Tuesday, December 24, 2019

INDIAN HISTORY



இந்திய சரித்ரம்   J K  SIVAN 

                                                புத்தகத்தில் ரத்தக்கறை.

அவ்வப்போது ஒரு எண்ணம் மனதில் எழும்.  உலகத்தில் சீனாவுக்கு அடுத்தபடி அதிக ஜனத்தொகை உள்ள நாடு நமது  பாரதம் என்கிறார்களே . முஸ்லீம்கள்  நமது நாட்டை  ஆக்கிரமித்து, எண்ணற்ற ஹிந்துக்களை கொன்றார்களே, பல யுத்தங்களில்  ஹிந்து வீரர்கள் உயிரிழந்தார்களே , பல பெண்கள்  தீக்கிரை யானார்களே,  எத்தனையோ குழந்தைகள் கொல்லப்பட்டனவே, இதெல்லாம் நடக்காமல் இருந்தால் நாம்  ஒன்றரை மடங்கு சீனாவாக இருந்திருப்போமா?   

சரித்திரத்தில்  ''இப்படி நடந்திருந்தால்'' என்பதற்கு இடமில்லை. நடந்த உண்மைகள் வேண்டுமானால்  வெள்ளைக்கார, இஸ்லாமிய மற்றும் நமது  சரித்திரக்காரர்களால் சொல்லப்படாமலிருக் கலாம். எப்படியோ எவ்வளவோ மறைக்கப்பட்டு விட்டதோ? நாம்  எவ்வளவு  தாராள மனதுள்ளவர்கள்.  இப்போதுள்ள  ஜனத்தொகையில்  ஹிந்துக்கள் தவிர  இதர மதத்தினர்  சம  அளவிலோ  கூடவோ,  கூட நெருங்கி வந்துவிட்டனர்.

''நீ வந்து எங்களை ஆளவேண்டாம் ''  என்று எதிர்த்து  எத்தனை முயற்சிகள் எழும்பின. ஆனால் ஆதரவற்று, நமக்குள்ளே ஒற்றுமையின்றி பலமுறை பலமிழந்து தோற்றன.  வெளி தேசங்களிலிருந்து ஆக்கிரமித்த  வீரர்கள் குடும்பமின்றி வந்து இங்கே ஹிந்து பெண்களை மனைவிகளாக்கி கொண்டு  வம்சங்கள் அடையாளம் இழந்ததும் அதிகம்.    கணக்கில் இல்லாதது. உயிர் தப்ப  மதம் மாறியவர்கள் வேறு  எத்தனையோ பேர்.
முக்கால்வாசி அநியாயம்  7ம் நூற்றாண்டிலும் அப்புறமும் தான் இங்கே நடந்தது.  மேற்கு கடற்கரை துறைமுகங்களில் வந்து இறங்கிய பாரசீகர்கள்   வடக்கே சிந்து பக்கமாக ஹிந்து குஷ் மலை இடைவெளிகளிலிருந்து வந்தவர்கள் இந்த வளமான நாட்டை ஆக்கிரமித்தார்கள். பிறகு நம்மை ஆளவந்தவர்களானார்கள். சிலர்  மேற்கு கடற்கரை பகுதில் வந்து உள்ளே நுழைந்தவர்கள். 

கிபி் 7்00 காலகட்டத்தில்   முஹம்மது பின்காலிஃப்ஆ வின்  தளபதி முஹம்மது  காசிம் இந்தியாவிற்குள் நுழைந்தபோது அவன் வயது 17.  இந்த மாதிரி வளமான சுபிக்ஷ  பூமியை  அவன் நினைத்துக்கூட பார்த்ததில்லை.  இந்த நாட்டின் நாகரீக வாழ்க்கை செல்வ செழிப்பு அவன் கண்ணை உறுத்தியது.  அவனுக்கு தெரிந்தது அவன் பிறந்தது வறண்ட பாலைவன  பூமி.  அதிகாரம். இரக்க மின்மை.  கொடுங்கோல் அரசாட்சி. கட்டுப்பாடு  பயம்.   இங்கே அதெல்லாம் காணோமே.  அவனிடம், அவனோடு  6000  குதிரை வீரர்கள் ஆயுதங்களோடு.   3000 ஒட்டகங்கள். 

