Tuesday, May 31, 2022

 ஜீவாத்மா....  -  நங்கநல்லூர்   J K  SIVAN 



சுப்பிரமணி ஆபிசில் கோள் சொல்பவன்.  அவனோடு  யாரும் சரியாக பேசமாட்டோம்.  அவன் எதிரில் ஆபிஸ் பற்றி, உயர் அதிகாரிகள் பற்றி வாயை திறக்க மாட்டோம்.  கேட்டுக்கொண்டே  நம்மோடு  சேர்ந்து சாப்பிட்டுவிட்டு  உடனே  உள்ளே போய் வத்தி வைத்துவிடுவான்.  ES   என்று தான் அவனை குறிப்பிடுவோம். ( எட்டப்பன் சுப்பிரமணி)
தமிழ் பேப்பரில் பைன் ஆப்பிள்  சுற்றி  இருந்தது..  அந்த பேப்பரை அகற்றும்போது ஒரு போட்டோ கண்ணில் பட்டது..  ஒரு மதத்துக்கு முந்திய பேப்பர்.   சுப்ரமணியன், 77 வயது. மாரடைப்பால் காலமானதாக  அவன் பிள்ளையோ பெண்ணோ ஒரு  பழைய போட்டோ போட்டு  அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள்.  போட்டோவில் அவன் முகம் அடையாளம் நன்றாக தெரிந்தது.  பழைய  மின்சார இலாக்கா  தலைமை கணக்கர்  என்று உத்யோகம்.  ES  தான் சந்தேகமே இல்லை.  மூக்கின்  வலதுபக்கம் ஒரு ஆழமான வடு அவனை அடையாளம் காட்டியது.

மரணம்  எவ்வளவு  சோகமானது என்று ஒரு கணம் சிந்தனை. ஆன்மா  உடம்புக்  கூட்டிலிருந்து  பிரிகிறது.. அப்புறம் அதற்கு புது உடம்பு. புது வாழ்வு.  மரணம் குணத்தை மாற்றுவதில்லை.  இனியாவது புது உடம்பில்,  ஒரு நல்லவனாக வாழ  ஒரு வழி காட்டி.   வாழ்வின் எல்லை மரணம் இல்லை.  ரயில் மாறும்  ஒரு ட்ரான்சிட் பாயிண்ட். உண்மையில் மரணம் ஒரு தேவதை, பழைய  வீட்டிலிருந்து  அழைத்து போய் புது வீட்டின் கதவை திறந்து உள்ளே அனுப்பும் சாவி.

ஆன்மா ஒரு வட்டம். அதன் சுற்றளவு எங்கேயென அறியமுடியாது.  அதன் நடு பாகம்  உடம்பு. ஆகவே மரணம் என்பது உடலுக்கு உடல் தாவும் மாறுதல். பரமாத்மனுக்கு முடிவே இல்லை. அழிவற்றது. காரணமில்லாதது.  தனியான இடம் கிடையாது. உடம்பு, மனம், உலகம் அனைத்தும்  இயங்க உதவும் ஆதார சக்தி.   ஓசை, உணர்வு, உருவம் பஞ்சகோசத்துக்கு அப்பாற்பட்ட இத்தகைய  ஆன்மாவை புரிந்து கொண்டவன் மரணம் அணுகாதவன்.

நாம் எல்லாம்  கடல் மணல் பரப்பில் வீடு கட்டி விளையாடுபவர்கள். ஒவ்வொரு வீடாக கட்டி புகுந்து வாழ்ந்து அடுத்த வீட்டிலும் இவ்வாறே  ....சுப்ரமணியும் அப்படித்தான் எங்கேயோ? இப்போது அவனால் எத்தனை பேருக்கு தொந்தரவோ?
விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்க முடியாத புதிர் இது. 
ஆன்மா  உடலோடு இருக்கும்போது  தான்  நாம்  ஜீவன்கள். உள்ளே இருக்கும்  பிராண சக்தி அகன்றால் பிரேதம்.  ஜீவனிலிருந்து பிரிந்த  பல சுப்ரமணியன்களின்  ப்ராணன்கள்  வெளியே அண்டத்தில்  எங்கும் கண்ணுக்கு தெரியாமல்  பரவி உள்ளன. அவற்றின் பழைய  ஜீவானுபவம் தான் வாசனை எனப்படுவது.  புது உடம்புக்குள்ளும் அது செல்கிறது. இன்னொரு சுப்ரமணியன் உருவாகிறான்.

GEETHA GOVINDHAM


 கீத கோவிந்தம் -  நங்கநல்லூர்  J  K  SIVAN ஜெயதேவர் 


''ஜெயதேவரா?  யார் அது?'' 


ஆதியில் பிரபஞ்சம், தோன்றி, பூமி உருவாகி அதில் மனிதர்களும்   தோன்றி  பகவான் பல அவதாரங்கள் எடுத்து அதில்  கிருஷ்ணாவதாரம் மறக்கவே முடியாமல் போய், கலியுகம் பிறக்க, அதில் நமக்கு  பக்தியை பெருக்க, சுகபிரம்ம ரிஷியை கபீர் தாசராகவும், உத்தவ ரிஷியை நாமதேவராகவும், வால்மீகியை துளசிதாசராகவும், வியாசரை ஜெயதேவராகவும், சிவபெருமானை ஜூனகாத்தில் நார்சி மேத்தவாவும், தானே ஞானதேவராகவும்  அந்த நாராயணன்  அனுப்பினான் என்று  ஸ்ரீமத் பக்த விஜயம் சொல்கிறது.

எனக்கு ஆறு ஏழு வயது.  என் தாய் ஜம்பாவதி அம்மாள் சமையல் கட்டில் ஒரு பழைய  புத்தகம் வைத்திருப்பாள் .அதன் மேல் நிறைய சந்தன குங்குமம். பழுப்பான நிறத்தில் அதன் பக்கங்கள் கொஞ்சம் மடக்கினால் அப்பளம் மாதிரி நொறுங்கும் கிழ புஸ்தகம்.  எங்கள் கைக்கெட்டாமல் அலமாரியில்  உயரே மறைத்து வைத்திருப்பாள்.   அலமாரி மேல் ஏறி, அவள் இல்லாதபோது, புளி ஜாடி பின்னாலிருந்து  எடுத்து  அந்த புத்தகத்தின் பக்கங்களை மடக்கி அது 'படக்  படக்''   என்று ஓமப்பொடி  மாதிரி   ஒடிவதை பார்ப்பதில்   எனக்கு ஒரு சந்தோஷம். (சிறுவயதில் தப்பு செயது விட்டேன் அம்மா. என்னை மன்னித்து விடு) நிறைய பேர் வீடுகளில் இது போன்ற பழம் புத்தகங்கள் இன்னும் இருக்கிறது. சிலர்  அவற்றில் சிலவற்றை என்னிடம் தள்ளி விடுகிறார்கள்.  அவை இனி கிடைக்கதவை.  அவற்றைன் விஷயங்களை ஜாக்கிரதையாக போற்றி பாதுகாக்க வேண்டும்.
ஜெயதேவர் ஒரு ஒரிஸ்ஸா தேச பிராமணர். கல்வி கேள்விகளில் சிறந்து கிருஷ்ணனின் மீது அலாதி ப்ரியம் கொண்டு ராதையும் கிருஷ்ணனும் ஒருவர் மேல் மற்றொருவர் கொண்ட அதி உன்னத பிரேமையை அருமையான மனம் கவரும் ஸ்லோகங்களாக எழுதினார். அதுவே  ''கீத கோவிந்தம்''.ஒரு காரண்டீ விஷயம் சொல்கிறேன். அதைப் படித்து அனுபவித்தவர்கள் பிருந்தாவனத்தில் கண்ணன் இருந்த காலத்துக்கே கொண்டு  காசு கொடுக்காமல் பிரயாணம் செய்யலாம்.  அந்த ஸ்லோகங்கல் காந்த சக்தி கொண்டவை.

பூரியை  அப்போது சாத்விக்  என்கிற ராஜா  ஆண்டுவந்தான்.  பூரி ஜகன்னாதர் மீது அபார பக்தி.. அவன் ஜெயதேவர் எழுதிய கீத கோவிந்தத்தை படித்து விட்டு தானும் ஒரு புத்தகம் அதேபோல் எழுதினால் என்ன என்று யோசித்து கஷ்டப்பட்டு ஒரு புத்தகம் எழுதினான். அதற்கு நிறைய பிரதிகள் எடுத்தான். எல்லோரும் இதை படியுங்கள் என்று கொடுத்தான். ராஜாவின் புத்தகமாச்சே. படிக்காவிட்டால் தலையை வாங்கிவிடுவானே. எனவே தலையை காப்பாற்றிக்கொள்ள படிக்க  வேண்டும். ஊரில் இருந்த அனைத்து பக்திமான்களும் விசனம் அடைந்தார்கள். இது எப்படி கீத கோவிந்தத்துக்கு சமமாகும்? கழுதையும் குதிரையும் ஒன்றாகுமா?  வெளியே சொல்ல முடியுமா. தலை தப்பாதே.

ராஜாவோ விடாமல் தனது புத்தகத்திற்கு முதல் மரியாதையும் மதிப்பும் தேடினான்.   சாதாரண ஆள் நான் புத்தகம் எழுதி அதனால் உண்டாகும் தொந்தரவே படிக்கும் உங்களுக்கு பொறுக்க முடியவில்லையே. அதிகாரத்தையும் கூர்மையான வாளையும் கையில் வைத்துக்கொண்டு ராஜா புத்தகம் எழுதி, எல்லோரும் படியுங்கள் என்றால் .!  தாங்கமுடியாமல் போய் அனைத்து பண்டிதர்களும் பக்தர்களும் ஒருநாள் ராஜாவின் சபையில் நுழைந்தனர்.

'' ராஜா.  நீங்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் ஜெயதேவர் எழுதிய கீத கோவிந்தத்துடன் உங்கள் புத்தகம் போட்டி போட முடியாது..''என்று மெதுவாக சொன்னார்கள்.  அவர்களுடைய நல்ல நேரம். ராஜாவுக்கு கொஞ்சம் நல்ல புத்தி இருந்த வேளை அது.

"ஏன் நானும் தானே அந்த ஜகந்நாதனை பணிந்து புகழ்ந்து எழுதியுள்ளேன் எந்த விதத்தில் என் புத்தகம் கீத கோவிந்தத் துக்கு சமம் ஆகாது?" என்றான் சாத்விக். எல்லோரும் நிறைய பேசி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். ''இந்த விஷயத்தில் ஜகன்னாதனே முடிவெடுக்கட்டும்''

"ஜெகந்நாதா, நீயே முடிவு செய். ஜெயதேவர், ராஜா, ஆகிய ரெண்டு பேர் எழுதிய புத்தகங்களையும் உன் சந்நிதியில் இன்று இரவு வைத்து கர்ப்ப கிரகம் பூட்டி விடுகிறோம். நாளை காலையில் எந்த புத்தகம் உயர்ந்ததோ அது உள்ளே இருக்கும். மற்றதை ஜகந்நாதா,  நீயே கர்பக்கிரஹத்துக்கு வெளியே எறிந்து விடு" என்று வேண்டினார்கள். 
இரவு அவ்வாறே ஜெயதேவரின் கீதகோவிந்தமும் ராஜா எழுதிய புத்தகமும் ஜெகந்நாதன்  முன் வைக்கப்பட்டு,பூஜை எல்லாம் முடிந்து கர்பகிரகத்தை பூட்டினார்கள். 
மறுநாள் காலையில் ராஜா உட்பட அனைவரும் ஆவலாக கோவிலில் நின்றனர். கர்பக்ரஹத்தின் வாசலுக்கு வெளியே ராஜாவின் புத்தகம் கிடந்தது . பூட்டைத்  திறந்ததும் ஜகந்நாதன் கையில் கீதகோவிந்தம் இருந்தது. ராஜா சாத்விக் ஜெகந்நாதனிடம் முறையிட்டான்.

"ஜெகன்னாதா, நானும் உன் பக்தன். நானும் உன்னைத் தானே பாடினேன். எப்போது என் பக்தியை நீ ஏற்கவில்லை என்று தெரிந்துவிட்டதோ, நான் இனி உயிர் வாழ்ந்து பயனில்லை'' என்று தனது உடைவாளை உருவினான்.

''சாத்விக் , என்ன அவசரம் உனக்கு? நிதானமாக கேள். உன் பாடலில் எனக்கு பிடித்ததை ( 24 ஸ்லோகங்க ளை ) நான் ஏற்கனவே ஜெயதேவரின் கீத கோவிந்தத்தில் சேர்த்து விட்டேனே" என்று சிரித்தான் கிருஷ்ணன் . ராஜா மகிழ்ந்தான். ஜெயதேவரின் பெருமையை உணர்ந்து அடி பணிந்தான் அவருடைய சிஷ்யனானான்
பூரியில்  வசித்த  ஒரு பிராமணனுக்கு பத்மாவதி என்ற அழகிய பெண் இருந்தாள். பிராமணர்  ஜெகநாத பக்தர்.  தன் பெண் ஜெகந்நாதனையே  அடைய  வேண்டும் என்ற வெறி அவருக்கு.    எத்தனையோ பேர்  தந்த  ஜாதகங்களை  நிராகரித்தார் நிறைய பணம் கொடுக்கிறேன் என்று பெண் கேட்ட வர்களை  விரட்டினார்.
ஜெகந்நாதன்   ஒருநாள் அவர் கனவில் வந்து "ஓய், பிராமணரே இந்த கலியுகத்தில் எனக்கு விருப்பமான ஒருவருக்கு உமது பெண்ணை மணமுடியும்" என்று கட்டளையிட்டபோது  விழித்து கொண்டார். ஜெகந்நாதன் அடையாளம் சொன்ன  ஜெயதேவரைத்  தேடி கண்டுபிடித்தார்.பார்த்ததுமே ஒரு கணம்  ஜெகன்னாதானே  தனக்கு  முன் நிற்பதாக  தோன்றவே  யோசனை பண்ணாமல் ஜெயதேவருக்கு சம்பந்தம் பேசி பத்மாவதி ஜெயதேவர் மனைவியானாள்.

RAMAKRISHNA PARAMAHAMSA


 #அருட்புனல்  -  நங்கநல்லூர்  J K  SIVAN

ராமகிருஷ்ண  பரமஹம்ஸர் 


''அம்மா வேணும்''


வேதத்தை அனுசரித்து நடத்தும் வாழ்க்கை தான் வைதிகம்.  சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள்  தலைமுறை தலைமுறையாக  விடாமல் பின் பற்றிவரும் குடும்பம்.  இன்னும் சில  பிராமண குடும்பங்கள் இதுபோல் இருக்கின்றன.பூஜை நெறிமுறைகள் பழக்கமான  இப்படி ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்த ராமகிருஷ்ணருக்கு பூஜா க்ரமங்கள்  எல்லாமே அத்துபடி.

