Wednesday, April 29, 2020

siva puranam




ஒரு விசித்திர குடும்பம் J K SIVAN

அப்பன் பொறுப்பில்லாதவரோ ? யாரைப் பார்த்தாலும் அவரை பித்தன், பேயன் என்றே சொல்கிறார்களே . எப்போ பார்த்தாலும் தனியே ஒரு மலை உச்சியில் போய் அரைக்கண் திறந்த படி உட்காருவார். அப்படி உட்கார்ந் திருப்பவர் அருகே சென்று ஏதாவது பேசினால் அவ்வளவு தான். நெருப்பு சுடும்ல்ல. இதுக்குன்னு ஒரு கண்ணு நெத்திலே இருக்கு. எரிச்சிடுவாரு.

மற்ற நேரத்தில் சுடுகாட்டுலே போய் சாம்பலை வாரி பூசிக்கிட்டு தா தை னு ஆட்டம். எப்போ கோபம் வரும்னு தெரியாது. யாரானாலும் சாம்பலாக்கிடுவார் . ரொம்ப ஜாக்கிரதையாக பழகவேண்டிய ஆளு.
ஏன் இப்படி இருக்கிறார்?, ஒருவேளை அப்பா, அம்மா, பேச்சை கேக்கலியா, அவங்க நன்றாக வளர்க்கவில்லையா?
யாருக்கு தெரியும் பா ? அவருக்கு அப்பா அம்மாவே கிடையாது. அவர் தனி. ஒருத்தர். முதல் ஆள். பிறப்பு இறப்பு தெரியாதவர். அதெல்லாம் கிடையாது. என்ன உத்யோகம் இவருக்கு கொடுக்கிறது? உயிரை வாங்கு றாரே? என்னா செய்றது இவரை? அட அந்த உத்யோகமே கொடுத்திடலாம். அதுக்கும் சரியான ஒரு த்தர் வேணும்ல.
''எல்லாத்தையும் நீயே முடிச்சுடுப்பா'' ன்னு விட்டுட்டாங்க.
அவருக்கு எதுவுமே தேவை இல்லீங்க. டைலர் கிட்டே போற வேலையே இல்லை. எங்கே யாவது ஒரு யானை, புலி கண்ல பட்டுதுன்னா, தோலை உரிச்சு, இடுப்புல சுத்திக்குவாரு. வெம்புலியோ ஐம்புலனோ இவர்கிட்டே வாலாட்டாது.

இன்னொரு வேடிக்கையான விஷயம். இவரு போட்டிருக்கிற நகையை எவனும் அறுத்துக் கினு ஓடவே மாட்டான். விஷம் கக்கிற பெரிய நல்ல பாம்பை, தலையிலே, கழுத்திலே, கையிலே, உடம்பிலே சுத்திக்கினா எவன்யா கிட்டே வருவான்?. கண்ணு தெரியாம கிட்டே வந்து மாட்டிக்கினவனை தூக்கினு தான் போவணும். ஆனாலும் அவருக்கு அந்த பாம்புங்க எவ்வளவு அழகு தருது பா. எதையும் லக்ஷியம் பண்ணாத அப்பான்னு சொன்னேனே அவரு கிட்டே சாப்பிட ஒரு தட்டு கூட இல்லைப்பா. ஒரு மண்டை ஓட்டை தான் கையிலே வச்சிருக்கிறாரு. என்ன தோணுச்சோ. நிறைய தட்டு தேவைப்பட்டா ஒண்ணு கழட்டிக்கலாம் னு நினைச்சாரோ என்னவோ, நிறைய மண்டை ஓட்டை துளை போட்டு கட்டி மாலையா கழுத்திலே போட்டுக் கிறாரு. சுடுகாட்டு சாம்பலை வாரி உடம்பிலே பூசிக்கிறாரு. நெத்தி பூரா வேறே. வேறே வாசனை சாமான் மேலே ஆசை இல்லேப்பா.

