Saturday, February 5, 2022

MOOKA PANCHASATHI


 மூக பஞ்சசதி  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

ஆர்யா சதகம் -  ஸ்லோகங்கள்  81-90


वेतण्डकुम्भडम्बरवैतण्डिककुचभरार्तमध्याय ।
कुङ्कुमरुचे नमस्यां शंकरनयनामृताय रचयामः ॥ ८१॥

81. Vethanda Kumbha dambara , vaithandika kucha bharartha madhyaya,
Kumkumaruche namasyam Shankara nayanamruthaya rachayama.

வேதண்டகும்படம்பரவைதண்டிககுசபரார்தமத்யாய |
குங்குமருசே னமஸ்யாம் ஶம்கரனயனாம்றுதாய ரசயாமஃ ||81||

இணை கூற முடியாத  பேரழகி காமாக்ஷி.  குங்குமப்பூவில் வர்ணம் கொண்ட  யௌவன ஸ்திரீயாக்  காட்சி தருபவள்.  பரமேஸ்வரனின்  அன்புக்கும், காதலுக்கும், ப்ரேமைக்கும் பாத்ரமானவள். காமேஸ்வரன் கண்களுக்கு  அம்ருதமாக  விருந்தானவள், ஆனந்த வெள்ளமானவள். அப்படிப்பட்ட  அம்பாளை நமஸ்கரிக்கிறேன். 

अधिकाञ्चितमणिकाञ्चनकाञ्चीमधिकाञ्चि कांचिदद्राक्षम् ।
अवनतजनानुकम्पामनुकम्पाकूलमस्मदनुकूलाम् ॥ ८२॥

82. Adhikanchitha mani kanchana, Kaancheem, adhi Kanchi Kancha dhadraksham,
Avanatha jananukampham anukampakoolam, asmad anukoolaam.

அதிகாஞ்சிதமணிகாஞ்சனகாஞ்சீமதிகாஞ்சி காம்சிதத்ராக்ஷம் |
அவனதஜனானுகம்பாமனுகம்பாகூலமஸ்மதனுகூலாம் ||82||

இந்த அழகிய காஞ்சி நகரத்தில் நான் யாரை தரிசித்தேன்?  எண்ணற்ற  தங்க, மணிகளால்  இழைக்கப்பட்டு, கோர்க்கப்பட்ட சிறந்த வேலைப்பாடு மிக்க பொன்  ஒட்டியாணம் இடையில் அணிந்தவளும், தன்னை வணங்கும் பக்தர்களுக்கு தங்கு தடையின்றி தயை புரிபவளுமான   காமாக்ஷி தேவியை  கம்பா நதி தீரத்தில், ஆலயத்தில்கண்டு  நமஸ்கரித்தேன்.

परिचितकम्पातीरं पर्वतराजन्यसुकृतसन्नाहम् ।
परगुरुकृपया वीक्षे परमशिवोत्सङ्गमङ्गलाभरणम् ॥ ८३॥

83. Parichitha Kampa theeram Parvatha rajanya sukrutha sannaham,
Para guru krupaya Veekshe Parama shivoth sanga mangalabharanam.

பரிசிதகம்பாதீரம் பர்வதராஜன்யஸுக்றுதஸன்னாஹம் |
பரகுருக்றுபயா வீக்ஷே பரமஶிவோத்ஸங்கமங்கலாபரணம் ||83||

காமாக்ஷி தரிசனம் எவ்வாறு கண்டேன் என்று சொல்லட்டுமா?  ஆஹா,   சொல்ல முடியாத இயற்கை அழகைக் கொண்ட  கம்பா நதிக்கரையில், மலைகளில் உயர்ந்த ஹிமவான் புரிந்த புண்ய கர்மாக்களின்  பலனாக,  ஆவிர்பாவமாக  அமைந்தவளும்.  பரமேஸ்வரனுடைய மடிக்கு  ஒரு அற்புத  ஆபரணமாக அமர்ந்தவளுமான, ஸ்ரீ காமாக்ஷி தேவியை என் குருநாதருடைய  அநுக்ரஹத்தால்  தரிசிக்கும், நமஸ்கரிக்கும், பாக்யம் பெற்றேன். 

दग्धमदनस्य शम्भोः प्रथीयसीं ब्रह्मचर्यवैदग्धीम् ।
तव देवि तरुणिमश्रीचतुरिमपाको न चक्षमे मातः ॥ ८४॥

84. Dagdha madanasya Shambho, pradheeyassem Brahma charya Vaidhagdhgeem,
Thava devi tharunima sree chathurimapako na chakshathe matha.

