Friday, November 4, 2022

AIM IN LIFE

 


லக்ஷ்யம்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 


சாது  என்றாலே  திருப்பி அடிக்காதவர்கள், கோபிக்காதவர்கள்,  கோபப்படாதவர்கள்,  நட்பு,  அன்பு,  வாத்சல்யம்  மாறாமல் இருப்பவர்கள்.    ஆகவே  அவர்களை என்ன திட்டினாலும், செய்தாலும்  மௌனமாகவும் மகிழ்வு டன்  ஏற்றுக்கொள்பவர்கள். மலைமேல் எவ்வளவு கனமழை பொழிந்தாலும்  மலை கவலையே படுவதில்லையே.  

ஆற்றில், குளத்தில் கிணற்றில்  கல்லை எறிந்தால் கல் எதிர்த்து வருமா?  அது  மாதிரி நம்  எல்லோருக்கும்  குணம் இருப்பதில்லை.

ஒரு சின்ன கதை சொல்கிறேன்.
ஒரு ஸாது   ஒரு  நாள்  பிக்ஷை எடுத்து அதில்  கிடைத்ததில்  பாதி சாப்பிட்டுவிட்டு  மீதியை  அடுத்த வேளைக்குக் கொஞ்சம் வைத்துக் கொண்டார்.  அவர் த்யானத்திலிருக்கும்போது அங்கே  பசியோடு வந்த  ஒரு நாய் மீதி  இருந்ததை சாப்பிட்டு விட்டு  ஓடியது.  த்யானம் கலைந்து பசியுடன் ஸாது பிக்ஷை பாத்திரம்  காலியாக  இருந்ததை கண்டார்.  பிறகு  பிக்ஷை க்
காக  ஒரு சில  வீடுகளுக்கு சென்றார்.  ஒரு வீட்டிலும்  பிக்ஷை கிடைக்கவில்லை. பசி மயக்கத்தில் கீழே  படுத்தார்.

"அடாடா,  நான் அடுத்த வேளைக்குப் பிடி அன்னம் வைத்துக் கொண்டதாலல்லவா எனக்கு  இத்தனை  ஸ்ரமம் ஏற்பட்டது. . எவர் உலகிற்கெல்லாம் படி அளக்கிறாரோ அந்த விஸ்வம்பர அன்னதாதா  நம்மைக் கைவிடுவாரா? எனவே யாரிடமும் பிக்ஷை கேட்கமாட்டேன் அதுவாகக் கிடைத்தால் உண்பேன் " என்று  முடிவெடுத்தார்.   அந்த சமயம் பார்த்து  யாரோ  ஒரு  தனவான்  விதவிதமான உணவுகள் கொண்டு வந்து ஸாதுவுக்கு  அளித்து  வணங்கினான்.இது பகவத் சங்கல்பம். 

இந்த  சந்தர்ப்பத்தில் சில அறிவுரைகளை சொன்னால் என்ன என்று தோன்றியதால் இதோ சில:

துஷ்டர்களுடன் சகவாசம்  வைத்தால் அதனால்  துன்பம்தான் ஏற்படும். அதற்காக நாம் துஷ்டர்களைவிட்டு விலக வேண்டுமேயன்றி அவர்களைத் தூஷிக்கக்கூடாது.   தேளின்  குணம்  கொட்டுவது.  கொட்டுபடாமல் நாம் தான்  நம்மை காத்துக்கொள்ளவேண்டும்.

ஆற்றங்கரையில் குடிசை அமைத்து வாழ்ந்தால் உடைப்பு எடுத்துக்கொள்ளும் பொழுது குடிசை வெள்ளத்தில்  போகத்தான் போகும் அதற்காக ஆற்றங்கரையைக் குறை கூறலாமா? யாரோ விற்கிறார்கள் என்பதால் ஆறு  ஏரி  இருந்த இடத்தில்  வீடு வாங்கினால்  பின்னால்  ஒருநாள்  நஷ்டம்  வட்டி போட்டுக்கொண்டு தானே  வரும்.

முத்து எடுக்க  முத்துக் குளிப்பவன் கடலுக்குள் முழ்குகிறான்.  அது அவன் லக்ஷியம்.  இதனால் அவனுக்கு மரணம் ஏற்படுமாகிலும்   அதைப் பற்றி கவலையோ லக்ஷ்யம் பண்ணுவதோ இல்லை.  அது போல் நாம் நமது  லக்ஷ்யத்தைக் கைவிடக்கூடாது.  அந்த லக்ஷ்யத்திற்காகவே உயிற்வாழவேண்டும் என்கிறார்கள்.  அந்த லக்ஷ்யத்தையே கனவு காண வேண்டுமாம். . அந்த லக்ஷ்யத்தையே நினைக்க வேண்டுமாம். ஒரே  ஒரு சஜ்ஜஷன். SUGGESTION . அந்த லக்ஷ்யம் அழிவற்ற பொருளாக இருக்கட்டும் .  ஆத்ம  விசாரமாக இருக்கட்டுமே.  

ஒரு வீட்டு  வாசலில்  ஒரு சாது உஞ்சவ்ருத்திக்காக நின்றார்.  அந்த வீட்டுக்கார அம்மா கருமி.  எச்சில் கையால் காக்கா ஒட்டாத  டைப் என்பார்களே  அந்த ரகம்.  ஒன்று போடாமலேஹ்யே  போ  போ  என்று  அவரை  ஏசி  விரட்டினாள். அவர் போகவில்லை.   கோபத்தோடு உள்ளே போய் ஒரு உலக்கையை எடுத்துக் கொண்டு அடிக்க வந்தாள்.  நெல் குத்திய உலக்கை என்பதால் அதில் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு அரிசி அந்த சாதுவின்  உஞ்சவிருத்தி சொம்பின் உள்ளே  விழுந்தது.

அந்த  அரிசி  அவர்  சமைத்த  சாதத்தில் கலந்து அதை  சாப்பிட்டார். 
சில நாட்களில் அந்த  கருமி அம்மா  இறந்ததும் அவளுக்கு பரமபதம் கிடைத்தது.
''பாவியாகிய எனக்கு எப்படி இந்த  பரமபதம்  கிடைத்தது?'' என்று கேட்ட  அவளுக்கு   யம தூதர்கள்
 "உஞ்சவ்ருத்தி ப்ராம்மணன் வயிற்றில்  நீ இட்ட  சாத பருக்கையே  காரணம்'' என்றார்கள்.

 தெரிந்தோ தெரியாமலோ  நல்ல காரியங்கள்  நாமும் செய்வோம்.  சகல  பாபங்களிலிருந்தும் விடுபட  வழி இருக்கிறதே. விடலாமா?

ரயில் வண்டி தன்டவாளத்தின் மேலேதான் ஓட வேண்டும். தடம்  மாறினால் உருண்டு விழும். ஒரே சீராக,  கொஞ்சமேனும் நேர்மை என்னும் பாதையை  விடாமல் நாம் நடப்போம்.  அதை லக்ஷ்யமாக கொள்வோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...