Tuesday, February 22, 2022

SRI LALITHA SAHASRANAMAM

 ஸ்ரீ லலிதா  ஸஹஸ்ரநாமம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN

ஸ்லோகம்   183  நாமங்கள்   998-1000

श्रीशिवा शिव-शक्त्यैक्य-रूपिणी ललिताम्बिका ।
एवं श्रीललिता देव्या नाम्नां साहस्रकं जगुः ॥

Shri shiva shivashaktyaikya rupini lalitanbika
yvam shri lalita devya namnam sahasrakam jaguh – 183

ஸ்ரீசிவா சிவசக்த்யைக்ய- ரூபிணீ லலிதாம்பிகா
ஸ்ரீலலிதம்பிகாயை ஓம் நம இதி  183

ஸ்ரீ  லலிதா  ஸஹஸ்ரநாமம்   998 -1000  அர்த்தம்  

*998*  श्री शिवा   ஸ்ரீசிவா
சிவனின் சர்வ சக்தியும் அம்பாளிடமிருந்து தோன்றுவது.   சிவா என்றால் முக்தி என்று அர்த்தம். அம்பாளுக்கு சிவா, சிவை,  என்று பெயர்.   ஸ்ரீ என்பது லக்ஷ்மி பீஜ  அக்ஷரம்.  அம்பாள் லட்சுமியாக இருக்கிறவள்.  சிவா  என்றால்  புனிதம், பரிசுத்தம்.

*999*  शिव-शक्त्यैक्य-रूपिणी   சிவசக்த்யைக்ய ரூபிணி
மிகவும் அருமையான  அற்புத  நாமம் இது.   அம்பாள்  எல்லோராலும் போற்றப்படும்,  விரும்பப்படும், சிவனோடு சேர்ந்த  ஐக்கியமான சக்தி ஸ்வரூபம்.  பிரபஞ்ச காரணி. சிருஷ்டி, ஸ்திதி  சம்ஹார  கார்யங்களை  நிறைவேற்றுபவள்.   சக்தி இல்லாவிட்டாலும் சிவனுக்கே சக்தி இல்லை.

*1000* ललिताम्बिका   லலிதாம்பிகா
அம்பாள்  ஸ்ரீ மாதா. இதை தான் வாக் தேவிகள்  ஆயிரமாவது நாமமாக  உச்சரிக்கிறார்கள்.   சகுன நிகுன்னு பிரம்மமாக  காட்டப்படுகிறாள் அம்பாள்.  அருவமானவளை  உருவகப்படுத்தி சர்வ லாவண்யங்களையும்  உள்ளவளாக காட்டப்படுகிறாள்.
அகஸ்தியா, உனக்கு  அம்பாளின் ஆயிரம் நாமங்களையும் உபதேசித்தேன்.  அவளை  உபாசனை செய் என்கிறார்  குரு  ஹயக்ரீவர். மிகவும் ரஹஸ்யம் நிறைந்தது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் . சக்தி வாய்ந்த  பீஜாக்ஷர மந்திரம் நிறைந்தது.  ஒவ்வொரு நாமத்தில் ஒரு பீஜாக்ஷரம் மறைந்துள்ளது.

   इति श्रीब्रह्माण्डपुराणे उत्तरखण्डे श्रीहयग्रीवागस्त्यसंवादे
श्रीललिता सहस्रनाम स्तोत्र कथनं सम्पूर्णम् ॥

ஏவம் ஸ்ரீலலிதாதேவ்யா நாம்நாம் ஸாஹஸ்ரகம் ஜகு :

இதி ஸ்ரீப்ரஹ்மாண்ட புராணே உத்தரகாண்டே  ஸ்ரீஹயக்ரீவ அகஸ்த்ய ஸம்வாதே ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர கத்தனம்  சம்பூர்ணம்:

ஏதோ தப்பும் தவறுமாக  எனக்கு தெரியாமல் சில பிழைகள் இருந்தாலும்  மனது ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை  எழுதி நிறைவு செய்ய அம்பாள் அருள் புரிந்தாள் .

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் சொல்வது லலிதாம்பிகைக்கு மிகவும் பிடித்தமானது. வேதத்திலும், தந்திரத்திலும் இதற்கு நிகரானது இல்லை.   உணவுப்பொருள், நிலம், பசு தானம் செய்த புண்ணியம் கிடைக்கும் .ஸ்ரீ  லலிதா ஸஹஸ்ரநாமம் அன்றாடம் சொல்வது ஒரு தவம்.  தன்னம்பிக்கை கூடும்.
லலிதாம்பிகையே ஸ்ரீகாளிமாதா, துர்காதேவி, பராசக்தி, பகவதி, பிரபஞ்சத்தின் தாய்.
ஒவ்வொரு நாமமும் மிகவும் சக்தி வாய்ந்தது.  

