Wednesday, February 28, 2018

bharathi song

''காலா வாடா, நீ ஒரு சிறு புல்லென மதித்து காலால் மிதிக்கிறேன்'' -- J.K.SIVAN

என்னைப்போல் எண்ணற்ற பாரதி ரசிகர்களுக்கு ஒரு சிறந்த இணையற்ற பரிசு கிடைத்துள்ளது. அளித்தவர் ஸ்ரீ ரா. அ .பத்மநாபன். இவரைப்பற்றி எழுதியிருக்கிறேன். பாரதியோடு நெருங்கி பழகியவர். அவரது படைப்புகளை ஒன்றுவிடாமல் தேடிப்பிடித்து அளித்தவர். அவர் ஒரு சிறு நூல் ''பாரதி புதையல் ''என்று ஒரு மலிவுப்பதிவாக அமுத நிலையம் என்ற பதிப்பக வெளியீடாக (முப்பது பைசா விலை!) 1958 நவம்பரில் வெளிவந்தது. அதன் ஒரு பழைய நகல் என்னிடம் வந்தது என்று சொன்னேன் அல்லவா. அதில் இருந்து அந்த ஆசிரியருக்கும் பதிப்பகத்தாருக்கும் நெஞ்சார நன்றியோடு சில விஷயங்கள் அதிலிருந்து சொல்கிறேன்.

இதுவரை நாம் அறிந்த ஒரு மிகப் புகழ் வாய்ந்த பாரதியாரின் பாடல் முழுமையாக வெளிவரவில்லை. பாரதியாரின் ''காலனுக்கு உரைத்தல் ''என்ற கவிதை முதலில் 1919ம் ஆண்டு சுதேச மித்ரன் டிசம்பர் வருஷ அனுபந்தமாக வெளிவந்தது.
பாரதியாரின் முழுப்பாடல் இது தான்: இந்த பாடலை பற்றி முதலடி கேட்டதுண்டு. பாரதியின் தைரியத்தை, மரணத்தைக் கண்டு அஞ்சாத மனோபலத்தை வியந்ததுண்டு. முழுசாக அந்த பாடல் இதோ:

''
ராகம்: சக்ரவாகம் தாளம்: ஆதி
பல்லவி:
காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன் - என்றன்
காலருகே வாடா, சற்றே உன்னை மிதிக்கிறேன்!

சரணங்கள்
வேலா யுத விருதினை மனதிற் பதிக்கிறேன் - நல்ல
வேதாந்த முரைத்த ஞானியர் தம்மை எண்ணி துதிக்கிறேன் -- ஆதி
மூலா என்று கதறிய யானையைக் காக்கவே -நின்றன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட மூடனே - அட (காலா )

ஆலால முண்ட வனடி சரணென்ற மார்க்கண்டன் - தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை அறிகுவேன் - இங்கு
நாலாயிரம் காதம் விட்டார்கள்! உன்னை விதிக்கிறேன்! - ஹரி
நாராயணனாக நின் முன்னே உதிக்கிறேன் ! - அட (காலா )

பல்லவிக்கு ஸ்வர மாதிரி:
ஸரிகா ரிஸ ஸாஸஸ நீநிநி கமப மகா ரீஸா - பப
ஸாநித பாபா - மாகா காமப - கமபம கா - ரீஸா

சரணங்களும் ஏறக்குறைய இந்த மாதிரிதான்.

ஒரு சிறுவிண்ணப்பம். யாராவது இதை சக்ரவாக ராகத்தில் பாரதியார் விரும்பியபடி பாடுவீர்களா. பாட விரும்புபவர்களை ஆதரிக்க ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா சபா காத்திருக்கிறது. என்னாலான ஒரு சிறு பரிசாக சில புத்தகங்களை வழங்குகிறேன்.- ஜே . கே சிவன்



VEMANA. 2

தேனான வேமனா 2 J.K. SIVAN
தெலுங்கில் தெள்ளிய வேதாந்தம்

தமிழைத்தவிர ஆங்கிலத்தில், மற்ற இந்திய மொழியில் உள்ள நல்ல விஷயங்களையும் கூட நாம் இந்த குழுவில் சேர்ந்துஅனுபவிக்கிறோம்.

இன்று ஒரு தெலுங்கு மஹான் பற்றிய விபரங்கள். அவரது பொன்மொழிகளை பார்ப்போம் ரசிப்போம்.

தெலுங்கு வேதாந்தி வேமனாவைப்பற்றி முன்பே ஒரு முறை சொல்லியிருக்கிறேன். இன்னும் சில வார்த்தை சொல்லவேண்டுமே. அவர் சிவ பக்தர். பொய்ம்மை வேஷம் கொண்ட பக்தர்களையோ சந்நியாசிகளையோ சாடுவதில் அவருக்கு நிகர் அவரே. அதைப்பற்றி அவர் பாடுவதை நான் எழுதுகையில் கோபம் என்மீது திரும்ப வேண்டாம்.

நடு நடுவில் எத்தனையோ வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் அடி மனத்தில் வேமனாவை விட்டு விட்டு வந்தேனே இப்போது எங்கிருக்கிறாரோ, மீண்டும் அவரைத் தேடி கண்டுபிடித்து சில பொன் மொழிகளை சம்பாதிக்கவேண்டும் அதை பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்ற அரிப்பு இருந்து கொண்டே இருந்தது. சரி கொஞ்சம் free பண்ணிக்கொள்ளவேண்டும் , ஆரம்பிப்போம் என்று ஒரு பிரதிஞை எடுத்துக்கொண்டேன்..ஆகவே முயற்சி வீண் போகவில்லை. இதுவரை எண்ணம் காற்றில் பறக்க வில்லை. இதோ அவர் மீண்டும் நம்மிடம் சொல்லும் விஷயங்கள்:

வேமனாவின் 100 பதிகங்களைப் பார்ப்போமா? தெலுங்கில் உள்ள பதிகத்தில் முதல் மூன்றடி அவர் கருத்தைச் சொல்லும். நான்காவது அடியில் தன்னைத் தானே "என்னடா வேமா சொல்கிறாய், சரிதானே?" என்பது போல் அமைந்துள்ளது

Kanaka mrugamu bhuvini kadhu Ledhanakanu.....కనక మృగము భువిని కలదు లేదనకను
Tharuni veedi chaniye DhaasharathuDu.........................తరుణి వీడి చనియె దాశరధుడు
Budhi Lenivaadu Dhevudetlaayaraa............................బుద్ధిలేనివాడు దేవుడెట్లాయెరా?
Viswadhaabhiraama, Vinura Vema...............................విశ్వధాభిరామ, వినుర వేమ

"தங்கமான் எங்கேப்பா இருக்கு? பாவம், அந்த அப்பாவி ராமன் மனைவியை விட்டு மானைத்தேடி ஏன் ஓடினான். மாயை இவ்வாறு கஷ்டங்களை எல்லாம் அவனுக்கே தந்தபோது, நாம் எங்கே தப்புவது?"


Gangi govu paalu garitadainanu chaalu...................గంగి గోవు పాలు గరిటడైనను చాలు
Kadivedainanemi kharamu paalu............................కడివెడైననేమి ఖరము పాలు
Bhakti kalugu koodu pattedainanu chaalu................భక్తి కలుగు కూడు పట్టెడైనను చాలు
Viswadhaabhiraama, Vinura Vema...........................విశ్వధాభిరామ, వినుర వేమ

"ஒரு உத்ரணி சுத்தமான காராம்பசுவின் பாலுக்கு ஒரு குடம் கழுதையின் பால் ஈடாகுமா? . அன்பாக உபசரித்து உண்மையான பாசத்தோடு ஒரு கரண்டி சாதம் போதுமே, "இந்தா கொட்டிக்கோ" என்று மனதில் நினைத்துகொண்டு ஒரு வாழை இலை நிறைய விருந்து வைப்பதை விட அது பலமடங்கு மேல் அல்லவா? "


Atmasuddhi leni acharamadi ela...................ఆత్మశుద్ధి లేని అచారమది ఏల
Bhandasuddhi leni pakamadi ela...................భాండశుద్ధి లేని పాకమేల
Chittasuddi leni sivpujalelara........................చిత్తశుద్ది లేని శివ పూజలేలర
Viswadhaabhiraama, Vinura Vema................విశ్వధాభిరామ, వినుర వేమ

ஆத்மாவில் சுத்தமில்லாமல் ஆச்சாரமாக, மடியாக, இருந்து என்ன பயன்? பாத்திரத்தை சுத்தமாக துலக்காமல் பாயசம் அதில் நிரப்பி என்ன புண்ணியம்? சித்தத்தை அவன் பாலே வைக்காத சிவன் பூஜையால் யாருக்கு பலன் ?

