Tuesday, February 8, 2022

MOOKA PANCHASATHI

 


மூக  பஞ்சசதி  -  நங்கநல்லூர்  J K  SIVAN 
ஆர்யா சதகம் - ஸ்லோகம்   91-100

स्मरमथनवरणलोला मन्मथहेलाविलासमणिशाला ।
कनकरुचिचौर्यशीला त्वमम्ब बाला कराब्जधृतमाला ॥91॥

91. Smara madhana varana lolaa Manmatha helaa, vilasa mani shaala,
Kanaka ruchi chourya sheela, Thwamamba balaa karabhja drutha mala.

ஸ்மரமதனவரணலோலா மன்மதஹேலாவிலாஸமணிஶாலா |
கனகருசிசௌர்யஶீலா த்வமம்ப பாலா கராப்ஜத்றுதமாலா ||91||

தனக்குப்  பிடித்த தன்னைக் கவர்ந்த  ராஜகுமாரன், ராஜா,  யாரென்று  தேடிக்கொண்டு ஸ்வயம்வர மண்டபத்தில் கையில் மாலையோடு  ராஜகுமாரி ஒவ்வொருவராக பார்த்துக்கொண்டே வருவாள்.  அப்படித்தான்  ஸ்வயம்வரம் அக்காலத்தில் நடப்பது வழக்கம்.  அம்பாள்  கையில் மாலையோடு  தனக்கு  பிடித்த  பொன்னார் மேனியன், பரமேஸ்வரனை கணவனாகக் கொள்ளும்  ஆர்வத்தில்  அவனுக்காக  காத்திருக்கும்  அழகிய  பெண்ணாக  வர்ணிக்கிறார்மூகர் .  

विमलपटी कमलकुटी पुस्तकरुद्राक्षशस्तहस्तपुटी ।
कामाक्षि पक्ष्मलाक्षी कलितविपञ्ची विभासि वैरिञ्ची ॥92॥

92. Vimala pati Kamala kuti pusthaka rudraksha Sastha hastha puttee,
Kamakshi pakshmalaakshi kalitha vipanchi Vibhasi Vairinchi.

விமலபடீ கமலகுடீ புஸ்தகருத்ராக்ஷஶஸ்தஹஸ்தபுடீ |
காமாக்ஷி பக்ஷ்மலாக்ஷீ கலிதவிபஞ்சீ விபாஸி வைரிஞ்சீ ||92||

அன்னை காமாக்ஷி இந்த ஸ்லோகத்தில் சாராதாம்பாளாக காட்சி தருகிறாள். வெண்ணிற ஆடை,  தாமரைப்புஷ்பங்களிடையே வாசம் செய்பவள், கரத்தில் புத்தகம்,  ருத்ராக்ஷ மாலைகள், வீணையைக் கையிலேந்தியவாறு,  அழகிய கண்களில் தயை நிரம்ப  முக்குணங்களையும் தாண்டியவளாக, சரஸ்வதி தேவி போல் அல்லவா  காண்கிறாள்?


कुङ्कुमरुचिपिङ्गमसृक्पङ्किलमुण्डालिमण्डितं मातः ।
श्रीकामाक्षि तदीयसङ्गमकलामन्दीभवत्कौतुकः
जयति तव रूपधेयं जपपटपुस्तकवराभयकराब्जम् ॥93॥

93. Kunkuma ruche pingam asruk pangila mundaali manditham maathaa,
Jayathi thava roopadheyam japa patas pusthaka varaa abhaya karabhjam.

