Wednesday, February 2, 2022

sri lalitha sahasranamam

 மூக  பஞ்சசதி  -  நங்கநல்லூர்  J K  SIVAN

ஆர்யா சதகம்  -   ஸ்லோகங்கள்  71-80


 क्ष्योऽस्मि कामपीठीलासिकया घनकृपाम्बुराशिकया ।
श्रतियुवतिकुन्तलीमणिमालिकया तुहिनशैलबालिकया ॥ ७१॥

71. Lakshyosmi kama peeti lasikaya gana krupambu rasikayaa,
Sruthi yuvathi kunthalee mani malikaya thuhina saila balikaya.

லக்ஷ்யோ‌ஸ்மி காமபீடீலாஸிகயா கனக்றுபாம்புராஶிகயா |
ஶ்ருதியுவதிகுன்தலீமணிமாலிகயா துஹினஶைலபாலிகயா ||71||

லாசிகா என்றால் நர்த்தகி.  காமாக்ஷி  காமபீடத்தில் ஆனந்தமாக  நர்த்தனமாடுபவள்.  சகல வேதங்களுக்கும்  ஆதார  பூர்வமான  விளக்கம் அவளே. வியாக்யானமும் அவளே.  கருணா சமுத்ரம் அவள். வேதங்களை எல்லாம் யுவதிகளாக  கற்பனை செய்துகொண்டு   அந்த  ஸ்த்ரீகள் அலை  அலையான அழகிய கூந்தலில்  அணிந்துள்ள   நவமணிகளை மாலையாக தொடுத்தால், அது தான் அம்பாள்.  ஸ்த்ரீகளாகச்  சொன்ன அனைத்து வேதங்களும்  அம்பாளின் திருப்பாதத்தில் விழுந்து  நமஸ்கரிக்கும்போது,  அம்பாளின் திருவடிகளில் அணிந்துள்ள சிவப்பு செம்பஞ்சு குழம்பு அந்த ஸ்த்ரீகள் சிரசில் நெற்றி  நடுவே, வகிட்டில்  பட்டு அது  ''சீமந்த சிந்தூர'' மாக  காட்சி அளிக்கிறது. அப்படிப்பட்ட  அம்பாளின் பக்தனாக  அவள் அருள் வேண்டி நான் அவளை நமஸ்கரிக்கிறேன். 

लीये पुरहरजाये माये तव तरुणपल्लवच्छाये ।
चरणे चन्द्राभरणे काञ्चीशरणे नतार्तिसंहरणे ॥ ७२॥

72. Leeye pura hara jaaye maaye thava tharuna pallava cchaye,
Charane chandrabharane Kanchi sarane natharthi samharane.

லீயே புரஹரஜாயே மாயே தவ தருணபல்லவச்சாயே |
சரணே சன்த்ராபரணே காஞ்சீஶரணே னதார்திஸம்ஹரணே ||72||

திரிபுரமெரித்த த்ரி நேத்ரன், சிவனின் பத்னி, பிரபஞ்சத்தை இயக்கும்  மஹா மாயை,  சிவந்த இளந்தளிர், மலர்க்கொடி, பிறை சூடி,  காஞ்சி காமபீட வாஸினி, அம்பா, உன்னை வணங்குபவரகளின்  துயர் தீர்ப்பவளே, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

मूर्तिमति मुक्तिबीजे मूर्ध्नि स्तबकितचकोरसाम्राज्ये ।
मोदितकम्पाकूले मुहुर्मुहुर्मनसि मुमुदिषाऽस्माकम् ॥ ७३॥

73. Moorthi mathi mukthi bheeja moordhni sthaba kitha chakora samrajye,
Modhitha Kampa koole muhurmuhu manasi mumudhishaa asmakam.

மூர்த்திமதி முக்திபீஜே மூர்த்னி ஸ்தபகிதசகோரஸாம்ராஜ்யே |
மோதிதகம்பாகூலே முஹுர்முஹுர்மனஸி முமுதிஷா‌உஸ்மாகம் ||73||

புராணங்களில், இதி ஹாசத்தில் ,  வரும் மூன்று பக்ஷிகள் ஞாபகமிருக்கிறதா?  ஹம்ஸம் , (இது வாத்து இல்லை ) சாதக,  சகோர பக்ஷிகள் .  இவை மூன்றுமே  ஆகாசத்தில் மட்டுமே  வாசம் புரிபவை. பூமியில்  இறங்காதவை.  மழைநீரை, பனித்துளி,  நிலவின் ஒளிக்கிரணங்கள்  மட்டுமே  சாப்பிட்டு  உயிர்  வாழ்ந்த  வேதகால பறவைகள்.  சந்திரன்  சகோர பறவைகளின்  சாம்ராஜ்யம் என்கிறது  இந்த ஸ்லோகம்.   இந்த பறவைகளைப்  பற்றி பூமியில் நம்மால் பார்க்க முடியாதவை. கற்பனை கூட  செய்ய முடியாதவை.   சகோர பக்ஷியின் ஆகாரமான  நிலவொளியை பிரகாசமாக  பிறை  சூடியாக கொண்டவள் அம்பாள் என்று சொல்கிறது இந்த ஸ்லோகம்.  