Alpudeppudu palku adamburamu ganu..............ఆల్పుడెపుడు పల్కు ఆడంబురము గాను
Sajjanundu palku challaganu....................................సజ్జనుండు పల్కు చల్లగాను
Kanchu moginatlu kanakammu mroguna...................కంచు మోగినట్లు కనకమ్ము మ్రోగునా
Viswadhaabhiraama, Vinura Vema............................విశ్వధాభిరామ, వినుర వేమ

வெங்கலபாத்திரத்தை தட்டினால் வரும் சத்தம் தங்கபாத்திரத்தை சுண்டினால் வருமா? ஆழ்ந்த ஞானஸ்தன் அரைவேக்காடு மாதிரியா வெளியிலே காட்டிக்கொள்வான் "

தொடரும்

MANIKKA VACHAGAR

மணி வாசகரைப் பற்றி சில வாசகங்கள்  5  J.K. SIVAN 
                         
             பிட்டளித்த வந்தியும்  பெருவெள்ளமும்

மாணிக்க வாசகரை சுடுமணலில் நிறுத்தி வைத்து காவல் காத்த அரசனின் சேவகர்கள் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார்கள் ஆளுயரத்திற்கு ஓ வென்று பேரிரைச்சலுடன் தூரத்தில் வைகையில்  வெள்ளம் வந்துகொண்டிருந்ததே.  வாதவூரரும்  ''பெருந்துறை ஈஸா இதுவும் உன் விளையாட்டா?'' என அதிசயித்து மதுரை சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அவனைத் தேடிச் சென்றார். மக்கள் பீதி அடைந்தார்கள். எங்கும் கலவரம். அவசரமாக  மூட்டை முடிச்சோடு மக்கள் வெளியேறினார்கள்.

பாண்டியன் பதற்றம் அடைந்தான். எதற்கு எப்படி அகாலத்தில் மழை காலம் இல்லாதபோது, திடீரென்று வைகையில் வெள்ளம்? இதுவும் வாதவூரரின் மாயாஜாலமா மந்திரமா?  எது வானாலும் நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாகும்  வெள்ளம் சேதம் விளைவிக்காமல் அதை எப்படி கரை புரளாமல் தடுப்பது.   அனைவருக்கும் அவசர கட்டளை. ஆற்று வெள்ளம்  கரைபுரளாமல் உடனே வீட்டுக்கு ஒருஆள் வந்து கரையை மண் கொட்டி  பலப்படுத்தவேண்டும்.

அதேபோல் அனைவரும் வந்துவிட்டார்கள்.  வைகையில் நீர் வெள்ளம்.  கரைகளில் ஜன வெள்ளம். வைகைக்கரை உடையாமல் மண் கொட்டி பலப்படுத்துகிறார்கள். அரசன் சுற்றி சுற்றி வந்து மேற்பார்வை பார்க்கிறான்.

வந்தி எனும் ஒரு பிட்டு சுட்டு விற்கும் குழவி யாருமற்ற அனாதை.  மதுரை சொக்கனிடம் பக்தி. தினமும் முதல் பிட்டு சுட்டு அதை அவனுக்கு மனதார நைவேத்தியம் செய்பவள். அன்றும் அதுபோல் முதல் பிட்டு சூடாக எடுத்துக்கொண்டு ''சொக்கா, இது என்ன கூத்து. வைகை பெருக்கெடுத்துவிட்டதாம். ராஜா வீட்டுக்கு ஒரு ஆள் கண்டிப்பாக வரவேண்டும் என்கிறான். தள்ளாத கிழவி நான் சென்று உதவ வேண்டுமே. என் பிழைப்பில் விழுந்த மண்ணை தான் வைகையில் கொண்டு கொட்ட வேண்டும்.  பிள்ளையா குட்டியா யார் இருக்கா எனக்கு? ''
என்ன செய்வது என்று கலங்கி வழக்கமாக பிட்டு சுடும் மரத்தடிக்கு வந்து அமர்ந்தாள். எதிரே  அடுப்பில்  பிட்டு  சூடாக ஆவியில் வேகும்போது   மனம் ஆள் தேடியது.

''ஆத்தா'' --    எதிரே ஒரு இளைஞன் கூப்பிட்டவாறு நின்றான்.
''யாருப்பா நீ  ?
''ஊரிலே  எல்லோரும் வைகைக்கரையிலே இருக்காங்க. நீ மட்டும் இங்கே இருக்கிறே?'''
'' நானே அடுப்பை அணைச்சுட்டு வைகைக்கரை  போவணும் . ராஜா வூட்டுக்கு  ஒரு ஆள் வரணும்னு கட்டளை தண்டோரா போட்டுட்டாங்களே. ''
''எதுக்கு நீ போறே, உனக்கு பதிலா உன் வீட்டு ஆளா  நான் போறேன்''  என்ன கொடுப்பே?''
 ''என்கிட்டே காசு பணம் இல்லியேடா பையா. உனக்கு நான் என்னத்தை கொடுக்கிறது?''
''சரி ஒண்ணு செய்.  நீ சுட்ட பிட்டு கொஞ்சம் பொட்டலம் கட்டிக்  கொடு. அது போதும். நான் உனக்கோசரம் போய் மண்ணு கொட்டறேன்''.

சுற்றி சுற்றி வந்து மேற்பார்வை பார்த்த  பாண்டியன் ஒரு இளைஞன்  வேலை செய்யாமல் அமர்ந்துகொண்டு  பிட்டு தின்பாதை பார்த்தான்.  அரசனைப் பார்த்த அவன் ஏதோ கொஞ்சம் மண்ணை கொண்டு கொட்ட கிளம்புவதை  கவனித்ததும் கடும் கோபம் கொண்டான். அவன் நின்ற இடம் ஆறு எந்த நேரமும் கரையை உடைந்துவிடும் போல் இருக்கவே 
 ''என்னடா நீ வேலை செய்யாமல் நிற்கிறாய் என்று கையில் வைத்திருந்த பிரம்பினால் ''பளீர்'' என்று அந்த இளைஞன் முதுகில் சாத்தினான்.
 ''ஆ ''.    அந்த இளைஞன் தனது பங்குக்கு  போட்ட கூடை மண்ணால் வைகை பெருக்கு  முற்றிலும் நின்றது. 
 அதே நேரம் அனைவரும் முதுகில் பாண்டியனின் பிரம்படி கொடுத்த ''சுளீர்''வலியில்  துடித்தனர். சகல ஜீவராசிகளும் வலியில் கத்தும் சப்தம் ஏகோபித்து கேட்டது. பாண்டியனும் கூட கத்தினான்.  சொக்கனின் முன்னே நின்று பிரார்த்தித்த மாணிக்கவாசகர் முதுகிலும் அடி.!  ''சர்வேசா சம்போ மஹாதேவா'' என்று உரக்க கூவினார்.

சிவபக்தனான  பாண்டியனுக்கு முதுகில் அடிபோலவே  மனத்திலும் ''சொரேர்''  என்று உண்மை புரிந்தது.  வாதவூரர்க்கு தான் இட்ட தண்டனையே வைகை வெள்ளத்துக்கு காரணம். அந்த மாயக்கார இளைஞனும் ஒருவேளை மதுரை சுந்தரேஸ்வரரோ?

அவன் காதில் ஒரு  குரல் தெளிவாக அசரீரியாய் கேட்டது.
'பாண்டியா, நீ கொடுத்த பொற்காசுகள்  பெருந்துறையில்  எமது பக்தர்கள் வழிபடும் ஆலயத்திற்காக செலவழிந்து உனக்கு ஒரு பெரும்பெயர் புகழ்  ஈட்டித்தந்த வாதவூரரை  போற்றுவதற்கு பதிலாக குற்றம் சாட்டி வதைத்தாய். உனக்கு புரியவைக்கவே  தான் குதிரைகள் நரிகளாயின. வைகை வெள்ளமும் அப்படியே.  நீ இன்னுமா அறியவில்லை என் பக்தன் வாதவூரனை? உன் ஆணையை மதித்து  என் பக்தை வந்திக்காக  நானே மண் சுமக்க வந்தேன்.

பாண்டியன் வந்தியின் குடிசைக்கு ஓடினான். ஒரு விண்ணுலக விமானம் அவளை கைலாயம் அழைத்து சென்றதை அறிந்தான். மணிவாசகரைத்  தேடி  சொக்கனின் ஆலயத்துக்கு ஓடினான். கண்களில் நீர். கூப்பிய கரங்கள்.. சொக்கா  சொக்கா  சொக்கா என்று இடைவிடாத அலறல் பாண்டியனின்  வாயிலிருந்து விடாமல் ஒலித்தது.
வாதவூரர் காலில் விழுந்து ''என்னை மன்னியுங்கள் ப்ரபோ. மீண்டும் அரசவையில் பொறுப்பேற்று என்னை வழி நடத்துங்கள்'' என்று கெஞ்சினான்''
''அரசே எல்லாம் சிவமயம். அவன் ஆணை என்னை அழைக்கிறது நான் பெருந்துறை செல்கிறேன். 
பெருந்துறையில்  மீண்டும்  முன்பு அவர் சந்தித்த அதே  ''ஆத்மநாத முதியவர்''  வாதவூரரை  புன்னைகையோடு வரவேற்றார்.

