Thursday, May 27, 2021

PESUM DEIVAM




 

பேசும் தெய்வம்  -   நங்கநல்லூர்   J K   SIVAN

14.   இவர்  ஒரு ஸஹஸ்ராவதானிகூட....

மஹா பெரியவா,  அவ்வளவு  சின்ன வயதிலும் எவ்வளவு பெரிய பொறுப்பை வகித்தார் என்பதை விட  அந்த பொறுப்பை எவ்வளவு சிறப்பாக  நிர்வகித்தார் என்று ஆச்சர்யப் படுகிறோம்.  மஹா பெரியவா ஒரு தீக்கதரிசி என்பது அவரது ஒவ்வொரு செயலிலும்  எண்ணத் திலும்  அவரது  தார்மீக எண்ணத்தோடு, மக்களி டம் அன்போடு பழகியதில்  வெளிப்படுகிறது.  இதோ ஒரு அற்புத செய்தி.

கும்பகோணத்தில்  பதவி ஏற்ற  சில நாட்களி லேயே  மஹா பெரியவா ஆயுர்வேத வைத்திய சாலை ஒன்றை மடத்தில்  அறிமுகப்படுத்தி  திறந்தார். மக்களுக்கு இலவச  மருத்துவ சேவை செய்வதற்கான  ஏற்பாடுகள் அதில் செய்யப் பட்டிருந்தது.

இதில் பொறுப்பாக  அவர்  நியமித்தது  வைத்ய விஷாரத் ஜெகத்ரக்ஷக சாஸ்திரிகள்   மற்றும்  வைத்ய விஷாரத்  திருவண்ணாமலை  கிருஷ்ண சாஸ்திரிகள்.   இந்த  ரெண்டு பேருமே   மைலாப் பூர்  வெங்கட்ர மணா  ஆயுர்வேத கல்லூரியில்  பட்டம் பெற்றவர்கள்.  

1905ல்   சென்னை மைலாப்பூரில்  பிரபல வக்கீல்  V  கிருஷ்ணஸ்வாமி ஐயர்  ஆரம்பித்தது தான் ஸ்ரீ வெங்கட்ரமணா  ஆயுர்வேத டிஸ்பென்ஸரி .  இலவச மருத்துவ ஆலோசனை, விலைகுறைவில் மருந்துகள் தந்து எத்தனையோ  மக்கள் பயன் பெற்றார்கள்.

இதைப்  பின் பற்றி  தான் கச்சேரி ரோடு,  மயிலாப்பூர்  பஜார் ரோடு சந்திப்பில் டப்பா  செட்டி நாட்டு மருந்து கடை தோன்றியது.  டப்பா செட்டி கடை   இலவசமாக மருந்துகள் தரவில் லை, நல்ல மருந்துகளை குறைந்த விலையில் இன்றும்   விற்று வருகிறார்கள்.

1914 -1918  கால கட்டத்தில்  மஹா பெரியவாளின்  20  வயது முதல் 24 வயது வரை  கும்பகோணம்  சங்கர மடத்தில்  இருந்தபோது,  இன்னொரு அற்புத நிகழ்வு நடந்தது.

அவரது பெருமையை,  மேன்மையை,  கேட்டறிந்த  பல  சங்கீத வித்வான்கள்,  சாஸ்த்ர  விற்பன்ன ர்கள், வல்லுநர்கள்,   வாத்ய நிபுணர்கள்,   பல  மொழி வித்தகர்கள்,  நாட்ய , நாடக, மற்ற கலைஞர்கள்   நாட்டின் பல பாகங்களிலிருந்தும்  கும்பகோணம் காஞ்சி மடத்திற்கு வந்து  மஹா பெரியவா தரிசனம் பெற்றார்கள்.  கலையை வித்தையை  ஆதரிப்பவரைக் கண்டால் திருப்தி யாக இருக்காதா?

ஒவ்வொரு  நாளும்  மாலை வேளை   விருந்து காத்திருந்தது.  பண்டிதர்கள் ஒன்று கூடி  அவரவர் பிரிவில் தமது திறமையை  பறைசாற்றி  விவா தங் கள்  நடைபெறும்.  கலந்தா  லோசனை மாதிரி கூட்டங்கள் இவை. சண்டை பிடிக்கும் கோஷ்டி அல்ல. ஓருவர் விடாமல் எல்லா கலைஞர்கள் பண்டிதர்கள் சொல்வதையும்  கூர்ந்து கவனித்து   பல விஷயங்களை  அறிந்து  கொள்வார் மஹா பெரியவா. அவரது  ஞாபக சக்தி, கூர்ந்த அறிவு, சுய ஆராய்ச்சி இவற்றால்  அவரது அறிவுத் திறன் வளர்ந்தது.   முடிவில் ஒவ்வொருவர்  சொன்னதையும் அற்புதமாக தெளிவாக  விளக்குவார்.  முடிவில் தன்னுடைய  கருத்தையும்  அற்புதமாக வெளிப்படுத்துவார்.

அடேயப்பா,  இப்படிப்பட்ட கருத்தரங்கங்களை  மஹா பெரியவா கூட்டியபோது எவ்வளவு அசகாய சூரர்கள், அஷ்டாவதானிகள், சதா வதானிகள் மடத்துக்கு வருவார்கள். தங்களது அற்புத திறமையை மூக்கில் விரல்  வைத்து அதிசயிக்கும் வகையில் வெளிப்படுத்துவார்கள். மஹா பெரியவாளின்  சதஸில்   பாராட்டையும்  பரிசுகளையும் பெறுவார்கள்.   மலரின்    தேனைத்  தேடி வரும்  வண்டுகள் போல  கற்றாரைக்  கற்றாரே  காமுறுவர்  என்பதைப்  புரிய வைத்தார்கள்.  இப்படிப்பட்ட   சதஸ்கள்  எத்தனையோ  வருஷங்கள்  தொடர்ந்து நடந்தன.   இன்று வரை தொடர்கிறது.