நாம ரூபமில்லாத இறைவன் இறைவியை நாமங்களோடு பல வித ரூபங்களோடு ஏன் தாயாக, தந்தையாக, குழந்தையாக,  வழிபடுவதும் நமது தர்மம். நம்மைப்போல்   பகவான், பகவதி விக்ரஹங்களை குளிப்பாட்டி, அலங்கரித்து, அமுதூட்டி, தாலாட்டி, பாடி,  தூங்க வைத்து, உபசரித்து, பேசி,  ஊஞ்சலிட்டு, ஊர்வலம் எடுத்துச் சென்று நம்மோடு தெய்வத்தை இணைத்துக் கொள்கிறோம். சில பேருக்கு கல்யாணம் கூட பண்ணி வைக்கிறோம்.  இது இன்றும்  கோவில்களில்  தொடர்கிறது.

இப்போது போல் காசே தான் கடவுளடா பூஜை இல்லை ராமகிருஷ்ணர் செய்தது. தன்னை மறந்து தெய்வத் தோடு ஐக்கியமான ஒன்றிய மனதோடு கூடிய உண்மை பூஜை. அதனால் தான் காளியும் அவர் முன் தோன்றினாள் , பேசினாள்.
அணைத்தாள். தாயானாள் .
எந்த தீயசக்தியும் தன்னையும் காளியையும் நெருங்காமல் தனது குண்டலினி சக்தி தீயை உருவாக்கி சுற்றிலும் வேலியாக அமைத்துக்  கொண்டு பூஜை செய்தவர் ராமகிருஷ்ணர்.

காளிக்கு பூஜை செய்வது எளிதல்ல. வரை  முறைகள், நேம நியமங்கள், ஆசாரங்கள் வேறு. உக்கிரமான தெய்வம். ராம் குமார் தம்பிக்கு இதை  நன்றாக  கற்றுத்தர ஒரு குருவை நியமித்தார்.  அந்த குரு  ராமகிருஷ்ணரின் காதில் முதல் வார்த்தையை உபதேசிக்கும்போதே ராமகிருஷ்ணர் உயர்ந்த உன்னத சமாதி நிலைக்கு தாவி விட்டார்.

எனக்கு காளி பூஜை விசேஷ நெறி முறைகள் தெரியாதே என்று சொல்லியும் மதுர பாபு ''ராமகிருஷ்ணா, உனது பக்தி, ஆசாரம் ஒன்றே போதும் .நீ தான் பூஜை செய்யவேண்டும்'' என்று நிர்பந்தித்தார்.
அடுத்த வருஷம் அண்ணா ராம் குமார் மறைந்து விட்டார். முழுப் பொறுப்பும் இனி ராமக்ரிஷ்ண ருக்கே அல்லவா?

''தாயே, நீயே என்னை உன் அர்ச்சகனாக்கிக்  கொண்டாயா? இதுவும் உன் விருப்பமா? இதுவும் ரொம்ப சரி, எனக்கு உன்னை விட்டால்  வேறு யாரைத் தெரியும்?''

பவதாரிணியை  நெருங்கி ,தொட்டு,  அலங்கரித்து, உபசரித்து, மந்திர உச்சாடனங்கள் செய்து மனம் எப்போதும் அவளிடமே லயித்து விட்டது ராம கிருஷ்ணருக்கு.  இந்த பரந்த உலகில் ரெண்டே பேர். ஒன்று ராமகிருஷ்ணர் இன்னொன்று பவதாரிணி. அப்புறம் ரெண்டு பேருமே  ஒன்றாகி விட்டார்கள்.
பூஜை இல்லாத நேரமும் அன்னையே மனதில் நிறைந்து இருந்தாள் அவளைப்  பற்றிய தியானமே எப்போதும்.

''அம்மா, உன்னை பார்க்க வேண்டுமே?'' என்று மனம் தேடியது. உலகம் அவரை  ஈர்க்கவில்லை. ஜன நடமாட்டமில்லா தனி இடம் நாடினார். வனத்தில் ஒரு இடம் தேர்ந்தெடுத்தார். முள்ளும் புதரும் மண்டி ஒரு காலத்தில் மயான பூமி. பேய் பிசாசு இருக்கும் என்று யாரும் பகலிலேயே கூட  போக அஞ்சும் இடம்.    இரவில் ராமகிருஷ்ணர் அங்கே நிம்மதியாக தியானத்தில் இருந்தார்.

 ''அம்மா வேணும்''  என்று குழந்தை அழுமே, அது  போல் அழுது அழுது கண்கள் சிவந்து தடித்து மறுநாள் காலையில் அறைக்கு திரும்புவார்..இது தொடர்ந்தது.

PATTINATHAR


 #பட்டினத்தார்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 


''இது தான் அம்மா  என்னால் தர முடிந்தது''

எனக்கு  தமிழில் ஆர்வமூட்டியவர்களில்   முதல் வரிசையில் ஒருவர்  பட்டினத்தார்.  அவர் பாடல்களில் மணிவாசகர் தெரிவார். திருவாசக மணம் வீசும்.  இதோ திருவாசகத்தில் சிவபுராணத்தில் மிக பிரபலமான எல்லோரும் அறிந்த ஒரு பாடல்: 
''புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்ல ஆ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்”

''புல், பூண்டு, புழு, மரம், பல் வேறு உருவங்கள், பறவை, பாம்பு கல், மனிதன், பேய், கணங்கள், அசுரன், முனிவர், தேவர், ஆஹா  இன்னும் என்ன பாக்கி?  சகல தாவர ஜங்கம  பிறவியும் எடுத்து  தேய்ந்து களைத்து, ,அலுத்து விட்டேன். எம்பெருமானே, சிவனே,  உன்னிரு  பொற்பாதங்கள் சரணடைந்தேன். எனக்கு முக்தி அருள்வாய்''  என்கிறார்  என்கிறார் மணிவாசகர்

இதோ  பட்டினத்தார்.  அதே  ரகத்தில் அற்புதமான ஒரு பாடல் தந்துள்ளார்:   
''புல்லாகிப் பூடாய்ப் புலந்தநாள் போதாதோ?
கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாதோ?
கீரியாய்க் கீடமாய்க் கெட்டநாள் போதாதோ?
நீரியாய் ஊர்வனவாய் நின்றநாள் போதாதோ? ''

 அர்த்தம் சொல்லவேண்டிய அவசியமே இல்லை அல்லவா?  ஐயா,அம்மா மார்களே, யாருக்காவது சிறுநீரகம், குடல், ஈரலில் கல் இருந்தால் அப்பல்லோ போய் கையிலிருப்பதை எல்லாம் சேர்த்து கல்லோடு நீங்கள் இழந்து விட்டு வரலாம். இட்லி தோசையில் கல் வாயில் அகப்பட்டால் துப்பலாம். ஆனால் மனதில் நெஞ்சில் கல் இருந்தால் ஒரே வைத்தியம் நோயாளிக்கு ஒரு பட்டினத்தார் பாடல் புஸ்தகம் வாங்கி கொடுத்து ஒருநாளைக்கு ஒரு பாடலாவது படித்து புரிந்து கொள்ள சொல்ல வேண்டும். ஒரே வாரம் போதும் என்று சொல்லலாம். ஏன் என்றால் அடுத்த வாரத்தில் இருந்து அவர்களே விடாமல் படிக்க ஆரம்பித்து விடுவார்களே.

ஆதி சங்கரரின் ''மாத்ரு பஞ்சகம்'' என்ற ஐந்து தாய்ப்பாச ஸ்லோகங்களை சொன்னேனே. அதே போல் ஒருநிகழ்ச்சி பட்டினத்தார் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறதே . தாயை இழந்த சோகம். தாய் இறந்து விட்டாள். மகனோ துறவி. அவன் தான் அவளுக்கு கொள்ளியிட்டு ஈமக்கடன் செய்யவேண்டும் என்பதால் அவர் வருகிறார். பார்க்கிறார் தாயின் உடலை. பொங்குகிறது தாய்ப்பாசம். அவள் செய்த தியாகம். அவளை தான் படுத்தியும் பாடு எல்லாம் நினைவுக்கு வருகிறது.

அப்போது தன்னை அறியாமல் சில பாடல்கள் அவர் நாவிலிருந்து புறப்படுகிறது. அவற்றில் சில தான் இவை.

பட்டினத்தாரின்  தாய் உடலை சிதையில் இட எவரும் விறகு கட்டை தரவில்லை. கண் எதிரே பச்சை வாழை மட்டைகள் சில தென்பட அதை எடுத்து வந்து அதன் மீது அன்னையின் உடலைக் கிடத்தி ஒரு பாடல் பாடி அக்னி மூட்டுகிறார். அக்னி எங்கிருந்து? அவர் அடிவயிற்றில் இருந்து பொங்கி எழுந்த சோகத்தில் தாபத்தில், வருத்தத்தில் தீயாக மூண்டு வாய் வழியாக பாடலாக மிதந்து பச்சை வாழை மட்டையை எரிக்கிறது.

“ஐயிரண்டு திங்களா யங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பிற் காண்பே னினி”

'அம்மா நீ தானே என்னை பத்துமாதம் கஷ்டப்பட்டு சுமந்து,உடல் வலி எல்லாம் பொறுமையோடு தாங்கி, என் குட்டிப்பயலே என்று என்னை கொஞ்சி, என்னை உன் தங்கக்கைகளில் ஏந்தி மார்பகத்தில் அணைத்து பாலூட்டினாய். இனி உன்னை மறுபடியும் எந்த ஜென்மத்தில் அம்மா காணப்போகிறேன்''

“அரிசியோ நானிடுவே னாத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருசியுள்ள
தேனே யமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே யென வழைத்த வாய்க்கு”

''எனக்கு சந்தா மாமா,   நிலா காட்டி, பாடி, ஆடி, பருப்பு சாதம் நெய் மணக்க ஊட்டினாயே, என் அமிர்தமே, தேனே, மானே, ராஜாப்பயலே, என்று ஆசை ஆசையாக நீயே இட்டுக்கட்டி என்னைப்பற்றி பாடுவாயே, அந்த உன் வாய்க்கு இதோ நான் வறட்டு அரிசி போடுகிறேன் அம்மா. நிலா அல்ல, கொளுத்தும் சூரியனை காட்டுகிறேன். நீ தான் கண்மூடி கிடக்கிறாயே எப்படி பார்ப்பாய்?.

“அள்ளியிடுவ தரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் - மெள்ள
முகமேன் முகம்வைத்து முத்தாடி யென்றன்
மகனே யெனவழைத்த வாய்க்கு”

அம்மா , எனக்கு  நன்றாக ஞாபகம் இருக்கிறது. என்னை அள்ளி முகத்தோடு முகம் வைத்து அணைத்து இறுக்கி கட்டிக்கொண்டு ''அடே முத்துக்குட்டி, செல்வமே, தங்கமே'' என்று கொஞ்சினாயே உன் வாய்க்கு இதோ நான் கை நிறைய அரிசியை இடுகிறேன். என்னை கொஞ்சிய உன் முகத்துக்கு தலையில் கொள்ளி வைக்கிறேன்.

அழுது கொண்டு நிற்கும் பட்டினத்தார் முன் சவம் எரிக்கும் வெட்டியான் நிற்கிறான்:''சாமி இந்தாங்க தீ வர்த்தி, கொளுத்துங்க உங்க அம்மாவை'' என்கிறான். நெருப்பு கையில் மட்டுமா அப்போது பட்டினத்தாருக்கு?. நெஞ்சிலும் அல்லவோ மூண்டுவிட்டது: பாடலாக வெடிக்கிறதே:

“முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாள் அளவும்
அந்திபக லாச்சிவனை யாதரித்துத் – தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
வெரியத் தழல்மூட்டு வேன்”

அம்மா  உனக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்று கோவில் கோவிலாக சுற்றினாய்.  நான் பிறந்தேன். முன்னூறு நாள் போல உள்ளே வளர்ந்தேன். உன் வயிறு உன்னை விட பெரிதாக இருக்க நானே காரணம். உன்னை இழந்து என் மனம் எரிகிறதே. நான் குடி இருந்த அந்த உன் வயிற்றுக்கு நான் பிரதியுபகாரமாக இப்போது நெருப்பை இடுறேனே.

“வட்டிலிலுந் தொட்டிலிலும் மார்மேலுந் தோன் மேலுங்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டுந் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்”

''புள்ளைக்கு நல்ல தொட்டில் வாங்கிட்டு வாங்க. மெத்துமெத்துன்னு இலவம்பஞ்சிலே படுக்கை வேண்டும்'' என்று அப்பாவை துளைத்து வாங்கி என்னை சுகமாக கிடத்தி, கொஞ்சி சுகப்படுத்திய அம்மா உனக்கு நான் எரியும் கட்டையில் எண்ணெய் ஊற்றி கொளுத்துகிறேனே''

“முன்னை யிட்ட தீ முப்புரத்திலே
பின்னை யிட்ட தீ தென் னிலங்கையில்
அன்னை யிட்ட தீ அடிவயிற்றிலே
யானு மிட்ட தீ மூள்க மூள்கவே”

அம்மா உனக்கு நான் இடுகிறேனே, இந்த தீ பற்றி உனக்கு தெரியாது அல்லவா? சொல்கிறேன் கேள். காது கேட்குமா உனக்கு இப்போது?

''முதலில் ஏதோ ஒரு யுகத்தில் திரிபுரத்தில் சிவன் நெற்றிக் கண் திறந்து அதை தீக்கிரையாக்கினானே அதே நெருப்பு, பின்னர் ஆஞ்சநேயனாக அவதரித்து ராவணேஸ்வரன் ஊரில் இலங்கையில் எங்கும் அக்னி யை பரப்பினானே அந்த நெருப்பு, இதோ அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அதே ஜ்வாலையுடன் நீ என் அடிவயிற்றில் மூட்டினாயே பாசத்தீ, சோகத்தீ, அதை நான் எடுத்து உன்னை எரிக்கிறேன். அதே வேகத்தோடு ஜ்வாலையோடு உஷ்ணத்தோடு நான் உனக்கு இடும் இந்த நெருப்பும் உன்னை எரித்து சாம்பலாக்கட்டும்''

“வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பாவியே னையகோ – மாகக்
குருவி பறவாமற் கோதாட்டி யென்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை”

ஏதோ பட்டினத்தார் சொல்வதற்காக காத்திருந்தால் போல் அவரிட்ட தீ அந்த பச்சை வாழைமட்டையோடு அவர் தாயை வெகு உக்கிரமாக எரித்து கபளீகரம் செயது அவள் சாம்பலானாள்.

''இதோ இந்த சாம்பல் குவியல் தான் என் அம்மாவா? என்னை வாரி அணைத்து ஒரு குருவி நிழல் கூட என் மீது படாமல் அணைத்த கையா, முகமா, உடலா, இந்த சாம்பல் குவியல்?  கண்ணீர் வழிய  பட்டினத்தார்  பாடுகிறார் கேளுங்கள்: .

“வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்ததமு
முன்னையே நோக்கி யுகந்துவரங் கிடந்துஎன்
றன்னையே யீன்றெடுத்த தாய்”

''சரி அம்மா நீ  இப்போது  ஒரு கைப்பிடி சாம்பலாகி விட்டாயா? சிவனே, உன்னிடம் என் அம்மா வந்துவிட்டாளா? இனி அவளுக்கு என் ஞாபகம் இருக்குமா? நான் பிறக்கவேண்டும் என்று உன்னையே இரவு பகலாக விரதமிருந்து என்னை பெற்றவளாயிற்றே அவள். உன் ஞாபகம் தான் இருக்கும். நல்லது தான்.

