Tuesday, February 18, 2020

KARGIL HERO



எல்லை காப்போருக்கு  நமஸ்காரம்
J K SIVAN
கார்கிலில்  பனிமலையில்  சூடாக  என்ன கிடைக்கும்?.  துப்பாக்கி சூடு தான். மும்முரமாக  பாகிஸ்தானிய தாக்குதலை இரவும் பகலும் கண் துஞ்சாமல் சமாளித்து முறியடித்துக் கொண்டிருந்த நேரம். கண் துஞ்சினால் ஒரே தூக்கம் தான். 

குப்புசாமி பட்டாளத்தில் சேர்ந்தவன். ஒண்டிக்
கட்டை.  பதினைந்து இருபது வருஷம்  ஊர்  திரும்பவில்லை.  ஒருநாள் வீர மரணம் அடைந்தான். கண் மூடும் முன்னே  அம்மா கனகா, அப்பா  பாச்சா எனும் பார்த்தசாரதி ஒரு கணம் தோன்றினார்கள்.  '' நீங்கள் நல்லா இருங்கள்.  அடுத்த ஜென்மம் இருந்தால்  உங்களுக்கே பிள்ளையா பொறக் கிறேன்''  முடியாமல்   கையை  ரத்த வெள்ளத்திலி ருந்து  தூக்கி   மானசீகமாக வணங்கினான்.  அவன் வணங்கும் கிருஷ்ணன் அவனை புன்னகையோடு வரவேற்றான்.


எதிரே  நிற்பது கிருஷ்ணன் என தெரிந்தது.    குப்பு சாமி  கையில் துப்பாக்கி, ராணுவ உடை, கவசங்க ளோடு , முறுக்கிய மீசையுடன் பளபளவென்று  பாலிஷ் போட்ட  ஷூக்கள். மடிப்பு கலையாத உடைகளுடன்.   முகத்திலும்  ஒளி.    அவன் வாங்கிய  பதக்கங்கள் மார்பில் சட்டையில் பளபளவென்று மினுமினுத்தது. விறைப்பாக  ராணுவ மரியாதையோடு நின்றான் குப்புசாமி.

''வா  என்  வீர சிப்பாயே   வா.   வாயேன் ஒரு அடி  முன்னாலே   ஏன்  அங்கேயே  நிற்கிறாய்?'' 

 வந்தான்

.''உன்னை நான் எப்படி வரவேற்கட்டும்  சொல்.?'

'பேசாமலிருந்தான்

.''ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொரு  கன்னம்  நீ  காட்டுபவனா?'''

'அப்படி எல்லாம் முடியாது. நாங்கள்  துப்பாக்கி  எப்போதும் தயாராக வைத்திருப்பவர்கள்.  சாதுவாக கருணா மூர்த்தியாக உங்களைப்போல் எங்களால் இருக்க முடியாது.  அப்படிப்   பழக்க வில்லை எங்களை ஒரு  அடி  எவனாவது அடித்தால் பத்து  அடி  திரும்ப  கொடுப்போம். அவ்வளவு தாங்க அவன் உயிரோடு இருந்தால் ''. '

''என் கோவிலுக்கு போவாயா?''

சிரித்துக்கொண்டே சொன்னான் குப்புசாமி.  '
' சாமி,  விடுமுறை,  ஞாயிறு எல்லாம்  எங்களுக்கு கிடையாது.  24x 7x 365   உயிரை காக்க, பறிக்க  வேலை.    கடினமாக பேசுவேன்,  ஈவு  இரக்கமற்று நடப்பேன்.  எங்கள் உலகம் ஆபத்தானது.

''ஓ   அப்புறம் என்ன சொல் ?'''

'ஒருவரிடமும் ஒரு பைசா பெற்றதில்லை.  எனக்கு  ஓவர் டைம்  கொடுத்து  கட்டுபடியாகாது. எப்போ துமே டூட்டி தான்.    ஒரு  நாளும்  விக்கி அழவில்லை, முனகியதில்லை.    எப்போதும்  உஷார் நிலை  பிராண பயம். பாதுகாப்பு.  உன்னை  நினைப்பேன். எப்போதும் என்று சொன்னால் அது பச்சை பொய் . முடிந்தபோது தான். மனமார அப்போது உன்னை  நினைப்பேன். அப்போது என்னையறியாமல் அழுகை வரும். எங்கம்மா போல் ஒரு பெண்பிள்ளை போல் அழுவேன்.  எதற்கு அழுகை வருகிறது என்று தெரியாது.  என்னை மன்னித்துவிடு''   என்றான் குப்புசாமி.

