Saturday, June 11, 2022

 வரகூர்  -    நங்கநல்லூர்  J K  SIVAN    

 
''எனக்கு  வரகூர்  என்ற பெயர் தெரியும்.   ஏனோ இது வரை அங்கே போகவில்லை.  வரகூர்  வழியாக காரில் இரவு நேரத்தில் போனதுண்டு. அங்கே தங்கி சுவாமி தரிசனம் பண்ண நேரமோ  பாக்யமோ இன்னும் கிட்டவில்லை. என் வீட்டுக்கு எதிரே வசிக்கும்  சுப்ரமணிய ஐயர்  வரகூரார்.  வருஷா வருஷம்  உறியடிக்கு போகும்போது வாங்கோ என்பார்.   தங்கவும்  சாப்பாடும் நான் ஏற்பாடு பண்றேன், நாலு நாள் வந்து இருங்கோ.'''    
கேட்க  ஆசையாக இருந்தது.   கிருஷ்ணன்  இன்னும் அனுக்ரஹம் பண்ணவில்லையே.  மனதுக்குள்ளேயே  உறியடி உத்சவம் பார்த்து  மகிழ்கிறேன்.

இன்னொரு வரகூர் நண்பர்  வரகூரான் .. தட்டச்சு  வரகூரான் என்று  எண்ணற்ற மஹா பெரியவா சங்கதிகளை தினமும் நமக்கு  முகநூலில்  பகிர்கிறவர்.  கிழக்கு  தாம்பரத்தில் வசிப்பவர்.  அற்புதமான மனிதர். 

வரகூர் வெங்கடேசப் பெருமாள் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வைணவக்கோயிலாகும்.
தஞ்சாவூர் ஜில்லாவில் கண்டியூர் - திருக்காட்டுப்பள்ளி  நீண்ட சாலையில்  திருப்பூந்துருத்தி வரை சென்றால் அங்கிருந்து 7 கிமீ தொலைவில்  இடது பக்கம் அமைந்துள்ள  வாயில் பெருமாளிடம் கொண்டு சேர்க்கும்.     இந்த ஊருக்கு முன்பு இருந்த பெயர்  பூபதிராஜபுரம்.    நாராயண தீர்த்தர் என்கிற மஹானுக்கு  நாராயணன்  வெள்ளை நிற பண்றியாகி காட்சியளித்து வழிக்காட்டியதால்  வரகூர்  என்ற பெயர் நிலைத்தது.  

நாராயண தீர்த்தருக்கு தாங்கமுடியாத வயிற்று வலி.  எங்கெங்கோ சென்றும் குணமாகாமல் கடைசியில் நடுக்காவேரி வரும்போது பெருமாள் அசரீரியாக  இங்கு அனுப்ப, வரகூர் வந்து பெருமாள் தரிசனம் பெற்றபின்  வயிற்றுவலி நீங்கியது.

இங்கேயே  தங்கி  நாராயண தீர்த்தர்  பாடியது தான் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி.  அற்புதமான பாடல்கள் இசைக்கச்சேரிகளிலும் நாட்டிய நாடகங்களிலும்  பிரபலமானது.   இங்கே  உறியடி உத்சவம்   நடைபெற காரணம்   நாராயண தீர்த்தர். வரகூரில் மூலவர் பெயர்  லக்ஷ்மி  நாராயணன்.

நாராயண தீர்த்தரின்  அற்புதமான  கிருஷ்ண லீலா தரங்கிணி பாடல் ஒன்று இத்துடன் இணைத்திருக்கிறேன்.   தரங்கம் என்றால் அலை என்று அர்த்தம்.  பாலகிருஷ்ணனின்  லீலைகளை  பிருந்தாவனத்தில்  நடந்ததை மனக்கண்ணால் கண்டு  வரகூரில்  ஆனந்த அலைகளாக  இயற்றியிருக்கிறார் நாராயண தீர்த்தர்.  அதனால் இந்த பாடல்களுக்கு  தரங்கம் என்று பெயர்.  ஜெய தேவர் பாடியது அஷ்டபதி. துக்கரம்  நாமதேவர் போன்றவர்கள் பாடியது  அபங்கம் . 

