Friday, October 20, 2017

சூர் சாகரம்

 சூர் சாகரம் -  J.K SIVAN 
                             
                            ஆயர் பாடி மாளிகையில்....

உஷ்.   யாரும் சத்தம் போடாதீர்கள்.  படாத பாடு பட்டு ஆடி பாடி தாஜா பண்ணி  கொஞ்சி குலாவி அவனை தூங்க வைத்துக் கொண்டிருக்கிறாள் யசோதை.

க்ரீச் கிரீச்   -- தொட்டில்  ஆடுகிற சப்தம் கேட்கிறதா. உள்ளே அவன் ஏதோ புரியாத சப்தங்கள் பண்ணிக்கொண்டு -- ஒருவேளை பாடுகிறானோ?--  படுத்துக் கொண்டு இருக்கிறான். கண் இன்னும் முழுதாக மூடவில்லை. சிரிப்பு.கைகள் கால்களை அசைத்துக்கொண்டு  விளையாட்டா?  எந்த அரக்கனோடாவது யுத்தமா?   என் கண்மணி கிருஷ்ணன் தூங்குகிறான். தப்பு தப்பு.  தூங்க பண்ணிக்கொண்டிருக்கிறேன்.
தொட்டிலை ஆட்டிக்கொண்டே   ''ஆராரோ ஆரிரரோ''  பாடுகிறாள் யசோதை.

ஏ  தூக்கமே  என் கிருஷ்ணனிடம் வர ஏன்  இன்னும் தாமதம் உனக்கு? குழந்தை உனக்காக காத்துக்கொண்டிருக்கிறானே தெரியாது?  வா உடனே வா  காற்றைக்காட்டிலும் உறக்கமே சீக்கிரம் வா.

கிருஷ்ணா  நீயும் தூங்குடா ராஜா. நிறைய  ஆடி ஓடியாகி விட்டது. கொஞ்சம் ஓய்வெடு. தூங்குடா செல்லம்.

நல்ல பிள்ளை யாக கண்களை உடனே மூடிக் கொண்டான். அடுத்த கணமே ஒரு கண்  திறந்து அவளை பார்த்தது.
மார்பில் மெதுவாக தட்டிக்கொடுத்துக்கொண்டே  தூங்க வைக்கிறாள்.

அப்பாடா  கண்ணன் தூங்க ஆரம்பித்துவிட்டான்.  
யசோதை பாட்டை நிறுத்தினாள்.  தூங்கும் அவனை பார்த்தாள் . அவன்உதடுகள் அசைகிறதே. ஏதாவது தனக்குள் பேசுகிறானோ.

கனவு காண்கிறான் போல் இருக்கிறது?  மெதுவாக  வேறு வேலையைப் பார்க்கலாம் என்று திரும்பிய யசோதைக்கு ஏதோ அசைவு தோன்றி திரும்பினாள்.
தொட்டிலில் மொட்டுப்போல எழுந்து உட்கார்ந்து கொண்டு அவளை பார்க்கிறான் 
''ஏன் உன் பாட்டை  நிறுத்தினாய் அது எனக்கு வேணும் .பாடு''  --  அதிகார கட்டளை போல் ஒரு பார்வை.

இப்படி யசோதை அனுபவித்ததை  பல நூறாயிரம் ஆண்டுகள் தவமிருந்த ரிஷிகள் கூட பெற்றிருக்க முடியுமா.

சூர்தாஸ்  யசோதையோடு தொட்டிலை ஆட்டிக்கொண்டு இதெல்லாம் நேரில் பார்த்தது போல் பாடியிருக்கிறார். நீங்களும் ரசியுங்கள்.
Yasoda lulling Hari to sleep,
Shaking the cradle, cuddling and fondling,
Singing to Him a song.
My darling is sleepy
Why doesn't sleep come along?
Come sleep, come quickly
Kanha for you does long.
Sometimes He closes His eyes
Sometimes His lips are aflutter.
Thinking He has fallen asleep
Yasoda stops her singing.
Awake still, He's up suddenly
Enjoying Yasoda's song.
Such joy as Yasoda feels
Is unattainable to the gods.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...