குங்குமருசிபிங்கமஸ்றுக்பங்கிலமுண்டாலிமண்டிதம் மாதஃ |
ஶ்ரீகாமாக்ஷி ததீயஸங்கமகலாமன்தீபவத்கௌதுகஃ
ஜயதி தவ ரூபதேயம் ஜபபடபுஸ்தகவராபயகராப்ஜம் ||93||

சரஸ்வதியாக  சாந்தஸ்வரூபியாங்க இருந்த அம்பாளை வேறு அலங்காரத்தில் எவ்வளவு அழகா காட்டுகிறாள். இதில் அவள்  திரிபுரா அம்சமாகி விட்டாள்.  குங்குமத்தை விட சிவந்த  தேஹகாந்தி.  ரத்தம் சொட்டும்  வெட்டப்பட்ட  தலைகளை மாலையாக கொண்டவள். கரங்களில், ஜபமாலை, புஸ்தகம்,  ஒரு கரம்  அபய ஹஸ்தம், மற்றொன்று  வரத ஹஸ்தம் என்று  எல்லாம் வல்லவளாக அருள் பாலிக்கிறாள்.

कनकमणिकलितभूषां कालायसकलहशीलकान्तिकलाम् ।
कामाक्षि शीलये त्वां कपालशूलाभिरामकरकमलाम् ॥94॥

94. Kanakamani kalitha bhooshaam kaalaayasa kalaha seela kanthi kalaam,
Kamakshi seelaye thwaam kapala soolabhiraama kara kamalaam.

கனகமணிகலிதபூஷாம் காலாயஸகலஹஶீலகான்திகலாம் |
காமாக்ஷி ஶீலயே த்வாம் கபாலஶூலாபிராமகரகமலாம் ||94||

காமாக்ஷி இதோ ப்ரத்யங்கராவாகி விட்டாளே .  தங்கம் வைர, நவமணிமாலைகள்  அணிந்து, அவற்றின் ஒளி கண்ணைக் கூச,  இரும்பைக்கூட  தோற்கடிக்கும் கரிய நிறம் கொண்டவளாக,  கபாலம்,  திரிசூலம் ஏந்தியவளாக,  பராமசக்தியாக நிற்கும் தேவி, உன்னை நமஸ்கரிக்கிறேன் என்கிறார்.

लोहितिमपुञ्जमध्ये मोहितभुवने मुदा निरीक्षन्ते ।
वदनं तव कुवयुगलं काञ्चीसीमां च के‌உपि कामाक्षि ॥95॥

95. Lohihima puncha madhye mohitha bhuvane mudhaa nireekshanthe,
Vadanam thava kucha yugalamKanchi seemaam cha keapi Kamakshi.

லோஹிதிமபுஞ்ஜமத்யே மோஹிதபுவனே முதா னிரீக்ஷன்தே |
வதனம் தவ குவயுகலம் காஞ்சீஸீமாம் ச கே‌உபி காமாக்ஷி ||95||

மூகர்  மனதில்  அம்பாள் திடீரென்று காமகலா வாக  தோன்றிவிட்டதன் விளைவாக  அவளை வர்ணிக்க தொடங்கி விட்டார்.  எளிதில் புலப்படாத    துரீய ஸ்வரூபம்.   உருவம்.   அவளது முகம் மார்பகம், வயிறு,  அடிவயிறு    இவற்றை எல்லாம்  பிந்துக்களாக மனதில் கொண்டு அனாகத சக்ரத்தில் அவளைத் தேடி   நமஸ்கரிக்கிறேன்  என்கிறார். 

जलधिद्विगुणितहुतबहदिशादिनेश्वरकलाश्विनेयदलैः ।
नलिनैर्महेशि गच्छसि सर्वोत्तरकरकमलदलममलम् ॥96॥

96. Jaladhi dwigunitha hutha vaha dhisaa dhineswarakalaswineya dalai,
Nalinair mahesi kachasi sarvothara akula sahasra dala mamalam.

