Saturday, December 7, 2019

THULASIDAS


       
 நெஞ்சில்  என்றும் வாழ்கிறார்.  J K   SIVAN 



பிரியதாசர் ஆஸ்ரம வாசலில் கூடியிருந்த அனைத்து பிராமணர்களும்  வைஷ்ணவர்களும்  அதிசயித்து போனார்கள்.


 ''என்ன  ஸ்ரீ ராமனே  நேரில் வந்து தனது கையால் துளசிதாசர் சரித்ரத்தை  உங்கள் புத்தகத்தில் எழுதினாரா?  கண்ணால் கண்டீர்களா அந்த அபூர்வ காட்சியை? நாங்கள் என்ன பாக்யம் செய்த்திருக்கிறோம் ஸ்ரீ ராமன் எழுதியதை பார்க்க, கேட்க??  ஹா ஹா  கொஞ்சம் கூட சந்தேகமே இல்லை, ஸ்ரீ துளசிதாசர் பூர்வ ஜென்மத்தில் வால்மீகி முனிவர் என்பார்களே அது நூற்றுக்கு  நூறு அல்ல, ஆயிரம் மடங்கு,  சத்ய வார்த்தை''  என்று புகழ்ந்தார்கள். துளசி தாசர் கால்களில் விழுந்து ஆசி பெற்றார்கள்.

நக்ஷத்ரங்களுக்கு இடையே  சந்திரன் போல் வைஷ்ணவர்கள், விஷ்ணு பக்தர்களுக்கிடையே நீங்கள் தனித்துவம் பெற்றவர்கள் என்று துளசிதாசரை புகழ்ந்தார்கள்..

மஹிபதி  மராத்தியில்  பக்த விஜயம் என்று  ஸ்ரீ கிருஷ்ணன்/விட்டலன்  பக்தர்களின் வாழ்க்கை சரித்திரத்தை எழுதினார் என்று பெயர் தான். உள்ளபடியே அதை எழுதியது ஸ்ரீ ராமனே  என்கிறார்  துளசிதாசர்.

துளசி தாசர்  கடைசி மூச்சு வரை காசியில்  இருந்தவர்.காசியில் துளசி காட் என்பது அவர் நினைவில் தான். 

யமுனைநதிக்கரையில்  சித்ரகூடம் எனும் ஊரில்  ஸ்ராவண மாசம் 7ம் தேதி சுக்லபக்ஷத்தில் பிறந்தவர். இங்கிலிஷ் வருஷம்.  1497/1532 என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆகவே  பிறந்த வருஷம் முக்கியமல்ல.  பிறக்கும்போதே  32 பற்களோடும் பிறந்தவர் என்றும்  பிறந்த குழந்தை அழாமல் ராமா என்று பேசியதாகவும் அதனால்  '' ராம் போலா '   ராம்  என்று சொன்னவன் ' எனபெயரிட்டதாகவும்   ஒரு தகவல்.   இளம்வயதில் பெற்றோரை இழந்து  வீட்டில் பனி சுனியா  என்பவள் வீட்டில் வளர்ந்து, அனாதையாக வாழ்ந்து அன்றாட பிக்ஷையில் உயிர் வாழ்ந்தவர்.  விரக்த தீக்ஷை பெற்று பெயர்  துளசிதாசராக மாறியது.  15-16 வயதில்  காசிக்கு சென்றார்.  அங்கு பஞ்சகங்கா  காட் எனும் இடத்தில் குரு சேஷ சனாதனர் என்பவரிடம்  வேத சாஸ்திரங்கள் கற்றார்.  அயோத்தியில்  ராமநவமி அன்று தான் ராமச்சரிதமானஸ் எழுத  ஆரம்பித்து  ரெண்டு வருஷமாகியது முடிவுற . நிறைவு பெற்றநாள்  மார்கழி மாத  விவாஹ பஞ்சமி,  ராமனுக்கும் சீதைக்கும் மணநாள்.   காசியில் காசிவிஸ்வநாதர் ஆலயத்தில்  சிவனுக்கும் பார்வதிக்கும் ராமச்சரிதமானஸ் பாராயணம்  செய்தார்.  அவர் எழுதிய  பிற நூல்கள்:   தோஹாவளி, கவிதாவளி , கீதாவளி , க்ரிஷ்ணகீதாவளி, விநயபத்ரிகா, ஹனுமான் சாலீசா , இன்னும் எத்தனையோ. 


கம்பருடைய  தமிழ் தெரிந்த எல்லோருக்கும் புரியாது.  யாராவது அர்த்தம் சொல்ல வேண்டும்.   தனது ராமாயணத்தை, ராம சரிதாமானஸை ஹிந்திக்காரர்கள்  எல்லோருமே படிக்கும் படியா பக்தியை பிழிந்து  எழுதியிருக்கிறார்  துளசிதாசர்.

அதுவும் அவர் எழுதியபோது முழுக்க முழுக்க முஸ்லீம் ஆட்சி. அப்படி இருந்தும் எல்லா ஹிந்துக்களும் அதை படித்து மகிழ்ந்தால்  அதற்கு  காரணம் அதில் வரும் ஆஞ்சநேயன் தான்.  என்றும்  ஹனுமான் சாலீஸா 
 வீட்டுக்கு வீடு   MSS  குரலில் ஒலிக்கிறதே.     மண் புழு மாதிரி இருக்கிறவன் கூட அனுமன் சாலிசா படித்தால்   பீமபுஷ்டி லேகியம் சாப்பிட்டவன் போல  எங்கிருந்தோ  அவனுக்கு ஒரு வீரம் வந்து மஹா பலசாலி, தைரியசாலி ஆகி விடுவான்.   அப்படி ஒரு சக்தி அதற்கு .

துளசிதாசர் ஹநுமானோடும் ராமரோடும்  நேருக்கு நேரே பேசுபவர் அல்லவா?   ஹனுமான்  துளசிதாசர் இருவருக்குமே மூல நக்ஷத்திர ஜனனம். ஹநுமானுக்கு '' வாத ஜாதன்'' என்று ஒரு பெயர் உண்டு. வாதம் என்றால் வாயு. குருவாயூரை வாதபுரி என்று சொல்கிறோமே அது போல். ஜாதன் என்றால் பிள்ளை. வாயுவின் பிள்ளை. வாதாத்மஜன். ஒரு ஸ்லோகத்தில் துளசிதாசர் ஆஞ்சநேயனை ஞானிகளுக்குள்ளே முதன்மையானவன் என்று வர்ணிக்கிறார். ''ஞானிநாமக்ரண்யன்''

''புத்திர் பலம் அசோதைர்யம், நிர்பயத்வம், அரோகதா,அஜாட்யம் வாக்படுத்வம்'' எல்லாம் கொண்டவன் ஹனுமான். புத்திமான், பலவான், தைர்யவான், பயம் கிலோ எவ்வளவு என்று கேட்பவன், நவவியாகர்ண பண்டிதன். ராம பக்தன். சிரஞ்சீவி, சமய சஞ்சீவி, அவனைப் போற்றி சரணடைந்து வணங்கினால், நமக்கு புத்தி, பலம், தைர்யம், பயமின்மை, வியாதிகள் அகலும், வாக் சாதுர்யம் எல்லாம் கிடைக்குமே.
துளசிதாசரை வணங்கி விடைபெறுகிறோம்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...