Wednesday, April 22, 2020

DIVINE SONG




                                     ஆனந்த பைரவியில் அழகிய ராமன் 

                                                              J K  SIVAN 

இன்று  தியாகராஜ  ஸ்வாமிகளின் ஒரு அருமையான  ஆனந்த பைரவி  க்ரிதியை கேட்டேன். வழக்கம்போல் இதை பாடியவர் பாலமுரளி கிருஷ்ணா தான். பாடிப்பார்த்தவன்  நான்

இந்த கீர்த்தனையை தியாகராஜ ஸ்வாமிகள்   ஸ்ரீ ராமனை  எப்படி போற்றுகிறார்?    ஹே  பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமா, உலகின் கொடுமைகளை நீக்குபவனே , கொடூரர்களை  விரட்டியடிப்பவனே,  வேதங்களின் உறைவிடமே , அற்புதமான  நெஞ்சை அள்ளும், கண்ணுக்கினிய  ஆஜானுபாகுவாக   அழகிய கம்பீர தோற்றம் கொண்டவனே,

இந்திராதி தேவர்களின் துயர் தீர்ப்பவனே, பரமேஸ்வரன் பாடும் பரந்தாமனே ,  சரணடைந்தவர்களின் நேசனே, அன்பனே, ஜனகரின் மகளான சீதை எனும்   மொட்டவிழ்ந்த தாமரை மலரை சுற்றி  ரீங்காரமிடும்  வண்டே ,

வீராதி வீர ராஜாதி ராஜனே, அழகான ஆபரணங்களை அணிந்து அழகுக்கு அழகூட்டுபவனே,  அரசர்கள் எல்லோரும் மனமகிழ்ந்து போற்றுபவனே,  மிருதுவாக  சம்பாஷிப்பவனே,  இந்த தியாகராஜன் போன்ற தீனர்களை, பக்தர்களை ஆதரித்து காப்பவனே, உன்னை வணங்குகிறேன்.

Kṣīra sāgara vihāra aparimita
Ghōra pātaka vidāra
Krūra jana gaṇa vidūra nigama
Sañcāra sundara śarīra

Charanams
śatamakhāhita vibhaṅga śrī rāma
śamana ripu sannutāṅga
śrita mānavāntaraṅga janakajā
śṛṅgāra jalaja bhṛṅga

2.Rajathi raja   vesha Sri Rama  ,
Ramaneeya kara subhoosha
Raja nutha   lalitha bhasha   Sri Thyaga-
Rajadhi   bhaktha posha.


https://youtu.be/EftRZHczHI0

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...