சங்கரருக்கு பட்டினத்தார் இளைத்தவரில்லை என்று மேலே சொன்ன பாடல்கள் நிரூபிக்க வில்லையா?

Monday, May 30, 2022

SURDAS

 #ஸூர்_தாஸ்  -  நங்கநல்லூர்  J K  SIVAN


பூர்வோத்தரம் 


டில்லி பக்கத்தில் சிஹி  என்கிற கிராமத்தில் 1478ல்  பிறந்த  ஒரு ஏழை பிராமணர் ஸூர்தாஸ்.  பிறவிக்குருடு.  ப்ரஜ் பாஷையில் கிருஷ்ணனை  நேரில் பார்த்தது போல் வர்ணித்து ஆயிரக்கணக்கான பாடல்களை அளித்தவர். அவை எல்லாமே இல்லை. கிடைத்த வரை அவை  நமக்கு  ஒரு சிறந்த பொக்கிஷம்.  ''ஸூர்''  என்றால்  குருடு என்று அர்த்தமாம். அவரது இயற்கையான பேர் என்ன என்று எவருக்குமே தெரியாது.  உறவினரால் கை விடப்பட்ட  மூன்று வயது பையன் ஸூர்தாஸ். உணவளிக்க  வளர்க்க  எவரும் இல்லை. தெருவில் ஒருநாள் ஒரு பஜனை குழு பாடிக்கொண்டே  சென்றது.  அந்த இசை ஸூர்தாஸுக்கு  ரொம்ப பிடித்தது.  ஒருநாள் நானும் பாட தெரிந்து கொள்ள வேண்டும் என  ஆசைப்பட்டான். 
ஒருதடவை  இன்னொரு பஜனை கோஷ்டி  தெருவில் வந்தபோது  மெதுவாக  அவர்களோடு போய்  சேர்ந்து கொண்டான் . கண் தெரியாத பையன் கூட வருவதை பார்த்த ஒருவர்  '' ஏண்டா எங்களோடு வருகிறாய்? என்று கேட்டார்.''எனக்கும் உங்களோடு சேர்ந்து பாட ஆசை''அன்று இரவு சாப்பாடு போட்டார்கள்.  பஜனைக்  குழு இந்த குருட்டுப்பையனை எங்கு போனாலும் கூட்டிக்கொண்டு போவது நமக்கு ஒரு சுமை  என்று  முடிவெடுத்து  மறுநாள்  ஸூர்தாஸை  அங்கேயே  விட்டுவிட்டு மறுநாள் காலை அவர்கள் போய்விட்டார்கள்.அவன் எங்கே போவான்?  ஒரு மரத்தடியில் உட்கார்ந்து தான் கேட்ட பாடல்களை பாடி பார்த்தான். அருமையான குரல் வளம். பாவம்  குருட்டுப்பையன் நன்றாக கிருஷ்ணன் மேல் பாடுகிறான் என்று  வருவோர் போவோர்  சிலர்  உணவளித்தார்கள். அது  மதுராநகருக்கு போகும் வழி.  அந்த மரத்தடியில், அருகில் ஏரியில்  குளித்துவிட்டு  யாத்ரீகர்கள்  ஓய்வெடுப்பார்கள்.  அவர்கள்  பேசுவதையெல்லாம் கேட்டு வெளி உலகம் பற்றி,  கிருஷ்ணனைப்  பற்றி  எல்லாம்  ஸூர் தாஸ் அறிந்து கொண்டான்.  பதினாலு வயதானது. கிருஷ்ணன் ஞாபகமாகவே இருந்த ஸூர்தாஸுக்கு  அருள் வாக்கு சக்தி தானாகவே  உண்டானது.  சிலருக்கு அவன் சொன்னது பலித்தது. அவ்வளவு தான். காட்டுத்தீயாக  செய்தி பரவி  ''அதிசய பையன்'' என்று போற்றப்பட்டான். ''என் மாடு காணோம், என்று கிராமத்தான் ஒருவன் அழுதபோது   ''அங்கே போய் பார் இருக்கும்'' என்று ஸூர் தாஸ் சொன்ன இடத்தில் பசு மேய்ந்து கொண்டிருந்தது.   ''நல்ல நாள் நேரம்  எது?'' என்று கேட்பவர்களுக்கு   அதைச் சொல்லி அவர்கள்  லாபம் அடைந்தார்கள். காணாமல் போன ஒரு பணக்காரன் குழந்தை எங்கே இருக்கிறது என்று ஞான திருஷ்டியில் ஸூர் தாஸ் சொன்ன இடத்தில்  பையன் கிடைத்தான்.  நன்றி உணர்வோடு   அந்த பணக்கார அப்பா மரத்தடியில் ஒரு சிறு ஆஸ்ரமம் மாதிரி கட்டிக்   கொடுத்ததால்  ஸூர்தாஸ் அங்கேயே வாசம். யாரோ ஒருவர்  ஒரு  ஒற்றைக்  கம்பி  சுரைக்காய் தந்தி வாத்தியம் கொடுக்க அதை மீட்டிக்கொண்டு ஸூர்தாஸ் பாட ஆரம்பித்தார்.சிஷ்யர்கள் அவர் பாடப்பாட அதெல்லாம் எழுதிவைத்தார்கள். 
ஒரு நாள் கனவில்  கிருஷ்ணன் ஊர் மக்களோடு தனது பஜனையை  புகழ்வது போல், கேட்க விரும்புவது போல்  ஒரு   காட்சி. ''ஆஹா கிருஷ்ணன் என்னை கூப்பிடுகிறான் பாட''  என்று மனதில் பட்டு  மறுநாள்  காலையிலேயே  பிரிந்தாவனம்  போக தனியாக  நடந்தார்.   
''குருவே, எங்களை விட்டு எங்கே கிளம்புகிறீர்கள். நாங்கள் ஏதாவது தப்பு செய்தோமா? கோபமா? என்று சில சீடர்கள் கேட்டார்கள்.''இல்லை இல்லை. எனக்கு பிருந்தாவனம் போகவேண்டும் என்று காட்டுப்பாதையில் தனியாக நடந்தார். வழியில்  ஆங்காங்கே சிலர்  அவர் பாடுவதைக் கேட்டு மகிழ்ந்து உணவளித்தார்கள்  அவர்களோடு  தங்கும்படி கேட்டாலும் மறுத்துவிட்டு  ஸூர்தாஸ் பயணம் தொடர்ந்தது. ''நான் ஒரு  பிச்சாண்டி. எனக்கு என்று ஒரு வீடு வாசல்  ஊர் எதுவும்  இல்லை '' என்பார் .
காட்டுப்பாதையில் ஒருநாள் ஒரு பெரிய  தரைக்  கிணற்றில்  விழுந்து விட்டார்.  காயங்கள். கண் பார்வை இல்லை.  எவரும் இல்லை உதவ.  எப்படி வெளியே வருவது?  ஏழு நாள் கிணற்றிலேயே கிடந்து   க்ரிஷ்ணனையே பாடிக்கொண்டிருந்தார்.  ஒரு நாள் ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் குரல் கேட்டது. ''''தாத்தா  கிணத்துல விழுந்திட்டியா?' கண் தெரியாதா?   என்  கையை நீற்றேன். பிடிச்சுக்கோ நான் வெளியே தூக்கிவிடறேன்''அந்த சிறுவனின் கரங்கள்  அவரை மேலே தூக்கிவிட்டன.   தடவிப்பார்த்து பையனைப்  பற்றி விசாரிக்க  அவனைத் தேடினார். அவனைக் காணோம்.  ''ஓஹோ என்   கோபால  கிருஷ்ணன் தான் என்னை காப்பாற்றினானா?  என்று மகிழ்ந்தார். எப்படியோ பிருந்தாவனம் வந்து சேர்ந்தார்.   பிரிந்தா வனத்துக்கு  க்ரிஷ்ணபக்தர்  ஸ்வாமி வல்லபாச்சார்யார்  வருகிறார் என்று அறிந்தபோது எப்படியாவது அவரை சநதிக்க  விரும்பினார்.  ஆற்றைக் கடந்து அக்கரை போய்  வரை சந்திக்கவேண்டும்.  அதற்குள்  வல்லபாச்சார்யர் ஸூர் தாஸ் பற்றி கேள்விப்பட்டு இக்கரைக்கு வந்துவிட்டார்.  வல்லபாச்சாரியார் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.  
''ஸூர் தாஸ்,  நீங்கள் கிருஷ்ணன் மேல் அருமையாக பாடுவீர்களாமே, எங்கே பாடுங்கள்'' என்றதும் ஸூர் தாஸ் பாட  ''ஆஹா  வாழ்க்கை பூரா  அவரைப் பாடுங்கள் '' என்று கேட்டுக் கொண்டு    அவரோடு சில நாட்கள் சுவாமி தங்கினார். க்ரிஷ்ணனைப் பற்றி தான் அறிந்ததெல்லாம் போதித்தார்.  கோவர்தன ஸ்ரீநாத் (கிருஷ்ணன் பெயர்) ஆலய  பிரதம ஆஸ்தான பாடகராக ஸூர் தாஸ் நியமனமானார். 

அக்பர் அப்போது டில்லியில் முகலாய சக்கரவர்த்தி. தான்ஸேன்   அவருடைய  நண்பன், சிறந்த பாடகன்.  ஒருநாள் அற்புதமாக ஒரு பாடலை பாடிக்  காட்டுகிறான்.  அக்பர் அதைக்கேட்டு மனம் உருகினார்.  
''தான்ஸேன், ரொம்ப அருமையாக இருக்கிறதே   இது.   இந்த பாட்டை நீ எழுதினாயா, வேறு  யாராவதா?  யார் அது?''
''மஹாராஜா, இது  ஒரு  சாதாரண  ஹிந்து மதத்தை சேர்ந்த   சாது, கண்ணில்லாத  கிருஷ்ண பக்தர்,  தானாகவே  இறைவன் மேல் இயற்றி பாடியது. அதை ஒரு  நாள் கேட்டேன், என் மனத்தைக் கவர்ந்த அந்த பாடலை தான் உங்களுக்கு பாடி காட்டினேன்''
''யார் அது?''
''நமது ராஜ்யத்தில் ஒரு ஊரான  குங்கட்  எனும் கிராமத்தில் வசிப்பவர். ஸூர்தாஸ் என்று பெயர்.''  
அக்பருக்கு  ஸூர்தாஸை  பார்த்து அவர் குரலைக் கேட்க ஆவல் மேலிட்டது.  தான்சேனோடு  ஸூர்தாசரைப் பார்க்க கிளம்பிவிட்டார்.
கிராமத்துக்கு சென்று அக்பர்  ஸூர்தாஸை சந்தித்து ''நீங்கள் யார் யார் மேலோ  பாடல்கள் இயற்றி பாடுவீராமே, எனக்காக ஒரு பாட்டு பாடும் ''  என்கிறார். அக்பருக்கு ரொம்ப பிடித்தது.''என் அரண்மனைக்கு வாரும். அங்கே பாடும். உமக்கு என்ன வேண்டும் கேளுங்கள் தருகிறேன்''
அக்பர் குரலிலிருந்து  பாதுஷா  தன்மீது தான் ஒரு பாடல் பாடச் சொல்கிறார் என்பது  ஸூர்தாசுக்கு புரிந்துவிட்டது.
 ''மஹாராஜா, நான் கிருஷ்ணன் அரண்மனையில் ஓரத்தில் நின்று பாடுபவன். என்  இதயத்தில் வேறு இடமில்லை.அதில் பூராவுமே  நிறைந்திருப்பவன்  நந்தகோபன் மகன். நான் எப்படி டில்லி வரமுடியும், எப்படி என் மனதில் வேறு ஒருவருக்கு இடம் கிடைக்கும்?  இரவும் பகலும்  புன்முறுவலோடு கருமை  நிற கண்ணனே நிறைந்திருக்கிறான் அதில்.  அது ஒன்றே போதும் எனக்கு.உலகத்தில் என்னன்னவோ ஆசைகளை எனக்கு பலர்  காட்டுகிறார்கள். என் மனமாகிய  சின்ன மண் குடுவையில் சமுத்ரத்துக்கு எல்லாம் இடம் ஏது ? எனக்கு ஏதாவது வரம் கொடுப்பதாக இருந்தால் தயவு செயது என்னை எங்கும் கூப்பிடாதீர்கள். ''

Sunday, May 29, 2022

GEETHA GOVINDAM.

 கீத கோவிந்தம்  - நங்கநல்லூர்   J K   SIVAN

அஷ்டபதி

யாருக்குமே  ஜெயதேவர்  என்றால் தெரியாது.  அவர் எழுதிய கீத கோவிந்தமும் தெரியாது.  அஷ்டபதி என்றால் பிடிக்கும். ஜெயதேவர் ஒரு  அற்புதமான ஸம்ஸ்க்ரித வித்வான்.  ஒரிசாவில் பூரியில் வாழ்ந்த இணையற்ற கிருஷ்ண பக்தர். அவர் பாடல்களுக்கு பூரி ஜெகன்னாதனே ஒரு விசிறி. கீத கோவிந்தத்தில் 24 அஷ்டபதி ( எட்டு பதங்கள் கொண்டது)
 ராதா கல்யாண பஜனையில்  அஷ்டபதி  உயிர்நாடி. பல வித்வான்கள் பல வித ராகங்களில் கற்பனையுடன் செவிக்கு விருந்தாக ராதா கல்யாண மஹோத்சவங்களிலும் சங்கீத நிகழ்ச்சிகளிலும் ஜனரஞ்சக மாக பாடுகிறார் கள். அதில் பக்தி பாவம் இருந்தால் தான் இசை ரசிக்கும். சினிமாக்களும் தமது பங்குக்கு சில அஷ்டபதிகளை நல்ல மெட்டுக்களில் அமைத்து நடுவே சேர்த்துக் கொள்கிறது. காசு பார்க்கிறது.

ஜெயதேவர் வாழ்வில் மூச்சாக விட்டது ராதா கிருஷ்ணன் பெயர்களை தான். ராதை, கிருஷ்ணன், ராதையின் ஒரு தோழி, (சகி,) அப்புறம் மறைவாக ஜெயதேவர் இது நிரம்பியது தான் பிருந்தாவனத்தில் உருவான கீத  கோவிந்தம்.
பிருந்தாவனத்தில் நடந்ததை அப்படியே ஒவ்வொரு ஓவராக கிரிக்கெட் விளையாட்டு ரன்னிங் கமென்டரி மாதிரி ஜெயதேவர் ராதா கிருஷ்ணன் சகி , சந்திப்பு, பேச்சு, அவர்களது உணர்வுகள் ஆகியவற்றை கீத கோவிந்தம் (அஷ்டபதி) பாடல்களில் கண்ணெதிரே கொண்டுவருகிறார்.  ஸூர்தாஸிடம்  பாடம் படித்தவரோ என்று தோன்றுகிறது!

கண்ணனை, ராதையைப் பார்க்காதவர்கள், அறியாதவர்கள், உணராதவர்கள், ஜெயதேவரின் கீத் கோவிந்தம் அஷ்டபதி பாடல்களை படிக்கலாம், கேட்கலாம், ரசிக்கலாம் உணரலாம்.

