வடிக்கப்பட்ட  நந்தியின் உருவம்.  லேபக்ஷியில் இருக்கும்  பசவேஸ்வரர்  நந்திக்கு பிறகு பெரிய நந்தி இது தான்.  
பித்தாபுரத்தை   திரி கயா க்ஷேத்ரங்களில் ஒன்று என்பார்கள்.   குக்குடேஸ்வரர் ஸ்வயம்பு. ஸ்படிகலிங்கம்.வெள்ளை  சலவைக்கல் மாதிரி. ரெண்டடி  உயர லிங்கம்.  அசப்பில்  சேவல் மாதிரி என்கிறார்கள். அப்படியா?  நான் சென்றபோது கவனிக்கவில்லையே.  மீண்டும் எப்போது போவேனோ?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...