இரும்பு குண்டுகளை சங்கிலிகளில் கட்டி  வீசுவதில் தேர்ந்த படை.  ஹிந்து ராஜா கோட்டை கொத்தளம் கண்ணில் பட்டது.   கொடிமரத்தை பார்த்து வீசினார்கள்.  கொடி வீழ்ந்தது.  ஏணி கொண்டு வந்திருந்தார்கள். கொத்தளங்கள் மீது ஏறி உள்ளே நுழைந்தார்கள். ஹிந்து  பிராமணர்கள் கோட்டையில் இருந்தவர்கள் கொல்லப்பட்டார்கள்.  கோவில் உடைக்கப்பட்டு ஒரு மசூதி எழும்பியது.  இது நடந்த இடம் டைபூல்   கராச்சி அருகே. அப்போது பாகிஸ்தான் இல்லாத முழு இந்தியா என்பதால் கராச்சி பாரதத்தில் ஒரு பாகம் அல்லவா?
காசிம்  கடர்கரையில் இருந்த படகுகளை கைப்பற்றி வில்லேந்திய  வீரர்களை நிரப்பினான்.  அம்புகளும், நெருப்பு பந்தங்களும் எறியப்பட்டு  எதிர்ப்பட்ட  ஹிந்து ராஜா  தஹிரின் படைகள் தடுமாறின.   யானைகள் நெருப்பு பந்துகளால்  மிரண்டு மதம் பிடித்து ராஜாவின்  படைவீரர்களையே  சேதமாக்கின. மாண்டு போயின.  மூல்தான் வரை இஸ்லாமியர் படை வெற்றிகரமாக முன்னேறியது. சிந்து பள்ளத்தாக்கு கைவசம் வந்தது. ஹிந்து ராஜ்யங்களிடையே இருந்த வேற்றுமை, ஒற்றுமை இன்மை,  வேண்டாதவர்களை எதிரிகளோடு சேர்ந்து தாக்க சந்தர்ப்பம் தந்தது.  இஸ்லாமிய படைக்கு இப்படி ஒரு உதவி கசக்குமா?   நாலு  வண்டி நிறைய  சதுர்புஜ விக்ரஹங்களை  சூறையாடி குவித்து  பாரசீகத்தில் காலிபாவுக்கு CALIF பரிசாக கொண்டு போனான் காசிம். நாலு கை  உருவங்கள் அவனுக்கு வேடிக்கையாக இருந்தது.

பழைய காலிபா இறந்து புதிய காலிபா பட்டத்துக்கு வந்தவனுக்கு  காசிமை பிடிக்காது.  காசிம் மேல் குற்றச்சாட்டு எழுப்பி  டமாஸ்கஸ் என்ற ஊரில்  முஹமத் காசிம் சிரச்சேதம் செய்யப்பட்டான். இறந்து போன  ஹிந்து ராஜா  தஹிரின்  குடும்ப பெண்களை  காசிம்  கைது செய்து  கடத்திக்கொண்டு போய்  காலிஃஆவுக்கு பரிசாக கொடுத்தான். புது காலிபா அந்த பெண்களை குதிரை வால்களில்  கட்டி ஓடவிட்டு  அவர்கள் சிதைந்து இறந்து போனார்கள்.

அதற்கு பிறகு  வெளி நாட்டு அக்கிரமிப்பு சற்று காலத்துக்கு தடுக்கப்பட்டதற்கு காரணம். ராஜபுத்திர வீரர்களின் வீரமும்  பலமும் நமது நல்ல காலமும்  தான் என்று சொல்லலாம்.

எனக்கு சரித்திர பாடம், வகுப்பு  பள்ளி வயதில் பிடிக்காது என்பது எனது துரதிஷ்டம்.  இப்போது  81ல்  அதன் பக்கத்தை புரட்டும்போது தான்,  படிக்கும்போது தான் சரித்திர புத்தகத்தில் இது வரை காணாத  ரத்தக்கறை கண்ணில் படுகிறது. நெஞ்சை அடைக்கிறது. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...