''அவர்கிட்டே போய் உங்களைப் போல் யாரும் இல்லீங்க'' ன்னு மட்டும் சொல்லிடுங்க, அப்புறம் பாருங்க நீங்க எது கேட்டாலும் குடுத்துடுவாரு. இவரு குணம் தெரிஞ்சு மத்தவங்க ஒரு தடவை என்னா செய்தாங்க தெரியுமா? அது ஒரு பெரிய கதை சுருக்கமா சொல்றேன் கேளு.

''அதோ பார் பெரிய கடல். எப்படி இருக்குது. எல்லாமே பால் , வெள்ளையா இல்லை ?

பின்னே பாலு கருப்பாவா இருக்கும்?

ஏன் கடலு வெளுப்பா அப்படி இருக்குது?
அதுக்குள்ளாற தேன் மாதிரி ஒண்ணு இருக்குதே அதுக்கு அமிர்தம் னு பேரு . அதை எடுத்து சாப்பிட்டா, சாவே கிடையாதுப்பா.

''அப்போ வாங்க உள்ளே இறங்கி எடுத்து சாப்பிடலாம். கும்பல் சேர்ந்தா கிடைக்காம போயிடும்.''
''அதெல்லாம் அவ்வளோ சுளுவு இல்லே தம்பி. இந்த பாலை தயிர் மாதிரி கடையணும் ?.
''எல்லாத்தையுமா ?''
''பின்னே, கொஞ்சூண்டு கடைஞ்சா அமிர்தம் வராதே, அவ்வளவு பாலையும் கடைஞ்சா ஒரு சொம்பு அமிர்தம் தேறும்,''
''சரி எப்படி கடையறது?
''அதுக்கு வழி கண்டுபிடிச்சுட்டாங்க.. மத்து மாதிரி ஒரு பெரிய மலையை புடுங்கி வச்சிட்டாங்க. மந்தர மலையாம். அதை சுத்தி கடையறதுக்கு கயிறுக்கு எங்கே போறது?

தேடிப் பிடிச்சு நீளமா ஒரு பெரிய பாம்பு வாசுகி ன்னு பேரு. தேவருங்க அசுரர்ருங் கன்னு ரெண்டு சைட்லே நின்னுகிட்டு பால் கடலை கடைஞ்சாங்க.

வாசுகியோடு விஷம் முதல்லே வந்தது. அப்புறம் தான் அம்ருதம். எங்கே
பார்த்தாலும் கொடிய ஹால ஹால விஷம். என்ன செய்யறது இதை? இந்தாங்கோ ன்னு கொடுத்தா யார் யா வாங்கிக்குவா? இருக்கவே இருக்காரு நம்ம சாமி.''

''உங்கள மாதிரி உண்டா, நீங்கள் தான் இந்த விஷம் எவரையும் கொல்லாமல் பார்த்துக் கோணும் '' ஏதாவது வழி சொல்லுங்க'' ன்னு கேட்டவுடனே இவருக்கு தலை கால் புரியவில்லை.
''கவலைப்படாதேங்க, அதற்கென்ன நானே அதை முழுங்கிடுறேன். அப்புறம் அதால் யாருக்கும் துன்பம் விளையாதே'' என்று சொன்னவர் ஏதோ அல்வா சாப்பிடக் கொடுத்தது போல் அந்த கொடிய விஷத்தை, '' லபக்'' என்று எடுத்து ஒரே வாயில் விழுங்கிட்
டாருப்பா.

