Tuesday, May 10, 2022

BAJAGOVINDAM


 



ஆதி சங்கரர் - நங்கநல்லூர் J K SIVAN
பஜகோவிந்தம்

கும்பிடு, கூப்பிடு கோவிந்தனை.- 7


20. भगवद् गीता किञ्चिदधीता गङ्गा जललव कणिकापीता ।
सकृदपि येन मुरारि समर्चा क्रियते तस्य यमेन न चर्चा ॥ २०॥

Bagavat geetha kinchid adheetha, Gangaajalalava kanikaa peetha,
Sukrudhapi yasya murari samarcha, Tasya yama kim kuruthe charchaam.

பகவத் கீதா கிஞ்சித்த தீதா கங்காஜல லவ கணிகா பீதா
சக்ரிதபி என முராரி சமர்ச்சா க்ரியதே தஸ்ய யமேன ந சர்சா

இந்த அருமையான ஸ்லோகத்தை எழுதிய ஆதிசங்கரரின் சிஷ்யர் த்ரிடபக்தர். இப்படி ஒருவர் சிஷ்யரா? உண்டா? என்றால் உண்டு என்று இதன் மூலம் அறிவது சால சிறந்தது. அவர் என்ன சொல்கிறார்:

‘’ஹே மனிதா! நல்ல பிள்ளையாக நான் சொல்வதைக்கேள். நீ அதிகம் ஒன்றுமே செய்யவேண்டாம். வெகு சுலபமாக நம்மைத் துரத்தி வரும் இந்த யமனை விரட்ட ஒரு ரகசியம் சொல்கிறேன். அதைக்கேட்டு அதன்படி நட. அது போதும்.

கேள். ஒன்றோ ரெண்டோ, சில ஸ்லோகங்களே போதும், எதிலிருந்து? , பகவத் கீதையிலிருந்து தான், இதைத்தவிர ஒரு உத்ரணி கங்கா ஜலத்தைப் பருகு, எப்போதாவது ஒரு தரமாவது அந்த முராரியை நினைத்து தொழு. இதெல்லாம் செய் து முடித்துவிட்டாயா? இப்போது திரும்பிப்பார். உனக்குப் பின்னால் எப்போதும் தொடர்ந்து வந்த ஒரு கருப்பு எருமை மேல் கையில் கயிற்றோடு ஒருவன் உன்னை பிடிக்க வந்து கொண்டிருப்பானே , எங்கே அவன்? நீ செய்த காரியங்கள் அவனை எங்கேயோ விரட்டி விட்டதா? எங்கே போனான் அந்த யமன்?''
நண்பர்களே, இந்த ஸ்லோகத்திலிருந்தாவது அந்த கோவிந்தனின் நாமத்துக்கு என்ன சக்தி என்று புரியுமே . விடாமல் சொல்ல ஆரம்பிக்க வேண்டியது தான் இனிமேல் ''ஹே கோவிந்தா, ஹே கோபாலா, ஹே முராரி! . சொன்னால் வாயினிக்குமே.


21.पुनरपि जननं पुनरपि मरणं पुनरपि जननी जठरे शयनम् ।
इह संसारे बहुदुस्तारे कृपयाऽपारे पाहि मुरारे ॥ २१॥

punarapi jananaM punarapi maraNaM punarapi jananii jaThare shayanam.h .
iha saMsaare bahudustaare kRipayaa.apaare paahi muraare

புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனீ ஜடரே சயனம்
இஹ சம்சாரே பஹுது ஸ்தாரே க்ருபயா பாரே பாஹி முராரே

இந்த ஸ்லோகத்தின் கர்த்தா ஆதிசங்கரரின் மற்றொரு சிஷ்யர் நித்தியானந்தர். இந்த ஸ்லோகம் அநேகருக்கு தெரிந்த ஒன்று. பிரபலமானது. நித்யானந்தர் என்ன சொல்கிறார் தெரியுமா:

'' மனிதா, உன் சரித்திரத்தை புரட்டிப்பார். தொடர்ந்து மீண்டும் மீண்டும் பிறப்பு, பிறந்த பின் மரணம், மறுபடியும் பிறப்பு. தாயின் கருவறை எனும் சிறைக்கு மீண்டும் விடாது செல்லும் இந்த எல்லையில்லா சம்சாரக்கடலில் தத்தளிப்பு என்கிற தொடர்கதைக்கு முடிவே கிடையாதா? கண்டிப்பாக ஒரு வழி, ஒரே வழி இருக்கிறதே. நீ எங்கே தேடினாய் அதை? அவனை, அந்த முராரியை, கோவிந்தா என்று வாயினிக்க மனமார பஜித்துகொண்டிரு. அப்பறம் பார், உன்னை மீட்பது அவன் வேலையாகிவிடும்.