ஜலதித்விகுணிதஹுதபஹதிஶாதினேஶ்வரகலாஶ்வினேயதலைஃ |
னலினைர்மஹேஶி கச்சஸி ஸர்வோத்தரகரகமலதலமமலம் ||96||

மூலாதாரத்திலிருந்து மெதுவாக  குண்டலினி சக்தியாக,  சுழும்னா  நாடியில்  சக்ரம் சக்கரமாக  ஆங்காங்கே  ஆறு இடங்களில் வாசம் செய்து சிரசில் ஸஹஸ்ராதாரம்  வரை  செல்வதை வர்ணிக்கிறார்.  ஆறு  சக்ரங்களை    ஷட் சக்ர கமலம் என்று குறிப்பிடுவார்கள். அவற்றின் இதழ்களுக்கும் கணக்கு உண்டு.   மூலாதார கமலத்துக்கு நான்கு,  மணிபூரகத்துக்கு  ஆறு,  ஸ்வாதிஷ்டானத்துக்கு பத்து,  அனாஹதத்துக்கு  பன்னிரண்டு, விசுத்திக்கு பதினாறு, ஆக்ஞாவுக்கு ரெண்டு இதழ்கள்.  இவை எதை குறிக்கிறது?   ஜலதி  என்றால் சமுத்திரம். நான்கு  வித  சமுத்திரங்கள்,  மூன்று வித அக்னி,   பத்து திக்குகள், கீழே  மேலே  சேர்த்து,   பன்னிரு ஆதித்யர்கள்,  அஸ்வினி தேவர்கள் ரெண்டுபேர்.  தாயே  இப்படி  குண்டலினி சக்தியாக  உன்னை  உணர்ந்து நமஸ்கரிக்கிறேன்.

सत्कृतदेशिकचरणाः सबीजनिर्बीजयोगनिश्रेण्या ।
अपवर्गसौधवलभीमारोहन्त्यम्ब के‌உपि तव कृपया ॥97॥

97. Sath kurutha desika charanaa sabheeja nirbheeja yoga nisrenaya,
Apavarga soudha valabhim aarahathyamba kea pi thava krupaya.

ஸத்க்றுததேஶிகசரணாஃ ஸபீஜனிர்பீஜயோகனிஶ்ரேண்யா |
அபவர்கஸௌதவலபீமாரோஹன்த்யம்ப கே‌உபி தவ க்றுபயா ||97||

அம்பாள் உபாசகர்கள்  குருவை அணுகி, யோகாப்யாஸம்  செய்து,  அவள் அனுக்ரஹம்  பெற்று  மோக்ஷகதி  அடைகிறார்கள்.  மோக்ஷம்  என்பது பல மாடிகளையுடைய உயர்ந்த மாளிகை  என மனதில் காட்டுகிறார் மூகர்.  இதில் மேலே செல்ல மாடிப்படிகள் தான்  யோகங்கள் . படிகளில் முன்னேறும்   போது தான்  சமாதி நிலை கிட்டுகிறது.  கர்ம  ஸம்ஸ்கார விருத்திகளை கடந்தபின், ஸமாதிநிலை  அனுபவித்து தான் கைவல்யம் எனும் முக்தி பெறமுடியும். அதை அருளும் உன்னை நமஸ்கரிக்கிறேன்  என்கிறார் மூகர் .
 
अन्तरपि बहिरपि त्वं जन्तुततेरन्तकान्तकृदहन्ते ।
चिन्तितसन्तानवतां सन्ततमपि तन्तनीषि महिमानम् ॥98॥

98. Antharapi , bahirapi thwam janthu therantha kantha krudaham they,
Chinthitha santhanavathaam santhathamapi thantha neeshi mahimanam.

அன்தரபி பஹிரபி த்வம் ஜன்துததேரன்தகான்தக்றுதஹன்தே |
சின்திதஸன்தானவதாம் ஸன்ததமபி தன்தனீஷி மஹிமானம் ||98||

மார்க்கண்டேயனை  ரக்ஷிக்க,  காலனை  ஸம்ஹாரித்த  காலஸம்ஹார மூர்த்தி, பரமேஸ்வரனின் மனதில் குடிகொண்ட அம்பாளை அஹந்தா ரூபிணி, அகங்கார ரூபிணி என்ற நாமங்களால்  ஸ்தோத்ரம் செய்து நமஸ்கரிக்கிறேன். 

