Tuesday, June 7, 2022

GURUVAYURAPPAN

 குருவாயூரப்பன் -   நங்கநல்லூர்  J K  SIVAN 


ஆசார்யன்  அச்சுத  பிஷாரடியிடம்   கல்வி கற்க சென்ற மாணவர்  நாராயண நம்பூதிரி  அவரிடமிருந்து உடலை அசைக்க முடியாத  வாத ரோகத்தை பெற்றுக்கொண்டு வந்ததில் வீட்டில் எல்லோருக்கும் கடும்  கோபம்.   பிரபல வைத்தியர்களிடம் சென்றும்  நோயின் வலிமை கூடியதே அன்றி ஒரு துளியும் குறையவில்லை.  மருந்து, மாத்திரைகள், சூர்ணம்  பலனளிக்க வில்லை.  நாளுக்கு நாள் வலி கூடியது. கை, கால்களை துளிக் கூட அசைக்க முடியவில்லை.  

பட்டத்ரி சிந்தித்தார்.   ''நல்ல சிந்தனையோடுதானே  குருவிடமிருந்து இந்த வியாதியைப்  பெற்றுக் கொண் டேன்.  ஏன்  வைத்தியத்தால் குணமாகவில்லை?!   ஒருவேளை  குருவிடம் கர்வமாகப் பேசி விட்டேனோ?டோம். '' உங்கள் வியாதி  தீராததற்கு  உங்கள் ஆசாரம் தான் காரணம். ஆனால் எனக்கு அப்படி இல்லை. வைத்தியரிடம் சென்றால் தீர்ந்து விடும். ஒரு வாரத்தில் வந்து உங்களை நமஸ்கரிக்கின்றேன் என்று கூறினே னே. பகவானிடம் கூட கர்வமாகப் பேசலாம். ஆனால் குருவிடம் கர்வம்  கூடாது. மாபெரும் அபச்சாரம் அல்லவா செய்துவிட்டேன். என்ரோகம்அதனால் தான்  இன்னும் தீரவில்லை''. வாழ்வில்  மாதா பிதாவுக்கு அடுத்தபடி   குருவே   முக்கியம். குரு சொல் கேளாதவர்கள் அதிக கஷ்டப்படுவார்கள். தனது  குரு சுக்ராச்சாரியார் சொன்னதை மஹாபலி கேட்காததால் தானே  மூன்றடி மண் கொடுத்துவிட்டு  அதல பாதாளத்திற்குச் சென்றான்.. இனி நாம் என்ன செய்வது? இந்த நோயை எப்படிப் போக்குவது?   --  பட்டத்ரி யோசித்தார்.
 
சிலர்  கஷ்டம் வரும்போது ஜாதகம் என்ன சொல்கிறது என்று ஜோசியரிடம் போவார்கள். அந்த ஊரில்  எழுத்தச்சன் என்ற ஒரு பிரபல ஜோசியர் இருந்தார்.  அஷ்ட மங்கல ப்ரஸனம் என்று எட்டு விதமான மங்கலப் பொருட்களை வைத்துக் கொண்டு சோழி உருட்டி,  ஜோசியர் சொல்பவர்.  

பட்டத்திரி வீட்டு  வேலைக்காரருக்கு  பட்டத்ரி மேல்  ரொம்ப பாசம். உண்டு.  '' எஜமானர் இப்படி கஷ்டப்படுகிறாரே! அவருக்காக நாம்  எழுத்தச்சனிடம்  ஜாதகத்தைக் காட்டி  ஜோசியம்  கேட்டு வரலாம் பட்டத்ரி ஜாதகத்தோடு  சென்றான்.

