Saturday, November 12, 2022

TALK WITH THE LORD

 நாராயணனோடு சில நிமிஷங்கள்  - 

#நங்கநல்லூர்_J_K_SIVAN 

ராமநாயுடு கம்ப்யூட்டர் மெக்கானிக். கடவுள் பக்தி உண்டு. இரவும் பகலும் வேலை வேலை என்று இருப்பதால் கடவுள் பக்கம் போக ரொம்ப நேரம் கிடையாது.ஒருநாள்  ராத்திரி கம்ப்யூட்டரில் ஏதோ வேலை செய்து  கொண்டிருந்த  நாயுடு  எப்படியோ  திடீரென்று  வைகுண்டத்தில்  மஹா விஷ்ணுவோடு  இன்டர்நெட்  தொடர்பு கொண்டுவிட்டான். தான் வைகுண்டத்தில்  மஹா விஷ்ணுவோடு பேசுகிறோம் என்றே  அவனுக்கு  தெரியவில்லை  மஹா விஷ்ணு என்று தெரிந்ததும் வெகு காலமாக மனதில் இருந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளாமால் விடுவானா?     நாயுடுவால்  நமக்கும் சில  விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.

''மஹா விஷ்ணு : '' யார் என்னை கூப்பிடுகிறீர்கள் 
'''யார்  நீங்கள்? உங்களை நான் கூப்பிடவில்லையே?
'''நான் நாராயணன்  வைகுண்டம் நெட்ஒர்க்கில் நீ வந்து
   நீ  தான் என்னை தொடர்பு கொண்டிருக்கிறாய்.'
''ஆஹா,  ஆச்சர்யமாக இருக்கிறது. நான் உங்களை எப்போதாவது வேண்டிக்கொள்வேன்.  உங்களோடு பேச முயற்சிக்க வில்லை.  நான் நாளைக்  காலைக்குள் இந்த கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்து முடிக்கவேண்டும். ரொம்ப  ''பிஸி ''  யாக இருக்கிறேன்.  எதிர்பாராமல்  உங்களோடு
  சாட் CHAT  பண்ண முடிந்தது என் அதிர்ஷ்டம். இடைஞ்
சலுக்கு மன்னிக்கவும்.'

'''பிஸியா?  எறும்பு கூட  பிஸியாக இருக்கிறதே''
''தெரியாது பகவானே,  எப்போதும்  எனக்கு நேரம்  வேகமாக  போகிறது. மூச்சு விட நேரமில்லை''
''செயல்கள் எல்லாமே அப்படித்தான்.  உருப்படியாக செயல்படுவது  என்பது வேறு''
.''எனக்கு என் வேலையை தவிர வேறொன்றும் தெரிய
வில்லை நாராயணா''
'நீ நேரம் கிடைக்க பாடுபடுகிறாய் என்று தெரிகிற
து. உன்னைத் தெரிந்துகொண்டதால் சில விஷயம் உனக்கு போதிக்க வேண்டும்.உன் மனதில் உள்ளதைக் கேள்''

'சந்தோஷம் பகவானே.  ஏன்  இப்படி வாழ்க்கை சிக்கலாக இருக்கிறது?'

'''உன்னை யார்  அதைப்  பற்றி சிந்திக்க சொன்னது. வாழ்க்கை வாழ்வதற்காக. அதைப்  புரிந்துகொண்டால் போதும்.''

''என்னால் சந்தோஷமாகவே இருக்க முடியவில்லை
யே?''
''வாழ்க்கையை வாழாமல் அதன விளைவுகளைப் பற்றி சிந்திப்பதிலேயே  நேரம் வீணாக்குகிறாய். நேற்று  நீ எப்படி மறுநாள் இருக்கவேண்டும் என்று யோசித்
தாயோ அந்த நாள் இன்று ஒரு மாறுதலும் இல்லா மல் 
 நேற்றைய வாழ்க்கையைத்  தான் இன்றும் வாழ்கிறாய். இன்று உன் கவலை நாளை எப்படி இருக்கும் என்பதை பற்றி  நாளையும் இன்றைய பொழுது போல் தான் கழியப்போகிறது.   கவலைபடுவது உனக்கு பழக்க மாகிவிட்டது நாயுடு.  உன் சந்தோஷத்தை அதனால் பறிகொடுக்கிறாய்.