குப்புஸ்வாமி  பேசிவிட்டு சுற்று முற்றும் பார்த்தான்.  அது அழகான, ஆனந்தமான இடம் இங்கே  ஸ்வர்கம் என்று எழுதி இருக்கிறதே.   இங்கே  எனக்கு என்ன வேலை? நான் இதில் இருப்பவர்கள் போல் ஏதாவது நல்ல காரியம், புண்யம்   பண்ணியவனா?  யாருக் காவது பயம் என்றால்  நான் காவல் புரிவேன்.   என் உயிரை பணயம் வைத்து பாதுகாப்பேன்.  என் தேச மக்களுக்கு அதை தான் செய்தேன் . அவர்கள் என்னை நினைத்தார்களோ, நன்றி சொன்னார்களா என்றெல்லாம் எண்ணக்கூட  எனக்கு நேரம் இருந்ததில்லை.   அது தான் எனக்கு தெரிந்தது''

''இது உன்  இடம் ''

''எனக்கு ஏதாவது ஒரு இடம் இங்கே    கொடுக்க விரும்பினால், கிருஷ்ணா, அது ரொம்ப சௌகரி யமான, வசதிகள் நிறைந்ததாக இருக்க  வேண்டாம். அதெல்லாம் எனக்கு பழக்கமில்லை. எதிர்பார்க் கவுமில்லை.  நீ  இங்கே ஒரு மூலையில் இடம் எனக்கு   கொடுக்க  வில்லையென்றால்  கூட பரவாயில்லை. எனக்கு எந்த வருத்தமு மில்லை. எனக்கு அது  தகுதியானது  அல்ல  என்று புரிந்து கொண்டு பேசாமலிருப்பேன்.''

கிருஷ்ணன்  வாய் விட்டு ''ஹா ஹா'' என்று சிரித்தான். 

குப்புசாமி கிருஷ்ணனைப்  பார்த்தான்.  அருகில் அவன் சிம்மாசனம். நிறைய  ரிஷிகள், முனிவர்கள் யோகிகள், ஞானிகள்  சூழ்ந்திருந்தார்கள். கிருஷ்ணன் என்ன சொல்லப்போகிறேன் என்று அவர்கள் ஆவலாக கிருஷ்ணனையே  பார்த்துக் கொண்டிருந்தார்கள். குப்புஸ்வாமி மிலிட்டரி சல்யூட்  அடித்து விறைப்பாக நின்று கொண்டி ருந்தான். 

''வா,  குப்புசாமி, வா என்னருகில் வா.  இந்த  ஸ்வர்கலோகம்  உன்னுடையது.  ஏன் தெரியுமா?  நீ உன் சுமைகளை நான் உபதேசித்தபடி பலனெதிர் பார்க்காமல் சுமந்தவன்.  இந்த ஸ்வர்கம் முழுதும் உன்னிஷ்டப்படி சுற்று. எங்கு வேண்டுமானாலும் சுகமாக இரு. எல்லாம் உனக்காக இங்கே காத்திருக் கிறது.  உனக்கு நரகம் கிடையாது. அதில் தான் இத்தனை காலம் நீ உழைத்து அனுபவித்தவ னாயிற்றே.  அதை காட்டிலுமா இங்கே  கடினமான  தண்டனை கொடுப்பார்கள்.''

 கிருஷ்ணன் குப்புசாமியை அணைத்து தன்னோடு அழைத்துக் கொண்டு போனான். 

பனிமலை உச்சிகளில்,  இருளில், கடுங்குளிர், உல்லாசமாக  டிவி  பட்டிமன்றம் அரசியல் கெட்டவார்த்தைகள் கேட்காமல்,  குடும்ப அன்பு இன்றி, எந்நேரமும் இரவும் பகலும் எதிர்ப்பை எதிரிகளையே  மரணத்தின்  எல்லையில்   சந்தித்து  நீயா நானா  உயிரோடு யார்  என்று ஒவ்வொரு வினாடியும்  வாழ்ந்து கொண்டிருக்கும் நமக் காக  நமது  நாட்டின் எல்லை காக்கும் கண் மணிகளை   ஒரு விநாடியாவது  தினமும் நினைப்போம், அவர்கள் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியத்தோடு  வீடு திரும்ப பிரார்த்திப்போம்.  அது நமது செஞ்சோற்று கடன் என்று தோன்றுகிறது. உங்களுக்குமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...