Tuesday, February 27, 2018

LINGASHTAKAM 8

லிங்காஷ்டகம் 8      

J.K. SIVAN

மஹேஸ்வரா, நேற்று பிரதோஷத்தோடு உன்னுடைய எட்டு அஷ்டகங்களை ஆதி சங்கரர் அற்புதமாக இயற்றியதை என்னால் முடிந்தவரை பிறருக்கும் அளித்தேன். மனம் மட்டுமல்ல இந்த தொடரும் இதோடு நிறைந்தது.

மனிதர்களாகிய நாம் எத்தனை தோஷங்களுடன் ஜன்மம் எடுத்துள்ளோம் என்பது யாருக்கும் தெரியாது ஆனால் பிரதோஷ உபாசனையால் அத்தனை தோஷங்களையும் போக்கிக் கொள்ளமுடியும். எனவே பிரதோஷ பூஜை செய்து நன்மை பெறலாம். அகில லோகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளும் உயிர்வாழும் பொருட்டு சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு எல்லோரையும் காப்பாற்றினார் அந்த காலமே பிரதோஷ காலமாகும் . பரம்பொருளான சிவபெருமான் மகிழ்ந்து தேவர்களுக்கு அருள்புரிய திருவுள்ளம் கொண்டு கயிலையில் அன்று மாலை பிரதோஷ வேளையில் தன் முன்னிருந்த ரிஷப தேவரின் இருகொம்புகளுக்கிடையே நின்று அம்பிகை காண திருநடனம் செய்தருளினார். தேவர்கள் அதைக் கண்டு உளம் மகிழ்ந்து சிவபெருமானை வணங்கினர். அது முதல் திரியோதசி திதி அன்று மாலை நேரம் பிரதோஷகாலம் என்று அழைக்கப்படுகிறது. அனைத்து லோக ஜீவராசிகளும் தேவர்களும் முப்பத்துமுக்கோடி தேவர்கள் அனைவரும் பிரம்மா, விஷ்ணு, ஒன்று சேர்ந்து விரதமிருந்த நாள்தான் பிரதோஷ நாளாகும்.

வளர்பிறை, தேய்பிறை இரண்டு காலங்களிலும் வரும் திரியோதசி திதி அன்று நீராடி அன்று மாலை 4-30 மணி முதல் 6-00 மணிக்குள் சிவாலயம் சென்று வழிபடவேண்டும். தேய்பிறையில் வரும் பிரதோஷ காலங்களில் சிவன் அம்பிகையுடன் நந்தியின் கொம்புகளுக்கிடையே நடனமாட திருமால் மட்டுமே கண்டுகளிக்கின்றார். ஆனால் பெளர்ணமிக்கு முன்னால் வரும் பிரதோஷத்தன்று திருமாலுடன் சேர்ந்து தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவனை வழிபட வருகின்றனர். அனறு மாலை 4-30 மணிமுதல் 6-00 மணிக்குள் சிவனை வழிபடும் மக்களுக்கு அனைத்தும் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. பிரதோஷமன்று உபவாசமிருந்து தரிசனம் முடிப்பது நற்பலன்களை தரும்.

‘’ ப்ர’’ என்பது பாவத்தையும் தோஷம் என்பது போக்கும் நேரம் எனவும் பொருள்படும். பிரதோஷகாலத்தில் சிவபெருமான் எல்லாவற்றையும் தன்னிடம் அடக்கிக் கொள்கிறார். அதனால் பிரதோஷம் என்பது பரமேஸ்வரனை வழிபடுதலாகும். பொதுவாக பிரதோஷம் ஐந்து வகைப்படும். ஒவ்வொரு பிரதோஷத்திலும் இறைவனை பூஜிப்பதற்கு முன் நந்தி தேவரை பூஜிப்பது நன்மை பயக்கும் . எல்லோருக்கும் எல்லா நலன்களையும் பக்தியையும் வளர்க்க என்னிடமிருக்கும் நந்தி தேவன் எனக்கு இணையான பெருமையுடையவன் ஆதலால் நான் இரண்டாம் சிவவேடம் தரித்து பூவுலகில் கர்மத்தை பரவ செயகிறேன் என்று சிவ பெருமான் கூறியுள்ளார். சிவன் முன்னால் இருக்கும் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலையணிவித்து நெய் விளக்கிட்டு வெல்லம் கலந்த அரிசி நிவேதனம் செய்யவேண்டும். பால், தயிர், தேன், பழங்கள், பஞ்சாமிர்தம், நெய், இளநீர், சர்க்கரை, எண்ணை, சந்தனம், ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது உசிதம். வில்வம், மல்லிகை, செந்தாமரை, வெண் தாமரை, எலுமிச்சை, துளசி போன்றவற்றில் மாலை தொடுத்து நந்தியம்பெருமானுக்கு சார்த்தவேண்டும். நந்தி தேவருக்கு தீபாராதனை முடிந்தபிறகு மூலவருக்கு தீபாராதனை நடைபெறும்.