''''எது நிச்சயம், எது உண்மை,எது நடக்குமோ  என்று தெரியாதபோது கவலைப்படாமல் இருப்பது எப்படி நாராயணா?''

'நடக்கப்போவது எது, என்று உனக்கு தெரியாது என்பது நிச்சயம், உண்மை, என்பது தான்  உனக்கு தெரியுமே. அதை புரிந்துகொள்ளாமல் எதற்கு அதைப் பற்றிய கவலை?

''எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது தெரியாததால் உள்ளே  நெஞ்சில் ஒரு  பயம்,  வலி,   இருக்கிறதே சுவாமி?'

'வலி  எல்லோருக்கும் எப்போதும் உள்ளது. அதால் அவஸ்தைப்படுவது அவரவர் மன நிலையைப்  பொறுத் தது''

'கஷ்டப்படுவது அவஸ்தைப் படுவது  அவரவர் நினைப்பதில் இருக்கிறது என்று சொல்கிறீர்களே. நல்லவர்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும்?

''பட்டை தீர்த்தால்  தான் வைரம் ஜொலிக்கும்.  தங்கம் நெருப்பில் ஸ்புடம் போட்டால் தான் ஒளிரும். கஷ்டங் களால்  தான் சுகம் பற்றி தெரியும். அது தான் வாழ்க்கை  அனுபவம். அவசியம்.  அதைப்  புரிந்து
 கொண்டால் வாழ்க்கையை சரியாக அணுக முடியும்.

''அப்படியென்றால் கஷ்டப்படுவது பயனுள்ளதா?

'ஆமாம்  நாயுடு. அனுபவம் என்பது ஒரு  ஸ்ட்ரிக்ட்   டீச்சர் . சோதனையை முதலில் அளித்து பாடத்தை  அப்புறம் அதன் மூலம்  கற்பிக்கிற டீச்சர்''

''எதற்கு இந்த    சோதனை,  பாடம்,  எல்லாம் ?  இதெல் லாம் இல்லாமலேயே  சுகமாக இருக்க வழியில் லை யா?'

'தெருவில் அங்கங்கே  ஸ்பீட் பிரேக்கர் இருக்கிறது பார்த்தாயா?.  பிரச்னைகள், கஷ்டங்கள் வாழ்க்கைப் பாதையில் அவசியமானவை. திடமான மன வலிமை பெற அவை அவசியம்.

''வாழ்க்கை பிரச்னைகள், கஷ்டங்கள்  நிறைய  இருக்கிறதே. எங்கே  போகிறோம் என்றே புரியவில் லையே?'''

'வெளியே  நாலாபுறமும்  பேந்த பேந்த  பார்த்துக் கொண்டி ருந்தால் எந்த திசையில் எங்கே போவது என்று பிரமிப்பாகத்தான் இருக்கும்.   உள்ளே பார். தேடு.  உண்மை வழி புரியும். வெளியே  கனவு தான் காட்சி. உள்ளே தெளிவான  வழிகாட்டல் . எழுச்சி பெறலாம். இங்கிலீஷ்லே சொல்வார்களே   Eyes provide sight. Heart provides insight என்று அது தான் உண்மை.  கண் வெறும்  காட்சி தான் காணும். மன எழுச்சி,மலர்ச்சி,  இதயத்தில் தான் கிடைக்கும்.

''நாராயணா,  நான் சரியான திசையில் போகிறேனா?  
 நான் வெற்றிப்பாதை  என்று நினைத்து  எதிலோ வேகமாக போகும்போது தெரியவில்லையே?  என்ன செய்வது?