தக்தமதனஸ்ய ஶம்போஃ ப்ரதீயஸீம் ப்ரஹ்மசர்யவைதக்தீம் |
தவ தேவி தருணிமஶ்ரீசதுரிமபாகோ ன சக்ஷமே மாதஃ ||84||

இந்த  பிரபஞ்சத்தில் மன்மதனின்  சக்தி எவ்வாறு ஒவ்வொரு ஜீவனின் புத்தியை,  மனதை, பேதலிக்கச்  செய்யும் என்பது தெரிந்தது.  அவனது புஷ்ப பாணங்களுக்கு இறையாகாதவர் எவருமில்லை.  அப்படிப்பட்டவனது சக்தி  பரமேஸ்வரனிடம் எடுபட வில்லை.  அவன் தனது வித்தையைக்  காட்டியதும் நொடியில்  அவனைத்  தனது  நெற்றிக்  கண்ணால்   சாம்பலாக  எரித்தவன்,  பரம வைராக்கியம், பிரம்மச்சர்யம் பூண்டவன் என்று  உலகமெலாம் புகழ் பெற்ற  பரமேஸ்வரனே  அம்பாள் காமாட்சியின் முன் சரணடைந்து விட்டான் எனும்போது அம்பா, சாம்பவி, உன் பெருமை எப்பேர்பட்டது?  என்று மூகர்  அம்பாளின் வனப்பை, யௌவனத்தை வர்ணிக்கிறார். 

मदजलतमालपत्रा वसनितपत्रा करादृतखानित्रा ।
विहरति पुलिन्दयोषा गुञ्जाभूषा फणीन्द्रकृतवेषा ॥ ८५॥

85. Madha jaladha mala pathraa vasanitha pathraa karaa drutha khanithraa,
Viharathi pulindayoshaa gujjaabhooshaa, phaneendrakrutha vesha.

மதஜலதமாலபத்ரா வஸனிதபத்ரா கராத்றுதகானித்ரா |
விஹரதி புலின்தயோஷா குஞ்ஜாபூஷா பணீன்த்ரக்றுதவேஷா ||85||


மஹா பாரதத்தில் வரும் ஒரு காட்சியை  இங்கு  அளிக்கிறார்  மூகர் .   அர்ஜுனன் சிவபெருமானை வேண்டி  பாசுபத அஸ்திரம் பெற  தவமிருக்கிறான். காட்டில் ஒரு வேடன் அங்கே தன் மனைவியோடு வருகிறான்.  வேடனுக்கும்   அர்ஜுனனுக்கும் சண்டை  மூள்கிறது.  அர்ஜுனன் வீரம் வெளிப்ப டுகிறது. கடைசியில் வேடன் தான் தவமிருக்கும்  பரமேஸ்வரனே , தன்னைச்  சோதிக்க வேடனாக வந்தவன், அம்பாள் வேட ஸ்திரீயாக வந்தவள் என்று அறிந்து வணங்கி   பாசுபதாஸ்திரம் பெறுகிறான் அர்ஜுனன்.   அம்பாள் வேட  ஸ்திரீயாக அப்போது காட்சியளித்ததை இந்த ஸ்லோகத்தில் ஞாபகமூட்டுகிறார்  மூகர் .  புளிந்தினீ  என்ற  நாமம் கொண்ட  வேட ஸ்திரீயாக,  நெற்றி நிறைய  சந்தனத்தோடு, இலைகளை  ஆடையாக  உடுத்து, குந்து மணி  போன்ற  மணி மாலைகள் கழுத்தை அலங்கரிக்க,  சர்ப்பங்களை  தேகத்தில் ஆபரணங்களாக கொண்ட  ஸ்ரீ  காமாக்ஷியை  நமஸ்கரிக்கிறேன்.

अङ्के शुकिनी गीते कौतुकिनी परिसरे च गायकिनी ।
जयसि सविधेऽम्ब भैरवमण्डलिनी श्रवसि शङ्खकुण्डलिनी ॥ ८६॥

86. Angke shukini geethe kouthukini, parisare cha gayakini,
Jayasi savithe Amba bhirava mandaleeni sravasi shankha kundaleeni.

