Monday, September 11, 2017

கீத கோவிந்தம் - 2




கீத கோவிந்தம் - 2 J.K. SIVAN

छलयसि विक्रमणे बलिम् अद्भुत वामन पद नख नीर जनित जन पावन केशव धृत वामन रूप जय जगदीश हरे

chalayasi vikramaṇe balimadbhuta-vāmana
pada-nakha-nīra-janita-jana-pāvana |
keśava dhṛta-vāmana-rupa
jaya jagadīśa hare ||4||

உன்னால் பெரிய நர சிம்மமாக மட்டுமே அவதாரம் செய்ய முடியும் என்று நான் எண்ணக்கூடாது என்பதற்காக ஒரு அழகிய சிறு குட்டி நம்பூதிரி பிராமணனாக கூட அவதரிக்க முடியும். மூன்றடி மண் கேட்டாலே போதும் என் அவதார காரணத்துக்கு என்று தீர்மானித்து தானே வாமன ரூபம் எடுத்தாய்? உன் சிறிய பாத நகத்தால் கீறி பாதாள கங்கையை கொண்டுவந்தவன் அல்லவா நீ. எண்ணற்ற கோடி ஜனங்களின் பாபம் போக்கி அருளும் ரக்ஷகன், ராக்ஷஸாந்த கன் அல்லவா கிருஷ்ணா நீ. வாமன ரூப விஸ்வகாரணா, மகாபலியை பாதாள உலகில் பதித்த ஹரி, ஜெகதீசா உன்னை போற்றுகிறேன்.

क्षत्रिय रुधिरमये जगत् अपगत पापम् स्नपयसि पयसि
शमित भव तापम् केशव धृत भृघु पति रूप जय जगदीश हरे

kṣatryya-rudhira-maye jagad apagata-pāpaṃ
snapayasi payasi śamita-bhava-tāpam |
keśava dhṛta-bhṛgu-pati-rūpa
jaya jagadīśa hare ||5||

நீ எடுத்த பரசுராமர் அவதாரம் பற்றி என்ன சொல்வது? க்ஷத்ரியர்களை ஒடுக்க ஜமதக்னி ரிஷி புத்ரனாக உலகை ஆட்டி படைத்த அரசர்களை அடக்கி வாசிக்க அநேகரை கொன்ற உன் துஷ்ட நிக்கிரஹ அவதாரம் ஆச்சர்யமானது கிருஷ்ணா, ஹரி, ஜெகதீசா, உன்னை போற்றுகிறேன்.

वितरसि दिक्षु रणे दिक् पति कमनीयम् दश मुख
मौलि बलिम् रमणीयम् केशव धृत राम शरीर जय जगदीश हरे

vitarasi dikṣu raṇe dik-pati-kamanīyaṃ
daśa-mukha-mauli-bali ramaṇīyam |
keśava dhṛta-rāma-śarīra jaya jagadīśa hare ||6||

என்ன சொல்வேன் எப்படி சொல்வேன் கிருஷ்ணா நீ ராமனாக அவதரித்தது. முற்றிலும் மாறு பட்ட அவதாரம். பித்ரு வாக்ய பரிபாலனமம் சிஷ்ட பரிபாலனத்துக்கு தசகண்ட ராவண சம்ஹாரமும் காரணம் ஆயிற்றே. ஸ்ரீ ராம ஜெயம் என்ற வார்த்தை நெஞ்சில் நிலை நிற்க எடுத்த அவதாரம் அல்லவா? ஜெகதீசா ஹரி, கேசவா, வல் வில் ராமா, உன்னை போற்றுகிறேன்

वहसि वपुषि विशदे वसनम् जलद अभम् हल हति भीति
मिलित यमुन आभम् केशव धृत हल धर रूप जय जगदीश हरे

vahasi vapuṣi viṣade vasanaṃ jaladābhaṃ
hala-hati-bhīti-milita-yamunābham |
keśava dhṛta-hala-dhara-rūpa
jaya jagadīśa hare ||7||

ஏரின்றி ஊர் இல்லை என நிரூபிக்க கலப்பையைஆயுதமாக கொண்ட பலராமனே, உன் அவதாரம் கிருஷ்ணனின் வருகையை உலகுக்கு அறிவிக்கவா? கேசவா, வெள்ளை சரீரத்தில் கரிய ஆடை பூண்டு மினுக்கும் பலராமா, உன்னை பார்க்கும்போது கரிய நிற யமுனையில் கார் மேகங்கள் ஸ்படிகம் போல் வெண்மையான மழை நீர் பொழிவது போல் தோன்றுகிறதே. ஜகத்காரணா , ஜெகதீசா, உன்னை போற்றுகிறேன்.

निन्दति यज्ञ विधेः अ ह ह श्रुति जातम् सदय हृदय
दर्शित पशु घातम् केशव धृत बुद्ध शरीर जय जगदीश हरे

nindasi yajña-vidheḥ ahaha! śruti-jātam
sadaya-hṛdaya darśita-paśu-ghātam |
keśava dhṛta-buddha-śarīra
jaya jagadīśa hare ||8||

அஹிம்சை யை போதிக்க உருவெடுத்த புத்தனோ நீ. வேத சடங்குகளில் அஹிம்சை யை கடைபிடிக்க இது அவசியமானது என்று கருதினாயோ? ஹரி ஜெகதீசா உன்னை நமஸ்கரிக்கிறேன்.

पदच्छेद : म्लेच्छ निवह निधने कलयसि करवालम् धूम केतुम् इव
किम् अपि करालम् केशव धृत कल्कि शरीर जय जगदीश हरे

mleccha-nivaha-nidhane kalayasi karavālaṃ
dhūma-ketum iva kim api karālam |
keśava dhṛta-kalki-śarīra
jaya jagadīśa hare ||9||

இந்த கலியுகத்தில் நீ வரப்போவது கல்கி அவதாரமாக என்று அறிகிறேன். கேசவா, ஜெகதீசா, எண்ணற்ற எத்தனையோ மத, குலங்கள் தலை எடுத்து, ஆட்டி படைக்கும்போது நீ அவசியம் தானே! நேரம் பார்த்து தானே நீ வருபவன். உன் கையில் நீண்ட சக்தி வாய்ந்த ரத்தம் தோய்ந்த கூர் வாள், நீ வருவதை உணர்த்த நீண்ட வால் கொண்ட தூமகேது, புகை மண்டல பளபளக்கும் வால் நக்ஷத்ரம் தோன்றுமாம். அதுவே சர்வ நாசத்துக்கு ஒரு எச்சரிக்கையோ?

श्री जयदेव कवेः इदम् उदितम् उदारम् शृणु सुख दम्
शुभ दम् भव सारम् केशव धृत दश विध रूप जय जगदीश हरे

śri-jayadeva-kaveridam uditam udāraṃ
śṛṇu sukhadaṃ śubhadaṃ bhava-sāram |
keśava dhṛta-daśavidha-rūpa
jaya jagadīśa hare ||10||

நான் ஜெயதேவன், எனக்கு உன்னை பாட பிடிக்கும். நீ எடுத்த பத்து அவதாரங்களை பாடி, உன்னை என் வார்த்தை மாலைகளால் அலங்கரித்து வேண்டுகிறேன் கிருஷ்ணா, கேசவா, பக்தவத்சலா, உலகம் உய்ய நீ காத்திடுவாய் ஹரி, உன்னை நமஸ்கரிக்கிறேன்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...