वेदमयीं नादमयीं बिन्दुमयीं परपदोद्यदिन्दुमयीम् ।
मन्त्रमयीं तन्त्रमयीं प्रकृतिमयीं नौमि विश्वविकृतिमयीम् ॥ ७४॥

74. Veda mayim, Nada mayim, Bindu mayim para padhodhya dhindhu mayim,
Manthra mayim, thanthra mayim, prakruthi mayim , Naumi viswa vikruthi mayim,

வேதமயீம் னாதமயீம் பின்துமயீம் பரபதோத்யதின்துமயீம் |
மன்த்ரமயீம் தன்த்ரமயீம் ப்ரக்றுதிமயீம் னௌமி விஶ்வவிக்றுதிமயீம் ||74||

அம்பாளை  வேதமயமாகவும்,  நாத மயமாகவும், மோக்ஷ காரணியாகவும், மந்த்ர, தந்த்ர,ப்ரக்ருதி ரூபமாகவும்,  எல்லாமே அவளாகவும்  காணும் யாவையும் காமாக்ஷியே  என்றும் தோன்றும் அவளை நமஸ்கரிக்கிறேன்.

पुरमथनपुण्यकोटी पुञ्जितकविलोकसूक्तिरसधाटी ।
मनसि मम कामकोटी विहरतु करुणाविपाकपरिपाटी ॥ ७५॥

75. Pura madhana punya koti, punjitha kavi loka sookthi rasa dhati.
Manasi mama Kamakoti, viharathu karuna vipaka paripati.

புரமதனபுண்யகோடீ புஞ்ஜிதகவிலோகஸூக்திரஸதாடீ |
மனஸி மம காமகோடீ விஹரது கருணாவிபாகபரிபாடீ ||75||

முப்புரமெரித்த முக்கண்ணனின்  புண்யங்களின்  எல்லை,  விளிம்பு,  அம்பாள்.   பண்டிதர்கள், கவிஞர்களின்  வாக் சாதுர்யத்தின்  சாறாக, ரசமாக இருப்பவள், கருணையின் வடிவமாக  இருப்பவள்,  காமகோடி பீடத்தில் அலங்கரித்து என் மனதை ஆட்கொள்ளும் அம்பாளை  நமஸ் கரிக்கிறேன். 

कुटिलं चटुलं पृथुलं मृदुलं कचनयनजघनचरणेषु ।
अवलोकितमवलम्बितमधिकम्पातटममेयमस्माभिः ॥ ७६॥

76. Kutilam, chatulam, pradhulam kacha nayana jagana charaneshu,
Avalokitham avalambitham adhika Kampa thata mameya masmabhi.

குடிலம் சடுலம் ப்றுதுலம் ம்றுதுலம் கசனயனஜகனசரணேஷு |
அவலோகிதமவலம்பிதமதிகம்பாதடமமேயமஸ்மாபிஃ ||76||

செதுக்கிய   பொற் சிலையாக,   சாமுத்ரிகா  லக்ஷணங்கள் சகலமும் பொருந்திய  பதுமையாக  வளைந்து நெளிந்து ,மயிலென அசைந்து  ஆர்ப்பரித்து,  கம்பா நதி தீரத்தில் காணப்படும்  காமாக்ஷி தேவி தரிசனம் பெற அவள்  மிருதுவான  பாசமிக்க திருவடிகளில் சரணமடைகிறேன். 

प्रत्यङ्मुख्या दृष्टया प्रसाददीपाङ्कुरेण कामाक्ष्याः ।
पश्यामि निस्तुलमहो पचेलिमं कमपि परशिवोल्लासम् ॥ ७७॥

77. Prathyang mukhya drushtya, prasada deepangurena Kamakshya,
Pasyami nisthulamaho pachelim kimapi para shivollasam.

ப்ரத்யங்முக்யா த்றுஷ்டயா ப்ரஸாததீபாங்குரேண காமாக்ஷ்யாஃ |
பஶ்யாமி னிஸ்துலமஹோ பசேலிமம் கமபி பரஶிவோல்லாஸம் ||77||

பரமேஸ்வரன்  அம்பிகையின்  அனுக்ரஹத்தால், அவளுடைய  அந்தர்முகமான பார்வையால் ஈடிணையற்ற   புத்துணர்ச்சி,  உத்ஸாஹம், உல்லாசமான  மகிழ்ச்சி அனைத்தும் பெறுகிறார் என்கிறார் மூகர் .  ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில்   அம்பாளை  ''சிவஞான ப்ரதாயினி''  என்ற  நாமம் அலங்கரிக்கிறது.  அம்பிகையின்  கடாக்ஷத்தால்  அனுக்ரஹத்தால்  உபாஸிக்கும்  பக்தன் ஸர்வ ஞானமும் பெறுவான். 