கீத கோவிந்தத்தை அப்படி ரசிக்கும்போது நான் சென்னையில் வெயிலில் உட்கார்ந்திருந்தாலும், அமெரிக்காவில் இருந்தாலும், குளிர்ந்த பிருந்தாவன சோலைகளுக்குள் கிருஷ்ணனோடு நாமும் இருப்பது நிச்சயம். காரண்டீ. ஒரே ஒரு எச்சரிக்கை. கண்டிஷன். ராதா-- கிருஷ்ணன் ப்ரேமையை மனிதனின் காதலாக, மிருக இச்சையாக நினைத்து ருசிக்க வேண்டாம். அது கீழ்த்தர மனித உணர்வு. தெய்வங்களுக்கு தெரியாதது.

மூடிய கண் இமைக்குள் கிருஷ்ணன் புல்லாங்குழல் இசைப்பதை செவி குளிர கேட்டவர் ஜெயதேவர். அவனது ஆனந்த நேரம் 15 வயதுக்குள்  ப்ருந்தாவனத்தில் ராதையோடு ஓடி ஆடி விளையாட  செலவானது.   இதை நேரில் ஞானக்கண்ணால் கண்டு ரசித்தவர் ஜெயதேவர். அவர் கண்ட காட்சிகளைப்  பாடுவார். அவர் மனைவி பத்மாவதி  என்ற  நாட்யராணி  அஷ்டபதி பதங்களுக்கு தக்கவாறும் பாதங்களை  அசைத்து  தாளம் பிசகாமல் ஆடுவாள்.  அப்படிப் பிறந்தது  கீதகோவிந்தம். 24 பாடல்கள்.

 பகவானுக்கு செய்யும் ஷோடச உபசாரத்தில் நாட்யம் கீதமும் உண்டு.  பிருந்தாவனம் கிருஷ்ணனின் அந்தரங்கமான ஆநந்த பீடம். பிரேம தத்துவம் நிறைந்தது. பகவான் நாத வடிவினன். நாதம் காற்றுடன் கலப்பதே நாட்டியக் கலை.

நாத வடிவம் பரமாத்மா. ஒலிக்கு அனுகூலமான காற்று வடிவமானவள் பராசக்தி. இந்த தத்துவமே ராதாகிருஷ்ண ஸ்வரூபமாகத் தோன்றி பக்தரின் உள்ளம் பக்குவமாவதற்காகப் பல லீலைகளச்  செய்தது.  ராச லீலை பொதுவாக எல்லோர் உள்ளத்தையும் கவரும். அதனுள் பதிந்து கிடக்கும் பரதத்வம் உத்தம பக்தரான ஒரு சிலர் உள்ளத்தையே கவரும். அத்தகையவரே பரம  ஏகாங்கி , ஜீவன் முக்தர். உதாரணம் வேதவ்யாஸர். அவர் 18 புராணங்களின் மூலமாகப் பற்பல அரிய பெரிய தத்துவங்களை நமக்கு அளித்தவர்.  வேதவியாசர்  தான் ஜெயதேவராக பூமியில் அவதரித்தவர் என்பார்கள்.

வேதவியாசர்  இயற்றிய பதினெட்டு புராணங்களில்  பத்தாவது  ப்ரம்ம வைவர்த்த புராணம் . 18000 ஸ்லோகங்கள் கொண்டது.   தீவிரமான  வைணவ புராணம் . ஸ்ரீ கிருஷ்ணன்  ராதையின்   தெய்வீக   திருவிளையாடல்களைக் குறிப்பது.  - சக்தியாகிய ராதையோடு கூடிய ஸ்ரீ கிருஷ்ணன் அண்டங்கள் அனைத்திற்கும் தலைவன் , எங்கும் நிறைந்தவன் என்று உணர்த்துவது. 
 ஜெயதேவரின் கீத கோவிந்த அஷ்டபதிகள்  இதை ஒட்டியே  அமைந்துள்ளது.


RAMAKRISHNA PARAMAHAMSA

அருட்புனல் -  நங்கநல்லூர்  J K  SIVAN 
ராமகிருஷ்ண  பரமஹம்ஸர் 

''ராதா காந்தன்''. 

எத்தனை பேருக்கு  இப்படி தாராள மனம் இருக்கும்?  270 வருஷங்கள் முன்பு  ராணி ராசமணி  பணத்தை கங்கைநீராக வாரி செலவழித்தாள் .  தக்ஷிணேஸ்வரம்  பவதாரிணியின்   கோயிலில்  சலவைக்கல்  தரை.  சிறந்த  நிபுணர்களை வைத்து  ஒரு அற்புத கோயில் உருவாக்கினாள் . இன்றும் நாம் கண்டு  களித்து   கருப்பு  காளியை   தங்க ஆபரணத்தில் தரிசிக்கிறோம். ஒரு பக்கம்  வெள்ளை சலவைக்  கல் சிவன் படுத்துகொண்டு இருக்க, அவர் மேல் நிற்கும் காளி. சிவனின் சக்தியே பராசக்தி இல்லையா?  காளியின் கால்களில் தங்க கொலுசு, தண்டை. கைகளில் தங்க  ஆபரணங்கள். கழுத்தில் நவ ரத்ன மாலை. இது தவிர மனித  தலைகள்  கோர்த்த மாலை, தங்க கிரீடம், தங்க காதணிகள். தங்க மூக்குத்தி, தங்க ஒட்டியாணம். முத்து புல்லாக்கு . தோடு. நான்கு கரங்கள். இடது கரம்  ஒன்றில்   பலியிடப்பட்ட  ரத்தம் சொட்டும்  மனித  தலை. உயர்த்திய வலது கரம் ஒன்றில் வெட்டிய ரத்தம் சொட்டும் கூர் வாள் . ஒரு வலக்கரம் அபய ஹஸ்தம்.  இன்னொன்று  வரத ஹஸ்தம். தொங்கும் நீண்ட நாக்கு. பராசக்தியை வர்ணிக்க இயலாது.  அம்பாள்  கெட்டவளா? கொடியவளா ? 

டாக்டரிடம் போகிறோம்.  காசு  நிறைய  கை  நிறைய வாங்கிக் கொண்டு  நீட்டிய  நமது ஒரு  கையை வெட்டி  கட்டுப் போட்டு  அனுப்பும் டாக்டர்  கெட்டவரா?  வெட்டுப்பட்ட  கையோடு  '' டாக்டர் நீங்கள் தான் என் கடவுள்'' என்று  வாழ்த்தி விட்டு  வீடு திரும்புகிறோம்.  உபயோகமற்ற  விஷ சக்தி கொண்ட  நோயுற்ற கையை வெட்டி உயிரை காப்பாற்றியவர் டாக்டர். அது போல தான் அம்பாள் கொடியவர்களை  ஒழிப்பவள். தீய சக்தியை அழிப்பவள். தீனர்களை, நிர்க்கதியாக அண்டியவர்களை ஆதரித்து அணைப்பவள். அந்த சர்வ சக்தியை சாதாரண எழுத்தில் எப்படி கொண்டு வருவது. அதற்குண்டான சக்தி  எனக்கில்லை. காளியிடம் உண்மையிலேயே ''பய'' பக்தி உண்டாகிறது.பவதாரிணி ஆக்க அழிவு சக்தி இரண்டும் நிறைந்தவள். துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலினி.

தக்ஷிணேஸ்வரம்  ஆலயத்தில். ஒரு பக்கம் அருளும் தாய். காளி தேவி. இன்னொரு பக்கம் சர்வ வியாபி சிவன். இன்னொரு இடத்தில் அன்பே உருவான ராதா கிருஷ்ணன்.   இது  விண்ணும் மண்ணும் ஒன்றாக கலந்து காட்சி  தரும் சர்வ சக்திகளும்  ஒன்றாக பரிமளிக்கும் ஸ்தலம்.

''என் அம்மா'' என்று வாய் மணக்க எப்போதும் ராமகிருஷ்ண பரமஹம்ஸர்  பாவதாரிணியை  வேண்டினார். 

ராமகிருஷ்ணர்  தனது அண்ணா ராம்குமாருடன் இந்த ஆலயத்துக்கு வந்தார். அண்ணா காளி கோவில் அர்ச்சகர்.தம்பி  ராதாகிருஷ் ணனுக்கு அர்ச்சகர்.

கோவிலை ஒட்டி  ஜிலு ஜிலு  என்று கோயிலை தொட்டுக்கொண்டு   ஓடும்  புனித கங்கை. சுற்றிலும் அடர்ந்த மரங்கள். நிசப்தம். எண்ணற்ற பறவைகளின் சப்த ஜாலம் .பச்சை பசேலென்று  பரந்த சோலை வனம் , அன்பும் ஆதரவும் தந்த ராணி ராஸ மணி, அவள் மருமகன் மதுர்பாபு.-- ஆஹா எல்லாமே ராமகிருஷ்ணருக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தந்தது. இடமும் பிடித்தது . அவர் மனத்தில்  பாவதாரிணியும் இடம் பிடித்துவிட்டாள் . இதைத்தான் இத்தனை வருஷமாக  மனது தேடியதா?

மதுர் பாபுவுக்கு ராமகிருஷ்ணரைப்  பிடித்து விட்டது. அவரது பரிசுத்தமான பக்தி  பாபுவை கவர்ந்தது.   ஒருநாள்  ''ராமக்ரிஷ்ணா    நீயே  இனிமேல்  பாவதாரிணிக்கும்  பூஜை பண்ணு ''  என்று கட்டளையிட்டார். 

ஆரம்பத்தில்  ராமக்ரிஷ்ணருக்கு    பணக்காரி  ராசமணிக்கு  வேலை செய்ய வேண்டாமே என்று தோன்றியது. மேலும் இந்த காளி பாவதாரிணியின்   விலை உயர்ந்த நகைகளுக்கு நாம்  எதற்கு  பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்  எனவும் தோன்றியது. ஆகவே  மதுர பாபுவுக்கு   சரி  என்று  பிடி கொடுத்து ஒப்புக் கொள்ளவில்லை.  மதுர பாபுவும் விடவில்லை.  தக்க தருணத்துக்கு காத்திருந்தார். அது ஹ்ரிதய் ரூபத்தில் வந்தது.

ஹ்ரிதய் கமார்புகூரில்  ராமகிருஷ்ணரின் பால்ய சிநேகிதன்.  உறவினனும் கூட.   அவரது நிழல்.   ரொம்ப கெட்டிக் காரன்.கமார்புகூருக்கு அடுத்த சிஹோர்  என்ற கிராமத்தைச் சேர்ந்தவன். தக்ஷிணேஸ்வரத்திற்கு வேலை தேடி வந்தான்.
மதுர பாபுவிடம் அவனை அழைத்து சென்றார். 
 'மதுர் பாபுஜி,  இவன்  என் நண்பன் ஹ்ரிதய்.  எங்க பக்கத்து ஊர் காரன்.  எனக்கு உதவியாக  இவன்  இருந்தால் நான் காளி கோவில் பூஜை  ஏற்றுக் கொள்ள  சௌகர்யமாக இருக்கும் ' என்கிறார்.  
ஆஹா  அப்படியே  என்றார் மதுரபாபு. 
காளியை அலங்கரித்து ஆபரணங்களை சூட்டும் வேலை ராமகிருஷ்ணருக்கு  கிடைத்தது.

ஒருநாள் ராதாகிருஷ்ணன் விக்ரஹம்  அலங்கரிக்கும்போது  உதவியாளர்  கை  தவறி  கீழே போட்டு விட்டதால் விக்ரஹத்தின் கால் பின்னமாகி விட்டது. ராணியிடம் வேறு புது விிக்ரஹம் வேண்டும், சிதிலமான விக்ரஹ வழிபாடு கூடாது என்று மதுர  பாபு  கேட்டார்.  ராசமணி   ராமகிருஷ்ணரை அபிப்ராயம் கேட்டாள். அவள் ஆசையாக தேர்ந்தெடுத்து நிர்மாணித்த விக்ரஹம் ராதா காந்தன். யோசிக்கவே இல்லை ராமகிருஷ்ணர்.

''அம்மா, நீங்களே சொல்லுங்கள், உங்கள் மருமகன் மதுர பாபுவுக்கு கால் உடைந்தால் அவரை தூர எறிந்து விடுவீர்களா? காலை குணப்படுத்த முயல மாட்டீர்களா?''

இதிலே எல்லா பதிலும் உள்ளது. சிற்பிகளை வரவழைத்து எப்படியோ ராதா காந்தனின் கால் சரி செய்யப் பட்டு மீண்டும் பூஜை தொடர்ந்தது. கவனக்குறைவோடு பணியாற்றிய அர்ச்சகர் விலக்கப் பட்டு ராதா காந்தனின் பூஜை வழிபாடும் ராமக்ரிஷ்ணரிடமே சேர்ந்தது. 



PESUM DEIVAM

 #பேசும்_தெய்வம் -  நங்கநல்லூர்   J  K  SIVAN


125 ஒரிஸ்ஸா கிராமங்களுக்கு விஜயம்..

1936ல்  மே மாதம்  3ம்  தேதி  ஒரிஸ்ஸாவில்  தாஸ்பூரில்  முகாம் போட்டிருந்த மஹா பெரியவா சங்கர வித்யா பீடத்துக்கு விஜயம் செய்தார்.பாடசாலையில் மாணவர்கள்  ஆசிரியர்கள் அனைவருக்கும்  மஹா திருப்தி.  எல்லோருடனும் பேசி ஆசிர்வதித்தார். எண்ணற்ற பக்தர்கள் வேறு கூடி விட்டார்கள். பாத பூஜைகள்   பிக்ஷா வந்தனம் எல்லாம்  தாஸ்பூர்  மகாராஜாவின் தலைமையில்  அவர்  அரண்மனை
யிலேயே  ஜோராக  நடந்தது.  

8ம் தேதி ஒரு  வித்வத்  சபையை வழக்கம்போல் மஹா பெரியவா கூட்டியபோது  பல பண்டிதர்கள் சாஸ்திரிகள் எல்லோரும் பங்கேற்றார்கள். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மஹா பெரியவா 
அற்புதமாக வியாக்யானம் , விளக்கம் எல்லாம் அளித்தார். வித்வான்களை கௌரவித்து  காஷ்மீர் சால்வைகள், பணமுடிப்பு எல்லாம்  காஞ்சி மட சார்பில் பரிசாக அளித்தார்.

பேசிய பண்டிதர்களின் சிலர்  இதற்கு முன்  தாஸ்பூர் மற்றும் பல இடங்களுக்கு ஒரிஸ்ஸாவில் 1886ம் வருஷம் வந்த  65வது  காஞ்சி காமகோடி  பீடாதிபதி   ஸ்ரீ  மஹாதேவேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகளைப் பற்றி சிலாக்யமாக புகழ்ந்து பேசினார்கள்.ஐம்பது வருஷங்களுக்கு பிறகு  68 வது பீடாதிபதிகள் வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அவர்களுக்கு.

