Tuesday, February 13, 2018

LINGASHTAKAM. 1

பஞ்ச முக லிங்கம் ஜே.கே. சிவன்
லிங்காஷ்டகம் 1

ஆதி அந்தமில்லாத முழு முதற் கடவுளே, மகாதேவா, அடி முடி காண முடியாத விஸ்வ பிரமமே உன்னை சுலோகங்களில் பாடித் தொழுதவர்கள் எண்ணற்றவர்கள்.. எண்ணிப்பார்க்கக் கூட முடியாத அளவுக்கு உன் பக்தர்கள் உலகெங்கும் உள்ளார்கள். ஒரு எட்டு ஸ்லோகம் இந்த மஹாசிவராத்திரி அன்று என்னை ஈர்த்தது. அதைப்பற்றி கொஞ்சம் சொல்ல ரொம்ப ஆவல்.

மஹாலிங்கமே , உன்னை எட்டு சுலோகங்களில் பாடியதற்கு பெயர் லிங்காஷ்டகம். எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் கேட்கக் கேட்க அலுக்க வில்லை. பாடப் பாட நா மணக்கிறதே தவிர வெறுக்க வில்லையே. என்ன ரகசியம் இதில்?

சிவனை விஷ்ணுவும் பிரம்மாவும் வணங்குகிறார்கள். விஷ்ணுவை சிவனும் பிரம்மாவும் கோடி கோடி தேவர்களும் வணங்குகிறார்கள். இவ்வாறு ஒருவரை ஒருவர் வணங்குவதால் யாரும் யாருக்கும் இளைத்தவர்களோ சளைத்தவர்களோ இல்லை என்றும் பொருள் கொண்டாலும், மகாதேவா , நீ ஒன்றே சாஸ்வதம், வேண்டுவோர் வேண்டிய வண்ணம் பலராக, பலவாக, நிறைவாகத் தோன்றுகிறாய் என்று புரிந்து நமஸ்காரம் பண்ணுகிறேனே .நீ துக்க நாசனம், என் பல பிறவிகளில் சேர்த்து வைத்துக்கொண்ட , சர்வ பாப நாசனம் பண்ணுபவனல்லவா?. ஆத்ம ஒளி தரும் ஜாஜ்வல்ய லிங்கமல்லவா. லிங்கமென்றாலே எனக்கு என்ன தோன்றுகிறது? . அருவத்தை ஏதோ உருவாக, ஸ்வரூபமாகக் காட்டுவது என்று தானே. ஆனால் பார்க்கும்போதே மனத்தை காந்தமாக ஈர்க்கிறதே. இனம் புரியாத பக்தி, பரவசம், உள்ளே உலவுகிறதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் வெளியே சொல்லத்தெரிய வில்லையே.பொங்கி வரும் நன்றிப பெருக்கால் நான் சொல்ல முடிந்தது ''சிவ சிவா'' ஒன்றே தான். இது தான் என் ஜபம். இதைச் சொன்னாலேயே கேட்டதெல்லாம் கொடுப்பவனல்லவா நீ. எத்தனை ராக்ஷசர்களும் கொடியவர்களும் கூட உன்னை வேண்டினதும் அருள் புரிந்தவனல்லவா. .

எட்டு அஷ்டகத்தில் முதல் ஸ்லோகம் கீழே தருகிறேன். மற்றவற்றை ஒன்று ஒன்றாக பார்க்கலாம்.
ब्रह्ममुरारिसुरार्चितलिङ्गं निर्मलभासितशोभितलिङ्गम् ।
जन्मजदुःखविनाशकलिङ्गं तत् प्रणमामि सदाशिवलिङ्गम् ॥१॥

Brahma-Muraari-Sura-Aarcita-Linggam Nirmala-Bhaasita-Shobhita-Linggam |
Janmaja-Duhkha-Vinaashaka-Linggam Tat Prannamaami Sadaashiva-Linggam ||1||

பிரம்ம முராரி சுரார்ச்சித லிங்கம்
நிர்மல பாசித சோபித லிங்கம்
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

பிரம்மனும் விஷ்ணுவும் தேவர்களும் மனிதர்களும் வணங்குமே லிங்கமே
எண்ணுவோர் எண்ணமாய் விகசிக்கும் நிம்ர்மலமான ச்வயம்ப்ரகாசமான லிங்கமே
பிறப்பறுக்கும் பிஞ்ஞகா ஜரை மூப்பு துக்கம் இவற்றின் துன்பத்திலிருந்தெல்லாம் விடுவிக்கும் விஸ்வநாதா
நினைத்தாலே இனிக்கும் நிர்மலா சதாசிவ லிங்கமே -- உனக்கு நமஸ்காரம்





No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...