Friday, October 6, 2017

​குருவாஷ்டகம்​ 3

​குருவாஷ்டகம்​ 3 J.K. SIVAN
தத: கிம்? தத: கிம்?​ தத: கிம்?​ தத: கிம்?
क्षमामण्डले भूपभूपलबृब्दैः, सदा सेवितं यस्य पादारविन्दम् ।
मनश्चेन लग्नं गुरोरघ्रिपद्मे, ततः किं ततः किं ततः किं ततः किम् ॥ 5 ॥

Kshama mandale bhoopa bhoopala vrundai,
Sada sevitham yasya padaravindam,
Gurongri padme, Manaschenna lagnam,
Tada kim, tada kim, tada kim, tada kim. 5

க்ஷமாமண்ட³லே பூ⁴பபூ⁴பாலப்³ருʼந்தை:³
ஸதா³ ஸேவிதம் யஸ்ய பாதா³ரவிந்த³ம் ।
மநஶ்சேந்ந லக்³நம் கு³ரோரங்க்⁴ரிபத்³மே​​
தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ॥ 5॥

அவனை எல்லோரும் புகழ்கிறார்கள். தலையில் வைத்து கூத்தாடுகிறார்கள். ரெண்டு பக்கம் கவரி வீசுகிறார்கள். தங்க சிம்மாசனத்தில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து இருக்கிறான். நிறைய படித்தவன் மேதாவி என்று ஊர் உலகமே போற்றுகிறது. பெரிய ராஜாக்கள் அவன் காலடியில்.
இருக்கட்டுமே. அவனுக்கு தனது குருவின் ஞாபகம் இல்லை, அவர் தாமரைத் திருவடியில் தண்டம் என தன்னை சாஷ்டாங்கமாக சமர்ப்பித்து வணங்கும் நினைவு கூட வரவில்லையெனில் அவன் புகழ் பெருமை அவன் கல்வி அறிவு, அவன் பெருமை, இதனால் எல்லாம்​ என்ன பிரயோஜனம்?,என்ன பிரயோஜனம்?என்ன பிரயோஜனம்? என்ன பிரயோஜனம்?
यशो मे गतं दिक्षु दानप्रतापात्, जगद्वस्तु सर्वं करे यत्प्रसादात् ।
मनश्चेन लग्नं गुरोरघ्रिपद्मे, ततः किं ततः किं ततः किं ततः किम् ॥ 6 ॥

யஶோ மே க³தம் தி³க்ஷு தா³நப்ரதாபா-
ஜ்ஜக³த்³வஸ்து ஸர்வம் கரே யத்ப்ரஸாதா³த் ।
மநஶ்சேந்ந லக்³நம் கு³ரோரங்க்⁴ரிபத்³மே
தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ॥ 6॥

Yaso me dhanam bhikshu dhana prathapa,
Jagadvasthu sarvam kare yat prasadath.,
Gurongri padme, Manaschenna lagnam,
Tada kim, tada kim, tada kim, tada kim. 6

நான் யார் என்று உலகமே அறியும். என்னை விட சிறந்த தான தர்மங்கள் பண்ணினவன் எவனுமே இல்லை. என் பெயர் புகழ் உலகமறியும்'' -- இப்படி ஒருவன் புகழ் பெறலாம். உண்மையிலேயே அவன் அவ்வளவு தர்ம காரியங்கள் செய்பவனாகவே இருக்கட்டுமே. அவன் ஒரு கணமேனும் தனது குருவை வணங்கி அவர் தாமரை பாதார விந்தங்களில் விழுந்து ஆசி பெறவில்லையெனில் அவனது தான தர்மத்தால்
என்ன பிரயோஜனம்?, என்ன பிரயோஜனம்?என்ன பிரயோஜனம்?​ என்ன பிரயோஜனம்?

​இது வரை ஆதி சங்கரரின் குரு அஷ்டகம் எனும் எட்டு ஸ்லோகங்களில் ஆறு எடுத்து உங்களுக்கு வழங்கி யுள்ளேன். மீதி ரெண்டு நாளையோடு பூர்த்தி ஆகிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...