10ம்  தேதி அன்று  சாக்ஷி கோபால் ஊரிலிருந்து கிளம்பி  திலங் என்கிற ஊருக்கு  புறப்பட்டு 18ம் தேதி  மஹா பெரியவா பரிவாரத்தோடு   குர்தா  என்கிற ஊர்  வந்து சேர்ந்தார்.  அது  பூரி ஜில்லாவிலிருந்து  35 மைல்  தூரத்தில் உள்ளது.  அன்றிரவே  அங்கிருந்து  சத்ரபூருக்கு சென்றார். அது  திலங்கிலிருந்து   தெற்கே   75 மைல்  தூரம்.  வழியெல்லாம் இரு மருங்கும் பெரிய மலைகள்.   காடுகள் வனங்கள் என்பதால்  காட்டு மிருகங்கள் மலிந்த இடம்.  ''ஜயஜய சங்கர  ஹரஹர சங்கர''   கோஷத்துடன் மஹா பெரியவாவும் அவருடன் வந்தவர்களும்   அந்த காட்டுப்  பாதையில்  நடந்தார்
கள்.  தங்க இடமோ  குடிக்க நீரோ இல்லாத பகுதி. விரைவில் அதை விட்டுச்  செல்லவேண்டும். சில மைல்  தூரம் நடந்தபின்  மணல் வெளி ஒன்று  மேடும் பள்ளமுமாக  குறுக்கிட்டது.  மக்கள் நடமாட்டமே இல்லாத  இடம். நடப்பது   சிரமமாக  இருந்தாலும்    ஒருவழியாக  சத்ரபூர் சென்றடைந்தார்கள்.  
 ஒரு நாளைக்கு குறைந்தது 25 மைல்  தூரமாவது நடந்தார்கள். சத்ரபூர்  போகும் வழியில்   தங்கி என்று ஒரு இடம். அங்கே  14ம் தேதி இரவு  தங்கினார். பலுகோனி  என்ற ஊரை  15ம் தேதி அடைந்து அங்கே தங்கினார் .  16ம் தேதி ரம்பா என்ற ஊர்.  17ம் தேதி சத்ரபூர் வந்தாயிற்று.  அது  கஞ்சம் ஜில்லாவின்  தலைநகர். சில்கா எனும்  பெரிய ஏரியின் தெற்கு முனையில் உள்ளது. அங்கே  சமுத்திரம் ஏரியோடு  கலக்கிறது. அங்கே  ஒரு  பழைய ஆதி சங்கரர்  ஆலயம் உள்ளது.   மஹா பெரியவா விடுவாரா?  ஏழு நாள் அங்கே  வாசம்.

17ம் தேதி முதல் 23ம் தேதி மே மாதம் வரை அங்கே  கேம்ப் . மஹா பெரியவா வருகை பற்றி முன் கூட்டியே  அறிந்த பக்தர்கள் ஒன்று திரண்டு வரவேற்பு அளித்தார்கள்.  

24ம் தேதி அங்கிருந்து கிளம்பி பெர்ஹாம்பூர்  சென்றார் மஹா பெரியவா. சத்ரபூரிலிருந்து தென் மேற்கே  5 மைல்  தூரத்தில் பெர்ஹாம்பூர் என்கிற பெரிய  நகரம் அமைந்துள்ளது.   23 நாட்கள் அங்கே மஹா பெரியவா  தங்கி இருந்தார்.  15ம் தேதி ஜூன்  மாதம்  கிளம்பி  இச்சாபூர்  என்ற ஊரை  அடைந்தார். அங்கே மூன்று நாள்  கேம்ப் .  எல்லோரையும் சந்தித்து ஆசிர்வதித்தார். 23ம் தேதி அங்கிருந்து நவபாஸம்  எனும் ஊருக்குள் பிரவேசித்தார்.   25ம் தேதி  பத்மநாப பூர். நம்மால் இப்படி புயல் வேகத்தில் பல க்

ஷேத்ரங்களுக்கு சொல்லமுடியுமா.  மஹா பெரியவா கால் பட்ட ஊர்களையெல்லாம் நான் க்ஷேத்ரமாக தான் கருதுகிறேன்.  அங்கெல்லாம் அவரை தரிசித்தவர்கள் புண்யசாலிகள். 

1936 மே  மாதம்  26ம் தேதி பத்மநாப பூரிலிருந்து கிளம்பி   திகபண்டி  என்கிற ஊருக்கு விஜயம் செய்தார். 28ம் தேதி  அன்று செருகடா, அடுத்து  மூன்று நாட்கள்  தாமோதர் பள்ளி, அதற்குப்பிறகு  ஹிங்கிலி காட் சென்ற போது தேதி ஜூலை 2.  எப்படி நாட்கள் நகருகிறது. எப்படி மின்னல் வேகத்தில் மஹா பெரியவா  திக்விஜயம் தொடர்கிறது... 

LIFE LESSON

 வாழ்க்கை பயணம்.  -   நங்கநல்லூர்  J K   SIVAN 



எண்ணங்கள் தான் மனசு. மனசு தான் மனிஷன். உலகமே  எண்ணத்தின் வெளிப்பாடு தான். சிலந்தி தனது எச்சிலால் வலை பின்னுவதைப் போல  இந்த உலகம் நமது எண்ணத்திற்கேற்ப அமைந்தது தான்.  மனசை தான் சூக்ஷ்ம சரீரம், ஜீவன், அகம்பாவம், ஆத்மா என்றெல்லாம் கூட  பேர் சொல்லி அறிகிறோம்.  உடம்பு வேறு  மனசு வேறு. மனசு சொன்னபடி ஆடுவது தான் உடம்பு என்கிற  மண் பொம்மை.  மனசின் முக்கிய எண்ணம்  ''நான்''.  அது தான் எல்லாவற்றிற்கும் காரணம்.  ''ஹ்ரித்''  ''அயம்''   --( நான் தான் இதயம்)  என்ற ரெண்டு வார்த்தைகள் தான் ஹ்ரிதயம்.   மனசு பூரா பூரா  ''நான்'' எனும் ஹ்ருதயத்தை சுற்றியே  அலைகிறது.  நான்  எனும் ஹ்ருதயம் தான் ஆத்மா என்றேன். அது ஒன்று தான் சாஸ்வதம். மற்றதெல்லாம் அழிவது.

பிராணாயாமத்தால்  ''நான்'' கட்டுப்படுகிறது.   அதாவது எண்ணங்களின் ஓட்டம்  குறைகிறது. அதன் விளைவாக  உடலின் அசைவும், செயல்பாடும்  நிற்கிறது.  ஆத்மா  உடம்பை விட்டு பிரிவது வரை, உடம்பின் புலன்கள்  எண்ணங்களை  விடாமல்  ஈர்க்கிறது. தியானம், மந்த்ர உச்சாடனம்  ஆகியவை  மனதை ஓடாமல் நிறுத்தி வைப்பவை. ஆடிக்கொண்டே இருக்கும் யானையின் தும்பிக்கையில் கொடுத்த கோல், யானையின் காலில் கட்டிய சிறு  சங்கிலி,  அதை அசையாமல் பிடித்துக் கொண்டு நிற்க செய்யுமல்லவா?    
தியானம்  மனதை ஒரே ஒரு விஷயத்தில்  மட்டும்  ஒருமுகப்படுத்த உதவுகிறது. 
உண்ணும் உணவும்  மனதை கட்டுப்படுத்தும். மஹான்கள் ருசி தேடாமல்  சாத்வீக உணவை நாடுவது இதற்கு தான். 
இப்படி மனசு சுத்தமாகிவிட்டால்  மனது ஒரு நல்ல மனிதனாக  உருவெடுக்கிறது.

எண்ண ஓட்டத்துக்கு  ஆசைகள், புலன்  உணர்ச்சிகள் தான்  ஊட்ட சத்து.
வைராக்கியம் மனதை திடப்படுத்தி கட்டுக்குள் வைப்பது.  இப்படி இருப்பவர்கள் தான் குருவாக திகழ முடியும்.அப்படிப்பட்ட  குருவும்  பகவானும் ஒன்றே தான். 
அப்படிப்பட்ட  குருவையும்,  பகவானையும் கெட்டியாக பிடித்துக்கொள்வதை தான் மாணிக்கவாசகர்  ''சிக்''கென  பிடித்தேன் என்கிறார்.

''நான்;;  அகன்றால் எல்லாம்  ''அவன்''  ஆகிவிடுகிறது.  தன்னை இழப்பது தான் உயர்ந்த சரணாகதி தத்வம். எல்லாம் அவனே, அவனுடையதே என்று வாழ்க்கை பிரயாணம் தொடர்ந்தால்  ரயில், பெட்டியில் உட்கார்ந்த நம்மையும், நம்முடைய கனமான  50 கிலோ  பெட்டியையும் தானே  சுமந்து  கொண்டு ஓடும். 

Saturday, May 28, 2022

MANICKA VACHAKAR

மாணிக்க வாசகர்  -   நங்கநல்லூர்  J K  SIVAN  

ஒளியுடன்  ஐக்கியம்

மணிவாசகர்  அழுது புரண்டார்.  என் சிவனே  எனக்கு ''குருவாய்  வருவாய்''  என்று  வேண்டினார், கெஞ்சினார், பெருந்துறையில் குரு கிடைத்தார்.  மீண்டும் வேண்டுமே என்று கெஞ்சினார்.   ''சிதம்பரத்துக்குப் போ '' என்று கட்டளை பிறந்தது.  வழியில் பல  சிவாலயங்களுக்கு சென்று பரமனை தரிசித்தார்.  ஒவ்வொரு  ஆலயத்திலும்  ''குருவாக வா' என்றே வேண்டினார்.  உத்தரகோச மங்கை ஆலயத்தில்  அவ்வாறே  வேண்டி  கண்ணீர் சிந்தினார். கடைசியில் சிதம்பரத்துக்கு  நடந்தார்.   நடராஜன் பவனி வரும்  தெருக்களில் உருண்டு புரண்டார். ஆலய நந்தவனத்திலேயே தங்கினார் .அங்கே தான்  திருவாசகம்  உருகிப்போன  அவர் உள்ளத்திலிருந்து  உருவாகியது.  தில்லையிலிருந்த பாக்கியசாலிகள் அவற்றை அவர் பாடக்  கேட்டு மகிழ்ந்தார்கள்.  

அரசனின் வேண்டுகோளுக்கிணங்கி அங்கே  பௌத்த பிக்ஷுவோடு வாதம் புரிந்தார். வென்றார். ஊமை  ராஜகுமாரி பேசினாள் .  அவள் பேசியவை தான் திருச்சாழல் பாடல்கள். அவற்றை  அடுத்து பதிவிடுகிறேன்.

சிதம்பரேசன்  மணிவாசகர் வாயால் திருவாசகம் கேட்க  விரும்பினான். அவருக்கு மோக்ஷம் தர இச்சை கொண்டான்.  

ஒரு வயதான  பிராமணர் மணிவாசகர் முன் நின்றார்.
'வரவேண்டும் வரவேண்டும் சுவாமி, அமருங்கள். தங்களுக்கு  சேவை செய்ய பாக்யம் அருளவேண்டும்,  என்ன வேண்டும் உங்களுக்கு சொல்லுங்கள்''  என்கிறார் மணி வாசகர்.

''அப்பனே  நீ நன்றாக இருக்கவேண்டும். எனக்கு ஒன்றுமே வேண்டாம். நீ நன்றாக  என் சிவன் மேல் பாடுகிறாயாமே, எனக்கு பாடிக் காட்டு, காதார கேட்கிறேன் ''
''அடியேன் பாக்யம் சுவாமி.  இதோ உங்கள் எதிரில் கைகட்டி மனமுருகி என் சிவனைப் பாடுகிறேன். திருவாசகம் பாட துவங்கினார் மணிவாசகர்.''

''ஐயா, உங்கள்  பாடல்களை  மணி வாசகர் என்று  பரமேஸ்வரனால் புகழப்பட்ட  உங்கள் வாக்கியங்களை வெறுமே கேட்டல் மட்டும் போதாது ஐயனே.  நான்  அதை ஓலைச்சுவடியில்  எழுதிக் கொள்ளலாமா?' உங்கள் வாயால் கேட்ட தோடல்லாமல்  அடிக்கடி படித்து என் சம்சார தளைகளில் இருந்து விடுபட உதவுமே'' என்கிறார்  வயதான பிராமணர்.

''ஆஹா  இறைவன் மேல் பாடியதை எழுதிக் கொள்ளும்'' என்கிறார்  மணிவாசகர். திருவாசகம்  ஒலித்தது.  பனை ஓலைச் சுவடிகள் நிரம்பின. திருவாசகம் எழுத்துருவம் பெற்றது.  எழுதிய  பிராமணர் மறைந்தார். வந்தது சிவபெருமானே என்று புரிந்து கொண்டார்.   முதியவர்  தான் எழுதிய   திருவாசக சுவடிகளோடு   காணாமல் போய்விட்டார்.

மறுநாள் காலை  நடராஜன் சந்நிதியில்  தில்லை மூவாயிர  தீட்சிதர்கள்  நடராஜன் சித்சபையின் பஞ்சாக்ஷர படிகள் மேல் வைக்கப்பட்டிருந்த  திருவாசக சுவடிகளை  கண்டு அதிசயித்தார்கள்.  யார் இங்கே கொண்டு இவற்றை வைத்தது?
சுவடிகளை பிரித்து பார்த்தார்கள்.

அழகிய  தமிழில்  பக்தி ரசம் தோய்ந்து  ஊனும்  உள்ளமும் உருக்கும்  மணிவாசகரின் திருவாசகம் நெஞ்சை அள்ளியது.   முழுதும் உரக்க படித்தார்கள்  ஆஹா ஆஹா என்று எல்லோரும் கரைக்கம்பம் சிரக்கம்பம்  செய்ய கடைசியில் முடிவில்  அந்த ஓலைச் சுவட்டில்   ''மணி வாசகர் சொற்படி திருச்சிற்றம்பலமுடையான்  கையெழுத்து''  என்று இருந்தது.
இது மாதிரி எந்த  கவிஞனுக்கு பக்தனுக்கு  பேரருள் கிடைக்கும்?

கூட்டத்தில் நின்றிருந்த மணிவாசகர்  தனது திருவாசகம் பாடுவதை தனது காதால் கேட்டு கண்ணீர் உகுத்தார். மெய் சிலிர்த்தது.  உடல்  நடுங்க  உள்ளே ஒரே ஒரு குரல் அழுத்தமாக கேட்டது.  ''என்னிடம் வா''  அவரை அறியாமல் கால்கள் முன்னே  சென்றன.  பஞ்சாக்ஷரப்படிகள் கடந்து நடராஜனை அடைந்தார்.  திரை தானே மூடியது. டாண்  டாண் என்று சிதம்பரேசன் ஆலய  மணி விடாமல் ஒலித்தது. கேளுங்கள் இணைத்திருக்கிறேன்  


 https://youtu.be/q-0eSbex-HQ   திரை விலகியது.

தீட்சிதர்கள் மற்ற பக்தர்கள் எல்லோரும்  வியந்தனர். எதற்கு உள்ளே சென்றார்  மணிவாசகர்.... ஏன் ? எப்படி உள்ளே செல்லலாம்?   இந்த கேள்விகளுக்கு எல்லாம்  திரை விலகி பதில் கிடைத்தது.   ஆலய மணி ஒலிக்கிணையாக நடராஜன் முகத்தில் புன்சிரிப்பு தெரிய  அவன் சந்நிதியில் தீபம் பிரகாசமாக ஒளி வீசியது?  உள்ளே சென்ற மணிவாசகர் எங்கே????
தீபம்  முன்னிலும் பிரகாசமாக  எரிந்து  என்னுள் ஐக்யமானான் என்று நடராஜன் உணர்த்தியதை பறைசாற்றியது.

