Tuesday, February 6, 2018

courage


                             
தைரியம் புருஷ /ஸ்த்ரீ லக்ஷணம் J.K. SIVAN

''எதற்கு எப்போது வந்தாலும் இந்தமாதிரி பழங்கள் எல்லாம் வாங்கி வருகிறாய் கமலா?''
'' தாத்தா சார், ஏதோ மனதிற்கு திருப்தி. உங்களிடம் சில வார்த்தைகள் பேசினால் அன்று முழுதும் சந்தோஷமாக இருக்கிறது''
'' எல்லாம் பகவான் கிருஷ்ணன் க்ருபை அம்மா.''
'' எனக்கு வாழ்க்கையில் ஏதேதோ செய்யவேண்டும் என்று எண்ணம் அடிக்கடி தோன்றுகிறது ஆனால் சரியாக புரிபட வில்லை தாத்தா''
'' கமலாம்மா, வாழ்க்கையில் சில பிரச்னைகள், சில லட்சியங்கள் இருப்பது போல நிறைய பேருக்கு தோன்றும் ஆனால் அதெல்லாம் புகைப்படிந்த மாதிரி தெளிவாக இருக்காது என்பதை அறிவேன். நிறைய கேள்விகள் மனதில் எழும் ஆனால் விடையின்றி அவை மறையும்,. மேலும் பல புதிய கேள்விகள் பிறக்கும்...''
ஒரு பிரச்னை என்றால் அதை ஆற அமர சிந்திக்கவேண்டும். அதற்கு எதெல்லாம் விடை என்று யோசிக்கவேண்டும்.
நீ எங்கே போய்க்கொண்டிருக்கிறாய் என்று உணர்ந்தால் விடை தானே எதிரில் வரும்.
ஒரு பிரச்னை மலைபோல் எதிரே தோன்றினால் நீ மலைத்து போகாதே. கலங்காதே. அதை துண்டு துண்டாக உடைத்து அலசு. ஒவ்வொரு துண்டாக சோதித்து பார். முடியாதது போல் தோன்றியதெல்லாம் முடிய வாய்ப்புண்டு.
தைரியமாக காலை முன்வைத்து பிரச்னையை அணுகு. வெற்றிகரமாக அதை சமாளிக்க அதுவே வழி வகுக்கும்.
ஆரம்பிக்காத, முயற்சி செய்யாத, எந்த வேலையுமே பல காலம் பிரச்சனையாக நீடித்துக்கொண்டே இருக்கும். இது என் அனுபவம் கூட. துணிந்தவனுக்கு தூக்கு மேடை கூட பஞ்சு மெத்தை என்று எங்கோ ஒரு வசனம் கேட்டிருக்கி
றோமல்லவா?.
இது முடியுமா, வெற்றி கிடைக்குமா என்ற சந்தேகம், பயம் எல்லாம் துளியும் வேண்டாம். பகவான் கிருஷ்ணன் மேல் பாரத்தை போட்டுவிட்டு துவங்கு. வெற்றி தானாகவே கிட்டும். எங்கோ கண்ணுக்கு தெரியாமல் தூர இருந்து பயமுறுத்தும் பிர்ச்னைகளை விட்டுவிட்டு எதிரே தோன்றுவதை ஒவ்வொன்றாக உற்று கவனித்து அணுகு. நமது சுழல் பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட்கள் கிடைப்பதுபோல் பிரச்னைகள் ஒன்றன் பின் ஒன்றாக வீழும்.
புறப்படு சிங்கமே. வருவதை எதிர்கொள். பாதிக்குமேல் உனக்கு வெற்றி கிடைத்துவிட்டதே. அறிந்து கொண்டாயா.''
தாத்தா சார், பிரமாதம். அதற்கு தான் உங்களை அடிக்கடி சந்திப்பது என்று வணங்கி சென்றாள் கமலா டீச்சர்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...