Sunday, May 30, 2021

NAN PETRA SELVAM

 

நான்  பெற்ற  செல்வம்  -  நங்கநல்லூர்  J K   SIVAN 
                             
 சக்தி ஸ்கேன்னர்ஸ்  திருமதி பானுமதி ஏழுமலை 

எட்டு  வருஷங்கள் ஆகப்போகிறது.  2013 ல்  முதலில்  ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா சொசைட்டி  என்று ஆரம்பித்த  எங்கள் குழு,   நான் எழுதிய கிருஷ்ணன் கதைகளை  வாசகர்கள்  விரும்பிப் படிப்பதால் அவற்றை புத்தகமாக்க  முடிவெடுத்தது. 
அதற்கு முன்  அச்சிட்டு புத்தகம் வெளியிடும்  அனுபவம்   இல்லாததால்  தயக்கமாக இருந் தது.  நன்கொடை பெற்று தான் அச்சிட வேண்டும் என்ற நிலை.   முகநூல்,மின்னஞ்சல் வழியாக எங்கள் திட்டத்தை அறிவித்தோம்.  வியாபார நோக்கம் இன்றி  புத்தகத்தை விலை இன்றி வெளியிட்டு வாசகர்களுக்கு வழங்குவதே எங்கள் முடிவு.

கிருஷ்ணன்  அப்போது எங்களுக்கு  ''என் புத்தகத்தை முதலில் வெளியிட  நானே  உனக்கு  ஒரு நல்ல  பிரசுர கர்த்தாவை  அனுப்புகிறேன்'' என்று எனக்கு அறிமுகப் படுத்தப்பட்டவர் தான்  திருமதி பானுமதி ஏழுமலை
கும்பகோணத்தில் பிறந்தவர்.   சென்னை எதிராஜ் கல்லூரியில்  வாணிபம், வணிகம் உயர்நிலை வல்லுநர்  M.COM  படித்தவர்    கிட்டத்தட்ட  முப்பது ஆண்டுகளாக  அச்சுத் துறையில்  அனுபவசாலி. எண்ணற்ற  வணிக,  அச்சுத்துறையில்  தொடர்கள் கொண்டவர்.  கணவரோடு சேர்ந்து அச்சகத் துறையில்  ஈடுபட்டு  பேரும் புகழும் பெற்றவர்.  
 தமிழ் நாடு   அரசாங்க பள்ளிப்பாடங்கள்,    BSNL  வெளியீடுகள்,  ,  ஞான ஆலயம்  ஞான பூமி,  ஆனந்தவிகட ன், குமுதம், வாசன் பப்பிளிகேஷன்,  சென்னை துறைமுகம்,   கிரி ட்ரேடிங்,  போன்ற  பல பிரபல  நிறுவனங் களின்  அச்சுப்பணிகளை ஏற்று சிறப்புற  குறித்த காலத்தில்  நிறைவேற்றித் தருபவர்.  அச்சுத் துறை   உலகில் தனக்கென ஒரு பெருமையான   முதன்மை ஸ்தானம் வகிப்பவர். சக்தி ஸ்கேன்னர்ஸ்  பிரைவேட்  லிமிடெட் குழுமம்  நிறுவன  அதிபர். 