TAMIL POETS

 #இரட்டை_புலவர்கள்  -  நங்கநல்லூர்   J K  SIVAN 


ரொம்ப நாள் கழித்து மறுபடியும் ரெட்டை புலவர்கள் பற்றி கொஞ்சம் சொல்கிறேன்.
ரெட்டை புலவர்கள்  ரெட்டையர்கள் அல்ல. ஒரு தாயின்  இரு குழந்தைகள் அல்ல.  14-ஆம் நூற்றாண்டில்  தமிழகத்தில் வாழ்ந்த ரெண்டு புலவர்கள்.  சோழ நாட்டில் ஆலந்துறை எனும் ஊரில் வாழ்ந்த ஒரு  செங்குந்தர் மரபில் அத்தை மகன் மாமன் மகனாகப் பிறந்தவர்கள். ரெண்டு பெரும்  கவிஞர்கள்.  ஒரு பாடல் இதைப் பற்றி சொல்கிறது. 

"அத்தை மகன்  குருடு  அம்மான் மகன்முட மாகிக்கீழ்மேல்  
ஒத்துறைந் தேகூறு பாடோ(டு) அணிகொள் உலப்பில்கவி  
முத்தரில் ஓதியே கம்பர் உலாமுன்  மொழிந்தவரும்  
சித்தம் உவப்பத் திரிந்தோர் செங்குந்த சிலாக்கியரே"  

என்ன அர்த்தம்? 
அத்தை மகன் கண் தெரியாத குருடன், மாமன் மகன்  நடக்கமுடியாத முடவன்.  ஊனமிருந்தாலும் இருவருமே  ஞானம் பிரகாசிக்க  சூரியன் ஒளி போல்  மதிக்கப்பட்டவர்கள்  என்பதால்   குருடர் பெயர்  முது சூரியன்,  முடவர் பெயர்  இளஞ் குரியர் .

இருவரும் ஒன்று சேர்ந்து பயணம் செய்ய தீர்மானித்து,  குருடன் தன் தோளில் முடவனைத் தூக்கி நடக்க,  முடவன் குருடனை வழி நடத்த, இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்து, ஒரு பாடலின் முன்பகுதி ரெண்டடியை  முடவன் பாட,  அதைக்கேட்டு  பாடலின் பின்பகுதி  ரெண்டடியை யைக் குருடன் முடித்துப் பாடுவது என்ற பாகு  பாட்டுடன் பாடல்களைத் திருவேகம்பப் பெருமான்   மீது பாடி இருக்கிறார்கள்.  'ஏகம்பர் நாதருலா” இயற்றினார்கள். புகழ் மிக்க  இந்த  இரட்டையர்கள்  செங்குந்தர்களுக்குள்ளே உயர்ந்த  ரெட்டைப்புலவர்கள் என பேர் பெற்றவர்கள்.  இவர்கள் வாழ்ந்த காலத்தில் தமிழ் தெரிந்த சேர நாட்டு  ராஜா  பெயர்  வரபதியாட்கொண்டான்.   கலம்பகம், அம்மானை, சிலேடை    என்று பல  பாடல்கள் பாடியவர்கள். 

கலம்பகம்  என்பது தமிழ் இலக்கண வகைப்படி கதம்ப மலர் மாலை போன்று பதினெட்டு  அயிட்டங்கள், உறுப்புகள் அமையப் பல்வகைப் பா   விகற்பங்களைப் பாடப் பெறுவது ஆகும்.  ஒரு  கலம்பக பாடல்  உதாரணம் சொன்னால் நன்றாக புரியும்: 

சிதம்பரம்  நடந்து சென்றபோது  இந்த  ரெண்டு  புலவர்களும்  சிதம்பரம் நடராசர் மீது அதீதப் பற்று கொண்டு பாடிய தில்லைக் கலம்பகத்தில் வரும் இந்த    பாடலில் “இரண்டு” எனும்   வார்த்தை  தொடர்ந்து வருவதை பாருங்கள்: 

"காதில் இரண்டு பேர், கண்டோர் இரண்டு பேர்,  
ஏதிலராய்க் காணோர் இரண்டு பேர்,  
பேதைமுலை உண்ணார் இரண்டு பேர்,  
ஓங்கு புலியூரர்க்குபெண்ணான பேர் இரண்டு பேர்"  

என்ன அர்த்தம் தெரியுமா?

காதில் இரண்டு பேர்.       கம்பளன்,  அசுவதரன்  என்ற பெயர் கொண்ட  ரெண்டு  நாகர்கள் சரஸ்வதி அருளால் இசை ஞானம் பெற்றவர்கள்.  அவர்கள் இருவரும் தமது புலமையை சிவபிரானிடம் மட்டுமே சமர்ப்பணம் செய்யத் தவம் இருந்தனர். அவர்கள்  தவத்தை மெச்சி சிவபெருமான் அவர்களைத் தன் இரு காதுகளில் தோடாக அணிந்து கொண்டார்.

கண்டோர் இரண்டு பேர்-      தில்லை நடராசப் பெருமானின் தாண்டவத்தைக் கண்டு பேறு பெற்றவர்கள் பதஞ்சலி மற்றும்
வியாக்ரபாத முனிவர்கள் ஆகிய ரெண்டு ரிஷிகள்  முனிவர்கள்  மட்டுமே. .

ஏதிலராய்க் காணோர் இரண்டு பேர்-    பரமேஸ்வரன்  ஸ்தாணுவாய்  ஒளிப்பிழம்பாய்  அடி முடி காண இயலாத உருவெடுத்த    போது  தேடி தோல்வியுற்று  திகைத்த பிரம்மாவும் விஷ்ணுவும் தான் இந்த  ரெண்டு பேர். 

பேதைமுலை உண்ணார் இரண்டு பேர்-    தாய்ப்பால்  குடிக்காமலேயே  பிள்ளைகளாக  பார்வதி தேவிக்கு மகன்களாக வாய்த்த  ரெண்டு பேர்  விநாயகர்    சுப்பிரமணியர். 

ஓங்கு புலியூரர்க்குப் பெண்ணான பேர் இரண்டு பேர்-    பரமேஸ்வரனின் சிரத்தில் உள்ள  கங்காதேவி,  அவரது தேகத்தில் ஒரு பாதியான உமா தேவியும்  அந்த ரெண்டு பேர். 

சிலேடை என்பது ரெண்டு அர்த்தங்களை தரும் பாடல். ரெட்டை புலவர்கள்  ஆளுக்கு ரெண்டு அடி  பாடி முடித்தது. ஒரு சிலேடை பாடல் உதாரணம். ஏற்கனவே இது பற்றி எழுதி இருக்கிறேன்.

"அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாமதனைத்  
தப்பினால் நம்மையது தப்பாதோ -இப்புவியில்  
இக்கலிங்கம் போனாலென் னேகலிங்க மாமதுரைச்  
சொக்கலிங்கம் தானிருக்கச் சொல்"

மதுரையில் சொக்கநாதர்  மீனாட்சி தரிசனம் செய்ய வைகையில் குளிக்கும்போது கண் பார்வை இல்லாதவரின் வேஷ்டி நீரோடு போய்விட்டது. கரையில் படியில் உட்கார்ந்திருந்த முடவரால் என்ன செய்யமுடியும்.   வேஷ்டி போனது தெரியாமல் குருடர்  படித்துறையில் நீரில் நின்று இருவர் வேஷ்டியையும் அடித்து துவைக்கிறார். 

முடவர் பாடுகிறார்:  
தண்ணீரிலே  முழுதுமாக நனைத்து,மீண்டும் மீண்டும், நாம்  வேஷ்டியை  அடித்துத் துவைத்தால், அது நம்மை விட்டு ஓடிப்போய் விலகி செல்லாதோ, அதோ  ஆற்றில் மிதந்து போய் விட்டதே. விலகிச் செல்லாதோ.
 
குருடர் பதில்:
இந்த  (கலிங்கம்) ஆடை  நம்மை விட்டுப் போனாலென்ன, ஏகலிங்க சொரூபமாக மதுரையில் வீற்றிருக்கும்,
சொக்கலிங்கம்  துணையாக இருந்து வேறு வேஷ்டி தரமாட்டாரா? .

அம்மானை:  மூன்று பெண்கள் கூடி விளையாடுவது. அம்மானைக் காய்களை(மரத்தாலான சிறிய பந்து போன்ற உருண்டைகள்) மேலே  எறிந்து கீழே விழுங்கால் பிடிப்பதாக அமைந்த பாட்டு. இருபது முதல் இருபத்தைந்து வயதுடைய அரிவையர்கள் விளையாடுவது.   மூவரில் ஒருவர் தெய்வத்தைப் பற்றிப் புகழ்ந்து கூறுவது. அடுத்தப் பெண் கேள்வி கேட்பது. மூன்றாவது பெண் பதில் சொல்வது.    நிறைய  பிள்ளைத்தமிழ்  பாடல்கள் இவ்வாறு உள்ளன. முடிந்தால் ஒரு முறை இதை பற்றி எழுதுகிறேன்>

அம்மானை  விளையாடும்போது  காய்கள் கீழே விழக்கூடாது.  அவுட்.   செய்யுள்  நடையம் அது போல் துளியும்  மாறக்கூடாது.  கேள்விக்கு தக்க  பதிலும்  பாட்டில்  இருக்க வேண்டும்.  ரொம்ப கஷ்டமான வேலை இது.  ரெட்டைப்புலவர்கள் அதிசயமானவர்கள். இதை ஜம்மென்று செய்தவர்கள். 

ஒரு  அம்மானைப் பாடல்   மாடலுக்கு:   சிலேடை நயத்துடன் இரு பொருள் தருமாறு பாடியது:

"தென்புலியூர் அம்பலவர் தில்லைச் சிதம்பரத்தே  
வெம்புலியொன் றெந்நாளும்  மேவுகான் அம்மானை  
வெம்புலியொன் றெந்நாளும்  மேவுமே ஆமாகில்    
அம்பலத்தைவிட்டே அகலாதோ அம்மானை  
ஆட்டைவிட்டு வேங்கை அகலுமோ அம்மானை"

முன்னிரண்டு அடிகளை முதற் பெண்ணும், அடுத்த இரண்டடிகளை இரண்டாவது பெண்ணும்,  கடைசி அடியை 
மூன்றாவது பெண்ணும்  பாடுவது மாதிரி  இயற்றியிருக்கிறார்கள் .
பாடியுள்ளவாறு அமைந்துள்ள பாடல்.

அர்த்தம்: 
முதற் பெண்: தென்புலியூர் எனும் தில்லையில் புலி ஒன்று காக்கின்றது.
இரண்டாம் பெண்:  ஓஹோ அப்படியா,  அங்கே இருக்கிற புலி  அங்கிருந்து எப்போது வேறே இடம் செல்லும், அகலும்?.
மூன்றாம் பெண்:  ரொம்ப நன்றாக இருக்கிறதே உன் கேள்வி.  ஆடு இருக்கும்போது புலி விலகிப் போகுமா?

தில்லை நடராஜன் வீற்றிருக்கும் சிதம்பரத்தில்(தென்புலியூர்) முனிவர் வியாக்ரபாதர் (புலியின் காலை உடையவர்) எந்நாளும் வாசம் செய்கிறார். 
இரண்டாம் பெண்: அவர் தில்லையை விட்டு எப்போது விலகிச் செல்வார்.
மூன்றாம் பெண்: சிதம்பரம் நடராஜா வின் ஆட்டத்தில் நாட்டம் கொண்ட   புலிக்கால் முனிவர்(வியாக்ரபாதர்) கொஞ்சமாவது அந்த இடத்தை  விட்டு அசைவாரா?எந்நாளும்  விலக மாட்டார்.

முடிந்தபோது  இரட்டைப்  புலவர்கள்  இயற்றிய  தில்லைக் கலம்பகம், திரு ஆமாத்தூர் கலம்பகம், மூவர் அம்மானைப் பாடல்கள்,  கச்சிக் கலம்பகம் மற்றும் கச்சி உலா முதலிய பிரபந்தங்கள் மற்றும் பல தனிப் பாடல் திரட்டுகளை  முடிந்தால் தேடி படியுங்கள். குஷியாக இருக்கும். 

SUR DAS

 #ஸூர்_தாஸ்    நங்கநல்லூர்  J K  


ராதே உனக்கு கோபம் ஆகாதடி...


எலியும் பூனையுமாக  இருப்பார்கள்.  ஆனால்  எதற்கெடுத்தாலும்  கணவனின்றி மனைவியால் ஒரு காரியமும் செய்ய முடியாது. கணவனுக்கும்  அவள் இல்லை   யென்றால்  வலது கை  இல்லை. 
அன்பும் கோபமும் நிறைந்தது தான் வாழ்க்கை.  ரெட்டைகள் அவசியம். பகல் இரவு. உஷ்ணம். குளிர்ச்சி .  பிறப்பு இறப்பு..நல்லது கெட்டது. பாபம் புண்யம்.  அதுபோலவே தான்  காதலும் ஊடலும். 
கிருஷ்ணனுக்கு ராதையில்லாமல் ஒரு கணமும் வாழமுடியாது. ராதைக்கு கிருஷ்ணன் மட்டுமே வேண்டும்.  ஒவ்வொரு நாளும் குட்டி குட்டி சண்டை பிணக்கு  வரும். பேசாதிருப்பார்கள். சற்று நேரத்தில்  ஓடிப்போய் பேசுவார்கள். 
''என்னடி இது.  அவன் போகட்டும். வேண்டாம். நந்தகோபன் குமாரனைப் பற்றி நான் நேரம் செலவழிப்பது  தண்டம். எனக்கு சுகம் வேண்டாம். சந்தோஷம் வேண்டாம் என்கிறேன்.. ஆனால் என் உடல் ஏன் இப்படி  தஹிக்கிறது?. சந்திரனின் குளிர் கிரணங்கள் கூட  அதை தணிக்க முடியாமல் இன்னும் உஷ்ணம் அதிகரிக்கிறதே. ஏன்  அவன் முகம் எங்கும் தெரிகிறது? வாசலில், முற்றத்தில், பசு கொட்டகையில், வானத்தில்  பூமியில், மரத்தில், செடியில் மலரில், யமுனை நதிக்கு சென்றால் அங்கே, நீரலை மேல், எவனை வேண்டாமென்றேனோ அவனல்லவா  அவசியம் தேவையாகிவிட்டான்!'' என்கிறாள்  ராதை.
ராதைக்கு தோழி என்ன சொல்கிறாள்?    ஸூர் தாஸு க்கு தெரிந்து தானே சொல்கிறார்: 
'அடியே  ராதே,  போதுமடி  உன்  கர்வம், இந்த பொய்க்  கோபத்தை விடு.  உன்னால் கிருஷ்ணன் மேல் கோபப் படவே முடியாது. பூரண சந்திரன் போல் இருக்கும்  உன் முகம்  ஏன் களையிழந்து ஏதோ தேய்ந்து ஒளியற்ற ஒரு நக்ஷத்ரமாக  சுருங்கிவிட்டது?  நீ  என்ன  ரதி என்று மனதில் எண்ணமா? உன் மீது யாராவது கோபப்படுவார்களா?  உன்னை வேண்டாம்  நீ போ  என்று ஒதுக்குவார்களா?  வேண்டு மென்று அப்படி கிருஷ்ணன் ஒருநாளாவது சொல்வானா ?  ராதே உனக்கு கோபம் ஆகாதடி.    அவன் எவ்வளவு துடிக்கிறான் தெரியுமா, உன்னை பார்க்காமல், பேசாமல்?  அவனோடு பேச விளையாட ஓடி ஆட எத்தனை பேர்  காத்துக்  கொண்டிருக்கிறார்கள்  தெரியுமா உனக்கு?  நீ இடத்தை காலி செய்தால்  அடுத்த கணமே பலர் அதற்கு போட்டி போட்டுக்  கொண்டு வருவார்களே. நஷ்டம் உனக்கு தான் பெண்ணே!. உனக்கு மட்டும் என்று சொல்வதற்கு கிருஷ்ணன் உன் புருஷனா என்ன?
எழுந்திரு பெண்ணே, வாசலில் எட்டிப்பார், அதோ  எதிரே  உள்ள  அந்த புன்னை மரம்  பின்னால் நின்று  கொண்டு நீ எப்போது வெளியே வருவாய் பேசலாம் என்று காத்திருக்கிறான் பார். எழுந்து ஓடு  அவன் காலில் விழு . எல்லாம் மறந்து  போய்விடும் மீண்டும் நீங்கள் இருவரும் விளையாடுவீர்கள். இதயத்தில் இருப்பவர்களை எளிதில் கழட்டி விட முடியாது என்று தெரிந்துகொள். புரிந்து கொள் .

