Sunday, February 11, 2018

SIVAJI

எல்லாம் ராமனே J.K. SIVAN
பாண்டுரங்க பக்தர்களில் விசேஷமாக ஒருவரைச் சொல்லவேண்டுமானால் அவர் சமர்த்த ராமதாசர். அவர் ராமனையே அனுதினமும் பஜித்து பூஜித்து வந்ததால் அவர் பெயர் நாராயணன் என்பது எல்லோருக்கும் மட்டுமல்ல அவருக்கே கூட மறந்து போய் ''ராம தாசர்'' ஆகிவிட்டார். சிறுவயதிலேயே ராமனையும் ஹனுமானையும் நேரில் தரிசனம் கண்டவர் . ராமனால் ஆசிர்வதிக்கப்பட்டவர் . கோதாவரி நதிக்கரையில் உட்கார்ந்துகொண்டு ""ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்" என்று பதிமூன்று லக்ஷம் நாம ஸ்மரணை செய்து ராமன் ப்ரத்யக்ஷமாகி அவரை ஆசிர்வதித்து புண்ய ஸ்தல யாத்ரை அனுப்பியதாக சொல்வதுண்டு.
கணவனை இழந்த ஒரு பெண் ஒரு தடவை அவரை வணங்கியபோது "தீர்க்க சுமங்கலி பவ " என்று அவர் வழக்கம்போல் வாழ்த்திய பிறகு தான் அவள் கணவனை இழந்து அந்த துக்கத்தில் அவரை வணங்க வந்தவள் எனக்கு என் கணவன் வேண்டு என்று வேண்ட அவள் கணவனின் சடலத்த்தின் மீது ' ஹே ராமா'' என்று தீர்த்தம் தெளித்து அவன் எழுந்து அவரை வணங்கிவிட்டு கணவன் மனைவி ரெண்டுபேருமாக வீடு சென்றதாக ஒரு கதை முன்பு எழுதின ஞாபகம்.
இந்திய சரித்திரம் ஞாபகம் இருந்தால் சத்ரபதி சிவாஜி என்ற மராட்டிய சக்ரவர்த்தியை தெரியும். அவுரங்க சீப்பை தூக்கமின்றி தவிக்க வைத்த மாவீரன் சிவாஜி மகராஜா. அவரது குரு சமர்த்த ராமதாசர்.
ராம தாசரும் துக்காராமும் சிறந்த விட்டல பக்தர்கள். சமகாலத்தவர்கள். ஒரு நாள் ராமதாசர் தன் வீட்டு வாசலில் இருந்த ராமர் கோவிலில் உட்கார்ந்து ராம ஜபம் பண்ணிய போது பகல் நேரம் சுள்ளென உச்சி வெயில். ஒரு பிராமணர் அந்த பக்கம் வந்தார்
'சுவாமி இங்கு கொஞ்சம் தாக சாந்திக்கு நீர் கிடைக்குமா?""
'' ஆஹா, தாராளமாக என் வீடு எதிரே தான். வாருங்களேன் அமர்ந்து கொஞ்சம் சிரம பரிகாரம் பண்ணிக்கொண்டு நீர் அருந்திவிட்டு போஜனம் இன்னும் ஆகவில்லை என்றால் கொஞ்சம் இருந்து ராம பிரசாதமும் சாப்பிடலாமே "--ராமதாசர்.
பிராமணருக்கு பசியும் இருந்த இடம் தெரியவில்லை. தாகமும் தீர்ந்தது . பேச்சு வளர்ந்தது.
''இங்கிருந்து பண்டரிபுரம் எப்படி போவது ?''
'' எனக்கு தெரியவில்லையே.''
'' நீங்கள் பண்டரிபுரம் போனதில்லையா "?
'' இல்லையே''
''விட்டலனை பார்த்ததில்லையா?''
''இதுவரை இல்லை''.
''போக விருப்பமுண்டா? நாங்கள் ஒரு முன்னூறு பேர் சேர்ந்து போக உத்தேசம் எங்களோடு வருவீர்களா?
'' ஸ்ரீ ராமன் அருளால் தாராளமாக வருகிறேனே.!
ராமதாசர் பிராமணரோடும் மற்றவர்களோடும் சேர்ந்து பண்டரிபுரம் சென்றார் வழியெல்லாம் விட்டல் பஜனை செய்து கொண்டுவந்தாலும் அவர் தனக்குள் ராமநாம பஜனையோடேயே சென்றார். பண்டரிபுரம் விட்டலன் சந்நிதியில் நிற்கும்போது அதுவரை அவரோடு நின்று கொண்டிருந்த பிராமணரைக் காணோம். எதிரே சிரித்துகொண்டிருந்த விட்டலன் ஒரு கணம் பிராமணராகவும் மறுகணம் ஸ்ரீ ராமனாகவும் இடுப்பில் கை வைத்து நின்றுகொண்டு காட்சியளித்ததை கண்டு தன்னை பண்டரிபுரம் அழைத்து வந்ததே ஸ்ரீ ராமன் தான் என்று அறிந்தார் .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...