தொடரும்

Tuesday, February 27, 2018

LINGASHTAKAM 8

லிங்காஷ்டகம் 8      

J.K. SIVAN

மஹேஸ்வரா, நேற்று பிரதோஷத்தோடு உன்னுடைய எட்டு அஷ்டகங்களை ஆதி சங்கரர் அற்புதமாக இயற்றியதை என்னால் முடிந்தவரை பிறருக்கும் அளித்தேன். மனம் மட்டுமல்ல இந்த தொடரும் இதோடு நிறைந்தது.

மனிதர்களாகிய நாம் எத்தனை தோஷங்களுடன் ஜன்மம் எடுத்துள்ளோம் என்பது யாருக்கும் தெரியாது ஆனால் பிரதோஷ உபாசனையால் அத்தனை தோஷங்களையும் போக்கிக் கொள்ளமுடியும். எனவே பிரதோஷ பூஜை செய்து நன்மை பெறலாம். அகில லோகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளும் உயிர்வாழும் பொருட்டு சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு எல்லோரையும் காப்பாற்றினார் அந்த காலமே பிரதோஷ காலமாகும் . பரம்பொருளான சிவபெருமான் மகிழ்ந்து தேவர்களுக்கு அருள்புரிய திருவுள்ளம் கொண்டு கயிலையில் அன்று மாலை பிரதோஷ வேளையில் தன் முன்னிருந்த ரிஷப தேவரின் இருகொம்புகளுக்கிடையே நின்று அம்பிகை காண திருநடனம் செய்தருளினார். தேவர்கள் அதைக் கண்டு உளம் மகிழ்ந்து சிவபெருமானை வணங்கினர். அது முதல் திரியோதசி திதி அன்று மாலை நேரம் பிரதோஷகாலம் என்று அழைக்கப்படுகிறது. அனைத்து லோக ஜீவராசிகளும் தேவர்களும் முப்பத்துமுக்கோடி தேவர்கள் அனைவரும் பிரம்மா, விஷ்ணு, ஒன்று சேர்ந்து விரதமிருந்த நாள்தான் பிரதோஷ நாளாகும்.

வளர்பிறை, தேய்பிறை இரண்டு காலங்களிலும் வரும் திரியோதசி திதி அன்று நீராடி அன்று மாலை 4-30 மணி முதல் 6-00 மணிக்குள் சிவாலயம் சென்று வழிபடவேண்டும். தேய்பிறையில் வரும் பிரதோஷ காலங்களில் சிவன் அம்பிகையுடன் நந்தியின் கொம்புகளுக்கிடையே நடனமாட திருமால் மட்டுமே கண்டுகளிக்கின்றார். ஆனால் பெளர்ணமிக்கு முன்னால் வரும் பிரதோஷத்தன்று திருமாலுடன் சேர்ந்து தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவனை வழிபட வருகின்றனர். அனறு மாலை 4-30 மணிமுதல் 6-00 மணிக்குள் சிவனை வழிபடும் மக்களுக்கு அனைத்தும் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. பிரதோஷமன்று உபவாசமிருந்து தரிசனம் முடிப்பது நற்பலன்களை தரும்.

‘’ ப்ர’’ என்பது பாவத்தையும் தோஷம் என்பது போக்கும் நேரம் எனவும் பொருள்படும். பிரதோஷகாலத்தில் சிவபெருமான் எல்லாவற்றையும் தன்னிடம் அடக்கிக் கொள்கிறார். அதனால் பிரதோஷம் என்பது பரமேஸ்வரனை வழிபடுதலாகும். பொதுவாக பிரதோஷம் ஐந்து வகைப்படும். ஒவ்வொரு பிரதோஷத்திலும் இறைவனை பூஜிப்பதற்கு முன் நந்தி தேவரை பூஜிப்பது நன்மை பயக்கும் . எல்லோருக்கும் எல்லா நலன்களையும் பக்தியையும் வளர்க்க என்னிடமிருக்கும் நந்தி தேவன் எனக்கு இணையான பெருமையுடையவன் ஆதலால் நான் இரண்டாம் சிவவேடம் தரித்து பூவுலகில் கர்மத்தை பரவ செயகிறேன் என்று சிவ பெருமான் கூறியுள்ளார். சிவன் முன்னால் இருக்கும் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலையணிவித்து நெய் விளக்கிட்டு வெல்லம் கலந்த அரிசி நிவேதனம் செய்யவேண்டும். பால், தயிர், தேன், பழங்கள், பஞ்சாமிர்தம், நெய், இளநீர், சர்க்கரை, எண்ணை, சந்தனம், ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது உசிதம். வில்வம், மல்லிகை, செந்தாமரை, வெண் தாமரை, எலுமிச்சை, துளசி போன்றவற்றில் மாலை தொடுத்து நந்தியம்பெருமானுக்கு சார்த்தவேண்டும். நந்தி தேவருக்கு தீபாராதனை முடிந்தபிறகு மூலவருக்கு தீபாராதனை நடைபெறும்.

நந்தி தேவரின் சிலையின் பின்பக்கத்திலிருநது இரண்டு கொம்புகளிடையே உள்ள இடைவெளி வழியாக சிவபெருமானுக்கு நடைபெறும் தீபாராதனையைப் பார்த்தால் சகலதோஷமும் துன்பமும் நீங்கி இன்பம் எய்துவர். மலடு நீங்கி மகப் பேறு பெறுவர். கடன் நீங்கி செல்வம் பெறுவர்,. நோய் நீங்கி நலம் பெறுவர். அறியாமை நீங்கி ஞானம் பெறுவர். பாவம் தொலைத்து புண்ணியம் பெறுவர். பிறவி ஒழிந்து முக்தி அடைவர். சகல செளபாக்கியங்களை யும் பெற்று முடிவில் மோட்சத்தையும் சொர்க்கத்தையும் அடைவர். எல்லாம்வல்ல இறைவனைப் போற்றி ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் விரதமிருந்து வழிபட்டு வருபவர்களுக்கு அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பதை ஓலைச்சுவடிகளின் ஆதாரங்களிலிருந்து அறிகிறோம்.

இன்னொரு விஷயம். சிவலிங்கத்தின் மீது குளிர்ந்த ஜல தாரை எதற்கு என்றால், சிவனின் ஜடாமுடி மீது கங்கை ஆகாசத்திலிருந்து இறங்கியதை குறிக்கிறது. சிவா வழிபாட்டில் ஹோமத்தில் எடும் நெய், நம்மையே அந்த சர்வ சக்திமான் சிவனுக்கு அர்ப்பணிப்பது ஆகும். ஹர ஹர மகாதேவா - கிட்டத்தட்ட ரெண்டு மில்லியன் ருத்ராக்ஷத்தை சேர்த்து ஒரு மகா பெரிய மகா தேவன் -- அந்த படத்தை தான் பார்த்தேனே தவிர நேரில் சென்று தரிசிக்கும் கிட்டவில்லை. கிட்டுமோ யான் அறியேன். எனக்கென்னவோ இந்த உருத்ராக்ஷ சிவ லிங்கம் கண்ணை விட்டு அகலவில்லை. அழகுக்கு அழகு செய்தது போல் மஹா பெரியவா என்கிற மனத்தில் நடமாடும் (உருவில் நடமாடிய) சிவபிரானும் கூடவே இருக்கும் படம். சிவலிங்கத்தின் மேலே ருத்ராக்ஷ நாகம். இந்த சிவனைப் பாடிப் புகழ ஆசை. எனக்கோ பாட்டு எழுத வராது. அருமையான பாடல்கள் சில இருக்கிறபோது அதையும் இதோடு சேர்த்தால் சர்க்கரைப்பந்தலில் தேன் மாரி தான் அல்லவா? ஓம் என்ற சப்தத்திலே அஞ்சு கோடி மந்திர சக்தி இருக்கிறது. நெஞ்சு அதை விடாது சப்திக்க வேண்டும்.

நம சிவாய என்ற அஞ்செழுத்தில் சகல சக்தி மட்டுமல்ல. பாப விமோசனமும் உள்ளது. பரமுனக்கு எனக்குவேறு பயமிலை பராபரா கரம்எடுத்து நித்தலுங் குவித்திடக் கடவதும் சிரம்உருகி ஆர்த்தலும் சிவபிரானே என்னலும் உரம்எனக்கு நீயளித்த ஓம்நமசி வாயமே. பராத்பரா, ஒன்றே ஒன்று அது நீ ஒன்று தான். பலவாகத் தோன்றும் எல்லாமே நீ ஒன்றே தான். அழுக்காறு கயமை, வஞ்சகம், காழ்ப்பு போன்ற என்னுள்ளே களிம்புகள் நிறைய இருந்தாலும் அவற்றை நீக்கி நானாகிய இந்த களிம்பேறிய தாமிரப் பாத்திரத்தை மும் மலமகற்றி , பளபளக்கச் செய்வதும் நமசிவாயா எனும் உன் நாமந்தான். அது தான் என்னுள்ளேயே நிலையாக நிற்கிறதே.