 அற்புதமாக  ஒரு தரங்கம்  ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா பாடி இருப்பதை கேளுங்கள்   

https://youtu.be/R5rkJ-4FLgo

க்ரிஷ்ணம் கலய ஸகி ஸும்தரம் பால க்றுஷ்ணம் கலய ஸகி ஸுந்தரம் 
க்ரிஷ்ணம் கதவிஷய த்றுஷ்ணம் ஜகத்ப்ரப விஷ்ணும் ஸுராரிகண ஜிஷ்ணும் ஸதா பால (கிருஷ்ண )
ந்ருத்யம் தமிஹ முஹுரத்யம்தமபரிமித ப்றுத்யானுகூலம் அகில ஸத்யம் ஸதா பால  (கிருஷ்ண )

தீரம் பவஜலபாரம் ஸகலவேதஸாரம் ஸமஸ்தயோகிதாரம் ஸதா பால (க்ரிஷ்ணம்)
ஸ்ரீங்கார  ரஸபர ஸம்கீத ஸாஹித்ய கம்காலஹரிகேள ஸம்கம் ஸதா பால (கிருஷ்ணம் )
ராமேண ஜகதபிராமேண பலபத்ரராமேண ஸமவாப்த காமேன ஸஹ பால  (க்ரிஷ்ணம்)

தாமோதரம் அகில காமாகரம்கன ஶ்யாமாக்றுதிம் அஸுர பீமம் ஸதா பால(க்ரிஷ்ணம்)
ராதாருணாதர ஸுதாபம் ஸச்சிதானம்தரூபம் ஜகத்ரயபூபம் ஸதா பால (க்ரிஷ்ணம்)
அர்தம் ஶிதிலீக்றுதானர்தம் ஶ்ரீ னாராயண தீர்தம் பரமபுருஷார்தம் ஸதா பால (க்ரிஷ்ணம்)

காட்சி:  மண்ணில் விஷமம் பண்ணிக்கொண்டு விளையாடும் கிருஷ்ணனை யசோதை வீட்டுக்குள் வாடா என்று கெஞ்சுகிறாள்.  சொன்னால் கேட்கமாட்டே னென்கிறானே.  பாலகிருஷ்ணன் விளையாடும் அழகை தோழியிடம் சொல்கிறாள்:

அந்த அழகு கருப்பனைப் பாரடி.  மண்ணிலேயே குறியாக இருக்கிறான். மூன்றடி கேட்டு  மூவுலகை பெற்றவன் அல்லவே. பூபாரம் குறைக்க அசுரர்களை அழித்தவனல்லவா? பூமாதேவிக்கு வேண்டியவன் அல்லவா.  சத்யஸ்வரூபன் அல்லவா?  எல்லையற்ற அழகு, கம்பீரம் ஞானம் கருணை  உள்ளவன் அல்லவா? அவன் ஆடும் ஆட்டத்தில் மனதை பறிகொடுக்காதவர் யார்?  சேர்ந்து ஆடாதவர் எவர்?
சஞ்சலம், கவலை எனும் சமுத்திரத்தின் கரை அவன் அல்லவா? வேதங்களின் உட்பொருள் அல்லவா?
யோகிகளின் மனதில் உறைபவன் அல்லவா? அன்பின்  உருவம்,   அவன் குழலோசை கீதத்தின்  நாதம் எப்படி கங்கையின் அலைகளைப்போல  அழகாக  அடுக்கடுக்காக காதில் வெள்ளமாக பாய்கிறது. பலராமனுடன் அவன் ஆடி வரும் அழகு காந்த சக்தி கொண்டது.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...