இதை  விடாமல்  பாராயணம் செய்பவர்க்கு  வியாதியில்,  வறுமை இல்லை,  ஸர்வ ஐஸ்வர்யங்களும் பெருகும் . அகால  மரணமோ விபத்தோ நேராது. வம்ஸவ்ருத்தி நிகழும். முக்தி நிச்சயம்.
பூஜைக்கு வாசனை புஷ்பங்களை தான் உபயோகிக்க வேண்டும்.  சிவப்பு நிற புஷ்பங்கள் விசேஷம்.
ஒவ்வொரும் நாமம் உச்சரிக்கும் முன்பு  ஓம்  ஐம்  ஹ்ரீம் ஸ்ரீம்  என்று சொல்லி நாமாவிற்கு பிறகு நம:  என்று அர்ச்சனை செய்ய வேண்டும். 

வாத்யார் இருந்தால் சங்கல்பம் செய்து வைப்பார். அதன் பின்  அர்ச்சனை துவங்கலாம். 
விடாமல் வெள்ளிக்கிழமைகளில் ஸஹஸ்ரநாம பாராயணம் செயது ஸ்ரீ வித்யா உபாசகர் ஒருவருக்கு  போஜனம் செய்விக்கலாம்.

அம்பாளின்  ஸஹஸ்ரநாமம்  பாராயணம் செய்தால்  இக பர சௌக்கியம் நிச்சயம். 

அகஸ்தியா, நான் உனக்கு  ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  சொல்லி கொடுப்பதே  லலிதாம்பிகையின்  கட்டளையால் தான்.  நீ தினமும் இதை பாராயணம் பண்ணி அம்பாளின் அருளை பெறுவாயாக.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 3 பகுதிகளைக் கொண்டது:
முதலாவது பூர்வபாகம்:   நடுவே  ஸ்தோத்ரம், இதில் தான் 1000  நாமங்கள். கடைசியாக  உத்தர பாகம்.  தோற்றத்தை பற்றி சொல்வது  பூர்வபாகம்.  ஸஹஸ்ர நாம  பாராயணத்தால் கிடைக்கும்  பலன்  பற்றி  சொல்கிறது.  

குரு உபதேசத்தோடு,  குளித்துவிட்டு  நித்ய  ஸ்ரீசக்ர உபாஸனை  ஜெபத்தை  முறையாக  துவங்கவேண்டும்.  ஜபம் பஞ்சதசி, ஸோடஸி  மந்த்ரங்கள் பிரத்யேகமாக எவ்வளவு தடவை உச்சரிக்கவேண்டும் என்று கணக்கு உள்ளது.  அப்புறம்  லலிதா ஸஹஸ்ரநாமம்  பாரா யணம்.புஷ்பார்ச்சனை. குரு உபதேசம் இல்லாதவர்கள்  வெறுமே  ஸஹஸ்ரநாமம்  மட்டும்  சொல்லி புஷ்பார்ச்சிக்கலாம். புண்ய நதிகளில் ஸ்னானம் பண்ணிய பலன் உண்டு. வாராணாசி, காசியில்  நிறைய சிவலிங்கங்களை பிரதிஷ்டை பண்ணிய பலன். குருக்ஷேத்தரத்தில்   சூர்ய க்ரஹண புண்யகாலத்தில்    வேதம் நன்றாக கற்ற பிராமணர்களுக்கு  ஸ்வர்ண தானம் பண்ணிய பலன் உண்டு.  கங்கைக் கரையில் அஸ்வமேத யாகம் பண்ணிய பலன் கிடைக்கும்.  ஆயிரநாமங்களில் ஒரு நாமாவை உச்சரித்தாலும்  பாபம்  விலகும்.  
ஸ்ரீ வித்யா உபாசனை தீக்ஷை பெற்றவர்கள் அதை மட்டும்  சொன்னாலே போதும். வேறு பிராயச்சித்த மந்திரம், நாமம் எதுவும் தேவையில்லை.