நந்தி தேவரின் சிலையின் பின்பக்கத்திலிருநது இரண்டு கொம்புகளிடையே உள்ள இடைவெளி வழியாக சிவபெருமானுக்கு நடைபெறும் தீபாராதனையைப் பார்த்தால் சகலதோஷமும் துன்பமும் நீங்கி இன்பம் எய்துவர். மலடு நீங்கி மகப் பேறு பெறுவர். கடன் நீங்கி செல்வம் பெறுவர்,. நோய் நீங்கி நலம் பெறுவர். அறியாமை நீங்கி ஞானம் பெறுவர். பாவம் தொலைத்து புண்ணியம் பெறுவர். பிறவி ஒழிந்து முக்தி அடைவர். சகல செளபாக்கியங்களை யும் பெற்று முடிவில் மோட்சத்தையும் சொர்க்கத்தையும் அடைவர். எல்லாம்வல்ல இறைவனைப் போற்றி ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் விரதமிருந்து வழிபட்டு வருபவர்களுக்கு அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பதை ஓலைச்சுவடிகளின் ஆதாரங்களிலிருந்து அறிகிறோம்.

இன்னொரு விஷயம். சிவலிங்கத்தின் மீது குளிர்ந்த ஜல தாரை எதற்கு என்றால், சிவனின் ஜடாமுடி மீது கங்கை ஆகாசத்திலிருந்து இறங்கியதை குறிக்கிறது. சிவா வழிபாட்டில் ஹோமத்தில் எடும் நெய், நம்மையே அந்த சர்வ சக்திமான் சிவனுக்கு அர்ப்பணிப்பது ஆகும். ஹர ஹர மகாதேவா - கிட்டத்தட்ட ரெண்டு மில்லியன் ருத்ராக்ஷத்தை சேர்த்து ஒரு மகா பெரிய மகா தேவன் -- அந்த படத்தை தான் பார்த்தேனே தவிர நேரில் சென்று தரிசிக்கும் கிட்டவில்லை. கிட்டுமோ யான் அறியேன். எனக்கென்னவோ இந்த உருத்ராக்ஷ சிவ லிங்கம் கண்ணை விட்டு அகலவில்லை. அழகுக்கு அழகு செய்தது போல் மஹா பெரியவா என்கிற மனத்தில் நடமாடும் (உருவில் நடமாடிய) சிவபிரானும் கூடவே இருக்கும் படம். சிவலிங்கத்தின் மேலே ருத்ராக்ஷ நாகம். இந்த சிவனைப் பாடிப் புகழ ஆசை. எனக்கோ பாட்டு எழுத வராது. அருமையான பாடல்கள் சில இருக்கிறபோது அதையும் இதோடு சேர்த்தால் சர்க்கரைப்பந்தலில் தேன் மாரி தான் அல்லவா? ஓம் என்ற சப்தத்திலே அஞ்சு கோடி மந்திர சக்தி இருக்கிறது. நெஞ்சு அதை விடாது சப்திக்க வேண்டும்.

நம சிவாய என்ற அஞ்செழுத்தில் சகல சக்தி மட்டுமல்ல. பாப விமோசனமும் உள்ளது. பரமுனக்கு எனக்குவேறு பயமிலை பராபரா கரம்எடுத்து நித்தலுங் குவித்திடக் கடவதும் சிரம்உருகி ஆர்த்தலும் சிவபிரானே என்னலும் உரம்எனக்கு நீயளித்த ஓம்நமசி வாயமே. பராத்பரா, ஒன்றே ஒன்று அது நீ ஒன்று தான். பலவாகத் தோன்றும் எல்லாமே நீ ஒன்றே தான். அழுக்காறு கயமை, வஞ்சகம், காழ்ப்பு போன்ற என்னுள்ளே களிம்புகள் நிறைய இருந்தாலும் அவற்றை நீக்கி நானாகிய இந்த களிம்பேறிய தாமிரப் பாத்திரத்தை மும் மலமகற்றி , பளபளக்கச் செய்வதும் நமசிவாயா எனும் உன் நாமந்தான். அது தான் என்னுள்ளேயே நிலையாக நிற்கிறதே.

ஒன்று மொன்றும் ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே
அன்றுமின்றும் ஒன்றுமே அனாதியான தொன்றுமே கன்றல்நின்று செம்பொனைக் களிம் பறுத்து நாட்டினால்
அன்றுதெய்வம்உம்முளே அறிந்ததே சிவாயமே.

