Thursday, April 23, 2020

PESUM DEIVAM




பேசும் தெய்வம். J K SIVAN
அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
மனித மனம் விசித்திரமானது. தெரிந்ததை புறக்கணிக்கும், சிறிது இடைவெளிக்கு பிறகு புறக்கணித்ததை புதிதாக ஏற்கும். வெளியே சென்று வீடு திரும்பினால் கால் கை ,முகம் கழுவும் பழக்கம் இதில் ஒன்று. நமக்கு தெரியாததே இல்லை. தெரிந்து மறந்ததை புதிதாக யோசித்து கண்டுபிடித்ததாக ஒரு பாவலா போடுவோம்.
கங்கா காவிரி இணைப்பு.. இன்று நேற்று ஐடியா இல்லை. இந்த ரெண்டும் என்றோ இணைந்ததாக ஒரு நம்பிக்கை இருக்கிறதே மறந்து விட்டதா. அது தான் கடை முழுக்கு. துலா மாதம், ஐப்பசி, காவேரி ஸ்னானம். கங்கை அதில் கலந்ததாக நம்பிக்கை. நினைவு இருக்கிறதா?
காலை வேளையில் நீராடிவிட்டு மற்ற வேலைகளை பார்ப்பது ஒரு நல்ல பழக்கம். நதியில் நீராடுபவர்கள் கொடுத்து வைத்தவர்கள். பட்டணத்தில் அதற்கு வழியில்லை. கர்நாடகாவில் தலைகாவேரி எனும் காவேரி உற்பத்தி ஸ்தான நீராடல் அதி விசேஷம். துலா ஸ்னானம் மாயவரம் எனும் மயிலாடுதுறையில் விசேஷம்.
புராணம் ஐப்பசியில் காவேரி கங்கையோடு இணைகிறாள் என்கிறது.
பூமிக்கு கங்கையை கொண்டுவந்தவன் பகீரதன். கங்கைக்கு பாகீரதி என்று அவன் பெயரோடு ஒரு நாமம்.
''ஐயோ என்னை பூமிக்கு இழுத்து விட்டு விட்டாயே, அங்கிருக்கும் எல்லோருடைய பாபமும் என்னை சேர்ந்துவிடுமே. ஏன் பகீரதா இப்படி செயகிறாய்?''
”அம்மா கங்கா தேவி, பாபிகளை ஏன் நினைக்கிறாய்? உன்னில் எத்தனை மஹான்கள், ரிஷிகள், துறவிகள், ஞானிகள் நல்லவர்கள் பக்தர்கள் நீராடுவார்களே அதை ஏன் நீ யோசனை பண்ணவில்லை? என்று சமாதானம் செய்தான் பகீரதன்.
காஞ்சி மஹா பெரியவா மயிலாடுதுறையில் முகாமிட்டிருந்த சமயம். அவருக்கு காவேரி ஸ்னானம் ரொம்ப பிடித்த ஒன்று. மஹா பெரியவா சம்பவம் ஒன்று படித்து குறிப்பெடுத்து வைத்திருந்தேன். அதை கொஞ்சம் விவரிக்கிறேன்.
பெரியவா மடத்து பணியாளர் ஒருவரை கூப்பிட்டு '' நீ இந்த ஊர்லே இருக்காரே.............. அவர் கிட்டே போய் கோவில் கும்பாபிஷேகம், திருப்பணிக்கு கைங்கர்யம் பண்ணுவாரான்னு கேட்டுண்டு வா ''
''சரி பெரியவா இப்போதே போறேன்....''
''என்ன அவசரம் இரு.. போகும்போது கோவில் விநாயகரை வேண்டிண்டு ஒரு தேங்காயை சுற்றி சூரைத்
தேங்காயாக போட்டுட்டு போ.
மடத்து பழக்கம் எந்த காரியம் பண்ணுவதற்கு முன்பும் ஒரு தேங்காய் சிதறு தேங்காயாக போடுவது.
சற்று நேரம் கழித்து பெரியவாளிடம் பணியாளர் திரும்பிவந்தார்.
