Friday, May 20, 2022

KALA BHIRAVASHTAKAM

 #ஆதி_சங்கரர்  -   நங்கநல்லூர்  J K  SIVAN

காலபைரவாஷ்டகம்

ஆதிசங்கரரின் கால பைரவாஷ்டகம் எழுத ஆரம்பித்ததிலிருந்து மனதில் ஒரு புத்துணர்ச்சி எழும்பியது. இந்த ஏழாவது ஸ்லோகத்தில் கண்முன்னே மஹா கால பைரவரை கொண்டுவந்து நிறுத்துகிறார் சங்கரர்.

மஹாதேவன் கால பைரவேஸ்வரராக அருள் பாலிக்கும்போது 108 பைரவராகக் கூட வணங்கப்படுகிறார். அண்டமே எதிரொலிக்கும் அட்டகாசமான வெடிச்  சிரிப்பு கொண்டவர். அதே நேரமும் காலம்  காலமாக அசையாத கல்லும் வெட்கப்படும் சிலையாக அசைவன்றி பனிமலையில் மோனத்திலும் காணப்படுபவர். தாமரை இலை மேல்  நீர்க்கொப்புளங்களாக  பட்டும் படாமலே ஜொலிக்கும் அநித்யமானது நமது உலக வாழ்க்கை என்று புரிய வைப்பவர்.

தமிழ்நாட்டிலே தர்மபுரியில் ஒரு அற்புத கால பைரவர் இருக்கிறார். சேலம் ,ஆந்திரா, பெங்களுர் என்று பல இடங்களிருந்து பக்தர்கள் வெல்லத்தை தேடி வரும் எறும்பாக அவரை மொய்க்கிறார்கள். எத்தனையோ குடும்பங்களில் இன்றும் காலபைரவர் குல தெய்வம். இந்த ஆலயம் அதியமான் காட்டியது. பழங்கால சக்தி வாய்ந்த ஆலயம். 
இந்தியாவில் பெரிதாக  ரெண்டு  காலபைரவர் ஆலயங்கள் உள்ளன. ஒன்று வடக்கே காசியில் இன்னொன்று இந்த அதியமான் கோட்டையில்.  தக்ஷிண காசி  காலபைரவர் ஆலயம்  என்று புகழ் பெற்றது. 

ஒன்பதாம் நூற்றாண்டில் அதியமான் எதிரிகளை வெல்லமுடியாது தோற்ற சமயம் அவனது ராஜகுரு ஜோசியர் ''அப்பனே நீ காலபைரவரை மறந்து விட்டாயே. அவரை முதலில்  தொழு. ஒரு கோவில் கட்டு. உனக்கு தேவையான பலம் சக்தி அனைத்தும் அவர் தருவார். உன்னை எவரும் வெல்லமுடியாது.'' என்கிறார். அதியமான் கோட்டை யில் பைரவரை ஸ்தாபித்து கட்டிய கோவில் இது.  இந்த கோயில் கட்டிய பின்னர் அதியமானுக்கு வெற்றிகள் தொடர்ந்தது. நாம் இன்றும் அவனை நினைவில் வைத்திருக்கிறோம்.

சனீஸ்வரனுக்கு குரு காலபைரவர். காசியில் சனீஸ்வரன் காலபைரவரை தவமிருந்து வழிபட்டான். ஞானம் பெற்றான். இந்தியாவில் எல்லா இடங்களிலும் பைரவர் அருள் பாலிக்கிறார்.  கெட்டகாலத்தை  நல்ல காலமாக மற்றும் அருள் மிக்க தெய்வம் காலபைரவர். 

அதியமான் கோட்டை காலபைரவர்  சதுர்புஜம் கொண்டவர்.  நாக  உபவீதம். நந்தி  நாய்  ரெண்டுமே  வாகனங்கள்.

7  अट्टहासभिन्नपद्मजाण्डकोशसंततिं दृष्टिपातनष्टपापजालमुग्रशासनम् ।
अष्टसिद्धिदायकं कपालमालिकाधरं काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥७॥

Atttta-Haasa-Bhinna-Padmaja-Anndda-Kosha-Samtatim Drsstti-Paata-Nasstta-Paapa-Jaalam-Ugra-Shaasanam |
Asstta-Siddhi-Daayakam Kapaala-Maalikaa-Dharam Kaashikaa-Pura-Adhinaatha-Kaalabhairavam Bhaje ||7||

அட்டஹாஸபிந்நபத்மஜாண்டகோசஸந்ததிம் த்ருஷ்டிபாதநஷ்டபாபஜாலமுக்ரசாஸனம் |
அஷ்டஸித்திதாயகம் கபாலமாலிகந்தரம் காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ||௭||



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...