அம்பாள்  எந்த பக்தன்  தனது ஆயிர நாமங்களை  உச்சரிக்கிறானோ அவனுடைய   அபிலாஷை களை பூர்த்தி செய்பவள். தினமும் அவள் ஆயிர நாமங்களை உச்சரிப்பவனை அவள் கைவிடுவதில்லை.  தினசரி பாராயணம் பண்ணமுடியாவிட்டால் குறிப்பிட்ட நாட்களில்  விசேஷ காலங்களில் பாராயணம் பண்ணலாம்.   சங்கராந்தி,  விஷு, பௌர்ணமி,  வெள்ளிக் கிழமை கள், போன்றவை விசேஷ நாட்கள். குடும்பத்தில் ஒவ்வொருவரின் ஜென்ம நக்ஷத்ரம் அன்று  அம்பாளின் ஆயிர நாமங்களை  பாராயணம் செய்யலாம்.

மிகவும் உஷ்ணம்  உடலில் தகிக்கும் ஜுரம் இருந்தாலும் நெற்றியில் கைவைத்து அம்பாள் நாமங் களை சொன்னால் அடுத்த வினாடி  ஜுரம் விலகும் என்று பலர் சொல்லி கேட்டிருக்கிறேன்.ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  ஸர்வ  வியாதி நிவாரணி. பாராயணம் பண்ணி விபூதி இட்டால் போதும். வேறு மருந்தே இல்லை.  காற்று கருப்பு,  நவகிரஹ தோஷங்கள் இருந்து அவஸ்தைப்பட்டால்,  சுத்தமாக ஒரு பாத்திரத்தில் ஜலம்  வைத்து  எதிரே அமர்ந்து லலிதாவின் ஆயிர நாமங்களை உச்சரித்து அந்த ஜலத்தை  தொட்டு ப்ரோக்ஷணம் செய்தால்  துன்பம் உடனே  மறையும்.
அம்பாளுக்கு  ஸஹஸ்ரநாமமும் சொல்லி வெண்ணை நைவேத்யம் அர்ப்பணித்து அதை பிரசாதமாக கொடுத்தால் வம்சவ்ருத்தி நேரும்.

அம்பாளின் சஹஸ்ரநாமங்களை உச்சரிப்பவன் எதிரிகளை  ஸரபேஸ்வரர் சென்று சம்ஹரிப்பார் என்று ஒரு ஐதீகம். ப்ரத்யங்கிரா தேவி  தீய எண்ணங்களை, தீமைகளை, தீய  செயல்களை பக்தனுக்கு  செய்பவர்களை  அழிப்பாள் .

அம்பாள்  பக்தனை கோபித்து விழிப்பவனை   மார்த்தாண்ட பைரவர் குருடாக்கி விடுவார்.  
அம்பாள் பக்தனின் சொத்தை திருடியவரை  க்ஷேத்ரபாலர்  கொன்றுவிடுவார்.
அம்பாள் பக்தனை கடுமையாக விமர்சிப்பவரை, கடும் வார்த்தைகளால் பேசுபவரை  சியாமளா தேவி யின் தளபதி நகுளீஸ்வரி  ஊமையாக்குகிறாள்.  அம்பாளின்  சேனைதலைவி தண்டினி தேவி    எதிரிகளை தகர்த்து  க்ஷேமத்தை அருள்வாள். 

ஸ்ரீ லலிதாம்பாள் நாமம் உச்சரிப்பவர்கள்  இல்லத்தில் ஸ்ரீ லட்சுமி தேவி சாஸ்வதமாக இருப்பாள்.
ஸரஸ்வதி  தேவி கடாக்ஷமும் நிறைந்திருக்கும்.  

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தை  செவிமடுத்தால் கூட போதும்.  தீய சக்திகள் நீங்கும். 
ஸ்ரீ லலிதாவின் நாமங்களை  உச்சரித்து  விளக்கிச் சொன்னவர்களுக்கு  தான தர்மங்கள் செய்தால் சகல பாபங்களும் தொலையும்.

இது கிட்டத்தட்ட  350 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வர  வாய்ப்பிருக்கிறது. புத்தகங்களுக்கு விலை கிடையாது.  அதை அச்சேற்ற புத்தகமாக்க  யாராவது நன்கொடையாளர் முன் வந்தால் அவருக்கு நன்றி அறிவித்து  ஆயிரம் பிரதிகள் அச்சடித்து எல்லோருக்கும் அளிக்கலாம்.  அவர்கள்  அளிக்கும் நன்கொடையை வைத்து  மீண்டும் பிரதிகள் அச்சடிக்கலாம்.  


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...