ஒன்று மொன்றும் ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே
அன்றுமின்றும் ஒன்றுமே அனாதியான தொன்றுமே கன்றல்நின்று செம்பொனைக் களிம் பறுத்து நாட்டினால்
அன்றுதெய்வம்உம்முளே அறிந்ததே சிவாயமே.

கடைசியாக ஒன்று சொல்கிறேன். சிவா, நீ ஆதி, அந்தம் மூல விந்து, நாதம், பஞ்ச பூதம். நீயே நமசிவாய என்கிற பஞ்சாக்ஷரம். வேறு என்ன இருக்கிறது சொல்ல? ஆதியந்த மூலவிந்து நாதமைந்து பூதமாய் ஆதியந்த மூலவிந்து நாதம்ஐந்து எழுத்துமாய் ஆதியந்த மூலவிந்து நாதமேவி நின்றதும் ஆதியந்த மூலவிந்து நாதமே சிவாயமே. சிவ வாக்கியர் எனும் மஹா யோகியின் வார்த்தைகள் இவை. சித்தத்தை சிவபிரான் பால் வைத்த சித்தர் பிரான். இப்படிப்பட்ட பிறவி,

மனிதப்பிறவி நமக்கு எப்படியெல்லாம் அவஸ்தைப்பட்ட பிறகு கிடைத்திருக்கிறது தெரியுமா? அதெல்லாம் கடந்து உன் நாமம் பற்றி கடைத்தேற வழி வகுத்த விமலா, சிவபெருமானே, உன்னையே நான் ''சிக்'' க்கெனப்பிடித்தேன். என்கிறார் மணி வாசகர். நாமும் பிடித்துக் கொள்வோமா?


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்அசுரர் ஆகி, முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற, இத்தாவர சங்கமந்துள்
எல்லாப் பிறப்பும், பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள், கண்டுஇன்று வீடுற்றேன்

உய்யஎன் உள்ளத்துள், ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா, விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி, ஆழ்ந்தகன்ற நுண்ணியனே கண்டுஇன்று வீடுற்றேன் –

ஒரு ஆச்சர்யமான சம்பவம். சீக்கியர்களின் 10வது குருவான குரு கோவிந்த சிங் ஒரு நாலு வரி மந்திரத்தை அவரது சிஷ்ய கோடிகளுக்கு உபதேசித்தார். இந்த மந்திரத்தை பிற்காலத்தில் சீக்கியர்கள் பிரிவினைக்கு உபயோகித்தனர். அதன் விளைவு எந்த சீக்கியனும் பாகிஸ்தானோடு இணையவில்லை. அப்படி என்ன அந்த மந்திஅத்துக்கு சக்தி என்றால் அந்த 4 வரி எம்பெருமான் சாக்ஷாத் பரமசிவனைப் போற்றிய ஸ்லோகமாக அமைந்திருந்தது எனலாம். சீக்கியர்கள் கொள்கைக்காக தம் உயிரையே திரணமாக மதிக்கும் தன்மையினர். யுத்த களத்தில் இதை உச்சரித்து தைர்யமாகப் போராடினர். இந்த 4 வரி சீக்கியரது ''சண்டி சரிதர் உக்தி பிலாஸ்'' என்கிற பாடலில் இடம் பெறுகிறது. இது முழுக்க முழுக்க தேவி பராசக்தி யின் சக்தி உபாசனை எனலாம். அவளது காம்பிர்யம், வீரம், தைர்யம், அருமை பெருமையைப் பாடுகிறது. தசம க்ரந்தம் என்ற சீக்கியர் வேதத்தில் 4வது அத்தியாயத்தில் வருகிறது. அதைப் பார்ப்போமா?

''Deh shiva bar mohe ehai, subh karman te kabhu na taro. Na daro ari soun jab jaye laro, nischey kar apni jeet karo. Aru sikh ho apne ho mann ko, eh laalach hou gun tau uchro. Jab aav ki audh (avadhi) nidan bane ati hee rann me tabh joojh maro.'' Translation: ''

O Lord Shiva, grant me the boon, that I may never deviate from doing a good deed. That I shall not fear when I go into combat. And with determination I will be victorious. That I may teach myself this greed alone, to learn only Thy praises. And when the last days of my life come, I may die in the might of the battlefield.||231|| -- Guru Gobind Singh

சகல சாஸ்திர வல்லுனர்களும் நரர்களும் சுரர்களும் பூஜிக்கும் பரமேஸ்வர, காட்டில் காடாக அடர்ந்து காணும் வன புஷ்பமான தாழம்பூவை அர்ச்சித்து உன்னை வனங்குகிறார்களே ஏன், தாழை நாகத்துக்கு விருப்பமான வாசஸ்தலம். அதன் மணம் விஷ நாகத்தையே கவர்கிறது . நீயோ அந்த நாகத்தையே மாலையாகக் கொண்டவன். நாகேஸ்வரன், நாகலிங்கம்.

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் ஸுரவன புஷ்ப ஸதார்சித லிங்கம் | பராத்பரம் பரமாத்மக லிங்கம் தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 8 ||

லிங்காஷ்டகமிதம் புண்யம் யஃ படேஶ்ஶிவ ஸன்னிதௌ | ஶிவலோகமவாப்னோதி ஶிவேன ஸஹ மோததே |

SWAMIJI'S TIME

SWAMIJI'S TIME. J.K. SIVAN

THE GOOD AND BAD OF EVERY ACTION

An evil-doer generally goes on doing more and more evil. His actions become intensified. Such, also will be the case with the doer of good; he will open himself to all the good waves that are in the atmosphere, and his good actions also will become intensified. We run, therefore, a twofold danger in doing evil: first, we open ourselves to all the evil influences surrounding us; secondly, we create evil which affects others, may be hundreds of years hence.

In doing evil we injure ourselves and others also. In doing good we do good to ourselves and to others as well; and, like all other forces in man, these forces of good and evil also gather strength from outside.

According to Karma-Yoga, the action one has done cannot be destroyed until it has borne its fruit; no power in nature can stop it from yielding its results. If I do an evil action, I must suffer for it; there is no power in this universe to stop or stay it. Similarly, if I do a good action, there is no power in the universe which can stop its bearing good results. The cause must have its effect; nothing can prevent or restrain this.

Now comes a very fine and serious question about Karma-Yoga — namely, that these actions of ours, both good and evil, are intimately connected with each other. We cannot put a line of demarcation and say, this action is entirely good and this entirely evil. There is no action which does not bear good and evil fruits at the same time. For example: I am talking to you, and some of you, perhaps, think I am doing good; and at the same time I am, perhaps, killing thousands of microbes in the atmosphere; I am thus doing evil to something else. When it is very near to us and affects those we know, we say that it is very good action if it affects them in a good manner. For instance, you may call my speaking to you very good, but the microbes will not; the microbes you do not see, but yourselves you do see. The way in which my talk affects you is obvious to you, but how it affects the microbes is not so obvious. And so, if we analyse our evil actions also, we may find that some good possibly results from them somewhere. He who in good action sees that there is something evil in it, and in the midst of evil sees that there is something good in it somewhere, has known the secret of work.


AINDHAM VEDHAM 11

ஐந்தாம் வேதம் J.K. SIVAN 
                                             11 அமிர்தம் தேடி பறந்த கருடன்

கருடன் நிஷாதர்கள் இருந்த தீவை வேகமாகப்பறந்து நெருங்கினான். எதிர்த்த அவர்களைக் கொன்று தின்றான்.அவனுக்கிரையான நிஷாதர்களில் ஒரு பிராமணனும் அவன் மனைவியும் இருந்தனர். மற்றவைகளை, மற்றவர்களை விழுங்கிய கருடனின் தொண்டையை பிராமண தம்பதியர் அடைத்துக் கொண்டு நின்றார்கள்.

''ஒ,பிராமணரே வெளியே வாருங்கள் என் எதிரியல்ல நீங்கள்'' என்றான் கருடன்.

''கருடா, என் மனைவி முதலில் வெளியே வரட்டும். அவள் நீ விழுங்கிய நிஷாதர்களில் ஒருவள்.''

''சரி, அவளையும் அழைத்துக்கொண்டு வெளியே வாருங்கள்'' என்றான் கருடன். அவர்கள் இருவரும் கருடன் வாயிலிருந்து வெளியே வந்ததும் அவர்களை ஜாக்கிரதையாக அங்கே தங்கவைத்துவிட்டு கருடன் பறந்தான். வழியில் தந்தை காச்யபரைக்கண்டு வணங்கினான். '' தந்தையே, குருவே, எனக்கு அமிர்தத்தை வென்று வர சக்தி அருளவேண்டும். அதற்கேற்ற ஆகாரம் வழியில் எனக்கு கிடைக்க வரம் தர வேண்டும்'' என்றான் கருடன்.

