Friday, November 18, 2022

GAYATHI VANAMAALI

 


துளசி மாலை தெய்வம்   -  நங்கநல்லூர்  J K  SIVAN 

நம்மிடையே   சில நூறு வருஷங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு ப்ரம்ம ஞானி  சதாசிவ ப்ரம்மேந்திரர்.அவதூதர். அவர் இயற்றிய பல  ஸ்தோத்ர பாடல்களிலொன்று  காயதி வனமாலி  என்கிற சிறிய  பாடல்.  இதை அநேகர் பாடி கேட்டிருக்கிறேன் என்றாலும் ஸ்ரீ பால முரளி கிருஷ்ணா பாடியது நெஞ்சைத் தொட்டது. நானும் பாடிப்பார்த்தேன்.  லிங்க்    

https://youtu.be/HpucePMaGM0

गायति वनमाली मधुरं गायति वनमाली
पुष्प-सुगन्ध-सुमलय-समीरे
मुनिजन-सेवित-यमुना-तीरे   (गायति…)
कूजित-शुक-पिक-खगमुख-कुञ्जे
कुटिलालक-बहुनीरद-पुञ्जे    (गायति…)
तुलसीदाम-विभूषण-हारी
जलजभव-स्तुत-सद्गुण-शौरी  (गायति…)
परमहंस-हृदयोत्सवकारी
परिपूरित-मुरलीरव-धारी  (गायति…)

Gayathi vana maali,madhuram, Gayathi vana mali.

 Pushpa sugandha Malaya sameere,
Muni jana senitha Yamuna there.

 Paramahamsa hrudayothsava kaari,
Pari pooriutha murali rava dhaari.


காயதி வனமலி  மதுரம் காயதி வனமாலி
புஷ்ப சுகந்த சுமலயா சமிரே
முனிஜன செவித யமுனதிரே  ||

பரமஹம்ச ஹ்ர்தயோட்சவகாரி
பரிபூரிதா  முரளி ரவதாரி  ||

கிருஷ்ணன்  வனமாலி என்ற பெயர் கொண்ட  துளசி தள  மாலை அணிந்த  அவதார புருஷன். பிருந்தாவன  ஆரண்யங்களில்  எப்போதும் காணப்பட்டவன், காணப்படுபவன். அவன் இருக்கும்  இடத்தில் தெய்வீக  முரளி கானம் ஒலித்துக் கொண்டே இருக்கும்.  அந்த இசையில் மயங்கி சகல ஜீவன் களும்  தனை இழந்த, மறந்த நிலையில் கிருஷ்ணனைத் தேடி வந்து அவனருகே மெய்ம்மறந்து கானாம்ருதத்தில் திளைத்திருக்கும். 

மந்த மலயமாருத காற்றும்  நறுமண மலர்களின் வாசனையை நிரப்பி அள்ளி  அனைவர் மேலும் வீசும்.  யமுனை நதிக்கரையில் எல்லோரும்  கிருஷ்ணனை சூழ்ந்திருந்து ப்ரம்மானந்தத்தை அனுபவிப்பார்கள். அந்த கூட்டத்தில் தேவர்கள் ரிஷிகள் முனிவர்களும் அநேகர்.  யமுனைக்கரை,   வானத்தை மேகங்கள் சூழ்ந்திருப்பதைப் போல  கிருஷ்ண பக்தர்கள் பொங்கி வழியும் இடமாக காட்சி தரும்.   கண்ணனின் குழலொலி  அனைத்து ஜீவன்களையும்  அன்ன  ஆகாரம்  மறந்து   செவியும் வயிறும்  உத்சவ காலத்தில் அன்னதானம் அருந்தி  நிரம்பிய  ஆனந்தத்தில்  திளைத்தவர்களாக  மாற்றிவிடும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...