''என்ன ?''
”போன காரியம் நிறைவேறவில்லை போன காரியம் பழமாகல்லே . அதுவுமில்லாம விக்ன விநாயகருக்கு தேங்காய் உடைத்தேன். அவர் விக்னத்தைப் போக்குவதற்கு பதிலாக விக்னத்தை உண்டு பண்ணி விட்டார்!”
பணியாளர் சொன்னது அதிகப்ரசங்கித்தனம். பாவம் தெரியவில்லை அவருக்கு. மஹா பெரியவா முகம் இதை கேட்டதும் மாறியது. ஒன்றும் பேசவில்லை. அன்றைய பூஜை அனுஷ்டானங்களில் ஈடுபட்டார்.
பணியாளர் தாம் செய்த தவறை சட்டென்று உணர்ந்தார். நடுங்கினார்.
‘எல்லோரிடமும் பேசுவது போல பெரியவாளிடம் பேசியது எவ்வளவு பெரிய தப்பு?'' அவர் செய்த தவறு அவரை உறுத்தியது.
‘குருநாதரின் மனம் நோகும்படி நடந்து கொண்டேனே '' உள்ளூர மருகினார். சாப்பிட மனமில்லை. வேறு வேலைகளில் ஈடுபடவும் மனம் ஒத்துழைக்கவில்லை.
நேரா
க பெரியவா அருகில் சென்றார். கண்களில் தாரை தாரையாக கண்ணீர். காலடியில் விழுந்து நமஸ்கரித்து ''என்னை மன்னிச்சுடுங்கோ பெரியவா. ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் அபச்சாரம்''
”எழுந்திருடா. நீ ஒரு தப்பும் பண்ணலியே. வருத்தப்படாதே! என்ன… பிள்ளையார் ‘விக்னத்தை களையறதுக்கு பதிலா உண்டு பண்ணிட்டார்’ னு நீ சொன்னதுதான் தப்பு. இன்னொரு விஷயம் நீ புரிஞ்சிக்கல. நீ தேங்காயை உடைச்சதுமே, ‘ அடே, நீ போகும் வேலை நீ பார்க்கப்போற ஆசாமியாலே நடக்காது; வேற ஒரு பிரமுகரை அனுப்பி வைக்கிறேன்’ னு பிள்ளையாரே சொல்லிஇருக்கிறார். அப்படியிருக்க, விக்னத்தை உண்டு பண்ணிட்டதா சொன்னியே அது தான் தப்பு. அவர் பேரிலே தப்பில்லே. போ அவ்ளோதான்!”
மெல்ல புன்னகைத்தார் மஹா ஸ்வாமிகள். அவர் விலக்கியபடியே கோவில் திருப்பணி கைங்கர்யம் மற்றவர்களால் நிறைவேறியது.
தெய்வத்திடம் நாம் வைக்கிற நியாயமான பிரார்த்தனைகள் ஒருநாளும் வீண் போகாது! நாம் எதிர்பார்த்த நேரத்தில், எதிர்பார்த்தபடி நடக்காவிட்டாலும்கூட, ஏதோவொரு நாளில்… நிறைவேறியே தீரும்! இதை உணர்ந்து, தெளிந்து வணங்கும் நாளெல்லாம் திருநாள்தான்!
மஹா பெரியவா அருள்வாக்கு காதில் ஒலிக்கட்டும் :
''தானம், தொண்டு இவற்றால் மற்றவர்கள் லாபமடைந்தாலும் அடையாவிட்டாலும் நம்முடைய மனஸின் அஹங்காரம் குறையும். எல்லாரும் சேர்ந்து குளம் வெட்டினால், அப்போது கொஞ்சம் கொஞ்சம் நம் அஹம்பாவத்தையும் வெட்டி எடுக்கிறோம். குளத்தில் ஜலம் வருவதைவிட, நம் நெஞ்சில் ஈரம் வருகிறதே அது பரமாத்ம ஸ்வரூபத்தை நாம் உணருவதற்குப் பிரயோஜனமாகும்.''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...