நூறு பேர்  ஒரே சமயத்தில் கேட்கும்  விஷயங் களை மனதில் கிரஹித்து அத்தனைக்கும் ஒன்று விடாமல் பதிலளிப்பது கவிதை ரூபத்தில்  இசைப்பது போன்ற திறமை எளிதல்ல.    எந்த  விஷயத்திலும் கேள்விக் கணைகள் எழுப்பினால் சரியான 100  பதில்களை அந்த  திறமைசாலிகள்  அளித்துக் காட்டியதால் சதாவதானிகள் என்ற பெருமையைப் பெற்றவர்கள்.  எனக்குத் தெரிந்து  சதாவதானி செய்குத் தம்பி என்ற பாவலர்  பற்றி படித்து எழுதி இருக்கிறேன்.

 எட்டு  வெவ்வேறு விஷயங்களை அப்படி ஒரே சமயம்  செயது காட்டி, பேசி, பதிலளித்தவர்கள் அஷ்டா வதானிகள். இந்த எட்டு விஷயங்களில் கணக்கு, விஞ்ஞானம் , சமஸ்க்ரித ஸ்லோகங்கள்,  தமிழ் பாடல்கள் ,  வான சாஸ்திரம்,  தர்க்கம், மீமாம்சம் , வியாகரணம், வேதாந்தம் எல்லாமும் அடங்கும். ஒரு பாடலை ஒருவர் பாதி பாடி , மீதியை பாடி முடிக்கச்  சொல்வார். அடுத்தகணமே  அதைப்  பாடி முடிக்கப்படும் திறமை இந்த அஷ்டாவதானிகளிடம் இருந்தது. 

ஒருவன்  கடகடவென்று  பத்து பூக்கள் பெயரை சொல்வான், அடுத்தவன்  பாதி பாட்டு பாடுவான், இன்னொருவன்  கஷ்டமான   எண்களை  சொல்லி கூட்டவோ பெருக்கவோ சொல்வான், ஒருவன் இலக்கணத்தில் ரெண்டு கேள்வி கேட்பான், ஒருவன் சைகையில் ஏதோ சொல்வான் அதை புரிந்து சைகையில் பதில் சொல்லவேண்டும், ஒருவன்  ராமாயணத்தில் ஒரு குறிப்பிட்ட  பாடலை பாடச்  சொல்வான்.இப்படி  எட்டு விஷயங்கள்  ஒரே சமயம்.  அத்தனையும்  மனதில் வாங்கி சரியாக பதில் சொல்வது நினைத்து பார்க்கவே நம்மால் முடியாத காரியம்.  அஷ்டாவதானி சுலபமாக செய்வார்.
 
ஒரு தடவை ஒரு ருசிகர சம்பவம் நடந்தது.   அதைச் சொல்லி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

கும்பகோணம் மடத்துக்கு ஒரு வைஷ்ணவர் ஒருநாள் வந்தார்.   மஹாபெரியவாளை தரிசனம் செய்ய வந்தவர்.  இந்த  வைஷ்ணவர் ஒரு சதா வதானி. ஆகவே மடத்தில் இருந்த  சாஸ்திரிகள் பலர்  அவரைச் சோதித்து  அவர் பதிலை கேட்க  விரும்பினார்கள்.

''சுவாமி நாங்கள் உங்களைச் சில கேள்விகள் கேட்க அனுமதிக்க வேண்டும் ''

''ஆஹா  அதற்கென்ன , கேளுங்களேன் ''

அந்த கேள்விகள் பெரியவா முன்  கேட்கப்பட்டது.   மஹா பெரியவா அப்போது  என்ன  செய்தார் தெரியுமா?.  அருகில் ஒரு அணுக்க தொண்டரை அழைத்து   
'' நான்  சொல்வதை எல்லாம் நீ எழுதிக்கோ''  என்கிறார்.
நிறைய கேள்விகளை  சாஸ்திரிகள், மற்றும்  மடத்தில் இருந்தவர்கள் வைஷ்ணவ சதாவதானி யைக்   கேட்டனர்.   அவர் சளைக்காமல்  அனைத் து க்கும்  பதில் சொன்னார்.  

இதில் என்ன ஆச்சர்யம் என்றால்  அந்த சதாவ தானி சொன்ன அனைத்து பதில்களும்  மஹா பெரியவா எழுதிக்கொள் என்று சொன்ன பதில்களோடு அப்படியே ஒத்திருந்தது.

அடேயப்பா,   மஹா பெரியவா சாதாரண ஸதா வதானியா , இல்லவே இல்லை ஒருவேளை சஹஸ்ராவ தானியாகக் கூட இருந்திருக்கிறார். ஆயிரம் விஷயங்களை ஒரே சமயம் சொல்லக் கூடியவர்,  -- இந்த சக்தியை அவர்  வெளியே  காட்டிக் கொள்ளவில்லை  என்று புரிகிறது.

மஹா பெரியவா  அந்த வைஷ்ணவரை கௌர வித்து  காஷ்மீர சால்வை ஒன்றை அணிவித்து பரிசுகள் கொடுத்து அனுப்பினார்.  அதற்கப்புறம் அந்த ஸதாவதானி  வைஷ்ணவர் அடிக்கடி மடத்துக்கு வந்து தனது திறமையை  வெளிப்ப டுத்தினார் என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...