அவரு ஸம்ஸாரத்துக்கு இவரைப் பத்தி நல்லா தெரியும்லே. அதுக்கு தானே இவரை தனியா விடக்கூடாதுன்னு அவரு பாதி உடம்புலே இருந்து கினு பார்க்கறாங்கல்லே. அவரு முழுங் கின அந்த விஷம் எல்லாம் உள்ளே இறங்காமல் ஒரே அமுக்கு அமுக்கிறாங்கல்லே. அது பாதி கழுத்திலே அப்படியே கப்புனு நின்னு போச்சு. நீல கழுத்து காரர்னு இப்போ கூட எல்லோரும் அதனால் தான் சொல்றாங்க. ஆளு ஏற்கனவே செக்கசேவேலுன்னு இருப்பாரா, பளிச்சுனு நீல மா கழுத்தி லே விஷம் நின்னுது கூட அவருக்கு அழகா இருக்குதுப்பா.
''அடேடே அப்புறம்'''
அப்புறம் என்னா. அம்ருதம் வந்துதுப்பா. தேவருங்க அதை எடுத்துக்கிட்டாங்க. வேறே என்னாவெல்லாமோ கூட அப்போ வந்தது.. பெரிய லிஸ்ட் பா அது. அதெல்லாம் யார் யாருக்கோ கொடுத்தாங்க. அப்பால சொல்றேன்.
நீ சுருட்டப்பள்ளி போயிருக்கிறயா?
இல்லேயே ஏன்?
ஒரு தபா நீ போவணும் பா. அருமையான ஊர் பா. அங்கே ஒரு கோவில்லே நீளமாக காலை நீட்டிக்கினு ஸம்ஸாரம் மடிலே படுத்துக்கினு இருக்கிறார் போய் பார். அது மாதிரி உலகத்திலே எங்கேயுமே கிடையாது பா படுத்துகினு இருக்கிற நம்ம சாமி.''

''சாமிக்கு என்ன பேர்?
''பள்ளி கொண்ட ஈஸ்வரர்.. படுத்துக்கினு இருந்து அவரை நான் பார்த்ததே இல்லை.' சுத்தி எல்லோரும் நிக்கிறாங்க. ப்ரம்மா, விஷ்ணு ரிஷிங்க. எல்லோர் முகத்திலேயும் கவலை .
''ஏங்க ?'
'இம்மாம் விஷம் முழுங்கினா என்னாத்துக்கு ஆவும்? ஆனா அவருக்கு ஒண்ணும் ஆவல. ஆவாது. அது தான் அவரு. பிறப்பு இறப்பு எதுவுமே கிடையாது பா அவருக்கு.''விஷம் சும்மாவா இருக்கும்? திகு திகு ன்னு எரிச்சல் குடுத்தது. பேசாம சில் லுனு ஐஸ் மலை உச்சியில் போய் உக்காந்துட்டார். அந்த இடம் இருக்குது இப்போ கூட. கைலாசம் என்கி
றாங்க. வருஷா வருஷம் எம்புட்டு பேர் போய் பார்த்துட்டு வராங்க. அவருக்கு எவ்வளவோ வேலை, பேசாம எப்போவும் பனி மலைமேல் எப்படி உக்காந்து கிட்டே இருக்கிறதுன்னு ஒரு யோசனை பண்ணார் போல.''

''எங்கேயாவது போனா கூட சில்லுனு இருக்கணும்னு ஏன்னா செய்யலாம்னு யோசிக்கும்போது ஒருத்தன் வந்தான்.

''யார் நீ?ன்னாரு.-
''சாமி நான் பகீரதன். உங்களைப் பார்த்து உங்க உதவி வேணும்னு கேட்க வந்தேன். ''
என்ன செய்யணும் உனக்கு?

''எங்க தாத்தன் பாட்டன் பூட்டன் அவனுக்கு பாட்டன் பூட்டன் எல்லோரும் நரகத்தில் இருக்காங்க. அவங்க மோக்ஷம் போகணும்னா
ஆகாச கங்கை நதியை இங்கே கொண்டார
ணும் னாங்க . நான் பல வருஷம் தவம் இருந்தேன். நேத்து கங்கை அம்மா வந்து பேசினாங்க.

''டேய் பகீரதா, என்னை இங்கே கூப்பிடறேயே, நான் வேகமா கீழே இறங்கி வந்தா உங்க பூமி அந்த வேகத்தை தாங்காது. யாரு தடுப்பாங்க அதை தெரியுமா உனக்கு ? என்ன செய்யப்
போறே?''

''தெரியலேம்மா, நீங்களே சொல்லுங்க''ன்னு கேட்டேன் . அவங்க தான் ஒரே ஒருத்தர் தான் என்னோட வேகத்தை தாங்கமுடியும். அவரு கிட்டே போய் வேண்டிக்கோ. அவர் மேலே இறங்கி நான் மெதுவா பூமிக்கு வரேன். உங்களை தான் அவங்க சொன்னாங்க.''