''காச்யபர் ''கருடா, நீ செல்லும் வழியில் ஒரு பெரிய ஏரி குறுக்கிடும். அந்த ஏரி புனிதமானது. அதில் ஒரு யானை எப்போதும் மூழ்கி, அதன் தமையனான ஒரு ஆமையை வெளியே இழுக்க முயற்சிக்கும். அதன் கதை சொல்கிறேன் கேள்.''

இந்த இடத்தில் நைமிசாரண்யத்தில் குழுமியிருந்த ரிஷிகளில் ஒருவரான சௌனகர் உக்ரஸ்வரரைப் பார்த்து ''இது என்ன கதை புதிதாக. சொல்லுங்கள்'' என்றார், சிரித்துக்கொண்டே சௌடி(உக்கிரஸ்வரரின் இன்னொரு பெயர்) காச்யபர் கருடனுக்குச் சொன்ன கதையை விளக்குகிறார் :

''ஒருகாலத்தில் ஒரு வயதான ரிஷி. விபத்வசு என்று பெயர். பொல்லாதவர். அவருக்கு தம்பி ஒருவன். சுப்ரிதிகன் என்று பெயர். ஒன்றாக அண்ணனுடன் வாழ விருப்பமில்லாதவன். தனது சொத்துகளைப் பிரித்துக் கொண்டான்.

''ஹே, சுயநலத்துடன் திரியும் சுப்ரிதிகா, நீ ஒரு யானையாகப் பிறப்பாய்'' என்று அண்ணா ரிஷியிடம் சாபம் பெற்றான் தம்பி ரிஷி .

'' நீயும் ஒரு ஆமையாகப் போய் விடுவாய்'' என்று தம்பியும் பதில் சாபமிட்டான். இருவரும் ஒருவரை இவ்வாறு சபித்துக்கொண்டதால் இருவருமே யானையும் ஆமையுமானார்கள். அப்படியும் அவர்கள் விரோதம் தொடர்கிறது. பிளிறிக்கொண்டு 6 யோசனை உயரம்,12 யோசனை அகலம் கொண்ட யானை, தும்பிக்கையைச் சுழற்றிக்கொண்டு நீரில் ஆமையை நெருங்க அது 3 யோசனை உயரம் 10 யோசனை அகலத்தில் இருந்த ஆமையும் யானையை நீரிலிருந்து எதிர்க்க இந்த துவந்த யுத்தம் வெகு காலமாக அந்த ஏரியில் தொடர்கிறது.

''என் மகனே கருடா, நீ அந்த யானையையும் ஆமையையும் கொன்று தின்றுவிடு, பிறகு அம்ருதத்தைத்தேடிக் கொண்டு செல்' என்றார் காச்யபர்.

கருடன் அந்த பெரிய ஏரியை நோக்கிக் குவிந்து இறங்கினான். தனது வலிமை மிக்க கால்களால் கோழிக்குஞ்சை இறுக்குவதைப் போல அந்த யானையையும் அதோடு மோதிய ஆமையையும் கவர்ந்து கொண்டு பறந்தான். அலம்வா என்ற ஒரு புனித க்ஷேத்ரம். அதில் தெய்வீக மரங்களும் தேவதாருக்களும் உண்டு. அவனது இறக்கையில் பட்டு காற்றுப் புயலாக வீச, அது அந்த ''கேட்ட வரம் தரும்'' மரங்களைத் தாக்க அவை பேயாக ஆடின. மற்ற மரங்களும் நடுங்கின. ஒரு பெரிய ஆலமரம் (பல யோசனை அகலம் நீண்ட கிளைகளையும் பறந்து கிடந்த விழுதுகளையும் உடையது) பேசியது.

''அப்பா கருடா, நீ தயவு செய்து என் மீது அமர்ந்து இளைப்பாறு. நீ கொண்டுவந்த யானையையும் ஆமையையும் ஆகாரமாக உண்டு பசி தீர்த்துக் கொள் '' என வரவேற்றதும் கருடன் அதன் ஒரு பெரிய கிளை ஒன்றின் மேல் அமர்ந்தான். அவன் பளுவைத் தாளாமல் அந்தப்பெரிய மரத்தின் கிளை ஒடிந்தது.

அந்த கிளையின் எங்கோ ஒரு ஓரத்தில் வலகில்ய ரிஷிகள் சிலர் தலைகீழாகத் தொங்கி தவம் செய்து கொண்டிருந்தனர். அந்த பிரம்மாண்ட கிளை ஒடிந்து கீழே விழுந்தால் அவர்களும் உயிரிழக்க நேருமே என்று கருடன் தனது அலகால் அந்த ஒடிந்த கிளையைத் தாங்கிக் கீழே விழாமல் தூக்கிப் பிடித்தான். பறந்தான். நிஷ்டை கலைந்த ரிஷிகள் அந்த பிரம்மாண்ட கிளை ஒரு பறவையின் எடை தாளாமல் உடைந்ததையும் அவர்கள் கீழே விழாமல் சமயோசிதமாக கருடன் தனது அலகில் அந்த உடைந்த மரக்கிளையைத் தாங்கிகொண்டு பறந்து ஒரு சரியான இடம் தேடி அவர்களை இறக்க முயற்சிப்பதும் கண்டு அதிசயித்தனர். கால்களில் யானை ஆமை வசமாக பிடிக்கப்பட்டு அலகில் பெரிய மரக்கிளையில் ரிஷிகளையும் சுமந்து கருடன் கந்தமாதன மலையை அடைந்தான். அங்கே தனது தந்தை காச்யபர் காட்டில் தவமிருந்ததால் அவரை வணங்கினான்.

''அப்பா, கருடா, வேகம் வேண்டாமடா.வலகில்ய ரிஷிகள் சூரிய ஒளியையே ஆகாரமாக கொண்டு தவமிருப்பவர்கள். தவம் கலைந்து அவர்கள் கோபத்துக்கு, சாபத்துக்கிரையாகாதே'' என்று அறிவுரை கூறி காச்யபரே அந்த முனிவர்களை நோக்கி ''சிறந்த தவ ஸ்ரேஷ்டர்களே, என் மகன் கருடன் கெடுதல் செய்பவன் அல்ல. நல்லதையே நினைத்து உதவுபவன். அவனுக்கு உங்கள் ஆசியைத்தாருங்கள்'' என்று வேண்டினார்.''

உக்ரஸ்ரவர் இவ்வாறு சொல்லி நிறுத்தினார். சௌனகர் முதலான ரிஷிகள் வேறு ஆர்வமாக அவர் சொல்வதை கேட்டுக்கொண்டு மேலும் தொடர காத்திருந்தனர். சௌடி மேலும் சொல்கிறார்:

''ஒடிந்த கிளையில் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த ரிஷிகள் காச்யப ரிஷியின் மூலம் கருடனைப் புரிந்துகொண்டு மெதுவாக அந்த கந்தமாதன மலையில் இறங்கி அனைவரும் ஹிமவத் பர்வதம் நோக்கி நடந்து சென்றனர். கருடன் காஸ்யபரிடம் கேட்டான்.

''தந்தையே, இந்த பிரம்மாண்ட ஒடிந்த ஆலமரக் கிளையை மனித சஞ்சாரமில்லாத இடமாக எங்கே வீசட்டும்? ''என்று கேட்டான். காச்யபர் ஒரு பனி படர்ந்த மலையைக் குறிப்பிட்டுச் சொல்ல, அங்கே கிளையோடும், யானை ஆமையோடும் கருடன் பறந்தான். ஆயிரம் யோசனை தூரத்தில் இருந்த அந்த பனிமலையை அரைக் கணத்தில் விரைவாக கருடன் அடைந்து அந்த பிரம்மாண்ட கிளையை அதன் மீது வீச பனி மலையின் சிகரங்கள் சிதறின. பனிமலையின் உச்சியில் அமர்ந்த கருடன் யானையையும் ஆமையையும் விழுங்கினான். அங்கிருந்து பறந்தான். கருடன் கிளம்பிய நேரம், ஆகாயத்தில் இடி முழங்கியது. மின்னல் கண்ணைப் பறித்தது. இந்தரனின் வஜ்ராயுதம் மற்ற ஆயுதங்களோடு மோதி பேரிரைச்சலுடன் ஒளியையும் தீப்பிழம்புகளையும் பரப்பியது. தேவாசுர யுத்தத்தில் கூட இப்படிப்பட்ட சப்தம் இல்லை. வசுக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள், சாத்யர்கள்,மருத்துகள், இதர தேவாதி தேவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் மோதினார்கள். வானமும் பூமியும் பொடிபட நடுங்கியது. ரத்தம் சிதறியது, மழையாக பொழிந்தது. இந்திரன் கலங்கினான்.
தொடரும்
MY MAHABHARATHAM BOOK IN TWO VOLUMES '' AINDHAM VEDHAM'' OF ABOUT 1000 PAGES IN ART PAPER WITH MULTI COLOR PICTURES IS AVAILABLE FOR A MINIMUM DONATION OF RS. 1000. THIS IS NOT FOR SALE, BUT TO MEET THE PRINTING EXPS ONLY. INTERESTED MAY CONTACT ME. J.K.SIVAN 9840279080 OVER PHONE OR WHATSAPP MSG. RECEIPT WILL BE ISSUED FOR DONATION


