Saturday, February 17, 2018

KULAPPULLY SREE KRISHNAN

‘’ குளப்புள்ளி கதாதாரி வெண்ணை கிருஷ்ணன்’ - 3 J.K. SIVAN

29ம் தேதி ஏப்ரல் 2007 ஒரு மகத்தான நாள். குளப்புள்ளி ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் புனருத்தாரண கும்பாபிஷேகம் நடந்தது.

2008ல் அக்டோபர் ஒண்ணாம் தேதி பிரசன்ன குமார் குடும்பத்தோடு மூகாம்பிகை சந்நிதிக்கு சென்று பிரார்த்தனை செய்த போது ''அம்மா நீ எங்க ஊருக்கு வாயேன்.குளப்பள்ளி பக்தர்கள் உன்னை
சேவிக்க வேண்டாமா தாயே? என்று நெஞ்சுருக வேண்டினார்.

'' இந்தாங்க அய்யா'' என்று ஒரு கோவில் ஆசாமி அப்போது ஒரு முட்டை வடிவ பெரிய கல் ஒன்று கொண்டு வந்தார். சௌபர்ணிகா நதியில் கிடைத்த அழகிய கல் அது. அதை எடுத்துக்கொண்டு ஊர் திரும்பினார். 2009ல் அதிலிருந்து மூகாம்பிகை உருவாகி இன்று நம்மை ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் வரவேற்று அருள் பாலிக்கிறாள்.

எப்படி நினைத்தவண்ணம் எலலாமே செயலாகிறது? இந்த கோவிலை திருச்சூர், பாலக்காடு, குருவாயூர், ஆகிய
ஊர்களிலிருந்து வந்து பார்க்க பஸ் நிறைய ஓடுகிறது.

இந்த வருஷம் குளப்புள்ளி ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் 11வது பிரதிஷ்டா தினம் 23.4.18 முதல் 27.4.18 வரை நிறைய சங்கீத நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்போகிறார்கள். எனக்கு பத்திரிகை வந்தது. அதை உங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளேன். முடிந்தவர்கள் சென்று ஸ்ரீ கிருஷ்ணனை தரிசிக்கலாம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...