இப்படி ஒருவர்   என்னை  நேரில் வந்து சந்திக் குமாறு  சொன்னபோது  எனக்கு   நம்பிக்கை இல்லை.  ''இது சரிப்பட்டு வராது, ரொம்ப பெரிய  அச்சக நிறுவனம், நாம்  சாதாரண ஒரு சிறு குழு'' அவர்கள்  குறிப்பிடும் தொகையை   நம்மால் செலுத்த  வழியில்லாத நிலையில் எப்படி சந்திப்பது  என்று போகவே  விருப்ப மில்லை.  எனினும் ஸ்ரீ சுந்தரம் ராமசந்திரன், எங்கள்  செயலர், வாருங்கள்  எதற்கும்  நாம் போய் பார்த்துவிட்டு வருவோம்'' என்று  2013  அக்டோபர் மாதம்  கோபாலபுரம் 3வது தெருவில் திருமதி பானுமதியை  சந்திக்கச்   சென்றோம்.
''வாருங்கள்''
என்று சிரித்த முகத்துடன் வரவேற்ற போது  எனக்கு  பாதி தெம்பு வந்து  நம்பிக்கை துளிர் விட்டது.
''இதுவரை எத்தனை புத்தகங்கள் வெளியிட்டி ருக்கிறீர்கள். 
''ஒன்றுமே யில்லை. இப்போது தான் முதலில்  ஆங்கிலத்தில்  ஸ்ரீ கிருஷ்ணன்  வாழ்க்கை  கதைகள் 100 புத்தகமாக  ஆங்கிலத்தில் வெளியிட எண்ணம் '' 
''நீங்கள் தானே  J  K   சிவன். முகநூல்  ஈமெயில் மூலம் நிறைய கதை எழுதிகிறவர். நான் உங்கள் கதைகளை விரும்பி படிப்பேன்.  ரொம்ப  விறுவிறுப்பாக  எழுதுகிறீர்கள்''    என்று  அவர் சொன்னபோது  என் காதுகளை நம்ப முடியவில்லை.   தரையில் கால் பாவ வில்லை. பறப்பது போல் ஒரு ஆனந்தனு பவம்.குரல்  மெதுவாக எழும்பியது.  
''ஆமாம் மேடம், இதுவரை விடாமல்  ''YOU , I   AND  KRISHNAA '' என்கிற தலைப்பில் எழுதிய  100  கிருஷ்ணன்  பாகவத  கதைகளை புத்தக மாக்க விருப்பம்.  குறைந்தது 1000 பிரதிகள் வேண்டும்.  விலை  போட உத்தேசம் இல்லை ''.   
''என்னிடம் உங்கள்  pdf அனுப்புங்கள்,  எவ்வ ளவு ஆகும் என்று சொல்கிறேன். அதற்கு முன் ஒரு வார்த்தை. நீங்கள் செய்து வரும் இறை பணி  பற்றி எனக்குத்  தெரியும்,  ஆகவே  உங்களில் ஒருவராக  நானும் இதில் பங்கேற் கிறேன். வெறும் காகிதவிலை,  புத்தகமாக் கும் விலை, அச்சுக்கூலியில் ஒரு சிறு  பகுதி மட்டும் நீங்கள் கொடுத்தால் போதும், நீங்கள் செய்யும்   நல்ல காரியத்தில் நானும்  பங்கு கொள்ள விரும்புகிறேன். ஆகவே  மற்ற  செலவினங் களை  நானே  பொறுப்பேற் கிறேன்'' என்றார்.      
என் காதுகளை நம்பமுடியவில்லை.  மிகச்  சிறந்த  வகையில்  அற்புதமாக  இதுவரை 35 புத்தகங்கள் போல்  அச்சிட்டு கொடுத்தி ருக்கிறார் இந்த  விந்தைப் பெண்மணி. 
இன்று அவருடைய  பிறந்த நாளில்  அவரை  மனமார வாழ்த்தி நான் வணங்கும் கிருஷ் ணன்   திருமதி  பானுமதி தம்பதியர்   நீண்ட காலம்   ஆரோக்கியமாக    மகிழ்ச்சிகரமாக  வாழ அருள வேண்டும் என  பிரார்த்திக் கிறேன்.  இன்னும்  40க்கும் மேலாக  புத்தகங் கள் வெளி வர காத்திருக்கிறது.  ஸ்ரீ க்ரிஷ்ணார் ப்பணம் சேவா டிரஸ்ட்  நிறுவனம்  இன்னும் நிறைய  புத்தகங்கள்  விலையின்றி  அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். 
அவர்  ஒன்றிரண்டு  புத்தக வெளியீட்டு விழாக்களில் பங்கு கொண்டு மகிழ்வித்தார். அப்போது அவரை  கௌரவித்து  நன்றியோடு  வாழ்த்தினோம்.
கொரோனா  கொஞ்சம்  மனது வைத்து  சீக்கிரம் நம்மை விட்டு விலகினால் மேலும் எங்கள் புத்தகங்கள் வெளிவரும். எல்லோரும்  ஆவலோடு  காத்திருப்போம்.  . 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...