0 my friend—!
1 am wasting away myself
loving that son of Nanda,
the prince of Braj.
It is all so useless.
I threw away all the joys, all the pleasures,
and endured the arrows of Kama.
Even the cool rays of moon
burn my body like fire.
Still, I see him, his face, his vision
in the house, in the courtyard
here and there.
On the banks of Jamuna.
The only desire
that is left in me
is to give up everything,
and specially to renounce my Lord.

O Proud One !
give up your anger.
your face, that was bright as the moon
is now like a faint star.
who would, O friend,
deceive you
intentionally?
Because of your pique
Krishna has no rest
not for a moment.

You are proud, because you think
you are more beautiful
than Kama’s wife Rati,
that Krishna is your husband.

There are women in Braj
scheming to take your place.
O Radha, you don’t see the harm
y ou are doing to yourself.

Surdas says, clever Krishna
is now falling at your feet,
take him and hold him close
to your heart.

Friday, May 27, 2022

life lesson

மனதில் பதியட்டும்  - 19  -  நங்கநல்லூர்  J  K  SIVAN

இந்த  உலகில் பிறந்த  எவரும்  எந்த  நாட்டிலும், எந்த மொழி பேசினாலும், ஏழையோ பணக்காரனோ, படித்தவனோ படிக்காதவனோ,  ஆணோ பெண்ணோ,  யாராக இருந்தாலும்  கஷ்டங்கள்  ஏதாவது அனுபவிக்காதவர் எவரும் இல்லை.  கஷ்டங்களைச் சொல்லிக் கொள்ளாமல் யாராலும் இருக்க முடியாது.  மற்றொரு ஜீவனிடம்  வெளிப்படச் சொன்னாலே அதில் ஒரு நிம்மதி பிறக்கிறது.  இது மனித ஸ்வபாவம் மட்டும் இல்லை, உலக நியதி. 

பாரத தேசம், அதிலும் குறிப்பாக  நமது தமிழ்நாடு ஒரு குளிர்சாதன பெட்டி மாதிரி. அதில் எதை வைத்தாலும் குளிர்ச்சியாக்கி  கெடாமல் பாதுகாத்து தரும்.  அது  போல எல்லா பாஷைகளையும், எல்லா நாகரீகங்களையும் கெடாமல் குளிர்ச்சியுடன் மனா நிறைவோடு  காத்துத் தந்து வந்திருக்கிறது. தமிழ்நாட்டில்  எது  நிறைந்திருக்கிறது? பாரதியார் தான் ஏற்கனவே சொல்லி விட்டாரே, '' வேதம் நிறைந்த தமிழ்நாடு'' என்று. அது உண்மை..

வியாதி வந்த பின்பு மருந்து சாப்பிட்டுப் போக்கிக் கொள்ளுவதைக் காட்டிலும் வராமலே தடுத்துக் கொள்வது தான்  வருமுன் காப்பது.   உபவாசம் விரதம்  எல்லாம்  ஒரு பத்தியம் மருந்து மாதிரி..  

மனது ஈரக் களிமண்  மாதிரி,  பிசைந்தால்  உருட்டினால் எந்த  உருவமும்  பண்ண முடியும்.  மிகவும்  மோசமான இடத்தில் மனதை வைத்தால் கீழான எண்ணங்கள், செயல்கள்  உண்டாகிறது. மேலான இடத்தில் மனதை வைத்தால் மேலான பிரம்ம  வித்தாக ஆகமுடியும்.  ஈசுவர சரணாரவிந்தத்தில் மனது லயித்தால்,  அப்படிப்பட்ட ஒரு  உயர்ந்த நிலையை எவரும் பெறலாம்.

குழந்தைகளால் சொல்லப்படும் ஒரு விஷயத்துக்குப் பெருமை அதிகம். குழந்தைதான் தெய்வம். அவர்களிடத்தில் காமக்  குரோதங்கள் இல்லை. 'குழந்தையாக இரு' என்று உபநிஷத் சொல்லுகிறது.

'சிவ' என்ற இரண்டு அக்ஷரங்களை எப்பொழுது சந்தர்ப்பம் நேர்ந்தாலும் உச்சாடனம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டும். மஹா பெரியவா  எப்போதும்  எதை சொல்லும்போதும் முதலில் சிவ சிவா  என்று சொல்லு  என்பார்.   எந்த ஜென்மம் வந்தாலும் அதை மறக்காமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் ஜென்மமே இல்லாத பரம சாந்த நிலை உண்டாகும்.

ஏற்கனவே  சொன்ன ஒரு குட்டிக்கதை இன்னொரு தரம் சொல்கிறேன்.  ஒரு  பிரபு எஜமானிடம்   ரெண்டு வேலைக்காரர்கள்.. ஒருவன் எப்பொழுதும் எதிரில் நின்று கொண்டு பிரபுவை  புகழ்ச்சியாக பேசிக்கொண்டே  இருப்பவன் . இன்னொருவன்  பேசவே மாட்டான். எஜமான்  எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டுமென்று நினைக்கிறாரோ அதைச்  செய்து முடிப்பவன்.  வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு,  எஜமான் எதிரே  நின்று வணங்கிக் கொண்டு ற்பவன் மீது தான் பிரபு அதிக பிரியம் வைத்துள்ளார் என்று தோன்றும்.  ஆனால்,  தான் சொல்லாமலேயே  எல்லா  வேலையும்  கச்சிதமாக  செய்கிறவனிடத்தில் தான் எஜமானுக்கு  பிரியம்அதிகம்  இருக்கும். இது போல் தான் ஈஸ்வரன் என்கிற நமது எஜமானுக்கு.   வெறும் ஸ்தோத்திரம் செய்தால் மட்டும்  நம் மீது அதிகப் பிரியமாக இருப்பான் என்று நினைத்து விட வேண்டாம்.   இதய பூர்வமாக கடமையைச் செய்தால்  ரொம்ப பிடிக்கும் 

'' குரு'' என்றால் கனமான, பெரிய  என்று ஒரு அர்த்தம்.  அதாவது பெருமை உடையவர். மகிமை பொருந்தியவர் என்று பொருள். பெரியவர்களை 'மஹா  கனம் பொருந்திய' என்று சொல்கிறோம். கனமென்றால் வெயிட் அதிகமென்றா அர்த்தம்? உள்ளுக்குள்ளேயே அறிவாலோ, அனுபவத்தாலோ, அருளாலோ பெருமை பெற்றவர் என்று அர்த்தம். ஆசிரியர் என்பவர் படிப்பிலே பெரியவர். நடத்தையால் வழிகாட்டுவதில் சிறந்தவர். குரு என்றால் இருட்டைப் போக்குபவர் என்று சொல்கி றார்கள். குருவிடமிருந்து புறப்பட்டுப்  போய், சீடனுக்குள்ளே புகுந்து, அவனை ஒரு மார்க்கத்தில் தீவிரமாகத் தூண்டிச் செல்லுவதை     'தீக்ஷை ' என்கிறோம். 

மீனாக்ஷி என்ற பெயரிலேயே மீன் இருக்கிறது. இதனால் அவளை கடாக்ஷத்தாலேயே ஞான தீட்சை தந்துவிடும் குருவாகச் சொல்லியிருக்கிறார்கள். இது மத்ஸ்ய தீக்ஷை.   காமாக்ஷி  பக்தனை ஸ்பரிசித்து, அவன் தலையிலே பாதத்தை வைத்து ஞானியாக்குபவள். . ஞானகுரு ரூபிணியாகவே அம்பாளைப் பாவித்துத் திருவடி தீக்ஷை பெரும் மஹான்கள் நம்மில் பலர்  வெளியே தெரியாமல்  சாதாரணர்கள் போலவே  வாழ்ந்து கொண்டு  இருக்கிறார்கள். 

Thursday, May 26, 2022

SURI NAGAMMA

 

#ரமண_மஹரிஷி   -  நங்கநல்லூர்  J K  SIVAN
சூரி நாகம்மா

 ' எனக்கு எதற்கு மருந்து?''

ரமணரின் ஆஸ்ரமத்தில்  பக்தர்கள் எந்நேரமும் இருந்து கொண்டே இருப்பார்கள்.  வருவோர்  போவோர்  அதிகம்.  அமைதியான  சூழ்நிலை யில் அன்றும்  காலை  வழக்கம் போல்  எல்லோரும்  அமர்ந்திருந்தோம்.  எந்த நேரமும் பகவான்   வருவார்  என்று சொல்லும்போதே  பகவான் வந்து அமர்ந்தார்.   அப்போது அங்கு வந்த நாகனார் என தமிழ் கவிஞரான  பக்தர்  பகவானை வணங்கினார்.''

''எப்போ வந்தீர்கள்?''   என்று  பகவான் அவரை கேட்டார்.

''இப்போது தான்''  என்ற  நாகனாரிடம்   ''அதோ அங்கே தான் அழகம்மா நிர்வாணம் எய்தினாள் '.
பகவான் ஒரு சமாதியை  கை  நீட்டி  காட்டினார்.
''அதோ அங்கே  தான் உட்கார்த்தி வைத்தோம். முகத்தில் மரண சாயை  கொஞ்சம் கூட தெரியவில்லை. நீண்ட சமாதியில் இருப்பது போல முகம் தோன்றியது. ''
ஏதோ தனக்கு சம்பந்தம் இல்லாத  ஒன்றைப் பற்றி சொல்வது போல் இருந்தது மஹரிஷியின் பேச்சும் குரலும்.

பகவானின் தாயார் அழகம்மாவுக்கு  சமாதியை எழுப்பி அதன் மேல் மாத்ருபூதேஸ்வரர் லிங்கம் பிரதிஷ்டை பண்ணியாகி விட்டது. இன்றும்  ரமணாஸ்ரமம் செல்லும்போதெல்லாம்  அந்த  சமாதி  ஆலயத்தை தரிசிக்கும்போது மனதில் ஒரு வித சொல்ல இயலாத அமைதி பரவுகிறது.

பகவான் அருகில் நாள் கணக்கில் பேசாமல் அமர்ந்திருந்தால் ரமணராகி விட முடியுமா? ஆத்ம ஞானம் அடைய பாடுபட வேண்டாமா?

ஆஸ்ரமத்தில் மஹரிஷிக்கு   எண்ணெய் தடவி காலை பிடித்து விடும் கைங்கர்யம் சிலர் செய்தார்கள். அவர் எதையுமே லக்ஷியம் செய்யவில்லை.

 ''நானும் கொஞ்சம்  உங்களைப் 
போல புண்யம் செய்கிறேனே'' என்று சொல்லி  பிறருக்கு  ஏதோ உதவுவது போல  மஹரிஷியே தனது கால்களை பிடித்து விட்டுக்  கொண்டார். அவரைப் பொறுத்தவரை தனது உடலுக்கு செய்யும் பணி யாருக்கோ செய்வது போல.   தேஹ நினைப்பே இல்லாதவர் அல்லவா?  

 ஒரு 70 வயதான ஜட்ஜ்   ''நான் சிறிது நேரம் உங்கள் காலைபிடித்து விடட்டுமா? என்று  கேட்டார்..
''முதலில் உங்களுக்கு நீங்கள் உதவி செய்து கொள்ளுங்கள். உங்களில் இருக்கும் அமைதியை தேடி அடையுங்கள்''
 இதற்கு மேல் என்ன உபதேசம் தேவை?
காலம்  ஓடிக்கொண்டே இருக்கிறதே.  எப்படியும்  ஒரு  வருஷம் இருக்கலாம்.  

ஒருநாள்   ராமச்சந்திர ராவ்  என்ற ஒரு  ஆயுர்வேத டாக்டர் வந்திருந்தார் . ரொம்ப பேருக்கு அவரை பிடிக்கும்.  பிரபலமானவர்.  நல்ல கை ராசி டாக்டர் என்று பேர்.  பகவானின் எண்ணற்ற பக்தர்களில் அவரும் ஒருவர்.  பகவானை தரிசித்தவர் மெதுவாக அவர் எதிரில் வணங்கி நின்று 

'சுவாமி  உங்கள் உடல் நல  ஆரோக்கியத்துக்கு  சில மூலிகைகள்  மருந்துகள் பெயர்,   தேவையான அதன் அளவு   எல்லாம் எழுதிக் கொண்டு வந்திருக்கிறேன். இவை கிடைத்தவுடன்  உங்கள் கால் வலிக்கு மருந்து தயார் செய்து  விடுவேன்''  என்று  சுவாமியிடம்  ஒரு நீள  பட்டியலை பவ்யமாக  நீட்டினார்.

நல்ல பிள்ளையாக  பகவான் அந்த பட்டியலை பொறுமையாக படித்தார்.
''நல்ல சக்தி வாய்ந்த மூலிகைகள் போல  இருக்கிறதே. அது சரி, யாருக்கு இதெல்லாம்?''
''பகவானின் உடல் நலம் பெற''
''ஓ  அப்படியா, ரொம்ப பெரிய  பட்டியலாக இருக்கிறதே.  இதெல்லாம் வாங்க பத்து ரூபாய்க்கு மேல்  தேவைப்படும் போல இருக்கே!  யாரிடம் கேட்பது?

