Monday, September 25, 2017

ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்ரம் 4




|| श्री कनकधारास्तोत्रम् ॥
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்ரம் 4 J.K. SIVAN


गीर्देवतेति गरुडध्वजसुन्दरीति
शाकम्भरीति शशिशेखरवल्लभेति ।
सृष्टिस्थितिप्रलयकेलिषु संस्थितायै
तस्यै नमस्त्रिभुवनैकगुरोस्तरुण्यै ॥ १०॥

Gheerdhevathethi garuda dwaja sundarithi,
Sakambhareethi sasi shekara vallebhethi,
Srishti sthithi pralaya kelishu samsthitha yai,
Thasyai namas thribhvanai ka guros tharunyai.

கீர்தேவதேதி கருடத்வஜ ஸுந்தரீதி
ஸாகம்பரீதி ஸஸிஸேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதி ப்ரளயகேளிஷு ஸம்ஸ்திதா யா
தஸ்யை நமஸ்த்ரிபுவநைக குரோஸ்தருண்யை
அம்மா உன்னை நினைத்தால் எவ்வளவு பெருமையாக இருக்கிறது தெரியுமா எனக்கு? நீ யார்? இந்த மூவுலகுக்கும் அதிபதியான ஸ்ரீ நாராயணனின் தேவி. அவன் நெஞ்சில் குடிகொண்டவள். பாற்கடலில் உதித்த திருமணி, அலைமகள் நீ. நீயும் ஒருவளாகவா காட்சி தருபவள்? நீயே கலைமகள் சரஸ்வதியாகவும், நீயே மலைமகள் பாண்டிய ராஜன் தனையை யாகவும், சாகம்பரியாகவும் இருக்கிறாய். அலைமகளே. சிருஷ்டி, ஸ்திதி சம்ஹார ரூபிணி ரூபிணி. மஹாலக்ஷ்மி தாயே. என் மீது உன் கடைக்கண் பார்வை சற்றே சரியட்டும்.

श्रुत्यै नमोऽस्तु शुभकर्मफलप्रसूत्यै
रत्यै नमोऽस्तु रमणीयगुणार्णवायै ।
शक्त्यै नमोऽस्तु शतपत्रनिकेतनायै
पुष्ट्यै नमोऽस्तु पुरुषोत्तमवल्लभायै ॥ ११॥

Sruthyai namosthu shubha karma phala prasoothyai,
Rathyai namosthu ramaneeya gunarnavayai,
Shakthyai namosthu satha pathra nikethanayai,
Pushtayi namosthu purushotthama vallabhayai.

ஸ்ருத்யை நமோஸ்து ஸுபகர்மபலப்ரஸுத்யை
ரத்யை நமோஸ்து ரமணீய குணார்ணவாயை
சக்த்யை நமோஸ்து சதபத்ரநிகேதநாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை

சர்வ வேதஸார மூர்த்தி யாக ஒருவரை காண வேண்டுமானால் வேறெங்கும் தேட வேண்டாம். அம்மா மஹாலக்ஷ்மி அது நீயே தான். நல்ல கர்மங்களின் பலன் நீ தானே அம்மா. அழகான பெண்ணை ரதி என்பார்கள். அந்த ரதிகள் ஆயிரமாயிரம் ஒன்று சேர்ந்தாலும் உன் அழகுக்கு நிகராவார்களா? நீ பாற்கடல் கடைந்தெடுத்த பாவை மட்டுமா? உன்னத சற் குணங்களின் ஒட்டு மொத்த உருவமல்லவா?. நீ அமரும் பீடம் சாதாரணமா. நூறு இதழ் கொண்ட செந்தாமரை மலரல்லவா. மென்மையான பூமகளாக இருந்தாலும் இணையில்லாத சக்தி தேவி அல்லவா நீ. மஹாலக்ஷ்மி தாயே, புருஷோத்தமனின் உள்ளங்கவர் தேவி. என் நமஸ்காரங்களை ஏற்றுக்கொள் தாயே. எம்மை ரக்ஷி.

नमोऽस्तु नालीकनिभाननायै
नमोऽस्तु दुग्धोदधिजन्मभूम्यै ।
नमोऽस्तु सोमामृतसोदरायै
नमोऽस्तु नारायणवल्लभायै ॥ १२॥

Namosthu naleekha nibhananai,
Namosthu dhugdhogdhadhi janma bhoomayai,
Namosthu somamrutha sodharayai,
Namosthu narayana vallabhayai.

நமோஸ்து நாளீகநிபாநநாயை
நமோஸ்து துக்தோததி ஜந்ம பூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை

அம்மா எனக்கு உன்னை என்ன சொல்லி போற்றுவதென்றே தெரியவில்லை? இதைச் சொல்வது. எப்படி சொல்வது. எத்தனையை தான் என்னால் சொல்ல முடியும்? நாராயணின் நெஞ்சினில் வாழ் நாராயணி. மலர்ந்த செந் தாமரை மலர்களை பார்க்கும்போது உன் முகம் தான் அங்கே எனக்கு தெரிகிறதே தாயே. ஒவ்வொரு செந்தாமரையை பார்க்கும்போதும் விழுந்து வணங்குகிறேன். மேலே நகர மனம் இடம் கொடுக்கவில்லையே. பாற்கடலில் உதித்த பாக்கிய லட்சுமி தாயே. நீ உதித்ததால் தான் பாற்கடலில் உதித்த சந்திரனும் பூரண ஒளி பெற்றானோ? நீ உதித்ததால் தான் அமிர்தமும் இனித்ததோ, அமரத்வம் தந்ததோ? என் தெய்வமே உன்னை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறேன். காத்தருள்வாய் தாயே.

नमोऽस्तु हेमाम्बुजपीठिकायै
नमोऽस्तु भूमण्डलनायिकायै ।
नमोऽस्तु देवादिदयापरायै
नमोऽस्तु शार्ङ्गायुधवल्लभायै ॥ १३॥

Namosthu hemambhuja peetikayai,
Namosthu bhoo mandala nayikayai,
Namosthu devathi dhaya prayai,
Namosthu Sarngayudha vallabhayai.

நமோஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை
நமோஸ்து பூமண்டலநாயிகாயை
நமோஸ்து தேவாதிதயாபராயை
நமோஸ்து ஸார்ங்காயுதவல்லபாயை

தங்கத்தாரகையா, தங்கத்தாமரையா நீ? என்னவென்று சொல்லி அழைப்பேன். பேசாமல் காலில் விழுந்துவிடுகிறேன். அவ்வளவுதான் முடியும். பூமாதேவி அல்லவா, கீழே விழுந்த என்னை தாங்கிவிடுவாயே . தேவாதி தேவர்கள் மீது தயை கூர்ந்து துயர் தீர்க்கும் வல்லபை அல்லவா நீ ? சாரங்க ஆயுதம் தாங்கிய சார்ங்கபாணியின் தேவியே, சரணம் சரணம் சரணம் தாயே. ,

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...