அங்கே ஶுகினீ கீதே கௌதுகினீ பரிஸரே ச காயகினீ |
ஜயஸி ஸவிதே‌உம்ப பைரவமண்டலினீ ஶ்ரவஸி ஶங்ககுன்டலினீ ||86||

இந்த ஸ்லோகத்தில் ஸ்ரீ காமாக்ஷி தேவி,   லலிதாம்பிகையின் மந்திரி, மந்திரிணீயாக  காட்சி தருகிறாள். முன் கையில் கிளி, சங்கீதத்தில் ஆர்வம் உண்டென்பதால் தன்னைச் சுற்றி பாடுபவர்கள், அருகே  பைரவ மண்டலத்தை கொண்டவள்,   செவிகளில்  வெண்  சங்கினாலான  குண்டலங்களை அழகாக அணிந்தவள்,   சுக ஸ்யாமளை , சங்கீத ஸ்யாமளை , ராஜ  ஸ்யாமளை என்ற நாமங்கள் கொண்டவள். பனையோலையை சுருளாக  காதில்  செருகி அணிந்து கொள்ளும்  பழக்கம் பண்டைக்காலத்தில் உண்டு. அம்பாள்  இப்படி  அணிவதை   ''தாளி பலாச தாடங்க தாரிணி'' என நாமம் விளக்குகிறது.   நவாவரணத்தில்  பைரவ மண்டலம் ஐந்தாவது ஆவரணம். 

प्रणतजनतापवर्गा कृतबहुसर्गा ससिंहसंसर्गा ।
कामाक्षि मुदितभर्गा हतरिपुवर्गा त्वमेव सा दुर्गा ॥ ८७॥

87. Pranatha janathapa varga krutha bahu sarga sasimha samasarga,
Kamakshi mudhitha bharga hatha ripu vargaa thwameva saa Durga.

ப்ரணதஜனதாபவர்கா க்றுதபஹுஸர்கா ஸஸிம்ஹஸம்ஸர்கா |
காமாக்ஷி முதிதபர்கா ஹதரிபுவர்கா த்வமேவ ஸா துர்கா ||87||

மூகர்  இந்த ஸ்லோகத்தில் காமாக்ஷி தேவியை  துர்கா ரூபத்தில் அளிக்கிறார்.   பக்த  ஜனங்களுக்கு  மோக்ஷம் தருபவள்,  ஸிம்ஹ  வாகன சகிதமாக இருப்பவள்,  பரமேஸ்வரனை மகிழச்செய்பவள்,தீயவர்களை, எதிரிகளை  ஸம்ஹாரம்  செய்பவள்,  அம்பாளே உன்னை நமஸ்கரிக்கிறேன். 

श्रवणचलद्वेतण्डा समरोद्दण्डा धुतासुरशिखण्डा ।
देवि कलितान्त्रषण्डा धृतनरमुण्डा त्वमेव चामुण्डा ॥ ८८॥

88. Sravana chaladh vethanda samaroddhanda duthaa sira shikhandaa,
Devi kali thanthra shandaa drutha nara mundaa thwameva Chamunda.

ஶ்ரவணசலத்வேதண்டா ஸமரோத்தண்டா துதாஸுரஶிகண்டா |
தேவி கலிதான்த்ரஷண்டா த்றுதனரமுண்டா த்வமேவ சாமுண்டா ||88||

இந்த ஸ்லோகத்தில்  அம்பாள் சாமுண்டியாக  காட்சி தருகிறாள். 
அம்பா, நீ யானைகள்  போல் ஆடிடும் காதுகளை உடையவள் என்று சொல்லும்படியாக உன் காதில் அணிந்த ஆபரணங்கள்  காற்றில்  ஆடுகிறது.   யுத்தத்தில் எவரும் நெருங்க  முடியாத  ஆக்கிரோஷத்தை உடையவள்,  எதிரிகளின் குடல்களை பிடுங்கி வாயில் மெல்பவள். அவர்களின் சிரங்களை துண்டித்து மாலையாக அணிந்தவள், உன்னைத்தான் அம்மா,  பக்தர்கள்  சாமுண்டா என்கிறார்கள்.  

उर्वीधरेन्द्रकन्ये दर्वीभरितेन भक्तपूरेण ।
गुर्वीमकिंचनार्ति खर्वीकुरुषे त्वमेव कामाक्षि ॥ ८९॥

89. Urvee dharendra kanye dharvee bharithena bhaktha poorena,
Gurvee akinchanarthim kharvee kurushe , thwameva Kamakshi.


உர்வீதரேன்த்ரகன்யே தர்வீபரிதேன பக்தபூரேண |
குர்வீமகிம்சனார்தி கர்வீகுருஷே த்வமேவ காமாக்ஷி ||89||