எழுத்தச்சனிடம் சென்று வணங்கி  பட்டத்ரி பற்றி எல்லா விஷயமும் கூறினான்  ஜாதக பலன் கேட்டான். ஜோசியர் பட்டத்ரி  ஜாதகத்தை பார்த்து பிரமித்தார்.  சோழியைப் போட்டுப் அஷ்ட மங்கல ப்ரஸனம் பார்த்துவிட்டு  ''திருச்சூர்   பக்கத்தில் குருவாயூர்  என்று ஒரு முக்கிய கிருஷ்ணன் கோவில் இருக்கிறது.  ப்ரத்யக்ஷ தெய்வம். குருவும் வாயுவும் பிரதிஷ்டை பண்ணின கிருஷ்ணன்.   நாராயண பட்டத்ரி அங்கே போய்   புண்ணிய குளம்  நாராயண சரஸ் தீர்த்தத்தில்  ஸ்னானம் பண்ணி  புது வஸ்திரம் அணிந்து கொடிமரம்  தாண்டி உள்ளே   பகவானுக்கு வலது பக்கம் நமக்கு இடது பக்கம் உள்ள திண்ணை யில்  உட்கார்ந்து  மத்ஸ்யம் நாக்கில்  தொட்டுப் பாடணும் . உடனே  வியாதி குணமாகும்''  என்கிறார். 
வேலைக்காரன் அலறி அடித்துக் கொண்டு  பட்டத்ரியிடம் வந்தான். 

''என்னடா ஆச்சு உனக்கு?  ஜோசியர் என்ன சொன்னார்?''''

ஏய்,  அவ்ராக்கும்  நிங்கள்  வியாதி குணமாகும்.  பரிகாரம் பண்ணனும் னார்.  அவர் சொன்ன பரிகாரம் தான் பிடிக்கலை'''

'அப்படி என்ன பரிகாரம் சொன்னார்?''

''குருவாயூர்  புண்ய க்ஷேத்ரத்துக்குள்ளே  போய்   மீனை நாக்கில் வைத்துக் கொண்டு பாடணுமாம்''அதெப்படி முடியும்?   

ஒரு   சின்னக் குழந்தை அசுத்தம் பண்ணாலே , மூன்று மணி நேரத்திற்குக் கோயில் நடை  சாத்தி  புண்யா ஹவாசனம் பண்றவாள். அங்கே நீங்கள் வாயில் மீனை தொட்டுண்டு பாட விடுவாளா? நமக்கு தான் பிடிக்குமா?''  பேசாம  வாத ரோஹத்தோடேயே இருங்கோ நான் பாத்துக்கறேன்'' இந்த ஜோசியன் இப்படி கொனஷ்டையா சொல்வான்னு தெரிஞ்சா போயே  இருக்கமாட்டேன்''என்றான் பணியாள்.

கண்மூடி யோசித்த  பட்டத்ரிக்கு எழுத்தச்சன் சொன்ன அர்த்தம் விளங்கியது. 

''இன்னிக்கே  என்னை குருவாயூர்  அழைச்சுண்டு போ'' என்கிறார். 

''மாட்டேன்.  குருவாயூர் அசுத்தமாக  நான் காரணமாக . உங்களை போகவிடமாட்டேன்'

''டேய் , ஜோசியர்  சொன்னதை நீ தப்பர்த்தம்  பண்ணிண்டுட்டாய்''''நாக்குலே மத்ஸ்யம்  ''தொட்டு'' பாடு....ன்னா  மீன் என்கிற  ஜீவனை அல்ல. நாராயண னின் முதல் அவதாரமான  மத்ஸ்ய அவதாரத்தில் இருந்து ஆரம்பித்து  நாராயணனைப்  பாடு என்று அர்த்தம்.''  

பல்லக்கில்  பட்டத்ரியை  குருவாயூர் தூக்கிப் போனார் கள்.  தீர்த்தத்தில்  ஸ்னானம் செய்து, புது வஸ்திரம் அணிந்து கருடனை நமஸ்கரித்து த்வஜ ஸ்தம்பம் தாண்டி  கர்பகிரஹம் அருகே தூக்கிச் செல்லப் பட்டார். முதல் முறையாக  குருவாயூர் க்ஷேத்ரம்  இவ்வாறு  நாராயண பட்டத்ரி சென்றார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...