Friday, May 13, 2022

SOORDHAS

 ஸூர்தாஸ் -   நங்கநல்லூர்  J K  SIVAN 


''கன்னத்தில் முத்தம்''

ஆஹா  இருள்  விலகிவிட்டது.  வானத்தில்  வெளிச்சம் தெரிகிறது.  சூரியன்  எங்கோ  இருக்கிறான். கன்னுக்குத் தெரியாமலேயே  ஒளி வீச ஆரம்பித்துவிட்டான். இன்னும் கொஞ்ச நேரத்தில் கிழக்கே  சிவப்பாக  தலை நீட்டுவான். பக்ஷிகள் கூட்டை விட்டு தலையைத் தூக்கிப்  பார்க்கின்றன.  வெளிச்சம் போதும்,  இரை எங்கே இருக்கிறது என்று தேட கண் இனிமேல் தெரியும். பறந்து போய்  சாப்பிட  ஏதாவது கிடைக்கும்.
 
கன்றுக்குட்டிகள் அம்மா  என்று குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டன.  அதே  ''அம்மா'' சப்தம்  பசுக்களிடமிருந்தும் வருகிறது.  ''எங்களை அவிழ்த்து விடுங்கள்  அல்லது எங்கள் கன்றுக் குட்டிகளை அவிழ்த்து விடுங்கள்  அவைகளுக்கு பால் தரவேண்டும் ''  என்று அர்த்தம் அதில் த்வநிக்கிறது.

''என் செல்லக்குட்டி,  கண்ணா, கருமை நிற வண்ணா, புளியங்கொட்டை மாதிரி என்ன பளபளப்பு உன் தேகத்தில். 
எழுந்துக்  கோடா,  பெரிய  காந்த சக்தி கொண்ட உன் விசாலமான  கண்களை விரித்து நீயே பார். எப்படி பொழுது புலர்ந்து விட்டது என்று தெரியும். நான் பொய் சொல்லவில்லை என்று உனக்கு தெரியும் '' என்று கொஞ்சினாள் யசோதை.  தொட்டிலில் படுத்தவன் சிரித்தான். தலையை ஆட்டினான். 

'ஆமாண்டா  செல்லம், இருட்டு போய்விட்டது. பகலின் சாம்ராஜ்யம் தான்.   சோம்பல் இனிமேல்  ஓடிவிடும்.  ஜில்லென்று சுகமாக  காற்று வீசுகிறது பார். எப்படி  ஒரு புத்துணர்ச்சி எல்லா ஜீவன்களுக்கும் தருகிறது பார்.
வாசலில்  உன் நண்பர்கள்  வந்து நீ  எழுந்துட்டியா என்று கேட்கிறார்கள்.  எல்லாரும் உன் போலவே ஒரு பசு கன்றுக் குட்டியோடு வந்து நிற்கிறார்களே .  

அது எப்படிடா  உன்னை மட்டும் எல்லோரும்   தாமரைப் பூக்களை தேன்  வண்டுகள் ரீங்காரமிட்டு சுற்றுவது போல் சூழ்ந்து கொள்கிறார்கள்?. என்ன மாய மந்திர சக்தி இருக்கிறது உன்னிடம்? என்று கண்ணனின் கன்னங்கள் இரண்டிலும் மாறி மாறி  முத்தமிடுகிறாள்  யசோதை. 

ஸூர் தாஸரின்  ஒரு அருமையான பாடலின் அர்த்தம் இது.  ஆங்கிலத்தில் தான் கிடைத்தது எனக்கு. 

Awake, O Krishna awake,
the night has gone arise,
no longer laze breathe the pure air of early morn;
the cowherd-lads come and gaze at you,
and seeing you asleep,
depart as swarms of bumblebees
fly from the lotus clusters.
O darling boy,
dark as the tamala,
if you don't believe me,
open your large eyes
and see for yourself.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...