''இவரு தான் எப்போதும் பிரத்தியாருக்கு உதவ உடனே சரின்னுடுவாரு''. கங்கையை வரச் சொல்லுன் னுட்டாரு'' '
'அப்புறம் ?'
''ரெண்டு கையும் இடுப்பிலே வச்சிக்கினு கங்கையம்மா வேகமாக ஓ ஓ ன்னு மேலே ஆகாசத்திலிருந்து பெரிய சத்தத்தோட கீழே வர இடத்திலே தலையை விரிச்சுக்குனு நிக்கிறார். அப்படியே சில்லுனு அந்தம்மா கீழே அவர் தலையிலே இறங்கிட்டாங்க. அவங்களை மெதுவாக கீழே இறக்கி விட்டுட்டு மீதியை தலையிலே வச்சிக்கிட்டாரு. சில்லுனு அவங்க எப்போதும் அவர் உடம்பிலே இருக்கிறாங்க. சூடு எரிச்சல் பத்தி அப்புறம் நினைக்கவே நேரமில்லே.'' அந்தம்மா அவர் தலை மேலே எப்போவும் இருக்கிறாங்க.

''இதிலே இன்னொரு விஷயமும் இருக்குப்பா''.
''என்னதுங்க?''
''அவருக்கு எப்போவும் குளிச்சிட்டே இருக்க ரொம்ப பிடிக்குமே''' இந்த கங்கையம்மா தலைமேலேயே எப்போதும் இருக்கிறதால சில்லுன்னு ராவும் பகலும் அவருக்கு ஸ்நா
னம் பண்ணிக்கிட்டே இருக்க முடியுது. . தண்ணியை தேடிக்கிட்டு எங்கேயும் போகவே வேணாம்.
''சாமி ரொம்ப வித்யாசமானவரா இருக்கா ரே.''
'' 'ஆமாம்பா இப்போ சொல்றதே கேட்டுக்கோ'
''யாரேனும் பாடம் கேக்க வந்தா வாத்தியாரு என்ன செய்வாரு?'' .
எழுதிக்காட்டுவாரு, உரக்க பேசிக்கிட்டே சொல்லிக்கொடுப்பாரு இல்லையா. இவரு கிட்டே நிறைய ரிஷிங்க வந்து பாடம் கேக்கறாங்க. அவருக்கு தான் தெரியாததே இல்லையே''.
''இவரு பேசாம ஒரு மரத்தடிக்கு போனார். சாதாரணமா நாம் பார்க்கற பச்சை இலை சத்தம் போட்டுக்கிட்டே ஆடுமே அந்த மரம் இல்லை. சத்தம் ஒரு பொட்டு கூட இருக்க கூடாதே. அதனாலே ஒரு மரத்தை பிடிச்சாரு. அது கல்லுலே ஆனது. ஆடாது அசையாது. அதுங் கீழே உக்காந்துகிட்டு என்ன பண்ணினாரு தெரியுமா?'
'''பாடம் சொல்லி கொடுத்தாரா?
''''பாடம் தானாகவே தெரிஞ்சுக்க வச்சாரு. ஒண்ணுமே பேசலே. எல்லாரையும் கண்ணாலே பார்த்துக்கிட்டே இருந்தாரு. கொஞ்சம் கொஞ்சமாக கண்ணை அரை மூடினார். அது அவர் வழக்கம் இல்லையா?. எதிரே உக்கார்ந்தவங்க மௌனமா அவரையே பார்த்துக்கிட்டு இருந்தாக. தெற்கு பக்கம் பாத்துக்கிட்டே எவ்வளவு நேரம் அசையாம உட்காந்தாருன்னு தெரியாது. தெக்கே பாத்து உக்காந்ததாலே தக்ஷீணா மூர்த்தின்னு பேரு.
அவங்க அத்தனை பேருக்கும் எதை கேட்க வந்தங்களோ அதெல்லாம் பட்டுனு புரிஞ்சுடுச்சு. அதனாலே தான் நான் புரிஞ்சு ''போச்சு''ன்னு சொல்லல.''
''பேசாமலேயே அப்படி புரியவைக்க முடியுமாப்பா?''
''ஏன் முடியாது. இப்போ கூட கொஞ்சம் வருஷம் முன்னாலே நம்ம திருவண்ணா மலை ரமண ரிஷிக்கிட்டே நிறைய கேள்வி கேக்கணுமுன்னு ஒரு வெள்ளைக்காரரு நோட்டிலே கேள்வி எழுதி எடுத்துக்கிட்டு போனாரு. ஒரு மணிக்கு மேலே எதிரே உக்காந்து பாத்துக்கிட்டே இருந்தார். ஒண்ணும் கேள்வி கேக்கலே. ரமணரும் ஒரு வார்த்தை பேசலே . வெள்ளைக்காரரு அப்புறம் ரமணரை வணங்கிட்டு எழுந்து வந்துட்டாரு. என்னங்க ஏதோ எல்லாம் கேக்கணும்னு எழுதிக்கிட்டு வந்திங்களே, ஒன்னும் கேக்கலியா ன்னு நண்பர் கேட்டப்போ என்ன சொன்னாரு தெரியுமா வெள்ளைக்காரரு.