SRI R.A. PADMANABHAN A GREAT INDIAN WRITER AND NATIONALIST

பெருமதிப்புக்குரிய சுத்தமான ஒரு தேசிய வாதி, பாரதி பக்தர் ரா.அ .பத்மநாபன்   ---         J.K. SIVAN

ஸ்ரீ  ரா.அ .பத்மநாபன்  (1917-2014) அவர்களுக்கு இருந்த ஒரே வியாதி. பாரதி பைத்தியம் என அறிகிறேன். ஒரு சிறந்த பத்ரிகாசிரியர். எழுத்தாளர். ஆனந்தவிகடன், தினமணி கதிர், ஹிந்து, ஹிந்துஸ்தான் பத்திரிகைகளில்  மஹாகவி பாரதியாரை வெளிச்சம் போட்டு காட்டியவர். அகில இந்திய ரேடியோவில் , டில்லியில்,  நிகழ்ச்சிகள் வழங்கியவர்.   2006ல்  ''பாரதியார் அவார்ட் '' ஜனாதிபதி அப்துல்கலாம் கையால் பெற்றவர். அவரது ' சித்திர பாரதி'' மூன்றாம் பதிப்பை கலாம் அவர்களே வெளியிட்டார்.

பாரதியாரைப் போலவே தேசிய தாகம் கொண்டவர்.
சுதந்திர போராட்டத்தில் ஈடுபாடு.  வெள்ளையனிடம் தடியடி பிரசாதம் வாங்கியவர்.  ஆனந்தவிகடன் உதவி ஆசிரியராக இருந்தவர்.    ஒரு தடவை விகடனில் புகைப்பட பிரிவிற்கு பொறுப்பாக இருந்த சமயம்  அவரது நண்பரும் சர்வோதய சங்க தலைவருமான  எஸ். ஆர். சுப்பிரமணியம் பாரதியாரின் அபூர்வ படம் ஒன்று கொண்டுவந்தார்.  ஆனந்த விகடன் ஆசிரியரும்  நிறுவனருமான  எஸ். எஸ். வாசன் கல்கி இருவரும் அந்த படத்தின் பிரதிகளை எல்லா பத்திரிகைகளுக்கும் அனுப்ப சம்மதித்தார்கள்.இதற்கு பரந்த மனப்பான்மை வேண்டுமே.

பத்மநாபனின் அரசியல் ஈடுபாட்டை கவனித்த வாசன், ''என்ன பத்மநாபா, ஒன்று நீ முழுமையாக பத்திரிகை உலகில் ஈடுபடு. அல்லது விலகி , முழு , தேச தொண்டனாக சேவை செய். உனது விருப்பம் எப்படியோ அப்படி. நான் உன்னை  கட்டாயப்படுத்தவில்லை என்கிறார்.  மறுயோசனை இல்லாமல்   ரா. அ .ப.  ஆனந்தவிகடனை விட்டு வெளியேறுகிறார்.  கல்கிக்கு வருத்தம். கோபமும் கூட.

''பத்மநாபா, அவசர குடுக்கையாக இருக்கிறாயே.  ராஜாஜியை  சென்று பார்த்துப்பேசி  முடிவெடு.'' என்கிறார் கல்கி.ராஜாஜி சாமர்த்திய சாலி ஆயிற்றே.  ஒரு கடிதம் வாசனுக்கு எழுதி, பத்மநாபனை மீண்டும் விகடனில் பிணைத்து வைக்க சிபாரிசு கடிதம் எழுதி, அதை ரா.அ.ப. விடம் கொடுத்து  ''இதை வாசனிடம் கொடு '' என்கிறார்.  பத்மநாபனுக்கு ராஜாஜியிடம் பேசியபோதே அவர்  விகடனை விட்டு தான் வெளியேறியதை  விரும்பவில்லை என்று புரிந்ததால் அந்த கடிதத்தை பிரித்து வீட்டில் படித்துவிட்டு அதை விகடனில் வாசனிடம் சேர்ப்பிக்கவே இல்லை.
சிறிது காலம்  ஜெயபாரதி என்ற  தேசிய உள்ளூர் பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றினார். அதன் நிறுவனர் நாராயண அய்யங்கார், தேசிய பொருள்களை தவிர மற்ற எதற்கும் விளம்பரம் அவர் பத்திரிகையில் தராதவர்.
ரா.அ .ப.வுக்கும்  கல்கிக்கும் ஒரு போட்டி.  ''பாரதியார் ஒரு மஹா கவியா ?'' என்று.  ப.  ஆமாம் சந்தேகம் இல்லாமல் என்பார்.
எப்படி ?   இவரது படைப்புக்கள் காலத்தை கடந்து நிற்குமோ அவரைத்தான் மஹாகவி எனலாம்.  பாரதியாரின் படைப்புகள் அப்படிப்பட்ட  என்றும் அழியாத  கவிதைகள்  இல்லையா?  என்று ஒரு அழகான ஆராய்வுக் கட்டுரையை வெளியிட்டார் பத்மநாபன்.

'' ஹனுமான்'' என்ற ஒரு பத்திரிகை வெளிவந்து அதன் ஆசிரியராக அவரை நண்பர்கள் ராலி, ரா.பா. துமிலன்  ஆகியோர் கேட்டும் நிராகரித்தார் பத்மநாபன்.  சிறந்த எழுத்தாளர் ஆசிரியர்  எம்.எஸ். காமத் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் எப்படியோ பத்மநாபனை சேர வைத்துவிட்டார்.  காமத் ஒரு பாரதி பித்தர்.  இது ஒன்றே காரணம் பத்மநாபன் அதில் சேர.  பாரதியரைப் பற்றி நாடு அறிந்துகொள்ள இந்த சேவை உதவியது.

 "நான் புதுச்சேரிக்கு  ஒரு  ரோலி பிளெக்ஸ்  புகைப்பட கருவியோடு எங்கெல்லாமோ சுற்றி பாரதியாரைப் பற்றிய தகவல்கள் சேகரித்தேன்'' என்றார் பத்மநாபன். ஹிந்துஸ்தான் பத்திரிகையில் மஹாகவியைப் பற்றிய செயதிகள், தகவல்கள், புகைப்படங்கள் நிறைய வெளியாயின. ( யாரிடமாவது ஏதாவது  இருக்கிறதா? எனக்கு கொஞ்சம் அனுப்புங்களேன்- சிவன் )

1939ல் நான் பிறந்த வருஷம்  பத்மநாபன் அ .இ.ரேடியோ, திருச்சியில் சேர்ந்தார். காங்கிரஸ் பற்றிய செய்திகளை  வெள்ளைக்கார அரசு வானொலி அவர் விரும்பிய படி பிரசாரம் செய்ய பயப்பட்டது.  சீ இந்த வேலை வேண்டாம் என்று உதறினார்.
இன்று எனது நண்பர் சூரியநாராயணன் வீட்டில் ஒரு பழைய  ரா.அ .ப. தொகுத்த  பாரதியார் தகவல்கள், பாரதியார் எழுத்துக்கள் ஒரு வெளியிடப்படாத புத்தகமாக கிழிந்த நிலையில் கிடைத்து அதைப் படித்து தினமும் கொஞ்சம் அதை உங்களுக்கு வழங்க ஒரு எண்ணம். அது தடையின்றி நிறைவேற கிருஷ்ணன் அருளட்டும்.


Monday, February 26, 2018

KUNTHI PRAYERS 5

குந்தியின் பிரார்த்தனை 5 J.K. SIVAN

குந்தி விசித்ரமானவள். ஒரு பக்கம் கிருஷ்ணனை சொந்த மகனாக நேசித்தாள் . அதே நேரம் அவனை ஈடிணையற்ற சக்திமானாக, பகவானாக, ஆபத் பாந்தவனாக வழிபட்டவள். கிருஷ்ணன் அவள் மூச்சில் கலந்தவனாக இருந்தான். கிருஷ்ணன் ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறி துவாரகை திரும்பும் சமயம் எல்லோரிடமும் விடைபெறும்போது குந்தியிடமும் சென்று வணங்கி ''நான் செல்கிறேன் விடைகொடு அத்தை'' என்று சொல்லும்போது அவள் பிரார்த்திப்பதை வியாசர் அற்புதமாக ஸ்லோகங்களாக இயற்றியிருக்கிறார். அவற்றில் இதுவரை சிலவற்றை ரசித்தோம். மேற்கொண்டு அவை இனி தொடர்கின்றன

जन्मैश्वर्यश्रितश्रीभिरेधमानमद: पुमान् ।
नैवार्हत्यभिधातुं वै त्वामकिञ्चनगोचरम् ॥९॥

9.Janmai aiswarya srutha sri bhiredhamana madha pumaan,
Naivaar hathyabhidhaathum vai thwama kinchana gocharam.