22 रथ्याचर्पटविरचितकन्थः पुण्यापुण्यविवर्जितपन्थः ।
योगी योगनियोजितचित्तो रमते बालोन्मत्तवदेव ॥ २

22. rathyaa charpaTa virachita kanthaH puNyaapuNya vivarjita panthaH .
yogii yoganiyojita chitto ramate baalonmattavadeva .

22 . ரத்யாசார்ப்பத விரசிதகந்தா புண்யா புண்ய விவர்ஜித பந்தா
யோகி யோகநியோஜித சித்தோ ரமதே பாலோன் மத்தவ தேவா
இந்த ஸ்லோகம் கூட நித்யானந்தர் எழுதியது தான். சிறந்த சிந்தனையாளர் அவர். எத்தனை அழகாக இந்த ஸ்லோகம் புனையப்பட்டிருக்கிறது. கட கட வென்று ரயில் தண்டவாளத்தில் ஓடுவது போலத்தான் பஜகோவிந்தம் ஸ்லோகங்கள் நெருடலின்றி நாவில் புரள்பவை. ஒரு சில அந்த ரயில் நதியின் மேல், பாலத்தின் மீது போவது போல இன்னும் மனதை கூடவே கவரக்கூடியவை. இதில் என்ன சொல்கிறார் ;

''நீ கவனித்திருக்கிறாயா? இந்த முற்றும் துறந்த துறவியைப் பார். அவனுக்கு ஆடைக்கு பஞ்சமே இல்லை. உலகத்தில் கந்தை கிழிசல் தெருவெல்லாம் கிடக்கும் வரை, கிடைக்கும் வரை, அவனுக்கு ஆடை அநேகம் உண்டே. அவன் சுகவாசி. சுதந்திரமானவன். சத்வ, ரஜோ, தமோ குணங்களைக் கடந்தவன். நிலையாக ஓரிடத்தில் நில்லாதவன். இறைவனோடு சதா நினைவில் ஒன்றியவன். எனவே தான், பரிசுத்த, கலப்படமில்லாத, பரி பூரணானந்தத்தில் திளைப்பவன். அவன் மனோநிலைக்கு ஏதாவது ஒரு உதாரணம் சொல்லுங்களேன் அப்போது தான் கொஞ்சம் புரியும் என்கிறாயா? சொல்கிறேன் கேள். அவன் பச்சைக் குழந்தை மாதிரி. மனமே இல்லாத, மனம் அற்ற உன்மத்தன் போன்றவன். இந்த நிலை வேண்டுமா? அப்படியானால் உடனே சொல்லுங்கள் ''கோவிந்தா. கோவிந்தா'' என்று.


23. कस्त्वं कोऽहं कुत आयातः का मे जननी को मे तातः ।
इति परिभावय सर्वमसारम् विश्वं त्यक्त्वा स्वप्न विचारम् ॥ २३॥

kastvaM ko.ahaM kuta aayaataH kaa me jananii ko me taataH .
iti paribhaavaya sarvamasaaram vishvaM tyaktvaa svapna vichaaram..

கஸ்த்வம் கோஹம் குத ஆயாதல் காமே ஜனனீ கோ மே தாத
இதி பரி பாவய சர்வமஸாரம் விஸ்வம் த்யக்த்வா ஸ்வப்ன விசாரம்

இந்த அசாத்தியமான ஸ்லோகத்தின் சிருஷ்டி கர்த்தா ஆதிசங்கரரின் மற்றுமொரு சிஷ்யர் சுரேந்த்ரர்.

''அப்பனே, யாரப்பா நீ? உன்னைப் பார்த்து நீ யாரென்று கேட்கும் நானே யார் ? அதுவே எனக்குத் தெ ரியவில்லையே! நாம் இருவருமே எங்கிருந்து வந்தவர்கள்? அம்மா யார்? அப்பா தான் யார்? ஒரு பாட்டு கேட்டது ஞாபகம் வருகிறதா? ''அண்ணன் என்னடா தம்பி என்னடா இந்த அதிசயமான உலகத்திலே!'' இந்த கேள்விகளை மூச்சு விடாமல் கேட்டுக்கொண்டே வருவோம். எதுவுமே சாரமற்றது! உலகே மாயம், வாழ்வே மாயம், நிலையாக நாம் காணும் சுகமே மாயம். உலகும் அதைச் சார்ந்ததும் நொடியில் மறையும் கனவு. இந்த எண்ணம் தோன்றினால் தான் வழி பிறக்கும். அதற்கு துணையாக அவனை, அந்த கோவிந்தனைப் பாடு. பஜி .

attached is a best picture drawn by the immortal artist Raja Ravi Varma


தொடரும்


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...