''எல்லாத்துக்கும் பதில் தெரிஞ்சுடுச்சு '' பேசாமலேயே விளக்கிட்டாருன்னாரு.'' மனசு மனசுகூட பேசும்போது வார்த்தை தேவையில்லை பா.
நம்ம சாமிக்கு ஆட்டம் மட்டும் இல்லை பாட்டுக்கூட பிடிக்கும். இதை தெரிஞ்சுக் கினு ஒரு பெரிய ராக்ஷஸன் என்னா பண்ணான் தெரியுமா? ரொம்ப வருஷம் தவம் இருந்தான். தனது உடம்பிலிருந்து நரம்பெடுத்து எலும்பிலே ஒரு வீணை பண்ணி சாம கானம் என்கிற ரொம்ப நிரடலான வேதத்தை பாட்டா பாடினான். வாசிச்சான். அவன் வீணை வாசிக்கிறதுலே பெரிய வித்துவான் பா. அவரு உட்காந்திருந்த கைலாச மலையை ஆட்டிட்டான் பாடியே .
இவருக்கு படா சந்தோஷம்.
'டேய் நீ கேட்டதெல்லாம் கொடுத்துட்டேன் போ ''ன்னுட்டாரு.
அப்புறம்?
அவனுக்கு எல்லா பலமும் வஞ்சிடுச்சி. சர்வ சக்தி பெற்ற ராவணன் பா. அவன் அக்கிரமம் தாங்க முடியா மல் அப்புறம் நம்ம கிருஷ்ணன் தான் ராமரா வந்து அவனை முடிச்சிட்டாரு.''

''ஐயா உங்களுக்கு இந்த சிவ சாமி பத்தி நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கே.''
நான் சொன்னது கொஞ்சம். இன்னும் எத்தனை யோ வருஷம் பூரா சொல்லலாம்''
''.என்னங்க செஞ்சாரு அப்படி
நம்ம தமிழ் நாட்டிலே நம்ம சாமி இருக்காரே. . மதுரைலே சொக்கன்னு பேரு. பாண்டிய ராஜா சங்கம் நடத்துவான். நிறைய பண்டிதர்களை எல்லாம் கூப்பிட்டு அவங்கவங்க சாமர்த்தியம் படிப்பு எல்லாம் காட்டி போட்டி போட்டு ஜெயிச்சவங்க பரிசு வாங்குவாங்க. இவரு அதிலெல்லாம் பங்கேற்பார். ஒருத்தருக்கு பரிசு கூட வாங்கிக்கொடுத்தார். திரு விளையாடல் னு நிறைய வேடிக்கை வித்தை எல்லாம் காட்டி சிவனடியார்களை சோதனை பண்ணி முக்தி கொடுத்திருக்கார். திருவிளையாடல் படம் போய் பாருங்க. கொஞ்சம் தெரிஞ்சிக்
கலாம். மத்ததை படித்து புரிஞ்சிக் கலாம்
.குடும்பம்னு சொன்னீங்களே.
ஆமாம் ஒரு புள்ளை ஒரு குட்டி இருக்கு. அவங்களைப் பத்தி அப்புறம் சொல்றேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...