विद्ये विधातृविषये कात्यायनि कालि कामकोटिकले ।
भारति भैरवि भद्रे शाकिनि शाम्भवि शिवे स्तुवे भवतीम् ॥ ७८॥

78. Vidhye vidhathru vishaye kathyayini Kali Kamakoti kale,
Bharathi Bhairavi Bhadre sakini shambhavi shive sthuthe bhavathim

வித்யே விதாத்றுவிஷயே காத்யாயனி காலி காமகோடிகலே |
பாரதி பைரவி பத்ரே ஶாகினி ஶாம்பவி ஶிவே ஸ்துவே பவதீம் ||78||
 
ப்ரம்மாவின்  நாவில்  உறைந்து பிரம்மாவை மகிழ்விக்கும்  ஸரஸ்வதி தேவி அம்சமும்  நீயே  அம்பா.  தேவர்களுக்கு  உதவ, காத்யாயன  மகரிஷி மகளாக  உருவெடுத்து காத்யாயனி என பெயர் கொண்டவளே.  கரிய நிறம் கொண்ட  கோபமான  காளியும்  நீயே.    கலாமாலா , கலாநாதா, காலாத்மி
கா,  கலாவதி  என்று  ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில்  பெயர் கொண்டவளே,   வித்யா, விதாத்ருவிஷயா,  பாரதி  என்பவை ஸரஸ்வதியாக  நீ அழைக்கப்படும் பெயர்கள் அல்லவா?   சிவனின் மனைவியாக  பைரவி, மங்களரூபிணி, பத்ரா என்றும் பெயர் கொண்டவளே, சாம்பவி, சிவை,  யோகினி,  சாகம்பரி என்றெல்லாம் புகழப்படுவளே , உன்னை நமஸ்கரிக்கிறேன். 

मालिनि महेशचालिनि काञ्चीखेलिनि विपक्षकालिनि ते ।
शूलिनि विद्रुमशालिनि सुरजनपालिनि कपालिनि नमोऽस्तु ॥ ७९॥

  79. Malini, Mahesa chalini, Kanchi Khelini, Vipaksha kalini they,
Soolini Vidhruma salini sura jana palini Kapalini Namosthu

மாலினி மஹேஶசாலினி காஞ்சீகேலினி விபக்ஷகாலினி தே |
ஶூலினி வித்ருமஶாலினி ஸுரஜனபாலினி கபாலினி னமோ‌உஸ்து ||79||

52   அக்ஷர ரூபங்களாக  மாலை தரித்த  மாலினி,  மஹேஸ்வரனின் பத்தினியாக,  மஹேச சாரிணீ,  சூலம் கபாலம் ஏந்தி  சூலினி, கபாலினி,   காஞ்சி நிவாஸினி, காமாக்ஷி,  காமேஸ்வரி, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

देशिक इति किं शंके तत्तादृक्तव नु तरुणिमोन्मेषः ।
कामाक्षि शूलपाणेः कामागमसमयदीक्षायाम् ॥ ८०॥

80. Desika ithi kim shankhe thath thadrukthwa nu tharunee monmesha,
Kamakshi, soola pane, kamagama thanthra, yajna deekshayaam.

தேஶிக இதி கிம் ஶம்கே தத்தாத்றுக்தவ னு தருணிமோன்மேஷஃ |
காமாக்ஷி ஶூலபாணேஃ காமாகமஸமயதீக்ஷாயாம் ||80||

அம்பாள்  சந்தேகத்திற்கு துளியும் இடமில்லாமல்  சர்வ லோக  குரு,   யௌவன ஆசார்ய ஸ்வரூபிணி.  த்ரிசூலநாதன்  ஸாக்ஷாத்  பரமேஸ்வரனுக்கு  ஞானோபதேசம் செய்பவள்.  மன்மதனின் சக்தியையும் , அவனது  பஞ்சபாண அஸ்திரங்கள், தனுசு, எல்லாம்  பெற்று அவனைப்  போலவே  காந்தசக்தி கொண்டு  பிரபஞ்சத்தை கவரும்  காமேஸ்வரி, உன்னை நமஸ்கரிக்கிறேன்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...