இந்த  ஸ்லோகத்தில் நாம் காண்பது  ஸ்ரீ காமாக்ஷியை  அன்னபூரணியாக.  
அம்மா,  பரதேவதே,  நீ பர்வத ராஜன் ஹிமவான்  பெண்   பார்வதி.   உன்  இடது கையில்  அள்ள அள்ள  குறையாத  அன்னம் நிறைந்த  பாத்திரம்.  வலது கையில் ஒரு கரண்டி.  கண்ணில் கண்ட அடியார்க்கெல்லாம் வயிறு நிறைய  உணவளித்து காத்து  ரக்ஷிக்கும்  தாயே.  ஆதி சங்கரர்  நித்யானந்த கரி, வர அபய  கரி  என்றல்லவோ  பொருத்தமாக  பாடுகிறார்.  நீதான் அம்மா பிரபஞ்சத்தில் பசிப்பிணி நீக்கும் டாக்டர்.   உன்னை நமஸ்கரிக்கிறேன்.

ताडितरिपुपरिपीडनभयहरण निपुणहलमुसला ।
क्रोडपतिभीषणमुखी क्रीडसि जगति त्वमेव कामाक्षि ॥ ९०॥

90. Thaditha ripu paripeedana bhayaharane nipuna hala musalaa,
Kroda pathi bheeshana mukhi kreedasi jagathi thwameva Kamakshi.

தாடிதரிபுபரிபீடனபயஹரண னிபுணஹலமுஸலா |
க்ரோடபதிபீஷணமுகீ க்ரீடஸி ஜகதி த்வமேவ காமாக்ஷி ||90||


இந்த ஸ்லோகத்தில் ஸ்ரீ காமாக்ஷி தேவி  வாராஹியாக  வருகிறாள்.  வாராஹி யார் தெரியுமா? ஸ்ரீ லலிதாம்பிகையின்  சதுரங்க, நாலு வித, ஸைன்யத்தில்  தலைவி,  எஜமானி.   எதிரிகளை வதம்  செய்வதிலும்,  பக்தர்களை தாய் போல் காப்பதிலும் வல்லவள். 

வாராஹியின் சில பெயர்கள்:  
பஞ்சமி, சமயேஸ்வரி, சமய ஸங்கேதா ,  போத்ரிணீ , வார்த்தாளி ,  மஹா  சேனாப்யாக்ஞா, சக்ரேஸ்வரி, அரிக்னீ.  தன்னிடம்  யுத்தம் செய்து   தோற்ற  எதிரிகளின் படைகளை உடையவள். அவர்களின் பயன்களை போக்குபவள். கலப்பை,  உலக்கை  போன்ற ஆயுதங்களை தயங்கியவள்.
அப்படிப்பட்ட  காமாக்ஷி உன்னை நமஸ்கரிக்கிறேன்.  

என்ன ஒரு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி எனக்கு   இதை எழுதும்போது   நிகழ்ந்தது என்பதை மறந்து போவதற்கு முன்  சொல்லிவிடுகிறேன்.   மூக பஞ்சசதி 500    ஸ்லோகங்களை கொண்ட  ஐந்து பாகம்.. ஒவ்வொன்றும் நூறு ஸ்லோகம் கொண்ட சதகம். முதல் சதகம்.  ஆர்யா சதகம், இதோ மேலே 90  ஸ்லோகங்கள் எழுதியாகி விட்டது. இன்னும் ஒரு தசகம் தான் பாக்கி,  ஒவ்வொரு தசகமாக கொடுத்து வருகிறேன். 

நான் மூக பஞ்ச சதி, ஸ்ரீ லலிதா  ஸஹஸ்ரநாமம்  இரண்டையும் தொடராக தினமும்  எழுதிக்கொண்டு வருகிறேன்.  அது பற்றி சிந்தித்து எழுதும்போது,   ரெண்டு நாட்களுக்கு முன்பு  என்னை சந்திக்க வருவதாக சொன்ன  MDS எனும் நண்பர்  ( ஸ்ரீ மண்டகொளத்தூர், துரைஸ்வாமி  ஷங்கர்)   சமீபத்தில்  வெளியிடப்பட்ட  ஒரு புத்தகத்தை என்னிடம் அன்பளிப்பாக  ஒரு புத்தகம்  வழங்கினார்.  ஒன்று  பகவத்கீதை  ஆங்கில பாடல்கள். 100வயதான  டாக்டர்  ESSR கிருஷ்ணன் மலேசியாவில் இருப்பவர்  எழுதியது.  அதைப் பற்றி ஏற்கனவே  எழுதியுள்ளேன்.  இன்னொன்று   ''காமாக்ஷி திருப்புகழ்''  இந்த புத்தகத்தின் பின்னே ஒரு அற்புத சரித்திரம் உள்ளது. அடுத்த பதிவில் அதை எழுதுகிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...