கடைசியாக ஒன்று சொல்கிறேன். சிவா, நீ ஆதி, அந்தம் மூல விந்து, நாதம், பஞ்ச பூதம். நீயே நமசிவாய என்கிற பஞ்சாக்ஷரம். வேறு என்ன இருக்கிறது சொல்ல? ஆதியந்த மூலவிந்து நாதமைந்து பூதமாய் ஆதியந்த மூலவிந்து நாதம்ஐந்து எழுத்துமாய் ஆதியந்த மூலவிந்து நாதமேவி நின்றதும் ஆதியந்த மூலவிந்து நாதமே சிவாயமே. சிவ வாக்கியர் எனும் மஹா யோகியின் வார்த்தைகள் இவை. சித்தத்தை சிவபிரான் பால் வைத்த சித்தர் பிரான். இப்படிப்பட்ட பிறவி,

மனிதப்பிறவி நமக்கு எப்படியெல்லாம் அவஸ்தைப்பட்ட பிறகு கிடைத்திருக்கிறது தெரியுமா? அதெல்லாம் கடந்து உன் நாமம் பற்றி கடைத்தேற வழி வகுத்த விமலா, சிவபெருமானே, உன்னையே நான் ''சிக்'' க்கெனப்பிடித்தேன். என்கிறார் மணி வாசகர். நாமும் பிடித்துக் கொள்வோமா?


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்அசுரர் ஆகி, முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற, இத்தாவர சங்கமந்துள்
எல்லாப் பிறப்பும், பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள், கண்டுஇன்று வீடுற்றேன்

உய்யஎன் உள்ளத்துள், ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா, விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி, ஆழ்ந்தகன்ற நுண்ணியனே கண்டுஇன்று வீடுற்றேன் –

ஒரு ஆச்சர்யமான சம்பவம். சீக்கியர்களின் 10வது குருவான குரு கோவிந்த சிங் ஒரு நாலு வரி மந்திரத்தை அவரது சிஷ்ய கோடிகளுக்கு உபதேசித்தார். இந்த மந்திரத்தை பிற்காலத்தில் சீக்கியர்கள் பிரிவினைக்கு உபயோகித்தனர். அதன் விளைவு எந்த சீக்கியனும் பாகிஸ்தானோடு இணையவில்லை. அப்படி என்ன அந்த மந்திஅத்துக்கு சக்தி என்றால் அந்த 4 வரி எம்பெருமான் சாக்ஷாத் பரமசிவனைப் போற்றிய ஸ்லோகமாக அமைந்திருந்தது எனலாம். சீக்கியர்கள் கொள்கைக்காக தம் உயிரையே திரணமாக மதிக்கும் தன்மையினர். யுத்த களத்தில் இதை உச்சரித்து தைர்யமாகப் போராடினர். இந்த 4 வரி சீக்கியரது ''சண்டி சரிதர் உக்தி பிலாஸ்'' என்கிற பாடலில் இடம் பெறுகிறது. இது முழுக்க முழுக்க தேவி பராசக்தி யின் சக்தி உபாசனை எனலாம். அவளது காம்பிர்யம், வீரம், தைர்யம், அருமை பெருமையைப் பாடுகிறது. தசம க்ரந்தம் என்ற சீக்கியர் வேதத்தில் 4வது அத்தியாயத்தில் வருகிறது. அதைப் பார்ப்போமா?

''Deh shiva bar mohe ehai, subh karman te kabhu na taro. Na daro ari soun jab jaye laro, nischey kar apni jeet karo. Aru sikh ho apne ho mann ko, eh laalach hou gun tau uchro. Jab aav ki audh (avadhi) nidan bane ati hee rann me tabh joojh maro.'' Translation: ''

O Lord Shiva, grant me the boon, that I may never deviate from doing a good deed. That I shall not fear when I go into combat. And with determination I will be victorious. That I may teach myself this greed alone, to learn only Thy praises. And when the last days of my life come, I may die in the might of the battlefield.||231|| -- Guru Gobind Singh

சகல சாஸ்திர வல்லுனர்களும் நரர்களும் சுரர்களும் பூஜிக்கும் பரமேஸ்வர, காட்டில் காடாக அடர்ந்து காணும் வன புஷ்பமான தாழம்பூவை அர்ச்சித்து உன்னை வனங்குகிறார்களே ஏன், தாழை நாகத்துக்கு விருப்பமான வாசஸ்தலம். அதன் மணம் விஷ நாகத்தையே கவர்கிறது . நீயோ அந்த நாகத்தையே மாலையாகக் கொண்டவன். நாகேஸ்வரன், நாகலிங்கம்.

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் ஸுரவன புஷ்ப ஸதார்சித லிங்கம் | பராத்பரம் பரமாத்மக லிங்கம் தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 8 ||

லிங்காஷ்டகமிதம் புண்யம் யஃ படேஶ்ஶிவ ஸன்னிதௌ | ஶிவலோகமவாப்னோதி ஶிவேன ஸஹ மோததே |

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...