कलमञ्जुलवागनुमितगलपञ्जरगतशुकग्रहौत्कण्ठ्यात् ।
अम्ब रदनाम्बरं ते बिम्बफलं शम्बरारिणा न्यस्तम् ॥99॥

99. Kala manjula vaganumitha gala panchara gatha suka grouthkandyath,
Amba radhambaram they bimba phala, sambareena nyastham.

கலமஞ்ஜுலவாகனுமிதகலபஞ்ஜரகதஶுகக்ரஹௌத்கண்ட்யாத் |
அம்ப ரதனாம்பரம் தே பிம்பபலம் ஶம்பராரிணா ன்யஸ்தம் ||99||

காமாக்ஷி உன் இதழ்கள் கோவைப்பழம் போல் சிவந்தவை. உன் கழுத்துக்குள் ஒரு அழகிய கிளி இருந்துகொண்டு பேசுகிறதோ?  அதை வெளியே வரச்செய்து பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் தான்  வாயில் இதழ்களை கிளிக்கு பிடித்த கோவைப்பழமாகக்  காட்டி இருக்கிறதோ? 

जय जय जगदम्ब शिवे जय जय कामाक्षि जय जयाद्रिसुते ।
जय जय महेशदयिते जय जय चिद्गगनकौमुदीधारे ॥100॥

100. Jaya jaya jagadamba shive, jaya jaya Kamakshi, jaya jayadri suthe,
Jaya jaya mahesadayithe, jaya jaya chidga gana koumudhee dhare.

ஜய ஜய ஜகதம்ப ஶிவே ஜய ஜய காமாக்ஷி ஜய ஜயாத்ரிஸுதே |
ஜய ஜய மஹேஶதயிதே ஜய ஜய சித்ககனகௌமுதீதாரே ||100||

மூக பஞ்சசதி  ஐந்து பாகங்களாக பிரிக்கப்பட்டு முதல் நூறு ஸ்தோத்திரங்கள்  ஆர்யா சதகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  முதல் நூறு ஸ்லோகங்களில்   அம்பாளை விதவிதமாக  வர்ணித்து ரசித்து நமஸ்கரிக்கிறார்  மூக சங்கரர்.   அம்பாளை   ஜகன்மாதா,  பரமேஸ்வர பத்னி, பர்வத ராஜகுமாரி, என்று  பல  பெயர்களில்  ஸ்தோத்ரித்து  ஜயஜய  என்று  வெற்றிபெற  வேண்டி  இதை நிறைவு செய்கிறார் மூகர் .
 
आर्याशतकं भक्त्या पठतामार्याकटाक्षेण ।
निस्सरति वदनकमलाद्वाणी पीयूषधोरणी दिव्या ॥101॥

101. Arya satakam bhakthya padathaam, aarya kadakshena,
Nis sarathi vadana kamala dhwani peeyoosha dhorani divya.

ஆர்யாஶதகம் பக்த்யா படதாமார்யாகடாக்ஷேண |
னிஸ்ஸரதி வதனகமலாத்வாணீ பீயூஷதோரணீ திவ்யா ||101||

எது செய்தாலும்  அதற்கு ஒரு  பலன் உண்டு.  ஆகவே  பலஸ்ருதியாக,  இந்த நூறு  ஆர்யா சதக  ஸ்லோகங்களை வாசித்து பாராயணம் பண்ணுபவர்கள்  காமாக்ஷி அம்பாள் அனுக்ரஹத்தால்  முக காந்தி தேஜஸ் பெற்று அவர்கள் முகாரவிந்தத்திலிருந்து அம்ருத தாரை போல  வாக்குகள்  ப்ரவாஹிக்கும்  என்று நிறைவு செய்கிறார்.
இனி அடுத்த  சதகத்துக்குள் செல்வோம்.  
  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...