அருகில் இருந்தவர்  ஆஸ்ரமத்தை சுற்றிலும் நோக்கினார்.   
''சுவாமி  இந்த   ஆஸ்ரமம் யாருடையது?''
''ஓ,  இந்த  ஆஸ்ரமம் இருக்கே  என்கிறாயா. என்னிடம் என்ன இருக்கிறது?   ஒரு ஓட்டைக் காலணா வேண்டுமானால் கூட ஆஸ்ரம  சர்வாதிகாரியை தான் கேட்க  வேண்டும். இவ்வளவு பெரிய  மூலிகை ஜாபிதாவுக்கு எப்படி அவர்களிடம் பணம் கேட்க  முடியும்.   எனக்கு ஏதோ கொஞ்சம்  ஆகாரம் அளிக்கிறார்கள்.போஜன கூடத்தில் மணி அடித்தால் போய் எல்லோருடனும் அமர்ந்து  நானும் சாப்பிடுவதோடு சரி. லேட்டாக போனால்  எனக்கு அன்றைக்கு   சாப்பாடு கூட கிடைக்காது. நான் எப்படியும் கடைசியாகத்  தான் போய் நிற்பேன். சாப்பிடுவேன்.

ராவ்  நடுங்கினார்.  கையெடுத்து மஹரிஷியைக்  கும்பிட்டார்.
 ''பகவானே,  நான் உங்களிடம் அந்த மூலிகை பட்டியலை தான் காட்டினேன்.  பணம் கேட்கவில்லை. நானே  அந்த  மூலிகைகளை மருந்துகளை சேகரித்துக் கொண்டு வருகிறேன். வெகு சீக்கிரத்தில் மருந்து தயாரிக்கிறேன் ''  என்றார்

'அப்படியா,  நீயே  தேவையான  மருந்து மூலிகைகளை தேடி சேகரித்துக் கொள்வாயா?  அந்த மருந்து எனக்கு நல்லது செய்யும் என்றால் இங்கு எல்லோருக்குமே  கூட நல்லது தானே செய்யும். எனக்கும் இங்கு இருக்கும் எல்லோருக்கும் கூட  தர முடியுமா?''  என்று கேட்டார்  அந்த டாக்டரிடம் பகவான்.

அதற்குள் ஆஸ்ரமத்தில் ஒருவர்  ''எங்களுக்கு எதற்கு  சுவாமி மருந்து?''  என்றார்.

''ஓஹோ  காலையிலிருந்து இரவு வரை உழைக்கும் உங்களுக்கு மருந்து தேவையில்லை என்றால்  பேசாமல்  உட்கார்ந்து கொண்டு சாப்பிடும் எனக்கு எதற்கு மருந்து?  எனக்கும்  மருந்து மாத்திரை ஒன்றும் வேண்டாம்'' என்றார் பகவான்.

சூரி நாகம்மாவின்  கண்களில்  இருந்து எந்த விஷயமும் தப்பவில்லை என்று தெரிகிறது.


sundaramurthi nayanar

 


தம்பிரான் தோழர் -  நங்கநல்லூர்  J K  SIVAN 

'எல்லோருக்கும் நான்  அடிமை.'  
 
பதினெட்டு வயதே வாழ்ந்த  சுந்தர மூர்த்தி நாயனார்  ஒரு  அதிசயப்  பிறவி. அவரைப் பற்றி படித்தேன். அதை  சில பதிவுகளாக  ''தம்பிரான் தோழர்'' என்று எழுதியது எனக்கே பிடித்திருந்தது.   இவ்வளவு சின்ன வயதில் இத்தனை பக்தியா, புலமையா,  சிவஸ்தல தரிசனமா, இத்தனை பாடல்களா  --  அவைகளில் பொதிந்து கிடைக்கும் அற்புதங்கள், அதிசயங்கள்... அடடா,  இப்படி ஒரு சிவனடியாரை தரிசிக்க எத்தனையோ ஜென்மத்தில்  புண்யம் பண்ணி இருக்க வேண்டும்

சிவபெருமானின் நெருங்கிய  தோழர் மட்டுமா,  சிவனையே  உரிமையோடு  நிந்தித்த ஒரே  வன்தொண்டர். சுந்தரரை பிடித்திருக்காவிட்டால்  சுந்தரர் சொன்னதை எல்லாம் சிரமேற் கொண்டு சிவபிரான் செயதிருப்பாரா? நிறைவேற்றியிருப்பாரா? இதற்கு காரணம்   ''சுந்தரத் தமிழ்'' அவ்வளவு சக்தி வாய்ந்தது.   இந்த சுந்தரரை படைத் ததே  அவர்  அறுபத்து நாயன்மார்களையும் பற்றி  நினைவு கூர்ந்த  திருத்தொண்ட தொகை பாடுவதற்கு தான்.
அறுபத்து மூன்று நாயன்மார்களையும்  பற்றி  படித்துவிட்டு  எழுத ஆரம்பித்து விட்டேன்.

''அத்தனை பேருக்கும் நான் அடிமை'' என்கிறாரே சுந்தரர் ..என்ன பவ்யம். எவ்வளவு  பணிவு. பக்தி.  ஒரு நாயன்மாரையும்   விடாமல் அவர்கள் பெயர்களைச்  சொன்னதால் தான் பின்னர் சேக்கிழார் பெரிய புராணத்தில் அவர்கள் சரித்ரத்தை எல்லாம் நமக்கு   பெரிய புராணமாக  அளித்திருக்கிறார்.  எத்தனை சிவன் கோவில்களுக்கு  எவ்வளவு முறை  சென்றிருக் கிறோம். பிரகாரத்தில் ஒரு ஓரமாக வரிசையாக 63 நாயன்மார்கள்  சிலை வடித்து வைத்திருக்கிறார்களே,  சில கோவில்களில் அவர்கள் பெயர்கள் கூட பொறித்து வைத்துள்ளார்கள்.  ஒரு  நாளாவது பொறுமையாக அவர்களது  பெயர்களையாவது படித்து  நாம்  தெரிந்து கொள்வதுண்டா? . அந்த நேரம் தான்   ப்ரஹாரத்தில் ஆளே இல்லாமல்  நமது நடை வேகமாக செல்கிறது. பிரசாதம் வாங்க மறப்பதில்லை. அங்கே தான் கும்பல்.

நாம்   விசித்ரமானவர்கள் தான்.  சரி இப்போது நான் உங்களை விடப்போவதில்லை.  சுந்தரரின் திருத் தொண்டதொகை   எளிமையாக இருக்கிறது. வெறும் பெயர்கள். அவர்களுக்கெல்லாம் நான் அடியேன், அடிமை என்ற வாசகம் தான்.  
அதை முழுமையாக  பதிவிடுகிறேன். இப்போதாவது அந்த பெயர்களையாவது படியுங்கள். 

சுந்தரரின் எளிமை, இதோடு நிற்கவில்லை.  இந்த அறுபத்து மூன்று நாயன்மார்களை விட ஒரு படி மேலே போய்   யார் யார் சிவபக்தர் களோ, சிவனைப் பணிபவர்களோ அவர்கள் எல்லோருக்கும் நான் அடிமை.  சிவனைப் பாடுவோர்கள்,  அதைக் கேட்டவர்களுக்கு கூட நான் அடிமை.  சிவனை யார் நினைத்தாலும் அவர்களுக்கெல்லாம்  ஒரே அடிமை நான் தான்.  சிவன் மீது மனதை வைக்காவிட்டால் கூட பரவா இல்லை.   நீங்கள்  திருவையாற்றில் பிறந்தவரா?  அப்படி யென்றால்  உங்கள் எல்லோருக்குமே  நான் அடிமை.   ஓஹோ,.  நீங்கள் பிறந்தது திருவாரூர் இல்லையா, வேறு எங்கோவா? அப்படியானால் என்ன?  விபூதி பட்டை யாக பூசுபவராக தெரிகிறதே. அது போதுமே. நான் உங்கள் அடிமை தான்.  விபூதி பூசுபவராக இல்லாவிட்டாலும்  விபூதி பூசு பவரையாவது  மதிப்பவரா, அவர் பின்,  பக்தியோடு செல்பவரா?  அப்படியானால்  என்னை உங்கள் அடிமையாகப்  பாருங்கள்''  என்கிறார் சுந்தரர். இப்படி ஒருவரைப் பற்றி பேசுவதே பாக்கியம் இல்லையா? அப்படியென்றால் எனக்கும் கைலாசம் ஒருவேளை கிடைக்கலாம் போல் இருக்கிறதே. 
    
  திருத்தொண்ட தொகை.- சுந்தரர்

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
 ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.7.39.1

இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்
 ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்
 கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.7.39.2

மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
 ஆரூரான் ஆரூரில் அம்மானுக் காளே.7.39.3

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
 ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
 ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.7.39.4

வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.7.39.1

வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்
கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன்
கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.7.39.6

பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்
விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.7.39.7

கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
 நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
 தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.7.39.8

கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை
மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.7.39.9

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.7.39.10

மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
 ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே’’



Wednesday, May 25, 2022

SURDAS

 


ஸூர்தாஸ்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

''பார்த்தசாரதி  வாழ்க்கைப்  படகையும்  ஒட்டு ...    

கிருஷ்ணனுக்கு  ஏன் இத்தனை பெருமை, மஹிமை.  அவன்  தர்மம், நேர்மை, நியாயம், அன்பு, பாசம்,  இவற்றின்  உருவகம்.  நான் எங்குமிருக்கிறேன், எதிலுமிருக்கிறேன் என்று கிருஷ்ணன்  சொல்வதன் அர்த்தம் என்ன?  உண்மையில் அன்பு பாசம், எல்லோரிடமும் சரிசமமான நேர்மை நியாயம்  எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் கிருஷ்ணன் இருப்பதாக அல்லவோ எடுத்துக் கொள்ளவேண்டும்.  அவற்றின் பெயர் தானே  கிருஷ்ணன்?

''ஹே,  கிருஷ்ணா, நான் எதைச்  சொல்வேன், என்னத்தைச்  செய்வேன் சொல்? என் அகம்பாவம் என்னை ஆட்டிவைக்கிறது. என் செயலுக்கு நீ தான் பொறுப்பேற்க வேண்டும். உனக்கு தான் எல்லாமே தெரியுமே. என் செயலால் எது ஆகும்? என் தகுதி என்ன? என்னால் இயன்றது என்ன? நானாக நினைத்தது எல்லாம் நிறைவேறவா முடியும்?

பெண்டாட்டி, பிள்ளை, சுற்றம் உறவு, எல்லாமே சந்தையில் கூட்டம் -- ஏதோ கொஞ்சநாள் ரயில் சம்பந்த உறவு.   காலம் தான் தலை தெறிக்க  வேகமாக ஓடுகிறதே. எல்லாமே எனக்கு மறந்து போயிற்றா, மறைந்து போயிற்றா?

பணத்துக்கு  அடிமையாகி விட்டேனப்பா.  எனக்கு எது செய்யவேண்டியது, எதை செய்யக்கூடாது என்று  அறியும் அறிவு இல்லாமல் மழுங்கி போய்விட்டதே

என்னை இங்கேயிருந்து கழற்றி விட்டு விடப்பா,  கண்ணப்பா, என் வாழ்க்கைத்  தோணி நிறைந்து போய்விட்டது இனி எதற்கும் இதில் இடமில்லை. ஒரு சிறு கடுகை ஏற்றினால் கூட முழுகி விடும்.

எந்தநேரமும் நான் படகோடு  நீரில் மூழ்கி மறையவேண்டும். வா வந்து காப்பாற்றி கரைசேர்த்து உன்னிடம்  அழைத்துக் கொள் .

ஸூர் தாஸ் அற்புத கிருஷ்ண பக்தன். தன்னையே அர்ப்பணம் பண்ணிக்கொண்டு எவ்வளவு அழகாக பாடியிருக்கிறார் பாருங்கள்.';'
                         
நாம் ஆச்சர்யம் மேலிட்டு   ஆச்சர்யத்தோடு   சந்தோஷமாக இருப்பதை ''மூக்கின் மேல் விரலை வைத்து'' என்று சொல்வோமே   ஞாபகமிருக்கிறதா? என்னை ஆட்கொண்ட மிகப் பெரிய ஆச்சர்யம் ஒரு ஓவியனின் கற்பனா சக்தி . கண் பார்வை அற்ற ஸூர்தாஸ் மூச்சுக்கு முன்னூறு அல்ல மூவாயிரம் கிருஷ்ண நாம ஜபம் செய்பவர். அதை அழகிய கவிகளால் வெளிப்  படுத்துபவர். அதை கேட்கும்போது நம்மை எங்கோ தேவ லோகத்தில் கொண்டு செல்கிறது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். குட்டியாக கிருஷ்ணனே நேரில் வந்து அவர் எதிரில் வந்து  கால்களை  மடக்கி சப்பணம்  கட்டிக்கொண்டு பதவிசாக அமர்ந்துகொண்டு இடது கன்னத்தில் கை வைத்து குனிந்து அவர் கவி பாடுவதை ரசித்துக்கொண்டிருக்கிற மாதிரி எப்படி அந்த ஓவியனுக்கு வரையத்தோன்றியது.   யாரிந்த  பாக்கியசாலி  ஓவியன்?  கிருஷ்ணன் கண்களில் ஆச்சர்யம், புன்முறுவல்.

'ஹே ஸூர்தாஸ் தாத்தா, நான் செய்தது பெரிதல்ல, நீ அதை ராகமாக செவியினிக்க பாடி நேரில் நடந்ததைப் பார்த்தாற்போல் பாடுவது தான் அபூர்வம்'' என கிருஷ்ணன் சொல்வதைப் போல் ஓவியம் தீட்டிய நீ யார் அப்பா? ஆனால் நீ மிக உயர்ந்த கிருஷ்ண கடாக்ஷம் பெற்றவன் என்று மட்டும் நிச்சயமாக சொல்வேன்''

 ஸூர்தாஸ்   மீராபாய்  போல்  அற்புதமான கிருஷ்ண  பக்தி கானங்கள் இயற்றி பாடியவர்.  இயற்கையிலேயே கண் பார்வை இழந்தவர்.

டில்லி பாதுஷா  ஒளரங்க சீப் காலத்தில் வசித்தவர்.  கிருஷ்ணன் அவதரித்த மதுராவில்  கிருஷ்ணா கத்ர தேவ் எனும்  கிருஷ்ணன் ஆலயத்தில் வசித்து வாழ்ந்தவர்.  அது இப்போது கிருஷ்ண ஜென்ம பூமி  என அழைக்கப்படுகிறது.  முஸ்லீம் அரசாட்சியில் இந்த ஆலயம்  அழித்து தரைமட்டமாக்கப்பட்டது  ஒரு அநியாயமான செயல். என்ன செய்வது?

तुम मेरी राखो लाज हरि
तुम जानत सब अन्तरयामी
करनी कछु न करी
तुम मेरी राखो लाज हरि

औगुन मोसे बिसरत नाहीं
पल चिन घरी घरी
तुम मेरी राखो लाज हरि
दारा, सुत, धन, मोह लिये हौं
सुध बुध सब बिसरी
अब मोरी राखो लाज हरि
सूर पतित को बेगि उबारो
अब मोरी नांव भरी

Tum meri rakho laz hari
Tum janat sab antaryami
Karni kuch na kari
Tum meri rakho laz hari
Awgun mose vichrat nahi
Pal chin ghadi ghadi
Ab prapanch ki ott bandhke
Apne preet ghadi
Tum meri rakho laz hari
Dara sut dhan moh liye hai
Sudh budh sab bisri
Ab meri naw ubhari

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...