Tuesday, December 17, 2019

THIRUKKOLOOR PEN PILLAI



திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள்  J K  SIVAN



         27  ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே
ஸ்ரீ  ராமன்  வனவாசத்தில்  இருக்கிறார்  என்கிற விஷயம் அநேக ரிஷிகளுக்கு தெரிந்து விட்டதும் ராமனை சந்தித்து தெய்வ தரிசனம் பெறுகிறார்கள்.   

ராமர்  சீதை, லக்ஷ்மணன்  மூவரும்  கோதாவரி நதி தீரத்தில்  அந்த ரம்யமான  கானகத்தில் நடந்துகொண்டிருக்கும் போது  ஒரு ஆஸ்ரமம் தெரிகிறது.     அது  மகரிஷி  அகஸ்தியரின்  ஆஸ்ரமம்.  அதை நோக்கி நடக்கிறார்கள்.    

''லக்ஷ்மணா, சீதா,  நான் சொல்வதை கேளுங்கள்.     அகஸ்திய மகரிஷி  சாதாரண  ரிஷி அல்ல.  பெரிய தேவதைகள், சித்தர்கள், கந்தர்வர்கள்,தீர்க்க தரிசிகள், அந்த  ஆஸ்ரமத்தில் அவரோடு இருப்பவர்கள். தவம் செய்பவர்கள்.  அல்ப  சொல்ப  ஆகாரம் கனிவர்க்கம்  மட்டுமே  உண்பவர்கள். ஐம்புலன்களை வென்றவர்கள். பறவைகள், விலங்குகள், ஊர்வன, நீந்துவன  எல்லாமே  இங்கே  சத்தியத்துக்கு தர்மத்துக்கு கட்டுப்பட்டவை. அந்த மஹரிஷியின் ஆசி பெற்றவை. அவருக்கு சேவை புரிபவை.  சகல சக்திகளும் கொண்ட  தபஸ்வி.   மகரிஷி அகஸ்தியர் ஸ்ரீ வித்யா சக்தி பெற்ற த்ரிகால ஞானி, சக்தி  உபாசகர்''  என்று அவரை பற்றி விளக்குகிறார்  ஸ்ரீ ராமர். 
.
அவர்கள் வருவதை தூரத்திலேயே  சிஷ்யர்கள் மூலம் அறிந்து கொண்ட அகஸ்திய  மகரிஷிக்கு  பரமானந்தம். சிஷ்யர்களோடு  வெளியே  ஓடி வருகிறார்.  ஆஹா  ராமனை தரிசிக்க எவ்வளவு நாள் ஆவலாக இருந்தேன். அவனே நேரில் என்னை வந்து சந்திக்க என்ன பாக்யம் செய்தேன்  . ராமன்  அகஸ்தியரை நமஸ்கரித்து அணைத்துக்  கொள்கிறார். மற்ற இருவரும் ரிஷியின் காலில் விழுந்து வணங்குகிறார்கள்.   ராமர் அனைவரையும் உபசரித்து  பழங்கள், காய்கள், பருக நீர் எல்லாம்  தருகிறார்.  

ராமா  நீ சக்கரவர்த்தி திருமகன். திருபுவன நாயகன். தர்மாத்மா.  சகல ஜீவர்களும் வணங்கத்தக்கவன்.  என்னிடம் சில வஸ்துக்களை ஒருநாள் உனக்கு கொடுப்பதற்காகவே  போற்றி பாதுகாத்து வைத்திருக்கிறேன். 

''இந்தா இனி இவை உன்னுடையவை. இந்த இந்த்ரதனுசு தேவ சிற்பி விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டது. சக்தி வாய்ந்தது.  ப்ரம்மா ஒருகாலத்தில் என்னிடம் இதை கொடுத்தார். அதற்குண்டான அம்புகள், அம்புறாத்தூணி,  தங்கத்தினாலான  கூரிய  வாள்  இது. இந்திரன் அளித்தது ''

Agasttyavacanā ccaiva jagrāhaindraṃ śarāsanam ,Khaḍgam ca paramaprītah tūṇicāksayasāyakau.

அகஸ்தியர்  முக்காலமும் உணர்ந்த முனிவர்.  ராமருக்கு மெத்த மகிழ்ச்சி.  அன்போடு அவற்றை பெறுகிறார். ஒருகாலத்தில் அசுரர்களை அழிக்க அவர் உபயோகித்த ஆயுதங்கள் அவை.   எல்லாம்  சீக்கிரமே   ராமராவண யுத்தத்தில் தேவையாயிற்றே. 

''ராமா  இங்கிருந்து நேராக சென்றால்  பஞ்சவடி வரும். அங்கே உன் ஆஸ்ரமத்தை அமைத்துக் கொள் . உனக்கு பொருத்தமான இடம் அது. என்னுடை தவ வலிமையில் உன்னை எதிர்கொள்ளப்போகும்  நிகழ்ச்சிகள் மனதில் தோன்றுகிறது. உனக்கு சர்வமங்களமும் உண்டாகட்டும் '' என்று ஆசி கூறுகிறார்.

இந்த  விஷயம் எல்லாம் உங்களுக்கும் எனக்கும் இன்று தான் தெரியும். ஆனால்  திருக்கோளூர்  பெண்மணிக்கு  ஆயிரம் வருஷங்களுக்கு முன்பே தெரிந்ததால் தானே அவள்  ''ஸ்ரீ  ராமானுஜ ஆச்சார்யாரே,  என்றாவது ஒருநாளாவது எனது வாழ்க்கையில் நான்  “அகஸ்திய மகரிஷி  மாதிரி   வரப்போகும்  துன்பங்களை, துயரங்களை முன்கூட்டியே அறிந்து,   ஸ்ரீ இராமருக்கோ  ரங்கநாதனுக்கு, வைத்தமாநிதி  பெருமாளுக்கோ  ஆச்சார்யர்களுக்கோ  ஏதேனும் ஒரு சிறு  உதவி புரிந்ததுண்டா. அப்படி இருக்க  நான் எவ்வாறு இந்த க்ஷேத்திரத்தில் தங்கி வசிக்க  பொருத்தமானவள் . சொல்லுங்கள்?''  என்கிறாள் 



 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...