Thursday, October 19, 2017

இதயம் பேசுகிறது

 இதயம் பேசுகிறது  j.k. sivan 

பெரியவர்களுக்கு முக்கியமான நாட்களில் நமஸ்காரம் செய்து  ஆசீர்வாதம் பெறுவது நமது பண்பாடு. பல தலைமுறையாக வரும் பழக்கம் வழக்கம்.  பெரியவர்களும் ஆசீர்வாதம் பண்ணுபவர்களை மனதார வாழ்த்துவார்கள். 

அபி வாதயே ப்ரவரம் சொல்லு...   என்று  எங்கள் தாத்தா மற்றும் பல பெரியோர்கள் கேட்டு விட்டு ஆசீர்வாதம் செய்வார்கள்.  ப்ரவரம் நான் என்ன கோத்ரம்,  சூத்ரம்,  மூன்று தலைமுறை ரிஷிகள்  யார், வேதம் என்ன, பெயர் (என்ன சர்மா?)  என்று சகல விபரங்களும்  கொண்டது.  கணவன் மனைவி ஜோடியாக நமஸ்காரம் செய்தவர்கள். பெரியவர்கள்  தீர்க்க ஆயுசு,  ஆரோக்யம், ஐஸ்வர்யம், புத்ர பௌத்ர அபிவிருத்தி  கிடைக்கவேண்டும் என்று எல்லாம் வாழ்த்தி  அக்ஷதை  போடுவார்கள், விபூதி நெற்றியில் விட்டுவிட்டார்கள்.

இது நாட்பட நாட்பட மறைந்து விட்டதா மறந்துவிட்டதா?  சமீபத்தில் எனது  மூன்று பிறந்தநாட்களில்  ஒன்று  நிகழ்ந்தபோது  94 வயதான நமது குரூப்  அங்கத்தினர்  திருமதி கமலா ஈஸ்வரன் ஆஸ்திரேலியாவில் இருந்து என்னை வாழ்த்தினார்.  ரொம்ப சந்தோஷப்பட்டேன். இவ்வளவு வயதான ஒரு நண்பரா நமக்கு. நாம் எழுதுவதை விடாமல் படிக்கிறாரா? உடனே ஒரு வார்த்தை பதில் சொல்கிறாரா? அப்படியென்றால் நாம் பாக்கியசாலி என்பதில் சந்தேகம் இல்லை என்று மகிழ்ந்தேன்.  

ரெண்டு நாள் முன்பு அவருக்கு  உங்களோடு சேர்ந்து என் நமஸ்கரத்தை தெரிவித்து நீங்கள் பலபேருக்கு அவரது ஆசி கோரினீர்கள் 
அந்த வயதான மூதாட்டி,  ரெண்டு பெரிய  புற்றுநோய் அறுவை சிகிச்சை பெற்று அதிக  நடமாட்டம் இல்லாமல் இந்த F B   WHATSA PP  செயதிகள் மூலம் வெளி உலகோடு நட்பு கொண்டு வாழ்ந்து கொண்டு நமக்கும் ஆசி வழங்கியிருப்பது பெருமை பட செயகிறது.

இதோ அவரது வாழ்த்து உங்கள் அனைவருக்கும் சேர்த்து. படியுங்கள் . அவர் மனம் எவ்வளவு விசாலம் என்பதை அறிந்து இறைவனை அவர் நீண்ட நாள் வாழ பிரார்த்தனை செய்யுங்கள்.

I thank all of u including shri j k sivan for the love and affecion u all hv showered on me on tnis great auspicious occassion.
I once again bless all of u, out of my heart and invoke the blessings of great godess mahalaxmi to bless u all with prosperty love and good health throughout tnis coming year and many more years to come. 

Myself being away from bharat for decades living in australia miss all the fun fare and gaiety of this festive season and all my world is only   tnis ipad and facebook through wbich i communicate with the people of the world. 

I had two major cancer operations just within a couple of years and almost bed ridden and not able to travel to india in longhaul flight. 
However due to marvels of science i am getting all the news through i pad and hopefully after my birthday which falls on coming wednesday i hope to see u all in the coming new year if god wills.

 I thank once again one and all and let us all be in touch.

 With ashirwads. 

Mrs kamala eshwaran

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...