செல்வம் மட்டும் எதிர்பார்த்ததற்கு மேல், இல்லாவிட்டால் எதிர்பாராமலோ, ஒருவனிடம் சேர்ந்துவிட்டால் ஆஹா, அடுத்த கணம் அவன் குணம் மாறிவிடும். அவன் கர்வம் தலைக்கேறி விடும். கடவுளா யார் அது, என்னைவிடவா அவன் புத்திசாலி, சக்திமான் என்று அகம்பாவம் இவனுக்கு மட்டும் அல்ல இவனுக்கு முன்பே பல ராவணர்களுக்கு, கம்சர்களுக்கு, துரியோதனர்களுக்கும் இருந்தது தானே. செல்வம் மட்டும் அல்ல, பக்தியற்ற கல்விக்கூட ஒருவனை மண்டை பெருக்கச் செய்த்துவிடும். நாம் தான் பார்க்கிறோமே ஒவ்வொருவனும் பேசுவதை. கிருஷ்ணா உன் பேரைச் சொல்லும் பாக்யம் இழந்தவர்கள் அவர்கள். எதுவுமே தனதில்லை, தனக்கில்லை என்று உணர்ந்தவனிடம் தானே நீயே இருப்பவன்.

नमो sकिञ्चनवित्ताय निवृत्तगुणवृत्तये ।
आत्मारामाय शान्ताय कैवल्यपतये नम: ॥१०॥

10.Namo akinchana vithaya , nivrutha guna vruthaye,
Aathmaramaya santhaya kaivalya pathaye nama.

நமஸ்காரம் கிருஷ்ணா, ஒன்றோ ரெண்டோ சொன்னால் போதாது. வாழ்நாள் பூரா, அடுத்து வரும் ஜென்மங்களில் எல்லாம் விடாமல் சொல்லவேண்டும். பரம தாரித்ரியத்தில் இருந்த எங்களை வாழவைத்த தெய்வமே. எங்கள் மீது அன்பு கொண்ட பக்த வத்சலா, பேரானந்த ஸ்வருபனே, சாந்த மூர்த்தி, ஆபத் பாந்தவா உன்னை தாள் தொட்டு வணங்குகிறேன் அப்பா. ஏழை பங்காளா. இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டவன், எதிலும் விருப்பு வெறுப்பற்றவனே, பரமானந்த மூர்த்தி உன்னை நமஸ்கரிக்கிறேன்.

मन्ये त्वां कालमीशानमनादिनिधनं विभुम् ।
समं चरन्तं सर्वत्र भूतानां यन्मिथ: कलि: ॥११॥11

11 Manye thwaam kaala meesana manadhi nidhanam vibhum,
Samam charantham sarvathra bhoothanaam yanmidha kali.

அழகிய நீல வண்ணா, நீ ஆதி அந்தமில்லாத அருட்பெருஞ்சோதி. காலகாலன். சர்வ வியாபி. ஓயாமல் ஒழியாமல் உதவும் ஏழை பங்காளன். நீ காலத்தால் மாறாத ஸாஸ்வதன். புருஷோத்தமன். ஆதி அந்தமில்லாதவன். சர்வவியாபி. காருண்ய மூர்த்தி. அஞ்சேல் என அடைக்கலம் கொடுப்பவன். எங்கும் எதிலும் நிறைந்தவன். எண்களைப்போன்று உணர்ச்சிகளால் உந்தப்படாதவன்.

கிருஷ்ணன் குந்தியை பார்த்துக்கொண்டே நிற்கிறான். அவளோ கடல்மடை போன்று உணர்ச்சி வெள்ளத்தில் கண்ணன் செய்த உதவிகளை வரிசைப்படுத்தி சொல்லி பிரிய மனமில்லாமல் அரற்றுகிறாள். இனி ஹஸ்தினாபுரத்திற்கு கண்ணன் வரப்போவதில்லை. குந்தியும் இனி கண்ணனை காணப்போவதில்லை என்ற எண்ணம் அவளை வாட்டுகிறது.

जन्म कर्म च विश्वात्मन्नकस्याकर्तुरात्मन: ।
तिर्यङ्नृषिषु याद: स तदत्यन्तविडम्बनम् ॥१३॥

janma karma ca viśvātmann
ajasyākartur ātmanaḥ
tiryaṅ-nṝṣiṣu yādaḥsu
tad atyanta-viḍambanam

கிருஷ்ணா, பிரபஞ்சத்தின் காரணனே. பரம ஆத்மாவே, எனக்கு தலை சுற்றுகிறது. நீ ஒரு புதிர். புரிபடாதவன். ஏன் தெரியுமா? உனக்கு என்று எந்த காரியமும் இல்லை. ஆனால் எல்லா காரியத்தையும் நீ செய்பவனாக இருக்கிறாய். ஜனன மரணம் இல்லாதவன் நீ என்றாலும் நீ எல்லாவற்றிலும் தோன்றி மறைகிறாய். மரமாகவும், மன்னிக்கவும், மாந்தராகவும், மக்களாகவும் , மஹரிஷிகளாகவும், மலர்களாகவும் உன்னை காண்கிறேனே .

தொடரும்



SIRUVACHUR MADHURAKALI AMMAN

சிறுவாச்சூர் மதுரை காளி அம்மன்   J. K. SIVAN

தவறு செய்த பாண்டியன் அரசவையிலேயே மாண்டான். அவன் மனைவியும் அவனை விண்ணுலகில் அடைந்தாள். நிரபராதி கணவனை திருடன் என்று கொன்ற தவறு செய்த பாண்டியன் நெடுஞ்செழியனை தண்டித்ததுடன் அவளது கோபம் தீரவில்லை. அவன் ஊரையே எரித்தாள்.கொஞ்சம் கொஞ்சமாக ஆத்திரம் அடங்கிய நிலையில் திருச்சிவரை நடந்தாள்.அதன் அருகே ஒரு கிராமம் மனத்தை கொஞ்சம் சாந்தபடுத்தியது. அங்கேயே தங்கிவிட்டாள் . சிறுவாச்சூர் இன்னும் அழகாகத்தான் இருக்கிறது. எங்கும் வயல்வெளிகள். பச்சை பசேலென்று. மண் வாசனை தூக்கலாக இருக்கிறது. பெரம்பலூர் ஜில்லாவை சேர்ந்தது.

அந்த ஊரார் ஆயிரம் வருஷங்களுக்கு முன் ஒரு கோவில் கட்டி அங்கே செல்லியம்மனை வணங்கிவந்தார்கள். செல்லி யம்மன் பக்தன் ஒரு தாந்த்ரீகன் அவளது சக்தியை தவறான அழிவுப்பாதையில் உபயோகித்த நேரம் அது. அப்போது தான் கண்ணகி மதுரையிலிருந்து வந்தாள் . ஆம் மேலே நான் சொன்னது மதுரையை எரித்த, பாண்டியனால் தவறாக திருடன் என்று தண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட கோவலன் மனைவி கண்ணகியே தான். அவள் வந்து தங்கிய ஊர் தான் சிறுவாச்சூர். அங்கு அவள் வந்து தங்கியது செல்லியம்மனோடு. அவள் பெயர் அங்கு மதுரை காளி அம்மன். மதுரை வந்த கண்ணகி செல்லியம்மன் தனது சக்தியை ஒரு மந்திரவாதி யினால் இழந்துவருவதை அறிந்து அந்த மாந்த்ரீகனை கொல்கிறாள். செல்லியம்மன் மகிழ்ந்து '' மதுரகாளி, இனி இங்கே நீ என் இடத்தில் இருந்து மக்களை ரக்ஷி. நான் அருகே பெரியசாமி மலைக்கு செல்கிறேன்'' என்று மதுரகாளியிடம் விடை பெற்று செல்கிறாள். மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் மதுரகாளி என்பதை அவளது எண்ணற்ற பக்தர்கள் கண்ணை மூடிக்கொண்டு தலையை ஆமாம் என்று ஆட்டுவதில் இருந்து அறியலாம்.

திருச்சியில் இருந்து சென்னை திரும்பும் பாதையில் சிறுவாச்சூரில் மதுரகாளியை தரிசித்து சென்றோம் .இந்த கோயில் வெள்ளியும் திங்களும் தான் திறந்திருக்கும். நான் அங்கே சென்றது ஒரு திங்கள் கிழமை. விடலாமா சந்தர்ப்பத்தை? ,மற்ற ஐந்து நாள் மதுரை காளி செல்லியம்மனோடு பெரியசாமி மலையில் அவளோடு சேர்ந்து இருக்கிறாள்.

