Saturday, February 10, 2018

VIVEKACHOODAMANI.1

                    விவேக சூடாமணி 1 -   J.K SIVAN 



''உனக்கு தெரிந்த ஒரு வள்ளல் பெயரைச் சொல்லு என்றால் யோசிக்காமல் நான் முதலில் கை தூக்கி,  சொல்வது ''ஆதி சங்கரர்''

''அவர் வள்ளலா?

''பின்னே என்ன? 32 வயதுக்குள்ளே இத்தனை அற்புத அதிசய விலைமதிப்பற்ற பொக்கிஷங்களை நமக்கு வாரி  தந்தவர் வேறு யாராம்? அவர் எழுதித்தள்ளிய ஸ்லோகங்கள், சாஸ்திரங்கள், நீதி நூல்கள், காவியங்கள், பெயர் சொல்லக்கூடத்தெரியாதே  நமக்கு.''

அவற்றில் ஒரு மாணிக்கம் தான்  ''விவேக சூடாமணி''  அதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சொல்ல ஒரு ஆசை. அவர் அருளாலே அது நிறைவேறட்டும்.  சூடாமணி என்றாலே சிரசில் அணியும் ஒரு  ஆபரணம். சிரசில் விவேகம் புகுந்தால் அதுவே ஒரு சிறந்த ஆபரணம் அல்லவா? அழகான அர்த்தமுள்ள  பெயர் '' விவேக சூடாமணி''

जन्तूनां नरजन्म दुर्लभमतः पुंस्त्वं ततो विप्रता
तस्माद्वैदिकधर्ममार्गपरता विद्वत्त्वमस्मात्परम्।
आत्मानात्मविवेचनं स्वनुभवो ब्रह्मात्मना संस्थितिः
मुक्तिर्नो शतजन्मकोटि सुकृतैः पुण्यैर्विना लभ्यते ॥१॥

அரிதான  நமது மனிஷப் பிறவிக்கு  எப்போதோ நாம்  பாக்கியம் செய்தவர்கள். அப்படி மனிதனாக இருந்தும் சாத்விக குணம் படைத்தவன் உன்னதமானவன். இதோடு அவனுக்கு பக்தியும் ஆன்மீக சிந்தனையும் வேறு சேர்ந்திருந்தால் வேதவழியில் நடப்பவனாக இருந்தால்  அவன் கடவுளே தான்.  அவனுக்கு எது சாஸ்வதம் அநித்தியம் என்று தெரியும். ஆன்மசக்தி உணர்வு வேறு இருப்பதால்   மோக்ஷபாதையில் செல்பவன்.  ஆயிரங்கோடி பிறவிகளில் கிடைக்கும் புண்யத்தை எளிதில் பெற்றவன்.

लब्ध्वा कथंचिन्नरजन्म दुर्लभं
तत्रापि पुंस्त्वं श्रुतिपारदर्शनम्।
यस्त्वात्ममुक्तौ न यतेत मूढधीः
स ह्यात्महा स्वं विनिहन्त्यसद्ग्रहात्॥४॥

தற்கொலை  என்பது கயிற்றில் தொங்குவதோ, விஷத்தை குடிப்பதோ, நீரில் விழுந்து மிதப்பதோ அல்ல. அரிய  மானுடப் பிறவி எடுத்தும் அதன் அருமை தெரியாமல், வேத சாஸ்திர  ஞானம் இன்றி, ''தான்''  யார்  என்றே தெரியாமல் அறியாமல் நிழலை நிஜம் என்று தேடி  ஓடி ஆடி  மிருகமாக வாழ்வது

अतो विमुक्त्यै प्रयतेत विद्वान्                                                                                                
सन्यस्तबाह्यार्थसुखस्पृहःसन्।
सन्तं महान्तं समुपेत्य देशिकं
तेनोपदिष्टार्थसमाहितात्मा ॥८॥

ato vimuktyai prayatet vidvaan
saMnyastabaahyaarthasukhaspR^haH san
santaM mahaantaM samupetya deshikaM
tenopadishhTaarthasamaahitaatmaa. 8


