Tuesday, May 10, 2022

KAALABAIRAVASHTKAM

 


#காலபைரவாஷ்டகம்  -   நங்கநல்லூர்   J K  SIVAN
ஆதி சங்கரர்  

முதல் அஷ்டகம்  


இதுவரை  பைரவர்களைப்  பற்றி   நிறைய அறிந்துகொண்டோம்.  இனி  ஆதிசங்கரரின்  பைரவாஷ்டகத்துக்குள்  செல்வோம்.  காசியில்  அவசியம் தரிசிக்க வேண்டிய  பிரதான  தெய்வம்  காலபைரவர்.  ஆதிசங்கரர்  கடல்மடை திறந்தாற்போல்  காசிமாநகர்  காலபைரவர் மீது  எட்டு ஸ்லோகங்களை  அஷ்டகமாக  பொழிந்திருக்கிறார்.  தியானம் செய்ய, உச்சரிக்க ரொம்ப  இனிமையானவை. ஒருதரம் சொல்லிப்பாருங்கள். நீங்களே  அனுபவிப்பீர்கள். 

கிருsஷ்ண பக்ஷ அஷ்டமி கால பைரவ வழிபாட்டுக்கு விசேஷமானது.  சிவ பெருமானை எப்படி த்யான கோலத்தில் மௌன குருவாக கல்லால மரத்தினடியில்  அவர் தக்ஷிணாமுர்த்தியாக காட்சியளிப்பதை  வழி படுகிறோமோ அது போல் அவரை ரௌத்ராகாரமாக ஆதி மூல கால பைரவராகவும் வழிபடுகிறோம். கோபமிருக்கும் இடத்தில் குணமுண்டு. பைரவர் கோபம் பக்தர்களிடம் இல்லை. பக்தர்களுக்கு இடையூறாக இருப்பவர்கள் மீது. காருண்ய மூர்த்தி கால பைரவர்.

காசி நகரத்தின் காவலனாக உள்ளவர் காலபைரவர். தோஷங்கள் நுழையாத ஊர் காசி. காலபைரவரை தரிசிக்காமல் காசிக்கு போனால் ஒரு பலனுமில்லை. சதியாக தக்ஷனின் யாகத்தில் தீக்குளித்த உமையின் உடலைச் சுமந்து சிவன் கோர தாண்டவ  மாடியது அவள் உடல் சிதறி 51 முக்கிய இடங்களில் விழ அவை சக்தி பீடங்கள் என போற்றப்படுபவை. ஒவ்வொரு சக்தி பீடத்தின் வாசலிலும் காவல் தெய்வமாக ஒரு பைரவர் நிற்பார்.

கும்பகோணம் - திருப்பனந்தாள் மார்கத்தில் ஏறக்குறைய 10 -12 கிலோ மீட்டர் தூரத்தில் சோழபுரத்தில் 64 பைரவர்கள் மகா பைர வேஸ்வர சிவன் கோவிலில் அருள் பாலிக்கிறார்கள்.

காலத்தை நிர்ணயிக்கிறவர் கால பைரவர் என்று ஒரு நம்பிக்கை. ஆலய ரக்ஷகர் பைரவர். அவரிடம் தான்ஆலயத்தை பூட்டி சாவி கொடுத்து வைக்கவேண்டும், திறக்கவேண்டுமானால் பெறவேண்டும். சிவாலயங்களில் இப்படி ஒரு ஏற்பாடு.

1 देवराजसेव्यमानपावनांघ्रिपङ्कजं
व्यालयज्ञसूत्रमिन्दुशेखरं कृपाकरम् ।
नारदादियोगिवृन्दवन्दितं दिगंबरं
काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥१॥

Deva-Raaja-Sevyamaana-Paavana-Angghri-Pangkajam
Vyaala-Yajnya-Suutram-Indu-Shekharam Krpaakaram |
Naarada-[A]adi-Yogi-Vrnda-Vanditam Digambaram
Kaashikaa-Pura-Adhinaatha-Kaalabhairavam Bhaje ||1||

தேவராஜஸேவ்யமானபாவனாங்க்ரிபங்கஜம்
வ்யாலயஜ்ஞசூத்ரமிந்துசேகரம் க்ருபாகரம்  
நாரதாதியோகிவ்ருந்தவந்திதம் திகம்பரம்
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே
   

''கபாலத்தை  கையிலேந்திய  கயிலைவாசா,  மகா  தேவா, உனது  தாமரைப் பாதங்களை அர்ச்சிப்பவன்  வேறு  யாருமல்ல  ஸாக்ஷாத்  இந்திரன், தேவாதி தேவன்,   உனக்கென்று  ஒரு  தனி  ஆபரணம்,  யாரும்  அணிய  நினைக்காத  அரவபுரிநூல், ,  நாக யக்னோபவீதம்.   ஒளிவீசும்  மகுடம் வைரத்திலோ,  வேறு  எந்த  கல்லோ, மணியோ  அல்ல. வளர்ந்து தேயும்,  பிறைச்  சந்திரனே  உனது  ஜடாமுடியில்  ஒரு  கிரீடம்.  முகத்திலோ  சர்வ  சாந்தம்.  கருணை ப்ரவாஹம்  கங்கையோடு  போட்டி போட்டுக்கொண்டு காந்தியோடு  காட்சி தருகிறது.   மோனத்தில் ஞானமா, ஞானத்தில்  மோனமா  என்று  அறியமுடியாமல்  உன்னை  போற்றி பாடுபவர்  யார் இங்கே  நிற்கிறார்கள்  நீ அறிவாயா?   மூடின  கண்  திறந்தால்   தானே  தெரியும்.  திரிலோக  சஞ்சாரி  நாரத ப்ரம்ம ரிஷி.  யோகீஸ்வரர்கள், முநிஸ்வரர்கள்.  திகம்பரேசா,  உனது  ஆடை  இந்த  நீலாகாசம்.  பனிமலை சிகரத்தில்   வெற்றுடம்பு..காலபைரவா,  காசிகா  புராதிநாதா.  உனக்கு நமஸ்காரங்கள்.  
லக்ஷோப லக்ஷம் பக்தர்கள் இன்றும் மனப்பாடம் செய்து பாராயணம் செய்யும் ஸ்லோகம் காலபைரவாஷ்டகம்.

தொடரும்  



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...