''வெற்றி என்பது பிறர் முடிவெடுத்து உன் பயணத்தைக் பற்றி சொல்வது. திருப்தி என்பது உன் மனம் முடிவெடுப் பது. எதிரில் உள்ள பாதையை அறிவது திருப்தி அளிக்கும். நீ வேகமாக  பயணிக்கிறாய் என்பது
கேள்விக்குறியாக தான் அமையும். திசை காட்டும்  கருவி யோடு பயணிக்கவேண்டும். மற்றவர்கள் கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருக் கட்டும். இது தான் விவேகத்துக்கும் வேகத்துக்கும் உண்டான வேறுபாடு''
.
'கஷ்ட காலங்களில் எப்படி நிதானம் இழக்காமல் இருப்பது?'

வாழ்க்கைப் பாதையில் இதுவரை நீ  எப்படி பயணித் தாய் என்பதை தீர்மானி. எவ்வளவு தூரம்  இன்னும் கடக்க வேண்டும் என்பது முக்கியம் அல்ல.  பகவான் அருளால்  எவ்வளவு கஷ்டங்களை இதுவரை   தாண்டி வந்திருக்கிறாய் என்று அறிந்து கொள்.  எதை இன்னும் 
அடையவில்லை என்பது தேவையற்ற கவலை,  வேண்டாத எண்ணம்.''

'நாராயணா, நீ சொல்,  மக்களை பற்றி எது உன்னை  ஆச்சர்யப்படுத்துகிறது?

''நாயுடு,   கஷ்டம் வந்தபோது  ''பகவானே,  எனக்கு மட்டும் ஏன் இந்த கஷ்டம் என்று  புலம்புகிறார்கள். அதே  மக்கள் சுகம் அனுபவிக்கும்போது  ''உன்னால் தான் என்று என்  நினைப்பே  வரவில்லையே''   என்பது தான் எனக்கு ஆச்சர்யம். எல்லோருமே  அவர்கள் பக்கம் சத்யம் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்களே  தவிர  சத்தியத்தின்  பக்கம்  தாம் போக  விரும்புவதில் லையே''

''கடவுளே நீ  வழிகாட்டு.   வாழ்க்கையை  வெற்றி கரமாக மாற்றுவது எப்படி?

''உன் கடந்த வாழ்க்கையை பற்றி வருத்தம் வேண்டாம்.  நிகழ்காலத்தை நம்பிக்கையோடு  தொடர்வாய்.  பயமின்றி  எதிர் காலத்தை எதிர்கொள். 

''நாயுடு  போதும் ரொம்ப நேரம் உன்னோடு செலவழித்து விட்டேன் .நிறைய வேலை இருக்கிறது எனக்கும்.''

''நன்றி  நாராயணா, கடைசியாக ஒரே ஒரு கேள்வி .
சில சமயம் என் பிரார்த்தனைகளுக்கு  நீ பதிலளிப் பதே  இல்லையே  ஏன்?'

'உன் எண்ணம் தப்பு நாயுடு.  எல்லாருடைய   பிரார்த் தனைகளும்  கவனிக்கப்படுபவை தான். சில  பிராத்த னைகளுக்கு பதில் ''சாரி,   நீ கேட்பது கிடைக்காது. இல்லை. கிடையாது.''  என்பது தான்.    அதை நீ புரிந்து கொள்வதில்லை. நீ கேட்பது எல்லாமே  உனக்கு சாதகமாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை''

''நன்றி நாராயணா.உன்னுடன் பேசியது புத்தியும் உற்சாகத்தை அளிக்கிறது

'''பயம் வேண்டாம். நம்பிக்கையோடு இரு. உன் சந்தேகங்களை நம்பாதே, நம்பிக்கையை சந்தே
கிக்காதே ''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...