எனவே மானுடர்காள், மாயையில் உழன்று அழியும் உலக விவகார வஸ்துகளில் மனம் செலுத்தாமல், பிறவிப் பெருங்கடலை கடக்க , நல்ல ஒரு குருவை அடைந்து மோக்ஷ மார்கத்தை அறிந்து பிரழாமல் அதை கடைப் பிடித்து வாழ்வீர். நல்லதும் கெட்டதும் நம் கையிலே தானே.

उद्धरेदात्मनात्मानं मग्नं संसारवारिधौ
योगारूढत्वमासाद्य सम्यग्दर्शननिष्ठया ॥९॥

uddhared aatmanaatmaanaM magnaM saMsaaravaaridhau
yogaaruuDhatvam aasaadya samyagdarshananishhThayaa. 9

எழுந்திரு,ஓடு,நேரம் வீணாக்காதே. உன்னைப் பிடித்து இழுக்கும் சம்சார சாகரத்திலிருந்து வெளியே வா. ஐம்புலன் வசம் சிக்காமல், தன்னடக்கம் கொள். நித்ய அநித்தியம் எது என்று உணர்ந்துவிடாமல் அதன் படி நடப்பாய். யோகியாகி விடுவாயே. விவேகானந்தரின் அற்புத வாக்கியத்தை நினைவு கூறலாமா? ARISE AWAKE AND STOP NOT TILL THE GOAL IS REACHED!


अर्थस्य निश्चयो दृष्टो विचारेण हितोक्तितः।
न स्नानेन न दानेन प्राणायामशतेन वा ॥१३॥\

arthasya nishchayo dR^shhTo vichaareNa hitoktitaH
na snaanena na daanena praaNaayamashatena vaa. 13

ஆன்மாவைப் புரிந்துகொள்ள, மூன்று வேளை குளித்தாலோ, ஏழைகளுக்கு கொஞ்சூண்டு தானமோ, விடாமல் மணி பார்த்துக்கொண்டு மூக்கைப் பிடித்துக்கொண்டு காயத்ரி ஜெபமோ போதாது. அதை ஞானிகள் உபதேசம், சுயசிந்தனை, மனம் குவிந்த த்யானம், ஆத்ம விசாரம் மூலம் தான் பெற முடியும். எளிமை அவசியம் தேவை.

मोक्षकारणसामग्र्यां भक्तिरेव गरीयसी।
स्वस्वरूपानुसन्धानं भक्तिरित्यभिधीयते ॥३१॥

முக்தி பெற என்ன வழி என்று எத்தனையோ விஷயங்களை தேடி அலையவேண்டாம். பக்தி ஒன்று தான் சரியான பாதை. ஆத்மாவில் மனம் செலுத்தி உள்ளே அந்த சுகானுபவ ஒளி யைக் காண பக்தி ஒன்றே சாதனம்.


वेदान्तार्थविचारेण जायते ज्ञानमुत्तमम्।
तेनात्यन्तिकसंसारदुःखनाशो भवत्यनु॥४५॥

உபநிஷத் வேதாந்த வார்த்தைகளை நெட்டுரு பண்ணினால், மனப்பாடம் செய்தால் ஞானம் கிடைக்காது. சில வார்த்தைகள் தான் சேரும். அந்த மந்திரங்களை ஒவ்வொரு வார்த்தையாக ஆராய்ந்து சிந்தனை செயது அதன் அர்த்தங்கள் மனதில் குடி புகுந்தால் தான் அதன் தனி ருசி தெரியும். அதுவே நம்மை சூழ்ந்துள்ள துக்கம் துன்பங்களை, இதெல்லாம் வெறும் மாயை தான் என்று புரிந்து கொள்ள உதவும். உலகே மாயம் வாழ்வே மாயம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...