நான் சென்ற திங்கட் கிழமை நிறைய பெண்கள் அங்கு மாவிளக்கு இடித்து , மாவிளக்கு போட்டு தீபம் ஏற்றி வணங்கினார்கள். பிரகாரத்தில் அங்கப்ரதக்ஷிணம் வரிசையாக ஆணும் பெண்ணும் உருண்டு வேண்டுதல் கழிக்கிறார்கள். ஆண்களோடு பெண்களும் இங்கே முடி காணிக்கை செலுத்துவதும் வழக்கம். சதாசிவ ப்ரம்மேந்த்ர மஹான் இங்கே ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செயதிருக்கிறார். நான்கு கரங்களோடு நாலு நாலரை அடி உயரத்தில் கருணாம்பிகையாக மதுரை காளி அருள்பாலிக்கிறாள்.

சென்னையை அடுத்த திருமழிசை-திருவள்ளூர் சாலையில் நேமம் ஒரு பிரபலமான பெயர் கொண்ட ஊர். அதை அடுத்து ஒரு தடவை கோடம்பாக்கம் என்ற ஊர் பெயரைப் பார்த்து அதிசயித்தேன் இங்கேயும் ஒரு கோடம்பாக்கமா என்று. அங்கே தான் ஒருவர் என்னை ''இப்படித்தானே மதுரை காளி அம்மன் கோவில் போகவேண்டும்?'' என்று கேட்டார்.

''நாங்களும் அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம்'' என்று சொன்னதும் அவரும் எங்களோடு சேர்ந்து கொண்டு அருகே ஒரு உள்ளூர் மனிதர் வழிகாட்ட தொடர்ந்தோம். சிறிய பாதை ஒன்றிரெண்டு கி.மீ தூரத்தில் கிராமத்துக்குள் அழைத்து சென்றது.

உள்ளே சென்றால் அழகிய வட சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் ஆலயம் வரும். அங்கு ஒரு மா மனிதர் தன்னை அம்பாளின் கைங்கர்யத்துக்கு ஈடுபடுத்திகொண்டிருக்கிறார். பெயர் சந்திரசேகரர். எவ்வளவு பொருத்தமான பெயர்!. ரயில்வேயில் ரிடையர் ஆனவர் என்று சொன்னதாக ஞாபகம். தனிமனிதனாக அவர் இந்த கோவிலை பராமரித்து வருகிறார். அழகான மதுரை காளி .அந்த ஊருக்கு வட சிறுவாச்சூர் என்று பெயர். அந்த பக்கம் செல்பவர்கள் கோபமில்லாத சாந்தமான மதுரை காளியை தரிசித்து குங்குமம் பெறலாம். வாழ்க்கையில் நெடுஞ்செழியன் மாதிரி தப்பு செய்யமாட்டோம்.




LINGASHTAKAM 7


லிங்காஷ்டகம் 7 J.K. SIVAN

இதுவரை ஆதி சங்கரரின் லிங்காஷ்டக ஸ்லோகங்களில் ஏழு அனுபவித்து மகிழ்ந்தோம். அடுத்த எட்டாவது ஸ்லோகத்தோடு இந்த தொடர் நிறைவுபெறும்.

''த்ரிநேத்ரனான சதாசிவா, உனக்கு அபிஷேகப்ரியன் என்று பெயர் உண்டே. தாரா பாத்ரத்தில் சதா சர்வ காலமும் ஏற்கனவே கங்கையைத் தலையில் சூடிய பெருமானே, உனக்கு அபிஷேகம் நடைபெறுவதை எத்தனை கோவில்களில் கண்டு களித்திருக்கிறேன். உன் மனம் குளிர்ந்து நீ அருள இப்படி ஒரு வழியா? உனக்கு எதில் அபிஷேகம் செய்கிறார்கள் என்று அறிவேனே!

தயிர், பால், தேன் , இளநீர், விபூதி, சந்தனம், பஞ்சாம்ருதம் (பால், சர்க்கரை, நெய், தேன், தயிர்) இத்தோடு நிறைய பழங்களும் சேர்ப்பதும் உண்டே.

வில்வ தளத்தில் மகிழும் விஸ்வநாதா, உலகில் பிறந்து பிறந்து துன்பத்தில் வாடும் எம்மை கருணையோடு காத்து ''பிறவா வரம் தாரும் பெம்மானே'' என்று பாடியதும் உண்டல்லவா?.

நீ எளிதில் திருப்தி அடைபவன் ஆயிற்றே. எளிய மலர்களே கூட உனக்கு போதுமே, தும்பை, அரளி, நாகலிங்கம், -- மற்றவர்கள் தலையில் சூடாத பூக்கள் உன்னை அலங்கரிக்கின்ரனவே.

உனக்கு பிடித்த எட்டு மலர்கள் எது என்று எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. சொல்கிறேன்

1. அஹிம்சை என்கிற புஷ்பம் பக்தர்களிடம் கண்டால் அதுவே உனக்கு பிடித்த முதல் மலர்
2. ஐம்புலன் அடக்கம் என்கிற புஷ்பம் இருந்தால் அது தான் ரெண்டாவதாக பிடித்த மலர்
3. சகல ஜீவராசிகளிடமும் காருண்யம் என்கிற புஷ்பம் என்பது உனக்குப் பிடித்த மூன்றாவது மலர் .
4. மன்னித்தல் என்கிற புஷ்பம் உனக்குப் பிடித்த விசேஷ நான்காவது மலர் .
5. .பொறுமை, அமைதி, சாந்தம் இது பக்தர்களிடம் இருந்தால் அந்த புஷ்பம் நீ அவர்களிடமிருந்து பெரும் ஐந்தாவது மலர் .
6. ஜப தபம் என்கிற புஷ்பம் அது உனக்கு பக்தர்கள் அளிக்கும் ஆறாவது மலர்.
7. தியானம் என்கிற அருமையான புஷ்பம் தான் உன்ன்னைகவரும் ஏழாவது மலர்.
8.சத்யம், என்கிற விசேஷ புஷ்பமே நீ விரும்பும் எட்டாவது மலர்.

இவற்றை பக்தர்கள் கொண்டிருந்தால் அந்த மலர்களாலேயே நீ அர்ச்சிக்கப்பட விரும்புவன் நீலகண்டா. யாரும் விரும்பாத அஞ்சும் விஷ நாகமே நீ மனம் விரும்பி அணியும் மாலை அல்லவா?. நாகேஸ்வரா. காடுடைய சுடலைப் பொடி பூசி உனது திவ்ய சரீரம் சொல்லாமல் சொல்லுகிறதே வாழ்வு அநித்தியம் என்று. பரம சிவா உன்னை வணங்குகிறேன்.

அஷ்டதளோபரிவேஷ்டித லிங்கம்
ஸர்வஸமுத்பவ காரண லிங்கம் |
அஷ்டதரித்ர வினாஶன லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 7 ||

தென்னாடுடைய சிவனே என்னாட்டவர்க்கும் இறைவனே. நீ எளியோர்க்கெளியவன். புராதனமானவன். அனாதிகாலத்தவன். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கும் முந்தைய பழமனாதி. பராத்பரா, பரமேஸ்வரா. ''தந்தை தாய் இருந்தால் உலகில் உனக்கு இந்த அல்லல் வருமோ ஐயா'' என்று அருமையான பாட்டு நீ ஆதி அந்தமில்லாதவன் என உணர்த்துவதை எத்தனை முறை கேட்டிருக்கிறேன். மகிழ்ந்திருக்கிறேன். பாடியுமிருக்கிறேன். எல்லோரும் அமிர்தம் தேடி அலையும்போது நீ தானாகவே வந்து ஹால ஹால விஷத்தை அமுதாக உண்டவனாயிற்றே.

சுருட்டப்பள்ளியில் பள்ளிகொண்ட ஈஸ்வரா, உன்னை அங்கு காணும்போதெல்லாம் என் மனம் எத்தனை வேதனைப்படும் தெரியுமா? முகத்தில் கவலையோடு பார்வதி, தேவர்கள், முனிவர்கள் நந்தி அனைவரும் உன்னை, உன் வேதனையை, உணரும் உணர்ச்சியை முகத்தில் தேக்கி காட்டி எவ்வளவு அற்புதமாக, அதிசயமாக, அந்த சிற்பி கல்லில் வடித்திருக்கிறான். பிரதோஷ மகிமை அல்லவா அந்த க்ஷேத்ரத்துக்கு. (பார்க்காதவர்கள் இப்போதே உலகிலேயே பெரிய, படுத்துக்கொண்டி ருக்கும் கோலத்தில் பள்ளிகொண்ட ஈஸ்வரனாக அந்த சிவனைச்சென்று தரிசியுங்கள். தமிழ்நாடு ஊத்துக்கோட்டையிலிருந்து கூப்பிடு தூரம் ஆந்திரா எல்லையில் உள்ளது சுருட்ட பள்ளி. சென்னையிலிருந்து மூன்று மணி நேரத்தில் பள்ளிகொண்ட ஈஸ்வரனை தரிசிக்கலாமே .




GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...